2018.08.21 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூடடத்தி;ன்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்.


01. வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 5 ஆவது விடயம்.)
உயிரியல் பல்வகைத்தன்மை மண், நீர். கலாசாரம், மதம். பாரம்பரியம் மற்றும் கலைநயம் பெருமதி தொடர்பில் விசேட கவனம் செலுத்தி எதிர்கால பரம்பரையினரின் நலனுக்காக வனவளத்தைப் பாதுகாப்பதற்கும் பாதுகாக்கப்பட்ட வனத்தில் உள்ள பெற்ரோலியவளத்தைப் பாதுகாப்பதற்கும் வனபாதுகாப்புத் தொடர்பில் வன பாதுகாப்பு அதிகாரிகள் கொண்டுள்ள வன அதிகாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும் வனத்தின் மூலமான பயன்களை மேற்படுத்துவதற்கும் கிராம மக்களின் சேம நலத்துக்காக காடுகளின் மூலம் கிடைக்கப்பெறும் பங்களிப்பை வலுப்படுத்துவதற்கும் தற்பொழுது உள்ள வன கட்டளைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதன் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக வனபாதுகாப்பு சட்ட கட்டமைப்பை மிகவும் செயல்திறன் மிக்கதாகவும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட திருத்தத்தை உள்ளடக்கி வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தில் திருத்த்தை மேற்கொள்ளவதற்காக திருத்த சட்டமூலம் தயாரிக்கப்படவுள்ளது. இதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் என்ற ரீதியில் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. கால நிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய அனர்த்தத்தை கட்டுப்படுத்துவதற்கான பங்குடமைத் திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 06 வது விடயம்)
இலங்கையினால் 2016 ஆம் ஆண்டில் பசுமை காற்று மாசடைவதைக் கட்டுப்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் அது தொடர்பான கட்டமைப்பு உடன்பாட்டின் கீழான பாரிஸ் உடன்படிக்கையை நாம் ஏற்றுக்கொண்டதையடுத்து காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய அனர்த்தத்திற்கு காரணமான பசுமை காற்றினால் வெளிப்படுத்தப்படும் உமிழ்வை கட்டுப்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியிலான முயற்சிக்கு பங்களிப்பை வழங்குவதற்கு இலங்கை கடமைப்பட்டுள்ளது. இதற்காக நாடு வழங்க வேண்டியப பங்களிப்பின் கீழ் எரிசக்தி போக்குவரத்து தொழிற்றுறை. கழிவுப் பொருட்கள், காடு போன்ற முக்கிய ஐந்து துறைககளில் பசுமை காற்றில் ஏற்படும் உமில்வுகளை கட்டுப்படுத்தக் கூடிய விரிவான தொடர் செயற்பாடுகளை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தேசிய ரீதியில் நிர்ணயிக்கப்படும் இலக்கை அடைவதற்காக மேலே உள்ள ஒவ்வொரு துறையிலும் வெளியேற்றப்படும் பசுமை காற்றின் அளவு அடையாளம் காணப்பட வேண்டும். இதற்காக முன்னெடுக்கப்படவுஙள்ள பரிந்துரை திட்டத்துக்காக இலங்கைக்கு கிடைக்க உள்ள மானியத்தை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்டதிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்காக மகாவவலி அபிவிPருத்தி சுற்றாடல் அமைச்சர் என்ற ரீதியில் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. ஈரழிப்பு நிலப்பரப்பை மண் போட்டு நிரப்புவதற்கும் அழிவை தடுப்பதற்குமான உத்தரவுகளை பிறப்பித்தல். (நிகழ்;ச்சி நிரலில் 07 ஆவது விடயம்)
கொழும்பு மாநகர வலையத்தில் ஈரழிப்பு பகுதியை மண் போட்டு நிரப்புவதல் மற்றும் அழித்தலை உடனடியாக நிறுத்துவதற்காக இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிப்பதற்கும் ஈரழிப்பு பகுதியை பாதுகாக்கப்பட்ட வளையமாக பிரகடனப்படுத்துவதற்கும் பாதுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கென சிபாரிசுகளை பெற்றுக் கொள்ளுவதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக இந்தக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கீழ்க்கண்ட சிபாரிசுகளுக்கு அமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அ) தேசிய ரீதியில் மிக முக்கியமான சந்தர்ப்பத்தில் மேற்கொள் வேண்டிய அத்தியவசிய நிர்மாணம் அல்லது இடம்மாற்றப்படும் ரயில் பாதை கட்டமைப்பின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள நிர்மாணப் பணிகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக கொழும்பு மாநகர வலையத்துக்குள் அமைந்துள்ள ஈரழிப்பு நிலப்பரப்புக்கு அருகாமையில் அனைத்து வகையிலான மண் போட்டு நிரப்புதல் மற்றும் நிர்மாணப் பணிகளை தடுப்பதற்கான் தடை உத்தரவை பிறப்பித்தல்.
ஆ) தற்;பொழுது அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிம்புலாஎல மற்றும் தியவன்னாஓயாவுக்கு அருகாமையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலப் பகுதி தவிர்ந்த ஏனைய ஈரழிப்பு பகுதி பபாதுகாக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனபர்படுத்துமாறு வன விலங்கு பணிப்பாளர் நாயகத்துக்கு உத்தரவு பிறப்பித்தல்.

04. கொத்மலை ஒருங்கிணைந்த சேவை மொழிப் பயிற்சி றிறுவனத்துக்கு புதிய மாநாட்டு மண்டபம் ஒன்றை நிர்மாணித்தல். (நிகழ்ச்சி நிரலில் 08 ஆவது விடயம்)
முப்படை மற்றும் பொலிசாருக்கு தேவையான பல்வேறு மொழித் தொடர்பில் பயிற்சியை வழங்கும் கொத்மலை ஒருங்கிணைந்த சேவை மொழிப் பயிற்சி நிறுவனத்தில் தற்பொழுது பயன்படுத்தப்படும் பழைமையான குறைந்த வசதிகளைக் கொண்ட மாநாட்டு மண்டபததில் சுமார் 150 பயிற்று விப்பாளர்கள் ஒரேமுறையில் கூடக்கூடிய நவீன வசதிகளைக் கொண்ட புதிய மாநாட்டு மண்டம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் மேதகு ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. விவசாய உற்பத்திகளை களஞ்சியப்படுத்துவதற்காக வெப்பத்தைக்கட்டுப்படுத்தக் கூடிய களஞ்சியசாலையொன்றை தம்புள்ளையில்ஸ்தாபித்தல். (நிகிழ்ச்சி நிரலில் 09 ஆவது விடயம்)
காய்கறி மற்றும் பழவகை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களை நீண்டகாலத்துக்கு அறுவடை தரத்துடன் களஞ்சிப்படுத்தக் கூடிய வகையிலும் அதற்;காக வெப்பத்தை கட்டுப்படுத்தக்கூடிய களஞ்சிய்சாலை ஒன்று 475 மில்லியன் ரூபா முதலீட்டுடன் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துகு அருகாமையில் அமைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பருவகால ரீதியில் நன்மைகள் கிடைக்கக் கூடிய உற்பத்தி அறுவடையை தொடர்ச்சியாக சந்தைக்கான விநியோகத்தை உறுதி செய்ய முடியும.; இதனால் இந்த உற்பத்திப் பொருட்களுக்கு ஏற்படக்கூடிய ஆகக்கூடிய விலையை கட்டுப்படுத்துவதன் மூலம்; இந்த உற்பத்திக்கு நிலையான விலையை முன்னெடுக்க முடியும். இதற்கான உத்தேச முலீட்டில் 300 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பட்டுள்ளது. இதற்கு அமைவாக வெப்பத்தை கட்டுப்படுத்தக் கூடிய களஞ்சியசாலை ஒன்று தம்புள்ளையில் அமைப்பதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கும் இதனை முகாமைத்துவம் செய்வதற்கான நடைமுறையொன்றை வகுப்பதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 10 ஆவது விடயம்)
ஊவா, சப்ரகமுவ மத்திய, மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்தல், சுகாதார மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் பணிகளை வலுவூட்டுவதற்கும் அது தொடர்பான கொள்கையை தயாரிப்பதற்கும் கொள்வனவை அதிகரிப்பதற்காக 60 மில்லியன் அமெரிக்க டொலர் முலீட்டுடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்த முதலீட்டில் 12.5 அமெரிக்க டொலர்களை நன்கொடையாகவும் மேலும் 37.5 அமெரிக்க டொலர்களை நிவாரண கடனாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் மூலம் பெற்றுக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக சம்பந்தப்பட்ட நிதியத்தை பெற்றுக்கொள்வதற்கு தேவையான உடன்படிக்கையை மேற்கொள்வதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. தங்க நாணய பிணைமுறியை விநியோகித்தல் (நிகழ்ச்சி நிரலில் 16 ஆவது விடயம்)
இலங்கை அரசாங்கத்தினால் 2017 ஆம் ஆண்டு தொடக்கம் வருடாந்தம் வரவு செலவு நிதியளிப்பை மேற்கொள்வதற்காக சர்வதேச தங்க நாணய பிணைமுறி விநியோகிக்கப்படுகின்றது. அத்தோடு 2018 ஆண்டு வரையில் விநியோகிகக்கக் கூடிய பிணைமுறி அமரிக்க டொலர்களில் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நடைமுறைக்குள் ஏற்றுமதி விரிவாக்கத்திற்கான நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்;த்துக் கொள்வதற்கும் குறைந்த செலவுடனான வரவு செலவு நிதி முகாமைத்துவ எதிர்பார்ப்புடன் சுஆடீ நிதி மற்றும் யுரோ போன்ற வெளிநாட்டு நாணயங்களின் மூலம் சர்வதேச சந்தையில் பிரவேசிக்கும் ஆற்றலைக் கவனத்தில் கொண்டு சிபாரிகளை சமர்ப்ப்pப்பதற்காக சம்பந்தப்பட்ட நிருவனங்களின் அதிகாரிகளை கொண்ட குமூவொன்று நியமிகக்கப்படவுள்ளது. இதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்;கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. உள்ளக நீர்வழிக்கருகாமையில் பயணிகள் போக்குவரத்;;;;துக்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல் (நிகழச்சி நிரலில் 22 ஆவது விடயம்)
பத்தரமுல்லையிலிருந்து வெள்ளவத்தை வரையில் உள்ள கால்வாய் வழியியூடாகவும் பேரை வாவி ஊடாக கோட்டையிலிருந்து யூனியன் பிளேஸ் வரையிலும் களனி கங்கை ஊடாகவும் ஏனைய நீர் வழியூடாக மட்டக்குழியிலிருந்து அங்வெல்ல வரையிலும் அரச தனியார் பங்களிப்புடனான திட்டம் என்ற ரீதியில் நீர்வழியூடாக பயணிகள் போக்குவரத்து சேவையொன்றை முன்னெடுப்பதற்காக அமைச்சரவை இதற்கு முன்னர் அஙங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச தனியார் பங்குடமை திட்டத்தின் கீமூ; இதனை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் இதற்கு ஆரம்பமாக இலங்கை கடற்படை ஒத்துழைப்புடன் பேரை வாவிக் ஊடாக கோட்டையிலிருந்து யூனியன் பிளெஸ் வரையில் இரண்டு வருட காலத்துக்கு திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்குத் தேவையான படகுகளை கொள்வனவு செய்வதற்கும் இறங்குதுறைகளை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் அமைச்சரவைக்கு இதனை தெளிவுபடுத்துவதற்காக சமர்ப்பித்த ஆவணத்தில் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.
09. இடுகை அறுவடை தொடர்பான தொழில் நுட்ப நிறுவனத்தின் பெயரை தேசியத்துக்குப் பின்னரான அறுவடை முகாமைத்துவ நிறுவனமாக திருத்தத்தை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 24 ஆவது விடயம்)
2000 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இடுகை அறுவடை தொடர்பான தொழில்நுட்ப நிறுவனம் அறுவடை தொடக்கம் அவற்றில் பெருமதி சேர்த்தல் ஊடாக பாவனை வரையிலான பின்னர் அறுவடை தொழில்நுட்ப ஆய்வு மற்றும் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் நிறுவனமாகும். இலங்கையில் அறுவடை தொடர்பான தொழில்நுட்ப ஆய்வு அபிவிருத்தி மற்றும் ஒழுங்குறுத்தல் செயற்பாடுகளை மிகவும் செயல்திறன் மிக்கதாகவும் பயன்களைக்கொண்டதாகவும் மேற்கொள்வதற்கான இந்த நிறுவனத்தின் பெயரை தேசியத்துக்கு பின்னர் அறுவடை முகாமைத்வதற்கான நிறுவனம் என்ற ரீதியில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. இறப்பர் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 25 ஆவது விடயம்)
இலங்கை இறப்பர் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் தொடர்பான தொழிற்துறைகளில் ஈடுபடும் ஏனைய ஆசிய நாடுகளுக்கு அமைவான வகையில் குறைந்த தரத்துடன் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு நீண்டகால தீர்வாக பயனுள்ளவகையில் ஆயள் காலத்துக்கும் மேற்பட்ட குறைந்த அறுவடையை வழங்கும் பழைமை வாய்ந்த உற்பத்திகளை அகற்றி ஆகக் கூடுதலான அறுவடையை வழங்கும் புதிய இக்லோனவலினால் பெற்றப்பட்ட இறப்பர் கன்றுகளை மீள உற்பத்தி செய்வது சரியானதென கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு இருந்த போதிலும் இறப்பரை மீள உற்பத்தி செய்வதற்கான அதிக செலவை கவனத்தில் கொண்டு புதிதாக உற்பத்தி பணிகளுக்காக வழங்கப்படும் நிவாரணத்தொகை அதிகரிக்கப்படுகிறது. ஒரு ஹெக்டருக்காக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தொடக்கம் மூன்று லட்சம் ரூபா வரையிலான இறப்பரை மீள உற்பத்தி செய்வதற்காக வழங்ககப்படும் மானியம் ஒரு ஹெக்டருக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் தொடக்கம் 3 லட்சம் ரூபா வரையில் அதிகரிக்கப்படவுள்ளது, இதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. தெங்கு தொழி;ற்துறையில் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக தேவையான வசதிகளை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 26 ஆவது விடயம்)
நாட்டில் உள்ள தெங்கு உற்பத்திக காணிகளில் 84 சதவீதமானவை 20 ஏக்கருக்கும் குறைந்த சிறிய தென்னந்தோட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் சிறிய தென்னந்தோட்டங்களில் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலமும் உற்பத்தி செலவை குறைப்பதன் ஊடாகவும் பயனுள்ள மற்றும் நிலையான தொழிற்துறையாக மேம்படுததும் எதிர்பார்ப்புடன் தெங்கு காணி உரிமையாளர்கள் மற்றும் கப்புறுக்க நிதியத்தின் மூலமான அங்கத்தவர்களுக்கு தேங்காய் மரத்தில் ஏறக்கூடிய இயந்திரம். உரத்தை பயன்படுத்துவதற்கு சிறிய டிலர் இயந்திரம் புல்வெட்டும் இயந்திரம், நீரை தெளிப்பதற்கு பயன்படுத்தும் இயந்திரம், தென்னை மரத்தை பல்வேறு துண்டுகளாக வெட்டுவதற்கான இயந்திரம், ஆகியவற்றை வழங்குவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இதற்காக பெருந்Nதூட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்கள் சர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. சிறிய தேயிலை தோட்ட உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக நிவாரணம் வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 27 ஆவது விடயம்)
சிறிய தேயிலை தோட்டங்களில் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு உபகரணங்களை விநியோகித்தல் அதனுடன் தொடர்புபட்ட கிராமிய அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக நிவாரணங்களை வழங்குவதற்கு அமைச்சரவை இதற்கு முன்னர் அனுமதி வழங்கியிருந்தது. இருப்பினும் உரிய முறையில் நிலத்தை தயார் செய்தல், மரங்களை மட்டம் செய்தல், புற்களை களைதல், தேயிலைச் செடிகளை பராமரித்தல் உரிய முறையில் உரமிடுதல், மண் அரித்துச் செல்வதை தடுத்தல், வறட்சிக்காலங்களில் தேயிலை உற்பத்திக்கு போதுமான நீரை வழங்குதல் போன்ற நடைமுறைகளின் மூலம் சிறிய தேசிய தோட்ட உரிமையாளர்களின் தொடர்ச்சியாக தேசிய உற்பத்தித்திறனை உறுதி செய்து அறுவடையை அதிகரிப்பது மிகவும் பொருத்தமானதென அடைளாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக தேயிலை உற்பத்திக்கான சரியான விவசாயம் தொடர்பில் ஊக்குவிப்பதற்கு தேவையான உபகரணங்களை சிறிய தேசிய தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு விநியோகிப்பதற்கான வேலைத் திட்டமொன்று 250 மில்லியன் ரூபா முதலீட்டுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன் கீழ் 10 ஆயிரம் நீர் தாங்கிகள், 3500 தண்ணீர் இறைக்கும் இயந்திரங்கள், 4500 தெளிக்கும் கருவிகள் முதலானவை சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு விநிNhயாகிக்கப்படவுள்ளன. இதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. 1941 ஆம் ஆண்டு இலக்கம் 39 கீழான கடன் இணக்கப்பாட்டு கட்டளை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 37 ஆவது விடயம்)
கடன் இணக்கப்பாட்டு சபையில் அங்கத்தவர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தல், கடன் நிவாரண சபையின் தலைவர் அங்கத்தவர்கள் மற்றும் கிளை சபைகளின் தலைவர்களை தெரிவுசெய்வதற்கான விடயங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும் பொருட்டு 1941 ஆம் ஆண்டு இலக்கம் 39 இன் கீழான் கடன் இணக்கப்பாட்டு சபை கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை இதற்கு முன்னர் அனுமதி வழங்கியிருந்தது. இதற்கு அமைவாக திருத்த சட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட திருத்த சட்ட மூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதற்கு அங்கீகாரத்தை பெறுவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலத்தா அத்துக்கோரள அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. நுவரெலியா நானுஓயா பிரதேசத்தில் மும்மொழிகளுக்கான புதிய கலவன் தேசிய பாடசாலையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. (நிகழ்ச்சி நிரலில் 38 ஆவது விடயம்)
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கல்வி வசதிகளை மேலும் அபிவிருத்தி செய்வதற்காக அனைத்து வசதிகளையும் கொண்ட மும்மொழி கலப்பு தேசிய பாடசாலை ஒன்று 800 மில்லியன் ரூபா முதலீட்டுடன் நானுஓயா பிரதேசித்தில் அமைக்கப்படவுள்ளது. தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையிலான மாணவர்களுக்கு கல்வி வழங்கும் பாடசாலையாக இது முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் சமர்;ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. மும்மொழிகளுக்கான புதிய தேசிய பாடசாலையொன்று கொழும்பு பிரதேசித்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. (நிகழ்ச்சி நிரலில் 39 ஆவது விடயம்)
அனைத்து இனங்களுக்கும் உட்பட்ட மாணவர்களுக்கும் மும்மொழிகளில் கல்வியை வழங்கவதற்காக புதிய தேசிய பாடசாலையொன்று கொழும்பு மாவட்டத்தில் அமைப்பதற்கு உத்தேசியக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 900 மில்லியன் ரூபா முதலீட்;டுடன் இந்த மும்மொழி கலப்பு பாடசாலை வெள்ளவத்தை பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளது. இந்தப் பாடசாலைக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிவசம் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. 5000 ஏற்றுமதி உற்பத்தி கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன. (நிகழ்;ச்சி நிரலில் 43 ஆவது விடயம்)
விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படும் முக்கிய உற்பத்திகளை ஏற்றுமதி சந்தைகளுக்கு பொருத்தமான வகையில் பெறுமதி சேர்க்கப்பட்ட ஒன்றிணைந்த செயற்பாடுகளின் மூலம் மேம்படுத்தும் நோக்கில் இரண்டாம் கட்டத்தின் கீழ் நாட்டில் 5000 ஏற்றுமதி கிராமங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் கிராமங்களில் உள்ள வளங்களுக்கு அமைவாக கிராமத்துக்கு தேவையான உற்பத்திகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கு அமைவாக விவசாயிகளுக்கு தேவையான நிதிவசதி, தொழில்நுட்பம், செயல்திறன் வளங்களை பயன்படுத்துதல், விவசாய பண்ணை முகாமைத்துவம் அறுவடையை மேற்கொள்ளுதல் மற்றும் செயற்பாடுகள் போன்ற பிரிவுகளில் பயிற்ச்சிகளும் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன. இவர்களுக்கு தேவையான உள்ளு10ர் மற்றும் சர்வதேச சந்தைக்கான வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்தத் திட்டத்தின் கீழ்; சமூகசேம நலன்கள் ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும். ஏற்றுமதி கைத்தொழில் துறைக்காக ஆய்வு அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டு வேலைத் திட்டம் ஒன்றும் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும். முதல் கட்டத்தின் கீழ் 300 பிரதேச செயலகப் பிரிவுகளில் ஆயிரம் ஏற்றுமதி கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன. 2018 - 2020 ஆம் ஆண்டு காலப் பகுதி வரையில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் மொத்த கிராமங்களில் எண்ணிக்கையை 5000 மாக அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சமூக சேமநல மற்றும் ஆரம்ப கைத்தொழில்துறை அமைச்சருமான தயா கமகே அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. இலங்கை கடற்படையின் தெற்கு கடற்படையின் வைத்தியசாலைக்கு புதிய இரண்டு மாடி வைத்தியசாலை கட்டிடம் ஒன்றை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 46 ஆவது விடயம்)
தெற்கு கடற்படை கட்டளைப்பிரிவு கடற்படை வைத்தியசாலை புஸ்ஸ பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன் இந்த வைத்தியசாலையின் மூலம் இந்த கட்டளைப்பிரிவுக்கு இணைந்ததாக கடமைகளின் நிறைவேற்றும் 4 200 கடற்படையினருக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் வைத்திய வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த வைத்தியசாலையில் நடத்தப்பட்டு வரும் குறைந்த வசதிகளைக் கொண்ட பழமையான கட்டடிடத்திற்கு பதிலாக நவீன வசதிகளைக் கொண்ட இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும் மேலும் தேவைப்படும் நிதியத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. கடற்படை வைத்தியசாலையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கட்டிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 47 ஆவது விடயம்)
684 ஆவது பணியாளர்களைக் கொண்ட கடற்படை பெரியாஸ்பத்திரியில் இலங்கையின் கடற்படையினர் ஓய்வுபெற்ற கடற்படையினர், மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் உள்ளிட்டோர் சுமார் 450 பேர் நாளாந்தம் வைத்திய வசதிகள் வழங்கப்படுகின்றன. இதில் பணியாற்றும் கடற்படையினருக்கு நிரந்தரமான இருப்பிட வசதிகக்கான கட்டிடம் ஒன்று இல்லாமையினால் இந்த கடற்படையினர் எதிர்கொள்ளும் சிரமத்தை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்கும் பொருட்டு நான்கு மாடிகளைக் கொண்ட இருப்பிட வசதிக்கான கட்டிடம் அமைக்கப்படவுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. ஊழியர் சேமலாப நிதியத்தின் நிதி பயன்பாட்டுக்கான கணக்கு மற்றும் திறைசேரி முகாமைத்துவ கட்டமைப்பொன்றை கொள்வனவு செய்தல் (நிகழ்;ச்சி நிரரலில் 49 ஆவது விடயம்)
சுமார் 2000 பில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதியை சேகரித்தல், அதற்கான கணக்கை முன்னெடுத்தல், பயன்களை செலுத்துதல், மேலதிக நிதியை முதலீடு மற்றும் கணக்கு வைப்பீட்டு புத்தகங்களை முன்னெடுத்தல் முதலானவை இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்:டு வருகிறது. நிதியத்தின் கணக்கு மற்றும் திறைசேரி முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக இதில் தற்பொழுது உள்ள கணனி கட்டமைப்புக்கு பதிலாக புதிய கட்டமைப்பொன்றை அமைப்பது சிறந்ததென்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்காக நடவடிக்கையை மேற்கொள்வதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. பொரள்ளை ஆயர்வேத வைத்தியசாலையை போதனை வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில 52 ஆவது விடயம்)
பொரளை ஆயர்வேத போதனை வைத்தியசாலையாக மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் புதிய வாட்டுத் தொகுதியொன்றை நிர்மாணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதன் கீழ் இரண்டாம் கட்டமாக இந்த கட்டிடததை நோயாளர்களுக்கான சிகிச்சை சேவைக்காக விரைவாக பயன்படுத்துவதற்கு தேவையான மின்சார விநியோகம், நீர் மற்றும் இயற்கை கழிவறைகட்டமைப்பை நிர்மாணிப்பதற்காக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. பதுளை மாகாண பெரியாஸ்பத்திரியில் சிறுநீரக நோய் சிகி;ச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கான கேள்வி மனுவைக்கோரல் (நிகழ்ச்சி நிரலில 53 ஆவது விடயம்)
காரணம் அடையாளம் காணப்படாத தொற்றா நோயான சிறுநீரக நோய்க்காக விசேட சிகிச்சை வழங்குவதற்காக பதுளை பெரியாஸ்பத்திரியில் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்கான பிரிவை நிர்மாணிப்பதற்காக கேள்வி மனுக்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவின் சிபாரிசுக்கமைய 668.2 மில்லியன் ரூபாவை ஆளு 'ழுசுஐநுNவு ஊழுNளுவுசுருவுஐழுN – ஊழுஆடீயுNலு (Pஏவு) நிறுவனத்திடம் வழங்குவதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22. கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை அமைப்பதற்கான கேள்வி மனுவைக் கோரல் (நிகழ்ச்சி நிரலில் 54 ஆவது விடயம்)
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவொன்றை நிர்மாணிப்பதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்வனவு குழுவின் சிபார்சுக்கமைய 926.5 மில்லியன் ரூபாவை ஆஃள டுiமெ நபெiநெநசiபெ (Pஎவ) டுவன என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
23. உரத்தை கொள்வனவு செய்தல் (நிகழ்;ச்சி நிரலில் 56 ஆவது விடயம்)வறையறுக்கப்பட்ட இலங்கை உர நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்சல் உர நிறுவனங்களுக்காக செப்டெம்பர் மாதத்துக்கு தேவையான இரசாயன உரக் கொள்வனவை மேற்கொள்வதற்கு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவின் சிபாரிசுக்கமைய 54 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியாவை ஒரு மெற்றிக் தொன் 305 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் 6500 மெற்றிக் தொன் யூரியா (பிரில்;) ஒரு மெற்றிக் தொன் 325 அமெரிக்க டொலர் என்றபடியும் எக்ரிகொமொடிட்டிஸ் அன்ட் பைனேன்ஸ் என்ற நிறுவனத்திடம் கொள்வனவு செய்யப்படவுள்ளது. அத்தோடு 15 ஆயிரம் மெற்றிக் தொன் சுப்பர் ரிபல் பொஸ்பேட்டை ஒரு மெற்றிக்தொன் 334.1 அமெரிக்க டொலர் படி சுவீட் சிங்கப்பூர் ஓவர் சீPஸ் என்ற நிறுவனத்திடம் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
24. தேசிய மற்றும் விநியோக கட்டமைப்பு அபிவிருத்தியும் செயல்திறனையும் மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் கிறீட் வலைப்பின்னலின் துணை நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 60 ஆவது விடயம);
மின்சார கட்டமைப்பில் தேசிய விநியோக வலைப்பின்னலை அபிவிருத்தி செய்தல் செயல்திறனை மேற்படுத்துவதற்காக நான்கு கூறுகளைக்கொண்ட திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் கட்டப் பணியின் கீழ் கிரிந்திவெல, பத்தரமுல்ல, பியகம, கொத்மலை, வேயாங்கொடை, பாதுக்கை, கொஸ்கம, சீதாவக்க, துல்கிரிய, இரத்மலானை, பன்னிப்பிட்டிய, கொலன்னாவ, அத்துருகிரிய, பொல்பிட்டிய, உக்குவெலை மற்றும் நாவுல ஆகிய பிரதேசங்களில் கிரீட் துணை நிலையங்க்ளுக்கு அருகாமையில் நிர்மாணித்தல், மற்றும் மேம்படுத்துதலுக்கான கேள்வி மனுவை மிக்சுபிசி கோப்ரேசன் மற்றும் சீலெக்ஸ் இஞ்னீயரின் பிரைவேட் லிட்டட் ஆகியவற்றினால் செய்துகொள்ளப்பட்ட கூட்டு வர்த்தகத்;திடம் வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிடடிய அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
25. உயிரியல் தொழில்நுட்ப விஞ்ஞான கூடமொன்றை அமைப்பது தொடர்பில் உடன்படிக்கையை எட்டுதல் (நிகழ்ச்சி நிரலில் 61 ஆவது விடயம்
இலங்கையில் ஒன்றிணைந்த தொழில்நுட்ப விஞ்ஞான கூடமொன்றை அமைப்பதற்கு இலங்கைக்கும் சீன அரசாங்கத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கும் இடையில் உடன் படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இரு தரப்புக்குமிடையில் தொழில்நுட்ப புரிந்துணர்வை வலுப்படுத்துவதற்கும் உடன்பட்டுள்ள விடங்கள் மற்றும் நிபந்தனைகளை உள்ளக்கி இரண்டாவது உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது. இதற்காக விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வு திறன் ஆற்றல் அபபிவிருத்தி தொழில்பயிற்சி மற்றும் மலையக மரபுரிமை தொடர்பான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
26. வுறட்சியின் காரணமாக வட மத்திய மாகாணங்களில் வற்றியுள்ள குளங்கள் மற்றும் உற்பத்திகளை வழமை நிலைக்கு முன்னெடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 63 ஆவது விடயம்
வட மத்திய மாகாணத்தின் தற்போது நிலவும் வறட்சியுடன் கூடிய கால நிலை காரணமாக உற்பத்திக்கான 12 ஆயிரம் கிணறுகளும் குடிநீரை பெற்றுக் கொள்வதற்காக பயன்படுத்தப்படும் சுமார் 2000 குளங்களில் நீர் வற்றியுள்ளமை அமையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக வறட்சிக்கு ஈடுகொடுக்கக் கூடிய பொதுவான கிணறுகளை புதிதாக நிர்மாணித்தல், வற்றிப்போயுள்ள உற்பத்திக்கான கிணறுகளை அகழ்தல், வற்றிப் போயுள்ள குளங்களை அகழ்தல், மற்றும் குடிநீருக்கான கிணறுகளை புனரமைத்தல், ஆகிய பணிகள் பிரதேச செயலாளர் ஊடாக விவசாய அமைப்புக்கள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக நீர்ப்பாசன மற்றும் நீர்வள மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

27. தேசிய கலாபவனத்தை மறுசீரமைத்தல்
உயர் கல்வி அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்தை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது. தேசிய கலா பவனத்தில் துரிதமாக மேற்கொள்ள வேண்டியவையென அடையாளம் காணப்பட்டுள்ளவற்றை மறுசீரமைப்பு பணிகளுக்காக தேவையான 42 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.