2018-08-07 ஆம் திகதி அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்
01 பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் மேற்கொள்ளப்படவேண்டிய செப்பனிடும் பணிக்கான ஆலோசனை சேவையைப் பெற்றுக் கொள்ளுதல். – (நிகழ்ச்சி நிரலில் 09ஆவது விடயம்)
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பாராளுமன்ற கட்டித் தொகுதி 1982 ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டதுடன் கடந்த 35 வருட காலப் பகுதிக்குள் இந்தக் கட்டிடத் தொகுதியில் முக்கிய செப்பனிடும் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கமைவாக பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டியதென அடையாளம் காணப்பட்டுள்ள செப்பனிடும் பணிகளை மேற்கொள்வதற்கான ஆலோசனை சேவைக்கான பாராளுமன்ற பணியாளர் ஆலோசனை தெரிவுக் குழுவின் சிபாரிசை கவனத்தில் கொண்டு நகர அபிவிருத்தி அதிகார சபை மூலம் நிறைவேற்றிக் கொள்வதற்காக கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. உமா ஓயா எண்ணற்ற அபிவிருத்தி திட்டத்தில் முக்கிய சுரங்கப் பாதையில் ஏற்பட்ட நீர் ஒழுக்கு காரணமாக பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல். (நிகழ்ச்சி நிரலில் 11 ஆவது விடயம்)
உமாஓயா எண்ணற்ற அபிவருத்தி திட்டம் காரணமாக பாதிப்புக்குள்ளான குடியிருப்பாளர்களுக்கு 6 மாத காலத்துக்கு ஆகக் கூடுதலாக மாதந்த வீட்டு வாடகையை செலுத்துவதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த அபிவிருத்தி திட்டத்தினால் தாக்கத்துக்குள்ளான வீட்டு உரிமையாளர்களின் குடியிருப்புக்காக மாற்றுக் காணி வழங்கப்படும் வரையில் இந்தக் குடியிருப்பாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்த வாடகை தொடர்ந்தும் வழங்கப்படவுள்ளது. இதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் என்ற ரீதியில் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. இலங்கை கடற்படையினால் வெளிநாட்டு கப்பல்களுக்காக வழங்கப்படும் கடற் பாதுகாப்பு சேவை தொடர்பில் சட்ட கட்டமைப்பு ஒன்றை வகுத்தல். – (நிகழ்ச்சி நிரலில் 13 ஆவது விடயம்)
சர்வதேச வர்த்தக கப்பல்களுக்கு கடற் கொள்ளையினரால் மேற்கொள்ளப்படும் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு வழங்குவதற்காக இந்தக் கப்பலினால் ஆயுதங்களுடன் கடற்பாதுப்பு பிரிவினர் ஈடுபடுத்தப்படுவர். அச்சுறுத்தலைக் கொண்ட அனர்த்த வலையத்தில் செல்லும் கப்பல்களில் இவ்வாறான பாதுகாப்பு பிரிவினரை உள்வாங்குவதற்கும் இவ்வாறான அச்சுறுத்தல் வலையத்திற்குள் வரும் கப்பல்களில் உள்ள பாதுகாப்புப் பிரிவினரை தரைக்கு அழைத்துவருவதற்காக காலி மற்றும் கொழும்புத் துறைமுகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு பாதுகாப்பு வழங்கும் தனியார் கடல் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உட்பட்ட ஆயுதம் மற்றும் உதிரிப் பாகங்களின் செயற்பாட்டு தேவையின் அடிப்படையில் இலங்கையின் கடற் படை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பின் கீழ் போக்குவரத்து மற்றும் களஞ்சிப்படுத்தலுக்கு ஒழுங்குறுத்தப்படவுள்ளது. இதற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் மேதகு ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. - போரிடும் தொழில்நுட்ப புரிந்துணர்வு தொடர்பாக ரஷ்யா இலங்கை செயற்பாட்டுக் குழுவின் புரிந்துணர்வு ஆவணத்தில் கைச்சாத்திடுதல் - (நிகழ்ச்சி நிரலில் 14 ஆவது விடயம்)
2014 ஆம் ஆண்டில் ரஷ்யா மற்றும் இலங்கைக்கிடையில் கைச்சாதிடப்பட்ட போரிடும் பரிந்துணர்வு தொடர்பான உடன்படிக்கைக்கு அமைய அமைக்கப்படவுள்ள உத்தேச போரிடும் தொழில்நுட்ப புரிந்துணர்வு குறித்து ரஷ்யா - இலங்கை கூட்டு செயற்பாட்டு குழுவின் பொறுப்புக்கள் மற்றும் உடன்படிக்கையை உள்ளடக்கிய ஆவணம் கைச்சாத்திடப்படவுள்ளது. இதற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. சிறார் பராமரிப்பு நிலையங்களில் வசதிகளை விரிவுபடுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை. (நிகழ்ச்சி நிரலில் 15 ஆவது விடயம்)
சிறார்களுக்கான தரத்துடன் கூடிய பாதுகாப்பு வசதிகளை முன்னெடுக்கும் நோக்கில் தனியார்துறையுடன் இணைந்து பிரதேச மட்டத்தில் 2000 சிறார் பாதுகாப்பு நிலையங்களை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான மனிதவளம் மற்றும் முதலீடுகளை கவரும் நோக்கில் நாட்டில் பாராமரிப்பு நிலையங்களில் வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் மேற்படுத்துவதற்குமாக முதலீட்டாளர்களுக்கு நிதி ஒத்துழைப்பை வழங்குதவதற்காக தொழில்வாண்மையாளர் இலங்கை வேலைத் திட்டத்தின் கீழ் கடன் ஆலோசனைத்திடடம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அத்தோடு தேவையானவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசி;ங்க அவர்களும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சந்திராணி பண்டார அவர்களும் கூட்டாக சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. மாகாண வீதிகள் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி செய்தல். (நிகழ்ச்சி நிரலில் 17ஆவது விடயம்)
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதி முகாமைத்துவ ஆற்றலை மேம்படுத்துவதற்கும் தெரிவு செய்யப்பட்ட வீதிகளை அபிவிருத்தி செய்வதற்குமான உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி பெரசிறுவனம் மூலம் 125 மில்லியன் அமெரிக்க டொலர்கள பெற்றுக் கொள்வதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாடு முழுவதிலும் உள்ள மாகாண வீதிகளில் விரைவாக செய்யக்கூடிய அத்தியாவசிய பராமரிப்பு மற்றும் மேம்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அத்தோடு இதற்குத் தேவையான திட்ட முகாமைத்துவ சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. திகன சிவில் விமான நிலையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை ஆய்வு செய்தல் (நிகழச்சி நிரலில் 19 ஆவது விடயம்)
கண்டி நகரம் மற்றும் நாட்டின் ஏனைய பிரதேசங்களை தொடர்பு படுத்தி நடுத்தர அளவிலான விமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக உள்ளுர் விமான நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. கண்டியில் திகன மாபேரியத்தென்ன என்ற இடத்தில் நிர்மாணிப்பதற்கான சாத்தியக்கூற்றை மேற்கொள்ளும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. 1975 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க இலங்கை மதிப்பீட்டாளர் தொடர்பான நிறுவன சட்டத்தில் உத்தேச ஆலோசனை திருத்தங்கள் (நிகழ்ச்சி நிரலில் 21 ஆவது விடயம்)
1975 ஆம் ஆண்டு இலக்கம் 33 இன் கீழான இலங்கை மதிப்பீட்டாளர்களின் நிறுவன சட்டத்தில் தற்போதைய சமுக பொருளாதார நிலைக்கு பொருத்தமான வகையில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவையினால் வழங்கபட்டுள்ள அங்கீகாரத்துக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ள திருத்த மூலத்தை வர்த்தமாணியில் வெளியிடுவதற்கும் அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த அமைச்சரவை ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. 2018 ஆம் ஆண்டு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டு பகுதியின் அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவு தொடர்பான அறிக்கை (நிகழ்ச்சி நிரலில் 23 ஆவது விடயம)
2017ம் ஆண்டில் இருந்து அரசாங்கத்தின் உண்மையான செலவு மற்றும் வருமானம் தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2018 நிதி ஆண்டில் முதலாவது காலாண்டு பகுதியில் 403 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன் (அரச கடன் சேவைகள் தவிர்ந்த) இந்தக் காலாண்டுப் பகுதியில் இலக்கிடப்பட்ட செலவில் 91 சத விதமாகும். அசாங்கத்தினால் இந்தக் காலாண்டுப் பகுதியில் திரட்டப்பட்ட வருமானம் 469 பில்லியன் ரூபாவாகும். அத்தோடு இதில் 425 பில்லியன் ரூபா வரி மூலமும் 44 பில்லியன் ரூபா வரி செலுத்தப்படாத வளங்கள் மூலமும் கிடைத்துள்ளது. இது காலாண்டுப் பகுதியில் எதிர்பார்க்கப்பட்ட 90.2 சதவீத வருமானமாகும். இதேபோன்று 2018 ஆம் ஆண்டில் முதலாவது காலாண்டுப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட 1354 திட்டங்களில் 561 திட்டங்கள் காலாண்டுப் பகுதியின் இலக்கில் 75 சதவீதத்திற்கு மேற்பட்ட இயற்பொருள் சார்ந்த அபிவிருத்தி இடம்பெற்றுள்ளது. அத்தோடு 444 திட்டங்களில் இயற்பொருள் சார்ந்த முன்னேற்றம் 25 சதவீதத்துக்கும் குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. குளியாப்பிட்டி ஆதார வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக தரம் உயர்த்துதல் (நிகழ்ச்சி நிரலில் 27 ஆவது விடயம்)
2017 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைவாக வட மேல் பல்கலைக்கழகத்துக்கென புதிய வைத்திய பீடமொன்றை பெற்றுக் கொடுப்பதற்கான பிரேரணைக்கு அமைவாக இந்தப் பீடத்தில் உள்வாங்கப்படும் மாணவர்களின் மருத்துவ பயிற்சி நடவடிக்கைகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் பொருட்டு குளியாப்பிட்டி ஆதார வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக உயர் தரத்திலான மருத்துவ பயிற்சியை வழங்கக்கூடிய வகையில் குளியாப்பிட்டி ஆதாரவ வைத்தியசாலையை அனைத்து வசதிகளையும் கொண்ட முழுமையான போதனா வைத்தியசாலையாக மேற்படுத்தப்படவுள்ளது. இதற்காக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. அரச இராஜதந்திர அரச பணி மற்றும் சேவை வெளிநாட்டு கடவுச்சீட்டைக்கொண்ட நபர்களுக்கு விசா அனுமதிப்பத்திர அனுமதியை பெற்றுக் கொள்வதிலிருந்து விடுவிப்பதற்காக இலங்கை மற்றும் மொரோக்கோ அரசாங்கங்களுக்கிடையில் உடன்படிக்கை எட்டப்படவுள்ளது. (நிகழ்ச்சி நிரலில் 31 ஆவது வியடம்)
இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுப் பயணத்தில் அரச இராஜதந்திர அரச பணி மற்றும் சேவைக்கான கடவுச் சீட்டை கொண்டுள்ளவர்களுக்கு விசா அனுமதிப் பத்திர அனுமதியை பெற்றுக்கொள்வதிலிருந்து விடுவிப்பதற்காக இலங்கை மற்றும் மொரோகொ அரசாங்கங்களுக்கிடையில் உடன்பாடு எட்டப்படவுள்ளது. இதற்காக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வட மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ். பி. நாவின்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. நடுத்த வகுப்பினருக்கு கட்டுப்படியான விலைக்கு வீடுகளை வழங்குவதற்கான வேலைத் திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 32 விடயம்)
நடுத்த வகுப்பைச் சேர்ந்த சமுகத்தினர் மத்தியில் அதிகரித்துவரும் வீடுகளுக்கான கோரிக்கைக்கு பொருத்தமான வகையில் வீடுகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக தொழில்துறையினர் மற்றும் நிறைவேற்று தரத்தைக் கொண்ட அதிகாரிகளின் வீடுகளின் தேவைக்காக கொட்டாவ, உறுகொடவத்த, அநுராதபுரம், நுவரெலியா, அவிசாவளை ஆகிய பிரதேசங்களில் 1900 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. எம்பிலிப்பிட்டிய நகர திட்டம் மற்றும் நகர பூங்கா அபிவிருத்திக்காக தேவையான காணியை ஒதுக்கீடு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 35 ஆவது விடயம்)
அம்பாந்தோட்டை நகரத்தில் இடம்பெற்று வரும் துரித அபிவிருத்தி திட்டத்தின் காரணமாக இதற்கு அருகாமையில் அமைந்துள்ள எம்பிலிப்பிட்டி நகரம் துரிதமாக அபிவிருத்திக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கமைவாக எம்பிலிப்பிட்டி நகரத்தில் அடிப்படை வசதிகளை மேற்படுத்துவதற்கு தேவையான திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்காக எம்பிலிப்பிட்டிய நகர மத்திய அபிவிருத்தி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் காவன்திஸ்ஸ குளம், மற்றும் அருகிலுள்ள வலையத்தை அபிவிருத்தி செய்வதற்கும் நகர மத்திய அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் சிறுவர் பூங்கா ஒன்றும் வீதி அபிவிருத்தி மற்றும் ஏனைய அபிவிருத்தி வசதிகளையும் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த இரண்டு திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான காணியை நகர அபிவிருத்தி அதிகார சபை பெற்றுக்கொள்ளவுள்ளது. இதற்காக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. செல்லக்கதிர்காம யாத்திரிகர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் அப் பிரதேசத்தை அழகுபடுத்தி அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் (நிகழ்;ச்சி நிரலில் 36 ஆவது விடயம்)
செல்லக்கதிர்காமத்துக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான பொதுவசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் அந்த பகுதியை அலங்காரப் படுத்துதற்குமான திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கு தேவையான நிதியை பெற்றுக் கொள்வதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. பொது போக்குவரத்து சேவைக்காக செகுசு பஸ்களை சேவையில் ஈடுபடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 37 ஆவது விடயம்)
மேல் மாகாணத்தில் நிலவும் கடும் வீதி நெருக்கடியை குறைத்துக்கொள்ளும் முக்கிய நடவடிக்கையாக தற்பொழுது தமது போக்குவரத்துவசதிகளுக்காக தனியார் வாகனங்களை பயன்படுத்துவோரை பொது போக்குவரத்து சேவையில் ஈர்க்கும் தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கமைவாக குறைந்த காலப்பகுதிக்குள் பயண இடத்தை நெருங்கக் கூடிய வகையில் வீதிகளில் பஸ்களுக்கு முக்கியத்தும் வழங்கும் வீதி ஒழுங்கு முறை தற்பொழுது வெற்றிகரமாக இடம்பெற்று வருகிறது. இந்த நிலையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் பொது போக்குவரத்து சேவைக்காக தற்போது பயன்படுத்தப்படும் பஸ்களுக்கு பதிலாக குளிரூட்டப்பட்ட மிகவும் வசதி மற்றும் பாதுகாப்பைக் கொண்ட பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதில் பஸ் உரிமையாளர்கை ஊக்குவிப்பதற்காக அவர்கள் மத்தியில் தொழில்வாண்மை இலங்கை வேலைத் திட்டத்தின் கீழ் கடன் வசதிகள் வழங்கப்படவுள்ளது. இதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. சிரேஷ்ட கலைஞர்களுக்காக வீடு வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் சீன - இலங்கை அருங்காட்சியகம் ஒன்றை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 35 ஆவது விடயம்)
இலங்கை பாராளுமன்ற மன்றத்தில் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக சிரேஷ்ட கலைஞர்களுக்காக வீடு வசதிகளை வழங்குவதற்பாப 108 வீடுகள் அமைக்கப்படவுள்ளதுடன் சீன இலங்கை வரலாற்று தொடர்புகளை பிரதிபலிக்கும் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கு தேவையான நிதியை சீன அரசாங்கம் வழங்குவதற்கு உடன்பட்டுள்ளது. இதற்கு அமைவாக சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் நன்கொடையின் கீழ் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மாநகர மற்றும் மேல் மாகாண அகிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 46 ஆவது விடயம்)
இலங்கை மாணவர்களுக்கு உயர் கல்விக்கான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுப்பதற்காக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட 15 பல்கலைக்கழங்களுக்கு மேலதிகமாக பாராளுமன்ற சட்டத்தின் மூலம் பல்வேறு அமைச்சுகளுக்கு உட்பட்டதாக அமைக்கப்பட்டுள்ள ஐந்து பல்கலைக்கழகங்கள் செயற்படுகின்றன. அரசாங்கத்தின் உயர் கல்வி நிறுவனங்களின் இடவசதிக்காக நிலவும் வரையறையின் காரணமாக வெளிநாட்டு பல்கலைக்கழங்கங்களுடன் ஒன்றிணைக்கப்பட்டு அந்தப் பல்கலைக்கழங்கங்களில் பட்டங்களை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தாமாகவே பட்டங்களை வழங்குவதற்காக அங்கீகாரம் பெற்றுள்ள மேலும் 16 கல்வி நிறுவனங்கள் நாட்டில் செயற்படுகின்றன. இந்த உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தினதும் அதிகாரம் மற்றும் தரத்தை பாதுகாப்பதை உறுதி செய்தவன் மூலம் உயர் கல்வியின் துறையின் தரத்தையும் அதன் ஆற்றலையும் உறுதி செய்யவதற்காக தரத்தை பாதுகாப்பதற்கும் ஆற்றலையும் மேம்படுத்துவதற்கான ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்காக சட்டமூலம் ஒன்றை வகுப்பதற்காக உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஸபக்ஷ அவர்கள் சர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. பால் சேகரிக்கும் 6 மத்திய நிலையத்தை அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 47 ஆவது விடயம்)
தேசிய பசும்பால் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கில் சிறிய அளவிலான பால் சேகரிக்கும் மத்திய நிலையங்களை அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்காக பிரான்சின் நேவiஒளை என்ற முதலீட்டு வங்கியின் நிதியத்தின் ஒத்துழைப்புடன் 6 பால் சேகரிக்கு மத்திய நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்காக பிரான்சின் போகாட் என்ற நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்துக்கொள்ளப்படவுள்ளது. இதற்காக கடற்றொழில் நீரியியல் வளத்துறை அமைச்சரும் கிராமிய பொருளாதார தொடர்பான அமைச்சருமான விஜித் விஜயமுனி சொய்சா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாமுக்கு மூன்று மாடி வீட்டுத் தொகுதியொன்றை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 49 ஆவது விடயம்)
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு பணிக்காக இலங்கை விசேட பொலிஸ்அதிரடிப் படையைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையினலான அதிகாரிகள் ஒன்றிணைக்கப்படுகின்றனர். அவ்வாறு செய்யப்படும் பட்சத்தில் இந்த அதிகாரிகளுக்கு தேவையான வீடு வசதி செய்யப்படாததன் காரணமாக கோணஹேன முகாம் பகுதியில் சேதடைந்துள்ள நிலையிலுள்ள படையினரின் வீடொன்றை அகற்றி அதற்கு பதிலாக அதிகாரிகளுக்கு தங்குமிட வசதியைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய நவீன வசதிகளைக் கொண்ட மூன்று மாடி படையினருக்கான மாடி வீட்டுத் தொகுதியொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்காக தொடர்ந்து நிதிவழங்குவதற்கென அரச நிறுவாகம் மற்றும் முகாத்துவ மற்றும் சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்கள் சமர்ப்பித்துள்ள ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. தேசிய காணி பயன்பாட்டுக் கொள்கையை புதுப்பித்து முன்னெடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 51 ஆவது விடயம்)
சுமார் 6..55 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்புக்க வரையறைக்கப்பட்ட இலங்கையில் நாளாந்தம் வளர்ச்சியடைந்துவரும் மனிதர்களின் தேவையை பூரணப்படுத்துவதற்கும் தேசிய பொருளாதார அபிவிருத்தி மூல உபாயங்களை செயற்படுத்துவதற்கும் அயற்கை சுற்றாடலை முன்னெடுப்பதற்கும் மிகவும் விஞ்ஞான ரீதியிலான அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புதுபிக்கப்பட்ட காணி பயன்பாட்டுக் கொள்கை ஒன்று இருப்பதன் தேவை அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக தற்பொழுது உள்ள 2007 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட காணி பயன்பாட்டுக் கொள்கை மதிப்பீடு செய்யப்பட்டு இத்துறையுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினர்களினதும் பங்களிப்புடன் தற்போதைக்கு பொருத்தமான வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது, அதற்காக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சர்வை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. விறுசுமித்துறு வீடமைப்புத் திட்டத்தின் கீழ் முழுமைப்படுத்தப்படாத வீடுகளை முழுமைப்படுத்தலை துரிதப்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 52 ஆவது விடயம்)
நடவடிக்கைகளின் போது உயிரிழந்த படை வீரரர்களின் நெருங்கி உறவினர்கள் மற்றும் ஊனமுற்ற படைவீரர்களின் வீட்டுத்தேவையைப் பூர்த்தி செய்வதற்கான 2017 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆண்டு காலப் பகுதியில் 1950 முழுமையான வீடுகளும் 1700 முழுமைப்படுத்தப்படாத வீடுகளையும் நிர்மாணிப்பதற்காக விறுசும்மித்துறு என்ற வீடமைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்போது வீடுகளை அமைப்பதற்கான உழைப்பின் பங்களிப்புடன் முழுமையான வீட்டுக்காக நான்கு லட்சம் ரூபாவும் ஒரளவுக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றுக்காக இரண்டு இலட்சம் ரூபாவாக மதிப்பீடு செய்யப்பட்டு அதனை முப்படை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையணியினரின் உழைப்பின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென தீர்மானிக்கப்படடுள்ளது, முழுமையான வீடொன்றை அமைப்பதற்காக பாதுகாப்பு பிரிவின் பங்களிப்கை பெற்றுக் கொள்வதற்கு முடிந்தபோதிலும் வீட்டை முழுமைப்படுத்துவதில் இந்த பங்களிப்பை எதிர்பார்க்கப்பட்ட மட்டத்தில் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இதனால் இந்த வேலைத் திட்டத்தின் கீழ் வீட்டை முழுமைப்படுத்தப்படுவதை துரிதப்படுத்துவதற்காக பாதுகாப்புப் பிரிவினரின் பங்களிப்புக்கு பதிலாக அரசாங்கத்தின் நிதி பங்களிப்பை பயணாளிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கும் இவ்வாறான 1649 வீடுகளை முழுமைப்படுத்துபவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது, இதற்காக வீடுமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் முன்வைத்து பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22. மாத்தறை சிறைச்சாலையை கொடவிலவத்த என்ற இடத்தில் ஸ்தாபித்தல் (நிகழ்ச்சி நிரலில் 55 ஆவது விடயம்)
மாத்தறை சிறைச்சாலையில் தற்போது நிலவும் இடப் பிரச்சனையின் காரணமாக கொடவில வத்த என்ற இடத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதற்காக நீதி சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரல அவர்கள் சமர்ப்பதித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
23. தேசிய கல்வி நிறுவனம் அமைந்துள்ள காணி மற்றும் அதற்கு உட்பட்ட நுண்கலை கல்வி நிறுவனம் அமைந்துள்ள பாதுகக்க மீபெயில் அமைந்துள்ள காணியை தேசிய கல்வி நிறுவனம் சுவீகரித்துக் கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 57 ஆவது விடயம்)
மாஹரகமயில் அமைந்துள்ள தேசிய கல்வி நிறுவனம் உள்ள 17.53 ஏக்கர் காணியும் இந்த நிறுவனத்;;தின் நிறுவாகத்துக்கு உட்பட்ட பாதுக்க மீபே நுண்கலை கல்வி நிறுவனம் அமைந்துள்ள 16 ஏக்கர் 26 பேர்ச் காணியையும் முறையான வகையில் தேசிய கல்வி நிறுவனத்தினால் சுவீகரிhப்பதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் சமர்ப்பதித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
24. அரச பாடசாலைகளில் 13 வருட கல்வியை உறுதி செய்யும் கல்வி வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 58 ஆவது விடயம்)
இலவசக் கல்விக் கொள்கையின் காரணமாக ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை கல்வி தொடர்பாக இலங்கையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டிருந்த போதிலும் கல்விப் பொது சாதாரண பத்திர (சா-த) பரீட்சைக்குப் பின்னர் இன்றும் சுமார் வருடாந்தம் 80 ஆயிரம் மாணவர்கள் மேலதிகக் கல்வியோ தொழில் பயிற்சியோ இன்றி பாடசாலைக் கட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவச் சமூகம் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு மனிதவள சந்தையில் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக் கூடிய தொழில் ஆற்றளைக் கொன்றவர்களாக தரம் உயர்த்தும் நோக்கில் 13 வருட தொடர் கல்வியை பெற்றுக் கொடுப்பதற்காக கல்வி பொதுத் தராதர பத்திர (சாத) பரீட்சையில் பெறுபேறுகளை கவனத்தில் கொள்ளாது மேலும் இரண்டு வருடங்களுக்கு 26 தொழில் கற்கை நெறிகளில் ஒரு கற்கை நெறியில் ஆற்றலை பெற்றுக் கொள்வதற்கான வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் 2019 ஆம் ஆண்டு தொடக்கம் நாடு முழுவதிலும் 880 மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் தேசிய வேலைத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
25. இலங்கை தேசிய இளைஞர் தொண்டர் சேவை (நிகழ்ச்சி நிரலில் 62) ஆவது விடயம்)
தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத் திட்டங்களில் இளைஞர் சேவை பணிகள் முக்கிய இடம்பெறுகின்றன இருப்பினும் இளைஞர் சமூகத்;தின் தொண்டு சேவைக்கு உரிய கௌரவம் கிடைக்காததினால் தொண்டு சேவைக்காக இளைஞரின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதில் மேலும் சிரமம் நிலவுகிறது. இதற்கமைவாக கிராமிய பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் இளைஞர் சமூக செயற்பாட்டை வலுவூட்டுவதற்கும் தொண்டர் பணியாளர்களுக்கான ஐக்கிய நாடுகளின் சபையில் தொண்டர் வேலைத் திட்டம் ஐக்கிய நாடுகளின் சபையின் தொண்டர் வேலைத் திட்டம்,ஜப்பான் சர்வதேச புரிந்துணர்வு முகவர், கொரிய சர்வதேச புரிந்துணர்வு முகவர், செஞ்சிலுவை அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளுக்கூடாக தொண்டர் பணியாளர்களை பயிற்விப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதே போன்று சிறப்hன தொண்டர் பணியாளர்களுக்கு தங்கம், வெள்ளி. முற்றும் உலோகவிருதுகளை வழங்புவதற்கும் தொழில் வாய்ப்பு மற்றும் பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் இணைந்து கொள்ளுவதற்கும் தொண்டர் சேவைக்கான ஊக்குவிப்பு நடைமுறை ஒன்றை வகுப்பது பாராட்டை வழங்குது உள்ளிட்ட கொள்ளை ரீதியிலான தீர்மானத்தை மேற்கொள்வதற்குமாக செயற்பாட்டு குழுவொன்றை நியமிப்பதற்கு இனைஞர் அலுவல்கள் திட்டமுகாமைத்துவம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகர ரத்நாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
26. தேசிய வர்த்த கலந்துரையாடல் குழு (நிகழ்சசி நிரலில் 67 ஆவது விடயம்)
ஏற்றுமதி ஒழுங்கு விதிகள் மூலம் நாட்டுக்கு மிகவும் பயன் உள்ள வர்த்தக சந்தையொன்றில் பிரவேசிப்பதற்கும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஆகக் கூடுதலான வகையில் ஈர்ப்பதற்குமாக பல்வேறு நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்கடிக்கை மேற்கொள்வற்கு கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக இவ்வாறான உடன்படிக்கை நாட்டுக்கு பயனுள்ள உடன்கடிக்கையை மேற்கொள்வதற்காக சம்மந்தப்பட்ட துறையில் ஆற்றலைக் கொண்ட 17 பிரதிநிதிகளை உள்ளக்கிய தேசிய வர்த்தக கலந்துரையாடல் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்காக மூல உபாய வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
27. யானைகளினால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தீர்ப்பதற்காக உத்தேச புதிய வேலைத் திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 68 ஆவது விடயம்)
கடந்த ஐந்து வருட காலப் பகுதியில் யானைகளினால் பொது மக்களுக்க ஏற்பட்ட பாதிக்கள் காரணமாக 375 பேரும் உயிரிழந்ததுடன் 1077 யானைகளுக்கும் சொத்துக்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டன. 5800 சம்பவங்களில் இவை இடம்பெற்றதாக அறிக்கை இடப்பட்டுள்ளது. தற்பொழுது மிக மோசமான பிரச்சினையாக நிகழும் யானைகள் மூலமாக மக்களுக்கான பாதிப்பு தொடர்பான பிரச்சினையை துரிதமாக தீர்ப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக யானைகளினால் அச்றுத்தல் உள்ளாகும் பிரதேங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறான பிரசேங்களில் 2551 கிலோ மீட்டர் நீளத்தைக் கொண்ட மின்சார வேலி அமைக்கப்படவுள்ளது. இதுவரையில் 4349 கிலோ மீட்டர் மின்சார வேலியுடன் தொடர்பு படுத்துவதன் குறித்தும் யானை வேலிகளை பாதுகாத்தல் மற்றும் பராமரிப்பதற்காக விசேட வேலைத் திட்டத்துக்கு தேவையான மனித வளம் மற்றும் வசதிகளை மேற்படுத்துவதற்கும் புதிதாக அமைக்கப்படும் மின்சார வேலிகளை பராமரிப்பதற்கான வேலைத் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த வேலைத்; திட்டத்தின் 2018 ஆம் ஆண்டு ஆரம்பித்து துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதி வழங்கப்படவுள்ளது. இதற்காக நிலைபேறான அபிபவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
28. பயணிகள் போக்குவரத்து சூழலுக்கு பொருத்தமான 1000 பஸ்களை சேவையில் ஈடுபடுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 72 ஆவது விடயம்)
நாளாந்த பயணிகளின் போக்குவரத்து சேவையை வழற்குவதற்காக சுமார் 7237 பஸ்களை இலங்கை போக்குவரத்து சபை சேவையில் ஈடுபடுத்த வேண்டும். தற்பொழுது இந்த சபையிடம் 6540 பஸ்கள் மாத்திரமே உண்டு. இதே போன்று குறிப்பிட்ட ஆயுட்காலம் நிறைவடைகின்றமை மற்றும் பாரிய விபத்துக்கள் காரணமாக பஸ்கள் அகற்றப்படுகின்றமை ஆகியவற்றினால் வருடாந்தம் 500 பஸ்கள் Nசைவயில் ஒன்றிணைக்கப்பட வேண்டுமென அடையாளங் காணப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்காக புதிதாக 892 பஸ்களை கொள்வனவு செய்வதற்கு தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு பயணிகள் போக்கவரத்து சேவையை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக மேலும் 1000 பஸ்களை உடனடியாக கொள்வனவு செய்யப்பட வேண்டுமென்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தத் தேவையை பூர்த்தி செய்வதற்காக அங்கேரி அரசாங்கம் மற்றும் அதன் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தின் வங்கியின் ஒத்துழைப்புடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு மின்சாரத்தினாலும் இரண்டு சக்திகளினாலும் செயல்படக் கூடிய 1000 பஸ்களை சேவையில் ஒன்றிணைப்பதற்காக சமர்ப்பி;த்துள்ள விடயத்தை கவனத்தில் கொண்டு சுற்றாடலுக்கு பொறுத்தமான தொழில்நுட்பத்தினுடான மின்சக்தியில் செலுத்தக் கூடிய 250 பஸ்களும் இரட்டை செய்பாடுகளைக் கொண்ட 75 பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்காக சேசெல் ஓல்டிங் நிறுவனத்துடன் உடன்பாடு எட்டப்படவுள்ளது. இதற்காக போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிரிபாலடி சமர்;பித்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
29. திருகோணமலை துறைமுகத்தின் அஷ்ரப் இறங்குதுறையை விரிவுபடுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 77 ஆவது விடயம்)
கிழக்கு மற்றும் தென்கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் கைத்தொழில் அபிவிருத்திக்கு அமைவாக திருகோணமலை துறைமுகததில் கொள்கலன் நடவடிக்கைகளுக்காக உள்ள அதிகரித்துவரும் கோரிக்கையை பூர்த்தி செய்வதற்காக திருகோணமலை துறைமுகத்தில் மேலதிக நங்கூரம் இடும் வசதிகளை மேற்கொள்வதற்கான தேவை அடையயாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக தற்போழுது வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் இந்தத் துறைமுகத்தில் உள்ள ஒரே ஒரு கொள்கலன் நங்கூரம் பகுதியான அஷரப் இறங்குத்துறையை மேம்படுத்துவதற்கான திட்டம் ஆரம்பிகக்கப்படவள்ளது. இதற்காக துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
30. பேராதனை பல்கலைககழத்தில் வைதிய பீடத்தில் முழுமையான துணை (Paraclinical) கட்டிடத்தை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 81 ஆவது விடயம்)
1962 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட பேராதனைப் பல்கலைக்ககழகாத்தில் வைத்திய பீடத்திற்காக வருடாந்தம் தற்போழுது 215 மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றனர். வைத்திய பீடத்தில் மாணவர்களின் கல்வித் தேவைக்காக 250 மில்லியன் ரூபா முதலீட்டின் முழமையான துணைக் கட்டிடம் ஒன்று நிர்மாணிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் மாடியிலும் முதரலாவது மாடியிலும் நிர்மாணப் பணிகள் தற்பொழுது பூர்தியடைந்துள்ளன. இதன் இரண்டாவது கட்டத்தின் கீழ் மேலும் 7200 சுற்றளவு மீட்டர் பகுதியை ஒன்றிணைத்து அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்காக உயர் கல்வி அமைச்சர் மற்றும் கலாசார அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச அவர்கள் சமர்ப்பித்;த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
31. 48 அத்தியாவசிய மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டதன் காரணமாக மருந்துகளை பெற்றுக்கொள்வதில் உள்ள அழுத்தங்கள் (நிகழ்ச்சி நிரலில் 84 ஆவது விடயம்)
2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் திகதி இலக்கம் 1989 – 61 இலக்க அதி விசேட வர்த்தமானி மூலம் 48 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்பட்டது. அதன் அலுத்தம் தொடர்பில் தேசிய மருந்தாக்க ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையினால் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் மருந்து சந்தை தொடர்பான தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வுக்கு அமைவாக கீழ் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுகாதார போசாக்கு மற்றும் தேசிய மருத்துவ துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்த அவர்கள் முன்வைக்கப்பட்ட விடயங்களில் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.
- மருந்து வகைகள் அதிகரித்த விலையின் காரணமாக வைத்திய சிபாரிசின் அடிப்படையிலும் உரிய வகையில் மருந்து வகைகளை பயன்படுத்த முடியாத நோயாளர்கள் குறைந்த விலைகளின் கீழ் உரிய வகையில் மருந்துகளை பயன்படுத்துவதற்கு ஈடுபட்டுள்ளதாகவும் விசேடமாக நீரழிவு நோய், இரத்த அழுத்தம் முதலான தொற்றா நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து பயன்பாடு அதிகரித்திருப்பதாகவும் இதற்கமைவாக மொத்த மருந்து பாவனை அதிகரித்துள்ளமையும்.
விரிவான வகையில் பயன்படுத்தப்படும் 280 வர்த்தக மருந்து குறியீடுகளிலான சில்லறை விலையை தீர்மானிப்பதற்கு மருந்தக ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதினால் உயர் தரத்துடனான மருந்து பாவனை குறைவடையக் கூடும் என்று மதிப்பிடப்பட்ட போதிலும் அவ்வாறான வர்த்தக குறியீட்டிலான தயாரிப்பாளர்களின் வர்த்தக சந்தையில் பங்கு குறிப்பிடத்தக்க வகையிலும் புதிய உற்பத்தி வர்த்தக குறியீட்டின் கீழான தயாரிப்பாளர்களளின் வர்த்தக சந்தையில் பங்கு ஒரு வருட காலத்துள் 600 சத வீதத்தினால் அதிகரித்துள்ளமை.
இதற்கமைவாக இதுவரையில் சம்பந்தப்பட்ட ஒழுங்குறுத்தல் முறையின் பெறுபேறாக 4.4 பில்லியன் ரூபா பயன்கள் நோயாளர்களுக்கு கிடைத்துள்ளமை
32. பசுமை பூங்கா மற்றும் பசுமை வலையத்தைக் கொண்ட நடமாடும் உடற்பயிற்சி கட்டமைப்பை நிர்மாணித்தல். (நிகழ்ச்சி நிரலில் 85 ஆவது விடயம்)
வரவு செலவு திட்டத்தின் முன்மொழியின் கீழு; அனைத்து பிரNதுச சபை பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் பசுமை பூங்கா அல்லது பசுமை வலையம் ஒன்றுடனான உடற்பயிற்சி கட்டமைப்பை அமைப்பதற்காக 1500 மி;ல்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு இதன் மூலம் முக்கியமாக நாடு முழுவதிலுதம் 54 திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படுவது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக பசுமை பூங்கா வேலைத் திட்டம் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ககண்காணிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களின் இணைப்புடன் செயல்படுத்துவதற்காக மாநகர மற்றும் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வஙைழங்கியுள்ளது.