2018.07.24 ஆம் திகதி அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்


01. ஹெலனிக் குடியரசின் (கிரேக்கம் ) இத்தாலி மற்றும் இரு தரப்பு சேவைக்கான உடன்படிக்கை – (நிகழ்ச்சி நிரலில் 8ஆம் மற்றும் 9ஆம் விடயங்கள்)

கிரேக்கத்திற்கும் இத்தாலி ஆகிய அரசாங்கங்களுடனான சுருக்கமாக கையெழுத்திடப்பட்ட விமான சேவை உடன்படிக்கையில் இலங்கையின் அதிகாரத்தை கொண்ட பிரதி நிதி ஒருவர் மூலமாக கைச்சாத்திட்டு அந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. கண்டி முனை கட்டமைப்பை நிர்மாணித்தல் - (நிகழ்ச்சி நிரலில் 16வது விடயம்)

கண்டி நகரத்தில் பொது போக்குவரத்து சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்காக கண்டி பன்முக போக்குவரத்து கட்டமைப்பொன்றை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அழுத்தத்திற்கு உள்ளாகும் ரயில் திணைக்களத்தின் கட்டிடக் தொகுதியை மறுசீரமைப்பதற்காக 4 மாடிகள் மற்றும் 5 மாடிகள் கொண்ட இரண்டு கட்டிடத்தொகுதிகளும் அமைக்கப்படவுள்ளன. அத்தோடு ஸ்ரீ தலதா மாளிகைக்கு வருகை தரும் பக்தர்களுக்காக வாகனதறிப்பிடம் ஒன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளது. இவற்றுக்காக 1460 மில்லியன் ரூபாவை வழங்குவதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

03. காலநிலை மாற்றத்திற்கு உட்பட்டதாக விவசாய நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டம் (2018-2024) –(நிகழ்ச்சி நிரலில் 18 வது விடயம்)

சிறிய குளங்கள் வாய்க்கால்கள் மற்றும் ஓடைகளை கொண்ட சிறிய நீர்ப்பாசனத்தை மூலம் பாரியளவில் வயற்காணிகளில் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்தோடு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான விவசாய குடும்பங்கள் இதன் மூலம் தமது வாழ்வாதாரத்தை தேடிக்கொள்கின்றனர். சிறிய நீர்ப்பாசனத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் இந்த நெற்காணிகள் காலநிலை மாற்றத்தினால் மிக இலகுவாக தாக்கத்திற்கு உள்ளாக முடியும் என்பதினால் 11வறட்சி மாவட்ட வலயங்களில் உள்ள முழுமையான 53 கட்டமைப்பின் கீழ் உள்ள 789 சிறிய குளங்கள் காலநிலை மாற்றத்திலான தாக்கத்திற்கு ஈடு கொடுக்க கூடிய வகையில் புனரமைக்கப்பட வேண்டுமென்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த குளங்களின் மூலமான நீரைக்கொண்டு உற்பத்தி செய்யப்படும் காணிகளிலிருந்து பெறப்படும் அறுவடையை அதிகரிக்கும் நோக்குடன் 140 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்ட மொத்த முதலீட்டு திட்டமொன்று 2018-2024 காலப்பகுதியில் உலக வங்கியின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. சுத்தமான சிலோன் தேயிலை Pure Ceylon tea ஏற்றுமதிக்கான வர்த்தக குறியீட்டை பிரபல்ய படுத்துவதற்கான பரிந்துரைக்கான நடைமுறை 2018/2019- (நிகழ்சசி நிரலில் 21வது விடயம்)

2015ம் ஆண்டு வரவு செலவு திட்ட முன்மொழிக்கமைவாக சிங்கத்தின் சின்னத்துடனான தூய்மையான சிலோன் தேயிலை என்ற வர்த்தக குறியீட்டை தொடர்ந்தும் உலகமுழுவதும் பிரபல்யம் படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக 19 நிறுவங்களுடன் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டிருந்ததுடன் இதனடிப்படையில் சுமார் 177 மில்லியன் ரூபா இந்த பணிக்காக செலவிடப்பட்டிருந்தது. இந்த வர்த்தக சின்னத்தை பிரபல்யம் படுத்துவதற்கான பரிந்துரை நடைமுறையை 2018/2019 வருடங்களிலும் நீடிப்பதற்கு இலங்கை தேயிலை சபை திட்டமிட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கை தேயிலை சபையினால் திட்டமிட்பட்டுள்ள உலகளாவிய தேயிலை மேம்பாட்டு வேலைத்திட்டத்திற்கு அமைவாக தனிப்பட்ட வர்த்தக குறியீட்டைபிரபல்லியப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் முழுமையான தேசிய உரிமையாளரிடம் - தேயிலை ஏற்றுமதி நிறுவனம், / ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் பிரபல்யப்படுத்துவதற்கான செலவிடும் தொகையில் 50சதவீதத்தை அவர்களுக்கு வழங்குவதற்காக இலங்கை தேயிலை சபையின் நிதியத்தின் 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது இதற்காக பெருந்தோட்ட துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


05. சிறிய இறப்பர் தோட்ட உரிமையாளர்களை ஊக்குவித்தல் – (நிகழ்ச்சி நிரலில் 22வது விடயம்)

கடந்த காலப்பகுதியில் சர்வதேச சந்தையில் இயற்கை இறப்பருக்கான விலை வீழ்ச்சியடைந்ததனால் உள்ளூர் இயற்கை இறப்பர் உற்பத்தி வீழ்ச்சிகண்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 130 000 சிறிய இறப்பர் தோட்ட உரிமையாளர்களை பாதுகாப்பதற்கும் இவர்களை இறப்பர் உற்பத்தி துறையில் தொடர்ந்தும் தக்கவைத்துகொள்;வதற்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதற்கமைவாக உற்பத்தி அறுவடையை அதிகரிப்பதற்கு பெரும் உதவியாக அமைய கூடியதான இலங்கை இறப்பர் ஆய்வு நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட உபகரணங்கள் உள்ளிட்டவற்றைக்கொண்ட சுமார் 5000 ரூபா பெறுமதியான உபகரண கட்டளைகள் 10 ஆயிரம் துருசவிய சங்க உறுப்பினர்களுக்கு 2018/2019 காலப்பகுதி வழங்கப்படவுள்ளது. இதற்காக பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. கெக்கிராவ பொலிஸ் நிலையத்திற்காக புதிய கட்டிடமொன்றை நிர்மாணித்தல் –(நிகழ்ச்சி நிரலில் 26ஆவது விடயம்)

கெக்கிராவ பொலிஸ் நிலையம் 50 கிராம உத்தியோகஸ்தர்கள் வாழும் 62,650 மக்களுக்கு சேவைகளை வழங்கும் பொலிஸ் நிலையமாகும். இங்கு சுமார் 80 பொலிஸார் இந்த பொலிஸ் நிலையத்தில் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்பொழுது இவர்களால் பயன்படுத்தப்படும் கட்டிடம் போதுமான வசதிகளை கொண்டிராத பழமை வாய்ந்த கட்டிடமாகும். பிரதேச மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை பெற்றுக்கொடுக்கும் எதிர்பார்ப்புடன் கெக்கிராவ பொலிஸ் நிலையத்திற்காக அனைத்து வசதிகளையும் கொண்ட புதிய கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. இது குறித்து அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவம் சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


07. மாதிரி கிராமங்களில் உள்ள பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொழில்வாண்மை ஸ்ரீ லங்கா மற்றும் கம்பெரலிய என்ற தேசிய வேலைத்திட்டங்களை பயன்படுத்துதல். (நிகழ்ச்சி நிரழில் 28 மற்றும் 29 நிகழ்ச்சி நிரலில் விடயங்கள்)

வீடமைப்பு மற்றும் நிர்மாண துறை அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் மாதிரி கிராமம் வேலைத்திட்டத்தின் ஊடாக குறைந்த வருமானத்தை கொண்ட பயனாளிகளுக்கு வீட்டு உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கு மேலதிகமாக அவர்களது எதிர்காலத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு வேலை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மாதிரி கிராம பயனாளிகள் அனைவரதும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் தொழில்வாண்மை ஸ்ரீலங்கா மற்றும் கம்பெரலிய என்ற தேசிய வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இது தொடபில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


08. வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான தற்காலிக பாதுபாப்பு மத்திய நிலையங்களுக்கு வசதிகளை செய்தல். (நிகழ்ச்சி நிரலில் 32வது விடயம்)

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மட்டக்களப்பு கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் உள்ள வன்முறைகளுக்கு உள்ளான பெண்களுக்காக பாதுகாப்பு வழங்குவதற்கென அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதுகாப்பு மத்திய நிலையங்களை நிர்வகிப்பதற்காக women In Need மற்றும் Jaffna Social Action Center ஆகிய நிறுவங்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்கு அமைச்சரவை அங்கீpகாரம் வழங்கியுள்ளது. இந்த மத்திய நிலையங்களை முறையாக முகாமைத்துவம் செய்வதற்கான பொருத்தமான பணியாளர் சபை மற்றும் ஏனைய வாசிகளை அரசாங்கத்தினால் வழங்கிவதற்கு என மகளீர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள் அமைச்சர் சந்ராணி பண்டார அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. நில்வலா ஆற்றின் பள்ளத்தாக்கை பாதுகாத்தல் (நிகழ்ச்சி நிரலில் 34 ஆவது விடயம்)

மாத்தறை மாவட்டத்தில் ஆகக்கூடிய மழை பெய்யும் கொட்டப்பொலை மற்றும் பிட்டபெத்தற ஆகிய பிரதேசங்கள் அடிக்கடி வெள்ளத்தினால் பாதிக்கப்படும் பிரதேசங்கள் ஆகும். வெள்ளத்தின் காரணமாக உயிரிழப்பு மற்றும் சொத்துக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கு மேலதிகமாக நில்வலா கங்கையின் கரையோரங்களுக்கும் கங்கையின் ஊடாக அமைக்கப்பட்டுள்ள பாலத்திற்கும் கங்கைக்கு அருகாமையில்; உள்ள வீதிக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நில்வலா கங்கை கரையின் இருமருங்கையும் சீர்செய்வதற்காகவும் கரையோரங்களில் தரமான மரக்கன்றுகளை நாட்டி அபிவிருத்தி செய்து பாதுகாப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 62 மில்லியன் ரூபா முதலீட்டுடன் பிட்டபெத்தற தொடக்கம் கொட்டப்பொல வரையிலான நில்வகா கங்கையின் பள்ளத்தாக்கை நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பதற்காக இளைஞர் அலுவல்கள் திட்ட முகாமைத்துவம் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


10. வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு தகவல் தொழிநுட்பத்தை பயன்படுத்தி கட்டமைப்பை ஸ்தாபித்தல் (நிகழ்ச்சி நிரலில் 37வது விடயம்)

வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபன செயற்பாட்டு நடவடிக்கைகளின் செயல் திறமையை மேம்படுத்துவதற்கும் ஆக கூடிய போட்டி வர்த்தக சந்தை சூழலில் தனது நடவடிக்கையை முன்னெடுப்பதுடன் சிறந்த தரமிக்க காப்புறுதி சேவையை வழங்கும் எதிர்பார்ப்புடன் ஆயுள் காப்புறுதி மற்றும் பொதுவான காப்புறுதி பணிகளுக்காக பயன்படுத்தும் பொருட்டு தகவல் தொழில் நுட்ப அடிப்படையிலான இரண்டு காப்புறுதி கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கும் மறுசீரமைப்பு பணிகளை புதிதாக ஆரம்பிப்பதாக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


11. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையத்திற்காக தொடர்பாடல் கட்டமைப்பொன்றை ஏற்படுத்துதல் பொருத்துதல் மற்றும் நடைமுறைப்படுத்தல். (நிகழ்ச்சி நிரலில் 38வது விடயம்)

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் ஆகியவற்றின் நடவடிக்கை செயற்திறனை மேம்படுத்துவதற்காக தொடர்பாடல் கட்டமைப்பை ஏற்படுத்துதல் பொருத்துதல் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவின் சிபாரிசுக்கு அமைய 1.7 யூரோ மில்லியனுக்கும் 6 மில்லியன் ரூபாவுக்கு M/s SITTI S.P.A நிறுவனத்திற்கு வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


12. ரயில் பாதைக்குத் தேவையான - 5000 தண்டவாளங்களை கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 39 விடயம்)

ரயில் பாதை கட்டமைப்புக்கு தேவையான En 45 EI ரக 5000 தண்டவாளங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவின் சிபாபிசு செய்யப்பட்டுள்ளது இதற்கமைய 2.13 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு M/s. ANGNG Group International Panzhimua Co LTD என்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. கிழக்குபல்கலைக்கழகத்துக்குஉட்பட்டசுவாமிவிபுலானந்தநுண்கலைகல்விநிறுவனத்தின் வசதிகளைமேம்படுத்துதல் (நிகழ்ச்சிநிரலில் 46 விடயம்)

இலங்கைகிழக்குபல்கலைக்கழகத்திற்குஉட்பட்டசுவாமிவிபுலானந்தநுண்கலைகல்விநிறுவனம் இசைமற்றும் நடனம் ஆகியகற்கைநெறிகளுக்குமேலதிகமாகநடிப்புக் கலைமற்றும் முதலானகற்கைநெறிகளைதொடர கூடியவகையில் இதன் கல்விநடவடிக்கைகளைவிரிவுபடுத்துவதற்குநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் இந்தநிறுவனம் கொண்டுள்ளவசதிகள் தற்போதையகற்கைநெறிகளுக்குதற்போதையபோதுமானதல்ல. இதனால்பொருத்தமானவகையில் வசதிகளைமேம்படுத்துவதற்கானதேவையும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாகசுவாமிவிபுலானந்தநுண்கலைகல்விநிறுவனத்தை---நவீனமயப்படுத்துவதற்கும் காணொளிபதிவுகளைமேற்கொள்வதற்கும் தொகுப்புக்கானவசதிகளைக் கொண்டதானகட்டிடதொகுதிஒன்றைநிர்மாணிப்பதற்கும் அதற்குதேவையான ஏனைய வசதிகளைபெற்றுக்கொடுத்துஅபிவிருத்திசெய்வதற்குதிட்டமிடப்பட்டுள்ளது. இதற்கானதிட்டம் இந்தியஅரசாங்கத்தின் நிதிஉதவியாககிடைக்கும் 275மில்லியன் ரூபாமற்றும் அரசாங்கத்தின் 60.7 மில்லியன் ரூபாவைகொண்டமொத்தமுதலீட்டின் கீழ் நடைமுறைபடுத்துவதற்காகஉயர்கல்விமற்றும் கலாச்சாரஅலுவல்கள் அமைச்சர் (கலாநிதி)விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் சமர்ப்பித்தஆவணத்திற்குஅமைச்சரைஅங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. பசுமைஎரிசக்திஅபிவிருத்திமற்றும் எரிசக்திசெயல் திறனைமேம்படுத்துவதற்கானமுதலீட்டுவேலைத்திட்டம் (நிகழ்ச்சிநிரலில் 47வதுவிடயம்)

பசுமைஎரிசக்திஅபிவிருத்திமுதலீட்டுவேலைத்திட்டத்தின் கீழ் கொழும்புபிகிரிட் ( மிக் வலைப்பின்னலை) உப நிலையத்தைநிர்மாணித்தல் . கொலன்னாவமற்றும் கொழும்புசிஉபநிலையங்களுக்கு இடையில் உள்ளகேபல் மூலம் மின்சாரத்தைபெற்றுக்கொள்ளல் மற்றும் வெளியேற்றுதலுக்கானதொடர்புகளைஅமைக்கப்படுவதுடன் கொலன்னாவமற்றும் கொழும்புசிஉபநிலையங்கள் மேம்படுத்தப்படவுள்ளன. இதற்கானஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளநிலையியல் கொள்வனவுகுழுவின் சிபாரிசுக்குஅமைய 1260.78 ரூபாவுக்கு FM/s. HyosungCorporation என்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கதக்கசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. கொலன்னாவைஅரசாங்கத்தின் கைத் தொழிற்சாலையில் மின்சாரகட்டமைப்பைநவீனமயப்படுத்தல் (நிகழ்ச்சிநிரலில் 48வதுவிடயம்)

அரசாங்கத்தின் பல்வேறுநிறுவனங்களுக்கு தேவையான விசேடமுறையிலான இயந்திர நடவடிக்கைகளுக்கு சேவைகளை வழங்கும் அரசாங்கத்தின் கைத்தொழிற்சாலை திணைக்களத்திற்கு மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்காக தற்பொழுது பயன்படுத்தப்படும் குறைந்த மின்னழுத்தத்தை கொண்டுள்ள கட்டமைப்பை நவீனப்படுத்தப்படவேண்டியுள்ளது. 34.6 மில்லியன் ரூபா செலவில் இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. இரத்தினபுரிமற்றும் கிளிநொச்சிநீதிமன்றகட்டிடதொகுதிகளைநிர்மாணித்தல். (நிகழ்ச்சிநிரலில் 49விடயம்)

இரத்தினபுரி மாவட்டத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளில் நிலவும் இட நெருக்கடியினால் அங்கு தற்பொழுது உள்ள கட்டிடத்திலான சேவை தன்மை மற்றும் மண்சரிவு அனர்த்தத்தின் காரணமாக இரத்தினபுரி நீதிமன்ற கட்டிட தொகுதியின் நிர்மாண பணிகளை துரிதமாக மேற்கொள்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதே போன்று கிளிநொச்சி நீதிமன்ற கட்டிட தொகுதியையும் போதுமான அடிப்படை வசதிகளுடன் விரிவு படுத்த வேண்டும் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக இரத்தினபுரி மற்றும் கிளிநொச்சி நீதி மன்ற கட்டிட தொகுதிகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை பொறியியலாளர் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனை பிரிவிற்கு வழங்குவதற்காக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரல அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரைவ அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. சுகாதார சேவைகளுக்கான செலவு, பெறுமதி சேர்க்கப்பட்ட வரியிலிருந்து விடுவித்தல் (நிகழ்ச்சி நிரலில் 58வது விடயம்)

2016ஆம் ஆண்டு ,லக்கம் 20 கீழான பெறுமதி சேர்க்கப்பட்ட வரி சட்டத்தின் மூலம் வைத்திய ஆலோசனைக் கட்டணம் வைத்தியசாலை அறைக் கட்டணம் செனல் கட்டணம் - மற்றும் வைத்திய தொழிற்துறையினருக்காக செலுத்தப்படும் கட்டணம் போன்ற சுகாதார சேவைகளை வழங்குவோருக்கான பெறுமதி சேர்க்கப்பட்ட அடிப்படையிலான வரி சுமத்தப்பட்டதுடன் வைத்தியசாலை அறைக் கட்டணம் தவிர்ந்த ஏனைய சுகாதார சேவையின் அடிப்படையில் விதிக்கப்பட்டிருந்த பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை 2018ஆம் ஆண்டு ஜுலை மாதம் 2ஆம் திகதியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட 2078ஃ6 இலக்கத்துடனான 2018-07-02 திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பு 2002 இலக்கம் 14 கீழான பெறுமதி சேர்க்கப்பட்ட வரி சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளின் கீழ் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. ஆசிய பசுபிக் ஒளிபரப்பு அபிவிருத்தி நிறுவனத்தின் 17வது மகாநாட்டை இலங்கையில் நடத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 63வது விடயம்)

ஆசிய பசுபிக் வலயத்தில் வளர்ச்சி மற்றும் நவீன தொழில்நுடப் ஊடக பயன்பாட்டை முன்னெடுக்கும் நோக்கில் ஆசிய பசுபிக் ஒளிபரப்பு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளதுடன் அந்த நிறுவனத்தின் அங்கத்துவ நாடுகள் ஊடக ஆலோசனை நிறுவனமாக செயற்பட்டு வருகின்றன. இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் 1982ஆம் தொடக்கம் இந்த நிறுவனத்தில் முழுமையான அங்கத்துவத்தை கொண்டுள்ளது. அத்தோடு அதன் தொழில்நுட்பம் மற்றும் பயிற்சியிலான நன்மைகளை பெற்றுக்கொண்டுள்ளது. இந்த மகா நாட்டின் 17வது மகாநாடு 2018ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் நடத்துவதற்கும் அதனை பொறுப்பேற்று நடத்தும் நிறுவனமாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் செயற்படுத்துவதற்கும் நிதி மற்றும்; ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. கால்நடை உணவு தயாரிப்புக்கு தேவையான மேலதிக சோளத்தை - இறக்குமதி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 63ஆவது விடயம்)

2018ஆம் ஆண்டில் கால்நடை உணவு தயாரிப்புக்காக சுமார் 5 இலட்சம் மெட்ரிக் தொன் சோளம் தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் 2018ஆம் ஆண்டு பெரும்போகத்தில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மெட்றிக் தொன் சோளம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சிறு போகத்தில் 50ஆயிரம் மெட்றிக் தொன் சோளம் உற்பத்தி செய்யப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக கால்நடை உணவு தயாரிப்புக்காக பயன்படுத்தவதற்கென தேசிய உணவு மேம்பாட்டு சபையினால் 50ஆயிரம் மெட்றிக்தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கும் அதனடிப்படையில் 1கிலோவிறகு பத்து ரூபாய் விசேட வர்த்தக பொருட்களுக்கான வரி விதிப்பதற்கு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் மற்றும் கடற்றொழில் மற்றும் சீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களும் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. கிந்தொட்டை மற்றும் அம்பாறை பிரதேசங்களில் ஏற்பட்ட அமைதியற்ற நிலை காரணமாக சேதமடைந்த சொத்துக்கள் மற்றும் மத வழிபாட்டு தலங்களுக்கு இழப்பீட்டை வழங்குதல். (நிகழ்ச்சி நிரலில் 68வது விடயம்)

கடந்த வருடத்தில் கிந்தொட்டை பிரதேசத்திலும் இந்த வருடத்தில் அம்பாறை பிரதேசத்திரும் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமை காரணமாக சேதமடைந்த சொத்தக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு நஷ்டஈட்டை வழங்குவதற்காக இவ்வாறான பொதுவான சம்பவங்களின் போது நஷ்டஈட்டை வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் நடைமுறையை கவனத்தில் கொண்டு இழப்பீட்டை வழங்குவதற்காக புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சமர்ப்பித்த ஆவணத்திக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. .வறட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வாழும் பெண்களுக்கு வழங்கப்படும் நுண்நிதிக்கான கடன் நிவாரணம் (நிகழ்ச்சி நிரலில் 69 வது விடயம்)

பெண்களுக்காக வீடு வீடாக சென்று நுண்நிதி வழங்கும் நடைமுறையை கடைபிடிக்கும் நுண்நிதி நிறுவனங்கள் வழங்கும் கடனுக்காக 40 – 20வீதம் வரையில் வருடாந்தம் வட்டி அறவிடப்படுகின்றது. கூடுதலான அவதானத்தைக் கொண்ட பொருளாதார நடைமுறை மற்றும் பயன்பாட்டுக்கான வழங்கப்படும் இந்த கடன் காரணமாக கிராம மட்டத்தில் கடனை பெற்றோர் பெரும் இன்னலுக்குள் சிக்கியுள்ளனர். அவர்கள் தற்பொழுது பாரிய நெருக்கடிக்குள் உள்ளாகியுள்ளனர். ஆகக் கூடுதலாக வறட்சியினால் பாதிக்கப்பட்டடுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களே பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை கடன் பெறும் நடைமுறையிலிருந்து மீட்டிடடுப்பதற்காக தொழில்வாண்மை ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைவாக கடன் நிவாரண வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கென நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.