2018-07-10 ஆம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்
1. மில்லேனியம் சவால் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் நன்கொடை மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் - (நிகழ்ச்சி நிரலில் 09ஆவது விடயம்)
பொருளாதார அபிவிருத்தியின் மூலம் வறுமையை ஒழிப்பதற்காக அமெரிக்காவினால் முன்னெடுக்கப்படும் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge) வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும். நன்கொடை உதவிகள் தொடர்பா பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கு பிரதமர் அலுவலத்தில் கொள்கை அபிவிருத்தி அலுவலகத்தினால் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இந்த இணைப்பு செயற்பாட்டில் காணி நிர்வாகம், போக்குவரத்து, விவசாய விநியோகம், மின்சார மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளிலான அபிவிருத்தி , உயர் தொழிநுட்ப பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுதல் மற்றும் பேலியகொடையில் இருந்து மாலபே வரையில் கொங்கிரீட் தூண்கள் மூலமான நாட்டின் பாரிய வீதியொன்றை நிர்மாணித்தல் முதலான திட்டங்கள் இதன் கீழ் மேற்கொள்ளப்படுவுள்ளன.
இதன் திட்டத்திற்கு மத்தியில் போக்குவரத்து துறையில் அபிவிருத்தி திட்டம் மற்றும் காணி நிர்வாக நடைமுறைக்கான திட்டத்திற்கு உட்பட்ட வகையில் சுமார் 450 தொடக்கம் 500 மில்லியன் ரூபா நன்கொடையை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன,; அமெரிக்காவின் மிலேனியம் சவால் கூட்டுத்தாபனத்தின் முக்கிய முதலீட்டுகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் கௌரவ பிரதமர் மற்றும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்தை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.
2. அரச காணிக்காக காணி அனுமதிப்பத்திரங்களை துரிதமாக வழங்கும் வேலைத்திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 11 விடயம்)
பொதுமக்களின் காணி உரிமையை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தினால் இது வரையில் காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழ் 1.6 மில்லியனுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான காணி அனுமதி பாத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில் 930,082 காணி அனுமதி பாத்திரங்களாக மாற்றப்பட்டுள்ளன. இருப்பினும் அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ள மேலும் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட காணி துண்டுகளுக்கும் ஜெயபூமி அனுமதி பாத்திரத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள சுமார் 436, 992 காணிகளுக்கு காணி அனுமதி பாத்திரங்கள் வழங்கப்படவேண்டும். இதற்காக இந்த காணிகளை அளவீடு செய்ய வேண்டியுள்ளது. இதற்கமைவாக 11 லட்சம் காணி துண்டுகளுக்கு காணி அனுமதி பாத்திரங்களை வழங்குவதற்கான துரித வேலை திட்டத்தை 2019 - 2020ம் ஆண்டு காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்கு தேவையான வசதிகளை செய்வதற்கும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க அவர்களும் சமர்ப்பித்த ஒன்றிணைந்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
3. கொழும்பு ரயில் கட்டுப்பாட்டு மத்திய நிலையம் மற்றும் ரயில் நடவடிக்கை தலைமையகத்தை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 13 விடயம்)
கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் ரயில் சேவையை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் ரயில் செயல்திறன் வேலைத்திட்டம் (CSREIP) கீழ் கொழும்பு ரயில் கட்டுப்பாட்டு மத்திய நிலையம் (CTCC ) மற்றும் ரயில் செயல்பட்டு தலைமையகம் ஆகியவற்றை அமைப்பதற்கும் அவற்றில் தொழிநுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பொருத்தமனானதாக அடையாளம் காணப்பட்டுள்ள மருதானை பிரதேசத்தில் அமைந்துள்ள 01 ஏக்கர் 2 ரூட் காணியை இலங்கை ரயில் சேவைக்காக ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
4. 2019 வரவு செலவு திட்டத்திற்கான குறுநிரலை . ஒழுங்கு செய்வதற்கான அரச நிதி கட்டமைப்பு (நிகழ்ச்சி நிரலில் 14 விடயம்)
செயற்பாட்டு பணியை அடிப்படையாக கொண்ட வரவு செலவு ஒதுக்கீட்டு (Performance Based budgeting - PBB ) நடைமுறையை கடைப்பிடித்து 2019 ஆண்டுக்கான தேசிய வரவு செலவு திட்டத்தை வகுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 2021ம் ஆண்டளவில் அண்மிப்பதற்கு உள்ள அரசாங்கத்தின் மொத்த அரச நிதியை ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள மொத்த தேசிய உற்பத்தியில் 17 சதவீதம் வரை அரச வருமானத்தை அதிகரித்தல், மொத்த தேசிய உற்பத்தியில் 15 சதவீதமாக அரசாங்கத்தின் (Recurrent) மீண்டுவரும் செலவை முன்னெடுத்தல் , மொத்த தேசிய உற்பத்தியில் 5.5 சதவீத அளவில் அரச முதலீட்டை முன்னெடுத்தல் மொத்த தேசிய உற்பத்தியில் 3.5 சதவீதத்திற்கு வரவு செலவு திட்டத்தில் தூண்டுவிலும் தொகையை வரையறுப்பதற்கும் மொத்த தேசிய உற்பத்தியில் 70 சதவீதத்திற்கும் குறைந்த மட்டத்தில் அரசாங்கத்தின் கடனை முன்னெடுத்தல் ஆகிய இலக்குகளை வெற்றிகொள்ளும் வகையில் தேசிய வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது இதற்கமைவாக மத்திய கால அனைத்து அரச நிதி கட்டமைப்புக்குள் அடையாளம் காணப்பட்டுள்ள இலக்கை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கத்தின் முக்கிய திட்டங்களை அடையாளம் கண்டு அந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியை ரேபியா அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்வதன் மூலம் 2019ம் ஆண்டிற்கான தேசிய வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
5. சுகாதாரம் மற்றும் வைத்திய அறிவியல் துறையில் புரிந்துணர்வு தொடர்பாக இலங்கைக்கும் பங்களாதேசத்துக்குமிடையிலான உடன்படிகை - (நிகழ்ச்சி நிரலில் 20 விடயம்)
பொதுமக்கள் சுகாதாரம், தாதியர் கல்வி ,சுற்றாடல் மற்றும் தொழில் ரீதியான சுகாதாரம் சுகாதார கொள்கை மற்றும் நிர்வாகம் சமூக சுகாதாரம் கிராமிய மற்றும் நகர சுகாதார முகாமைத்துவம், சுகாதார சுற்றுலாத் தொழிற்துறை சுகாதார துறைக்கான தகவல்கள் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் , காலநிலை மாற்றம் மற்றும் இடர் முகாமைத்துவம் மற்றும் சுகாதார துறையில் மனிதவள முகாமைத்துவத்தை மேம்படுத்துதல். ஆகிய சுகாதார மற்றும் வைத்திய துறை அறிவியல் தொடர்பில் இலங்கை மற்றும் பங்களாதேசத்திற்குமிடையில் புரிந்துணர்வு மேம்படுத்தப்படவுள்ளது. இதற்காக இலங்கையில் சுகாதாரம் போசாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சும் பங்களாதேஷின் வரையறுக்கப்பட்ட முகாமைத்துவம் மற்றும் பயிற்சி சர்வதேச நிறுவனத்திற்கு இடையில் உடன்படிக்கை எட்டப்படவுள்ளது. இதற்காக சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
6. சுகாதார துறையில் புரிந்துணர்வுடன் செயல்படுவதற்காக இலங்கைக்கும் பின்லாந்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்ளல். - நிகழ்ச்சி நிரலில் 21வது விடயம்)
சுகாதார துறை மற்றும் அதனுடன் தொடர்பு பட்ட நடவடிக்கைகளில் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில் பல் சுகாதார சிகிச்சை வைத்தியசாலைகளில் வைத்திய உப Management Flocking- வைத்திய மற்றும் சுகாதார சிகிச்சை கல்வி மற்றும் தொற்றா நோய் முதலானவற்றில் சுகாதார துறையில் புரிந்துணர்வு தொ கரங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் , மரபு வரிசை ஆய்வு. இரத்த Management Flocking- வைத்திய மற்றும் சுகாதார சிகிச்சை கல்வி மற்றும் தொற்றா நோய் முதலானவற்றில் சுகாதார துறையில் புரிந்துணர்வு தொடர்பில் இலங்கை சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சுக்கும் பின்லாந்தின் அரசாங்கத்தின் சமூக அலுவல்கள் மற்றும் சுகாதார அமைச்சுக்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை எட்டப்படவுள்ளது. இதற்காக சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேசிய துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
7. 1979ம் ஆண்டு இலக்கம் 45 கீழான தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவன சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல்.
பெருந்தோட்ட துறையில் தேவையான உயர் குணாம்சங்களை கொண்ட தொழிற்துறையினை உருவாக்குதல் , திறனாற்றலுக்கு முக்கியத்துவம் வழங்கும் பெருந்தோட்ட முகாமைத்துவ பட்டத்தை வழங்கும் நிறுவனமாக தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தை மாற்றியமைக்க கூடிய வகையில், 1923ம் ஆண்டு இலக்கம் 45 கொண்ட தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவன சட்டத்தில் திருத்ததம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக பெருந்தோட்ட தொழில் துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
8. தேயிலையை தொகையாக ஏற்றுமதி செய்யும் அடிப்படையில் நிலையான செஸ் வரி கட்டணத்தை அறிமுகப்படுத்துதல். (நிகழ்ச்சி நிரலில் 31வது விடயம்)
தற்பொழுது தொகை ஏற்றுமதியில் அடிப்படையில் செஸ் வரி கணக்கிடப்படுவதுடன் இதற்கமைவாக ஒரு கிலோ கிராமிற்கு 10 ரூபா அல்லது கொழும்பு தேயிலை ஏல விற்பனையில் வழமையான விலைகளில் 2.5 வீதமாக அல்லது இரண்டும் கூடிய பெறுமதியை கவனத்திற் கொண்டு மாத அடிப்படையில் இந்த கணக்கீடு மேற்கொள்ளப்படுகிறது. இது வரையில் தேயிலை ஏற்றுமதியாளர்களினால் கிலோகிராம் தேயிலைக்காக செலுத்தப்படும் செஸ் வரி கட்டணம் 20 ரூபா மாத்திரமே ஆகும். அத்தோடு இதனை மாத அடிப்படையில் கணக்கிடுவதன் அடிப்படையில் மொத்த விலையில் உறுதி செய்வதற்கு சிரமமாவதால் ஏற்றுமதி விலைகளை சமர்ப்பித்தல் தாமதமாகுதல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வாக மொத்த தேயிலை ஏற்றுமதிக்கென அதாவது ஒரு கிலோகிராமிற்கு 10 ரூபா நிலையான செஸ் வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்காக பெருந்தோட்டதொழிற்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
9. கெரவலப்பிட்டிய இயற்கை ஏறி வாயு மின்சக்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்காக காணியை ஒதுக்கீடு செய்தல். (நிகழ்ச்சி நிரலில் 32 விடயம்)
இலங்கையில் அதிகரிக்கும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக இயற்கை எரிவாயுவை எரிபொருளாக பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பது மிகவும் பொறுத்தமானதாகும் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்திய மற்றும் ஜப்பானுடன் இணைந்த கூட்டு திட்டமாக 500 மெகா வோட் என்ற ரீதியில் இயற்கை எரிவாயு மின் உற்பத்திநிலையங்கள் இரண்டை அமைப்பதற்காக அமைச்சரவை அங்கிகாரம் தற்பொழுது கிடைத்துள்ளது.
ஆக கூடுதலான கோரிக்கை நிலவும் கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களுக்கு அருகாமையில் இதனை அமைத்தல் இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயு தரைவழி பிரிவை அமைப்பதற்கு பொருத்தமானதுடன் குளிர்ச்சிக்கான நீரை பெற்றுக்கொள்ள கூடிய ஆற்றல் மற்றும் மின்நிலையத்தை நிர்மாணிப்பதற்கு பயன்படுத்த கூடிய காணி இருத்தல் ஆகிய விடயங்களின் காரணமாக இயற்கை எரிவாயு மின்நிலையத்தை அமைப்பதற்கு பொருத்தமான இடமாக கெரவலப்பிட்டி பிரதேசம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக கெரவப்லபிட்டி பிரதேசத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான 110 ஏக்கர் காணியை உரிய சுற்றாடல் மதிப்பீடுகளை மேற்கொண்டபின்னர் உத்தேச இயற்கை எரிவாயு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான இலங்கை மின்சார சபையிடம் வழங்கப்படவுள்ளது இதற்காக மின் சக்தி மற்றும் புதுப்பிக்க தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. சமூர்த்தி பயனாளிகளை வலுவூட்டுவதற்கான வேலை திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறை படுத்துவதற்காக தொழிநுட்ப ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளல். – (நிகழ்ச்சி நிரலில் 33 விடயம்)
உயர் தரத்திலான தேசிய உற்பத்தியை நாட்டிற்குள் விநியோகிப்பதற்கான தொழிற் துறை தொழில்முனைவு வேலைத்திட்டம் ஒற்றை ஒரே நாடு ஒரே தயாரிப்பு (OTOT - One Tampon. One Product ) என்ற ரீதியில் தாய்லந்தில் மிகவும் வெற்றிகரமாக நடைமுறை படுத்தப்படுகிறது.
நாட்டில் சமுர்த்தி பயனாளிகளின் பொருளாதாரத்தை வலுவுடன் மேம்படுத்துவதற்கான ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறை படுத்தும் பொழுது தாய்லந்தில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தில் தொழில்நுட்ப ஆலோசனை பெற்றுக்கொள்வதற்காக தாய்லந்தின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தாய்லாந்து சர்வதேச புரிந்துணர்வு பிரநிதி நிறுவனம் மற்றும் இலங்கை சமூக வலுவூட்டல் அமைச்சிற்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது. இதற்காக சமூக ஊக்குவிப்பு அமைச்சர் பீ ஹெரிசன் அவர்கள் சமர்ப்பித்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. போதை பொருளை கட்டுப்படுத்துவதற்காக முப்படைகளின் நேரடி பங்களிப்பை பெற்றுக்கொள்ளுதல் – (நிகழ்ச்சி நிரலில் 36 விடயம்)
பலர் மத்தியிலும் இளம் சமூகத்தையும் பீடித்திருப்பதுடன் நாட்டின் வெகுவாக விரிவடைந்து வரும் போதை பொருளை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் உள்ளிட்ட இலங்கை பொலிஸார் மூலம் பாரிய பணி நிறைவேற்றப்படுகிறது. அத்தோடு தேவையான சந்தர்ப்பங்களில் அதற்காக பொலிஸ் விசேட அதிரடி படை மற்றும் இராணுவத்தின் ஒத்துழைப்பும் பெறப்படுகின்றது. போதை பொருள் நடவடிக்கைகளை மிகவும் வெற்றிகரமாக முறியடிப்பதற்கு முப்படையின் நேரடியான பங்களிப்பை ஆக கூடுதலாக பெற்றுக்கொள்வதன் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக போதைப்பொருள் நடவடிககையை கட்டுப்படுத்தும் பணியை மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக குறிப்பிட்ட காலப்பகுதிக்கு முப்படையினருக்கு சட்டமா அதிபரினால் சிபாரிசு செய்யப்பட்ட சில அதிகாரங்களை வழங்கும் வகையில் போதை பொருளை கட்டுப்படுத்துவது தொடர்பாக விசேட ஒழுங்குவிதிகள் தொடர்பான திருத்த சட்டத்தை தயாரிப்பதற்காக மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களும் அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ மற்றும் சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான nமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்களும் சமர்ப்பித்த ஒன்றிணைந்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
12. வெலிஓய பிரதேசத்தில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைத்ததை -(நிகழ்ச்சி நிரலில் 38 விடயம்)
வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் ஹெல ஓவௌ, மாயா வௌ, சப்புமல் தென்ன ,கஜபா புற ஹன்சவில மற்றும் நாமல் புற ஆகிய கிராமங்களில் வாழ்ந்த மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளின் காரணமாக இடம்பெயர்ந்த ஆயிரம் குடும்பங்களின் வீட்டு பிரச்சனையை தீர்ப்பதற்காக விசேட திட்டமொன்று நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கிகாரம் வழங்கப்பட்டிருந்தது இதன் கீழ் 1084 வீடுகளை நிர்மாணிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இந்த வீடுகளில் 994 வீடுகளின் கட்டுமான பணிகள் பூர்த்தி செய்யபபட்டுள்ளன. தற்பொழுது எஞ்சிய 90 வீடுகளின் நிர்மாண பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த கிராமத்தில் வாழ்ந்த பிரச்சனையின் காரணமாக அந்த பிரதேசத்தை விட்டு சென்ற மேலும் 256 குடும்பங்கள் இந்த கிராமத்திற்கு தற்போது வந்துள்ளனர். இவர்கள் குறைந்த வசதிகளுடனான தற்காலிக வீடுகளை வாழ்ந்து வருகின்றனர். தமது வீடுகளை அமைத்துக் கொள்வதற்காக ஒத்துழைப்பு தருமாறு இவர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக இவர்களுக்கென மேலே குறிப்பிடப்பட்ட வீட்டு வேலை திட்டத்தின் கீழ் வீடுகளை அமைப்பதற்காக வீடமைப்பு மற்றும் நிர்மாண துறை அமைச்சர் அவர்கள் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை கொள்கை ரீதியில் அங்கிகாரம் வழங்கியுள்ளது.
13. புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற நிறுவங்களுக்கு வசதிகளை செய்தல் -(நிகழ்ச்சி நிரலில் 42 விடயம்)
முன்னர் நடைபெற்ற அம்பகமுவ பிரதேச சபை எல்லை பிரதேசம் அம்பகமுவ , மஸ்கெலியா மற்றும் நோர்வூட் என்ற ரீதியில் புதிய மூன்று பிரதேசங்களுக்கும் நுவரெலியா பிரதேச சபை எல்லை பிரதேசம் நுவரெலியா , கொட்டகலை அக்கரப்பத்தனை என்ற ரீதியில் மூன்று பிரதேசங்களுக்கும் தமன் கடுவ பிரதேச சபை எல்லை பகுதி பொலநறுவை மாநகர சபை மற்றும் பொலநறுவை பிரதேச சபை என்ற ரீதியில் புதிய இரண்டு பிரதேச எல்லை பகுதிகளுக்கும் பண்டாரகம பிரதேசசபை எல்லை பகுதி பண்டாரகம மற்றும் மிலேனிய என்ற ரீதியில் என்ற எல்லை பிரதேசங்களுக்கும் எல்லை மறுசீரமைப்பு செய்யப்பட்டு புதிதாக 10 உள்ளூராட்சி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட இந்த உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களில் பொதுமக்களுக்கு தேவையான சேவைகளை துரிதமாக வழங்குவதற்காக அதன் உள்ளூராட்சி மன்ற நிறுவங்களுக்கு தேவையான வசதிகளை செய்யவதற்காக 540 மில்லியன் ரூபா நிதி திறைசேரியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இதற்காக மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்றம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பைசர் முஸ்தப்பா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
14.தெனியாய வாராந்த சந்தையை அபிவிருத்தி செய்தல் -(நிகழ்ச்சி நிரலில் 44 விடயம்)
தெனியாய நகரத்திற்கு நாளாந்தம் 25000 பேர் வருகை தருகின்றனர்.இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்காக சேதமடைந்த நிலையில் காணப்படும் தெனியாய வாராந்த சந்தை, வர்த்தக அறைகள் 80 தொடக்கம் 120 கொண்ட வர்த்தக கட்டட தொகுதியாகவும் புதிய வீதி கட்டமைப்பு மற்றும் சிறந்த இயற்கை கழிவறை வசதிகள் உடன் அபிவிருத்தி செய்வதற்காக இளைஞர் அலுவல்கள் திட்ட முகாமைத்துவம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் மற்றும் சாகல ரத்நாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
15. சிங்கராஜா பாதுகாக்கப்பட்ட காட்டு பகுதியில் இரண்டு யானைகள் இருப்பதற்கான யானை தடுப்பு மத்திய நிலையம் ஒன்றை அமைத்தல் -(நிகழ்ச்சி நிரலில் 49 விடயம்)
உலக மறப்புரிமையான சிங்கராஜா பாதுகாக்கப்பட்ட காட்டு பகுதியில் தற்போது எஞ்சியுள்ள இரண்டு யானைகளினால் இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு அருகாமையில் வாழும் கிராம மக்களுக்கு ஏற்படும் உயிர் அச்சுறுத்தல் மற்றும் சொத்துக்களுக்கான சேதங்கள் படிப்படியாக அதிகரித்துள்ளன. இதன் அடிப்படையில் யானைகளின் பாதுகாப்பு போன்று கிராம மக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துக்களின் பாதுகாப்புக்கென துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளுவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்காக இரண்டு யானைகளுக்காக தடுப்பு மத்திய நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும் இவற்றுக்கு பொருத்தமான சுற்றாடலுடன் கூடிய களவான தோலே கந்த கிராம உத்தியோகத்தர் பிரிவில் பாருகள என்ற இடத்தில் உள்ள சுமார் 36 ஹெக்ட்டர் நிலப்பரப்பை சுவிகரிப்பதற்கான நிலைபெறா அபிவிருத்தி வனவிலங்குகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்மாஸ்ட்டர் சரத் பொன்சேகா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
16. லிற்றோ காஸ் இலங்கை நிறுவனத்தினால் எரிவாயுவை விநியோகிப்பதற்காக பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்தல் -(நிகழ்ச்சி நிரலில் 50 விடயம்)
லிற்றோ கேஸ் இலங்கை நிறுவனத்தினால் எரிவாயுவை விநியோகிப்பதற்காக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு வேல்வ் உடனான 656,298 வெற்று எல் பி கேஸ் சிலிண்டர்களை (பல்வேறு அளவிலான சிலிண்டர்கள் ) அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்வனவு குழுவின் சிபாரிசுக்கு அமைய இந்தியாவின் எம்.எஸ் Mauriya Udyog let இடம் 2057.1 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்காக அரச தொழிற் துறை மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
17. யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் கட்ட கட்டிடத்தை நிர்மாணித்தல் -(நிகழ்ச்சி நிரலில் 53 விடயம்)
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கு 5 மாடிகள் கொண்ட கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதில் இரண்டாம் கட்டமாக அதன் 2ம் மாடியில் இருந்து 5ம் மாடி வரையில் நிர்மாணிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்வனவு குழுவின் சிபாரிசுக்கு அமைய யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் கட்ட நிர்மாண பணிகள் 1224.6 மில்லியன் ரூபாவுக்கு பொறியியலாளர் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனை பணியகம் மற்றும் மத்திய பொறியியலாளர் சேவை தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
18. பதுளை பிரதேச பெரியாஸ்பத்திரியில் 10 மாடிகளை கொண்ட கட்டிட தொகுதியை நிர்மாணித்தல் -(நிகழ்ச்சி நிரலில் 54 விடயம்)
1493 கட்டில்கள் மற்றும் 41 வாட்டுக்களைக் கொண்ட பதுளை மாகாண பெரியாஸ்பத்திரி ஊவா மாகாணத்தில் பாரிய சுகாதார சேவையை வழங்கும் நிறுவனமாகும். இந்த வைத்திய சாலையில் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை சேவை திட்டமொன்றை நடைமுறை படுத்துவதற்கும் நிவாரண உதவி சேவைகளை கொண்ட இருதய ரசாயன கூடத்தை அமைப்பதற்கும் அமைச்சரவையினால் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய சத்திர வைத்திய வாட்டு வசதிகள் மற்றும் இருதய நோய் சிகிச்சைக்கான வசதி உத்ததேச திடீர் விபத்து திடீர் சிகிச்சை சேவை பிரிவை அமைப்பதற்காக புதிய 10 மாடி கட்டிடமொன்றை இந்த வைத்திய சாலையின் வளவில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக 3958.2 மில்லியன் ரூபா முதலீடுடன்; இந்த 10 மாடி கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் பொறியியலாளர் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனை பணியாகத்திடம் ஒப்படைப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
19. லைட் ரயில் கட்டமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தல் -(நிகழ்ச்சி நிரலில் 56 விடயம்)
கொழும்பு மாநகர பிரதேசத்தில் செயற்திறன் மிக்கதும் பயனுள்ள போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்காக கடுகதி ரயில் கட்டமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு மேற்கு வலைய மாநகர முக்கிய திட்டத்தில் முக்கிய விடயமாகும். இதன் கீழ் 7 லைட் ரயில் பாதையை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கொழும்பு கோட்டை பகுதி ஏனைய முக்கிய நகரங்களுடன் தொடர்பு படுத்தும் பாதை மற்றும் பத்தரமுள்ள மற்றும் மாலபே பிரதேசத்திற்கான பாதை முக்கிய பாதைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த பிரதேசத்தில் நிலவும் ஆக கூடிய மக்கள் தொகையின் காரணமாக இந்த பாதையை காங்கிரீட் தூண்கள் மூலம் அமைக்கப்படும் இரண்டு லைட் ரயில் பாதையாக நிர்மாணிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தினால் ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவி கோரப்பட்டுள்ளது. இதற்கமைவாக மாலபேயில் இருந்து கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள பல்லின போக்குவரத்து மத்திய நிலையம் வரையிலான 17 கிலோமீட்டர் நீளத்தை கொண்டதாக- 16 மற்றும் டிபோக்களை கொண்டதாக லைட் ரயில் கட்டமைப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநகர மற்றும் மேல் மாகாண அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
20. அம்பத்தலை நீர்வாங்கு குழாய் கட்டமைப்பை - நிர்மாணித்தல் . -(நிகழ்ச்சி நிரலில்57 விடயம்)
பாவனையாளருக்கு மிகவும் சிறந்த நீர் விநியோக சேவையை முன்னெடுக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அம்பத்தலை நீர்வாங்கு குழாய் கட்டமைப்பை நிர்மாணிக்கும் திட்டம் கொழும்பு தலைநகர பகுதிக்கு அருகாமையில் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள உப திட்டமாகும். இதற்கமைவாக அம்பத்தலை நீர்- திட்டமிடுதல் மற்றும் நிர்மாண ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்வனவு குழுவின் சிபாரிசுக்கு அமைய 1181.5 மில்லியன் ரூபா (வரியற்ற) தொகைக்கு மலேசியாவின் M/ s Salcon engineering Berhad நிறுவனத்திற்கு வழங்குவதற்காக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
21. குறைந்த மின்சார பாவனையை மேற்கொள்வோருக்கு எல்.ஈ.டி () மின்குமிழிகள் ஐந்தை நிவாரண விலையில் வழங்குதல் -(நிகழ்ச்சி நிரலில் 59 விடயம்)
கோரிக்கை தரப்பு எரிசக்தி முகாமைத்துவத்தை மேற்கொள்ளும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் குறைந்த மின் பாவனையை கொண்ட பாவனையாளருக்கு மத்தியில் செயல்திறன் மிக்க led மின்குமிழ்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக நிவாரண கடன் திட்டத்தின் கீழ்டநன மின்குமிழ்களை விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த திட்டத்திற்காக 10 லட்சம் led மின் குமிழ்கள் வீசம் 10 தொகுதிகளில் 1 தொகுதிக்கு 169.6 மில்லியன் ரூபாவுக்கு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்வனவு சிபாரிசுக்கு அமைய வியட்நாமின் ms rang dong Light source and vacuum falask நிறுவனத்திடம் வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
22. கொக்கிளாயில் பாலம் அமைத்தல் நிகழ்ச்சி நிரல் 62 விடயம்
கொக்கிளாய் களப்பு ஊடாக வீதி ஒன்றும் நிர்மாணிப்பதன் மூலம் திருகோணமலை அடுத்துள்ள பகுதியில் வாழும் மக்களுக்கு யாழ்ப்பாணம் பகுதிக்கு செல்வதற்காக வசதியாக பயணிப்பதற்கும் முல்லை தீவு மற்றும் திருகோணமாய் வரையிலான 80 கிலோமீட்டர் தூரத்தை குறைத்துக்கொள்ளும் வகையில் இந்த வீதி அமையும் கொக்கிளாய் புல்மூட்டை வீதியில் கோகிலாய் களப்பு ஊடக கோகிலாய் பாலம் ஊடாக நுழைபிரவேச வீதியை அமைப்பதற்காக பெறுகை தொடர்பான பெறுகை குழு 2016ம் ஆண்டில் மேற்கொண்ட தீர்மானத்தை அமைச்சரவை அங்கிகரித்திருந்தது. செக் குடியரசு. Bilfingrmceslanysto என்ற நிறுவனத்திடம் 48 மில்லியன் யூரோக்களுக்கு வழங்குவதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவர பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களும் பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்களும் சமர்ப்பித்த கூட்டு பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
23. 2019ம் ஆண்டிற்கான பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பாடப்புத்தகங்களை அச்சிடுதல் -(நிகழ்ச்சி நிரலில் 64 விடயம்)
2019ம் ஆண்டில் மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படவுள்ள பாடசாலை புத்தகங்களை 2018-11-04 திகதிக்கு முன்னராக பாடசாலைகளுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 419 வகையான மற்றும் நூல்கள் 39.7 மில்லியன் ரூபாவுக்கு புத்தகங்களை அச்சிடுவதற்கான கொள்வனவுக்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகை குழுவின் சிபாரிசிற்கமைய 3473.1 மில்லியன் ரூபாவிற்கு 27 தேசிய அச்சகங்களுக்கு வழங்குவதற்காக கல்வி அமைச்சர் அகிலாவிராஜ் காரியவசம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
24. மில்லிமீட்டர் 50 ஹியூமன் எல்பியூமன் சொலுஷன் போத்தல்கள் ஒரு லட்சத்தி 20 விநியோகித்தல் -(நிகழ்ச்சி நிரலில் 69 விடயம்)
சிறுநீரக நோயாளருக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படும் மருந்தாக ஹியூமன் எல்பியூமன் சொலுஷன்பீபீஃபிஎஹெயூர் ,20 வீதம் மில்லிமீட்டர் 50 ரக போத்தல்கள் 120,000ஐ கொள்வனவு செய்வதற்கான பெறுகை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகை குழுவினதும் பெறுகை மேல்முறையிலிட்டு சிபாரிசுக்கு அமைய Msshire singkapoor pt ldt இடம் 2.82 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் போஷாக்கும் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
25. 93 ஆயிரத்தி 767 கண்வில்லைகளை கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 70 விடயம்)
கண்களில் வெள்ளை படலங்களை அகற்றும் சத்திர சிகிச்சையின் போது கண்ணில் வைப்பதற்காக பயன்படுத்தப்படும் நேமியா ஹெகி என்ற ஹைட்ரோ போபிக் -93, 767 கண்வில்லைகள் கொள்வனவு செய்வதற்கான பெறுகை பெறுகை மேல் முறையீட்டு சிபாரிசுக்கு அமைய 1062.2 மில்லியன் ரூபாவுக்குHemas Pharmaceuticals (பிரைவேட் லிமிடேட் ) சுகாதாரம் மற்றும் போஷாக்கும் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
26. 2018ம் ஆண்டின் மத்தியகால நிதி நிலைமை தொடர்பான அறிக்கை - (நிகழ்ச்சி நிரலில் 73விடயம்)
2003ம் ஆண்டு இலக்கம் 3 கொண்ட அரச நிதி முகாமைத்துவம் (பொறுப்பு ) சட்டத்தின் 10வது சாரத்தில் சொல்லப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக 2018ம் ஆண்டில் முதல் 4 மாத காலத்துல அரச நிதி நிலைமை தொடர்பான - தகவல்கள் உள்ளடக்கிய வருடஇடைக்கால அரச நிதி நிலைமை தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கல் சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
27. மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு திட்டத்தின் கீழ் நீர்ப்பாசன தொழிற் துறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய முதலீடு தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்துதல் - (நிகழ்ச்சி நிரலில் 74விடயம்)
மகாவலி அபிவிருத்தி வேலை திட்டம் 3 தசாப்த காலமாக நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்கி வருகிறது. அத்தோடு புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் 200 மில்லியன் ரூபா அளவிற்கு நிதியை முதலீடு செய்து மகாவலி அபிவிருத்தி பரிந்துரையின் கீழ் பணிகள் நிறைவு செய்யப்படாத பாரிய நீர் தொடர்பான பரிந்துரைக்கு அமைய மொரஹகந்த மற்றும் களுகங்கை பாரிய நீர் தேக்கமும் , மஹா கித்துல , மஹா கிருல்லா , அலிகொட ஊடாக ஹந்தப்பணகைள , டயரபா பூல் பொல ஆகிய நடுத்தர நீர் தேக்கங்கள் இந்த ஆண்டில் பாரிய நீர் ஓடை திட்டமாக வடமத்தில் மாஹேல வயம்ப மாஹேல மற்றும் மினிப்பே மஹேல நீர் தேக்கங்களில் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதே போன்று மொரஹ கந்த மின் உற்பத்தி நிலையம் உமாஓய --- நீர் மின் உற்பத்தி நிலையம் நீர் பகுதியில் அமைக்கப்பட்ட சூரிய ஒளி மூலமான மின் உற்பத்தியை மேற்கொள்வதன் மூலம் 1000 மெகா வோட் மின்சாரத்தை எதிர்வரும் 2 வருட கால பகுதிக்குள் தேசிய மின் வலைப்பின்னலில் மேலும் மழை நீரை சேகரிப்பதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள பழமையான குளங்கள் கட்டமைப்பு பலவற்றை புனரமைத்து 2400 கிராமிய குளங்கள் ஊடக கிராமங்களுக்கு நீர் பாசனம் மற்றும் குடிநீர் தேவையை வழங்கும் பாரிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பாரிய முதலீட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பாக நாட்டு மக்களை தெளிவு படுத்துவதற்கான மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் என்ற ரீதியில் மேதகு ஜனாதிபதி மைத்ரி பாலசிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை வழங்கியுள்ளது.