2018.06.19ம் திகதி அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்
1. பாதுகாக்கப்பட்ட பரிவர்தணை கணக்கு வழக்கு தொடர்பான திருத்த சட்டமூலம் - (நிகழ்ச்சி நிரலில் 08 ஆவது விடயம்)
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் துறையினருக்கு தமது வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு தேவையான கடன் தொகையை பெற்றுக்கொள்ளும் பொழுது அவர்கள் கொண்டுள்ள சொத்துக்களில் பெரும்பகுதியை பிணையாக வைத்துக்கொள்ளக் கூடிய வகையில் 2009ம் ஆண்டு இலக்கம் 49 கீழான பாதுகாக்கப்பட்ட பரிவர்தணை கணக்கு சட்டம் பரிசீலனை செய்யப்பட்டு புதிய திருத்த சட்டத்திற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட திருத்த சட்டத்திற்கு அமைவாக நிபந்தனை கட்டளைச் சட்டம் பொறுப்பு கட்டளைச் சட்டம், ஈட்டுக் கடன் சட்டளைச் சட்டம் 2000ஆம் ஆண்டு இலக்கம் 56 இன் கீழான நிதி குத்தகைச் சட்டம், 1990 இலக்கம் 16 கீழான தேசிய பொறுப்பு பற்றுச்சீட்டு (பெறுகை) சட்டம், 2007 இலக்கம் 7 கீழான நிறுவன சட்டம் மற்றும் ஆவண பதிவு செய்தலுக்கான கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான திருத்த சட்டத்தை மூலத்தை தயாரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2. 6 சிறிய அளவிலான பால் பதப்படுத்தல் நிலையங்களை அபிவிருத்தி செய்தல் - ( நிகழ்ச்சி நிரலில் 10 ஆவது விடயம்)
கிராம பிரதேசங்களில் சேகரிக்கப்படும் பசும்பால் மூலமான தயாரிப்புக்களை அதிகரிப்பதன் மூலம் பாற்பண்ணையாளர்களின் வருமானத்தை அதிகரிக்கும் எதிர்பார்ப்புடன் 30 பால் சேகரிக்கும் மத்திய நிலையங்கள் மற்றும் கடுவல,அத்தனகலை, பொலநறுவை, மட்டக்களப்பு, வாரியபொல மற்றும் வென்னப்புவ ஆகிய பிரதேசங்களில் 6 பால் பதனிடும் நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இவற்றுக்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
3. உள்ளுர் விமான சேவையை அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 11 ஆவது விடயம்)
குறிப்பிட்ட நேர அட்டவனைக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் உள்ளுர் விமான சேவை நடவடிக்கைகளுக்கு அரச மற்றும் தனியார் ஒத்துழைப்புக்கான தேசிய ரீதியான பிரதிநிதிகளால் முன்வைக்கப்படும் விருப்பு வெளிப்பாட்டுக்கான ஆலோசனைகள் கோரப்பட்டத்திற்கு அமைவாக ஐந்து நிறுவனங்களினால் ஆலோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு சிவில் விமான சேவை பணிப்பாளர் நாயகம், அரச தனியார் ஒத்துழைப்புக்கான தேசிய பிரதிநிதிகளின் தலைவர் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவை (இலங்கை) நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் போன்ற அதிகாரிகளைக்கொண்ட குழுவினால் இந்த ஆலோசனை பாராட்டப்பட்டுள்ளன. இந்தக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிக்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட விமான சேவை நிறுவனத்தின் செயற்பாட்டுக்கான அனுமதி பத்திரத்திற்காக விண்ணப்பங்களை கோருவற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் திரு. நிமல் சிறிபால டி சில்வாவும் சமர்பித்த கூட்டு ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
4. விமான சேவைகள் தொடர்பில் இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தை (நிகழ்ச்சி நிரலில் 13 ஆவது விடயம்)
இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையில் விமான சேவை திட்டத்தை வகுப்பதற்காக இரு நாடுகளுக்கு இடையிலான கடற்படை அதிகாரிகளினால் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்ற சிவில் விமான சேவை மகாநாட்டில் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் இரு நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்படவுள்ள விமான சேவை உடன்படிக்கை தொடர்பில் இருதரப்பினரும் உடன்பாடு கண்டனர். இதற்கமைவாக இந்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளும் பொருட்டும் உடன்படிக்கையை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்காகவும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் திரு. நிமல் சிறிபால டி சில்வா சமர்பித்த கூட்டு ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
5. உயர் தொழில்நுட்பம் மற்றும் தன்னியக்க இயந்திர உபகரணங்களுக்காக துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி நிவாரணங்களை வழங்குதல் - (நிகழ்ச்சி நிரலில் 14 ஆவது விடயம்)
தேசிய தயாரிப்பு தொழில்துறை உற்பத்தி செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் உயர் தொழில்நுட்பம் மற்றும் தன்னியக்க உபகரணங்களுக்காக செலுத்தப்பட வேண்டிய துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியில் 75 சதவீத வரி நிவாரணத்தை வழங்குவதற்காக 2011ம் ஆண்டு இலக்கம் 18 கீழான துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் திரு.மங்கள சமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
6. அரச துறையில் பணியாளர் சபை தொடர்பாக 2018ம் ஆண்டில் முதலாவது காலாண்டு அறிக்கை - (நிகழ்ச்சி நிரலில் 22 ஆவது விடயம்)
அமைச்சரவையினால் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, அனைத்து அரச நிறுவனங்களுக்கும் ஊழியர்களை இணைத்துக் கொள்ளுதல், இடமாற்றம், சேவையை கைவிடல், பதவி இறக்கம்;, ஓய்வு பெறுதல், ராஜினாமா செய்தல் மற்றும் உயிரிழந்தமை போன்ற காரணங்களினால் அரச துறை பணியாளர் சபையில் இடம்பெறும் மாற்றங்களை முழுமைப்படுத்தி முன்னெடுக்கப்பட வேண்டும். அத்தோடு இந்த தகவல்களை கவனத்திற் கொள்வதற்காக இவை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதற்கமைய இதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் திரு. மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட குறிப்புக்கு அமைய 2018ம் ஆண்டு முதல் காலாண்டு பகுதியில் அரச துறைக்காக 9,851 பேர் புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அத்தோடு அரச ஊழியர்கள் 7,755 பேர் ஓய்வு பெற்றமை, ராஜினாமா செய்தமை, சேவையில் இருந்து விலகிச் சென்றமை, பதவியில் இருந்து நீக்கப்பட்டமை, அல்லது உயிரிழந்தமை அல்லது அரச துறையில் இருந்து வெளியேறியுள்ளனர்.மேலும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் சபையின் வெளியே மாகாண சபையினால் 7,840 பேர் எண்ணிக்கையிலானோர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அரச துறையில் அனைத்து நிறுவனங்கள் தேசிய சம்பள கொள்கைக்கு உட்படுத்தப்படுவதன் தேவை தொடர்பாக இதன்மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமைச்சரவை குறிப்பின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேற்குறிப்பிட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த அனுமதி இன்றி அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் சபைக்கு அப்பால் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள ஊழியர்கள் குறித்து அந்த நிறுவனங்களின் பிரதானியினால் பொறுப்பு கூற வேண்டும் என்பது அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
7. புறக்கோட்டை சாமர்ஸ் தானிய களஞ்சிய சாலை காணிக்காக பல்லின அபிவிருத்தி திட்டம் - (நிகழ்ச்சி நிரலில் 23 ஆவது விடயம்)
புறக்கோட்டை சாமர்ஸ் தானிய களஞ்சிய சாலை காணியை பல்லின அபிவிருத்தி திட்டமாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கமையவான திட்டத்திற்காக ஆலோசனைகள் கோரப்பட்டுள்ள போதிலும், முதலீட்டாளர்களினால் குறிப்பிட்ட தினம் வரையிலும் ஆலோசனைகள் சமர்ப்பிக்கப்படவில்;லை. இதற்காக ஆலோசனைனளை கோரிய பொழுது அது குறித்து ஆர்வம் காட்டிய முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்கமைவாக புறக்கோட்டை சாமர்ஸ் தானிய களஞ்சிய சாலை காணியை பல்லின அபிவிருத்தி திட்டத்திற்காக பயன்படுத்தும் போது காணியின் பெறுமதியை செலுத்துவதற்காக மாற்று ஆலோசனையை சமர்ப்பிப்பதற்கு வழி வகுப்பதற்கும் இந்த ஆலோசனையை பாராட்டுவதற்காக நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் திரு.சம்பிக்க ரணவக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
8. இலங்கை தேசிய உணவு வேட்கையை போக்கும் வணிக சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளல் - (நிகழ்ச்சி நிரலில் 28 ஆவது விடயம்)
1972ம் ஆண்டு இலக்கம் 15 இன் கீழான இலங்கை தேசிய உணவு வேட்கையை போக்கும் வணிக சபை சட்டத்தை தற்போதைய சூழ்நிலைக்கு பொருந்தும் வகையில் முன்னெடுக்கும் நோக்கிலும் இந்த சட்டத்தின் பெயரை தேசிய உணவு மேம்பாட்டு சபை சட்டமாக திருத்தத்தை மேற்கொள்வதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. விவசாய சமுகத்தினதும் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தும் நிறுவனங்களின் பணிகளை மேலும் வலுவூட்டும் வகையில் திருத்த சட்டம் தயாரிப்பாளர்களினால் தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்டமூலத்தில் மேலும் திருத்த சட்டமூலம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் திருத்தங்களை உள்ளடக்கி திருத்தத்தை மேற்கொள்வதற்கும் அதனை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பாராளுமன்றதின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்குமாக சமர்ப்பிப்பதற்கு விவசாய அமைச்சர் திரு. மஹிந்த அமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
9. விவசாய நீர் மூலமான உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக புதிய தொழில்நுட்ப மற்றும் கவர்ச்சி மிக்க தொழில்நுட்ப திட்ட மாதிரி என்ற செயலமர்வை இலங்கையில் நடத்தல் - (நிகழ்ச்சி நிரலில் 29 ஆவது விடயம்)
அங்கத்துவ நாடுகளின் கைத்தொழில் மற்றும் விவசாய துறை மூலமான பயன்களை அதிகரிக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பு மற்றும் விவசாய அமைச்சும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யும் விவசாய நீர் மூலமான உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான புதிய தயாரிப்புக்களிலான தொழில்நுட்பம் மற்றும் கவர்ச்சிமிக்க விவசாயத் திட்டம் என்ற தலைப்பிலான இரண்டு செயலமர்வுகளை இலங்கையில் நடத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக ' பொருத்தமான நீர்வள முகாமைத்துவத்தை ஊக்குவிப்பதற்காக விவசாய நீர் மூலமான உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக புதிய தயாரிப்பு தொழில்நுட்பம்0' என்ற தலைப்பில் 5 நாள் மாநாடு ஒன்றை 2018.7.23 முதல் 2018.7.27 வரை நடத்துவதற்கும் அங்கத்துவ நாடுகளுக்கு பொருத்தமான வெற்றிகரமான விவசாயத் திட்ட சேவை மாதிரி மற்றும் மூலோபாயம் குறித்த மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக ' கவர்ச்சிகர விவசாயத் திட்டம்' என்ற பெயரில் ஐந்து நாட்களுக்கான மாநாடு ஒன்றை 2018.9.17 முதல் 2018.9.21 வரை இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விவசாய அமைச்சர் திரு. மஹிந்த அமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. தேசிய பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரித்தல் - (நிகழ்ச்சி நிரலில் 30 ஆவது விடயம்)
வறட்சி வலய விவசாயிகள் மத்தியில் முக்கிய இடம்பிடித்துள்ள பெரிய வெங்காய உற்பத்தி 2014ம் ஆண்டளவில் 7,000 ஹெக்டெயர் நிலப்பரப்பு வரை விரிவடைந்திருந்தது. இருந்த போதிலும், சந்தை விலை மாற்றம் மற்றும் காலநிலை தாக்கத்தின் காரணமாக 2017ம் ஆண்டளவில் இந்த உற்பத்தி 2,000 ஹெக்டெயர் அளவில் வீழ்ச்சி கண்டது. இருப்பினும் தற்பொழுது விதை பெரிய வெங்காயத்தை விநியோகிக்க முடியாமை, பெரிய வெங்காய உற்பத்தியாளர்கள் அந்த நடவடிக்கையில் இருந்து வெளியேறுவதை தடுப்பதற்கும் உள்ளுர் விதை உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்குமான விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக விதை உற்பத்தியாளர்கள் கொண்டுள்ள உள்ளுர் பெரிய வெங்காய விதைகளில் 5,000 கிலோகிராம் விதைகளை கொள்வனவு செய்து 2018ம் ஆண்டு சிறுபோகத்தில் 1,000 ஹெக்டெயர் நிலப்பரப்பில் புதிதாக உற்பத்தி செய்வதற்கும் மேலும் 2,000 கிலோகிராம் விதைகளை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்து அடுத்த போகத்தில் விதைத் தேவைக்காக களஞ்சியப்படுத்துவதற்கும் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கு 70 ரூபாய் தொடக்கம் 80 ரூபாய் வரை விலை கிடைக்கும் வகையில் விற்பனையில் பங்கு கொள்வதற்கும் வசதிசெய்யும் வகையில் இறக்குமதி வரியில் திருத்தத்தை மேற்கொள்வதற்குமாக விவசாய அமைச்சர் திரு.மஹிந்த அமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. கட்டான தேசிய பொலிஸ் பீடத்தின் கரப்பந்தாட்டம் மற்றும் விளையாட்டு மைதானத்தை அமைத்தல் - (நிகழ்ச்சி நிரலில் 32 ஆவது விடயம்)
பொலிஸாரின் அறிவு, ஆற்றல், சிந்தனை மற்றும் தொழில் ஆற்றல் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் கட்டான தேசிய பொலிஸ் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் நாளாந்தம் நடைபெறும் ஐந்து கற்கை நெறிகளுக்கு 3,000 பயிற்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர். பெரும்பாலானோர் இங்கு தங்கியிருந்து பயிற்சி பெறுகின்றனர். இந்த பயிற்சியாளர்களின் ஓய்வு காலத்தை பயனுள்ள வகையில் செலவிடுவதற்காக விளையாட்டு, உடற்பயிற்சி உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடும் வகையில் வசதிகளை செய்வதற்கு கரப்பாந்தாட்ட - இரண்டு விளையாட்டு திடல் அமைக்கப்படவுள்ளது. இதற்காக அரச நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்ட ஒழுக்கு தொடர்பான அமைச்சர் திரு. ரஞ்சித் மத்தும பண்டார சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. 2016ம் ஆண்டு இலக்கம் 12 கீழான தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை குறித்த சட்டத்தின் கட்டளைகளுக்கு அமைந்த வகையில் நிறுவனம் - தேவைக்கான திருத்தங்களை மேற்கொள்ளல் - (நிகழ்ச்சி நிரலில் 33 ஆவது விடயம்)
2016ம் ஆண்டு இலக்கம் 12 கீழான தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை குறித்த சட்டத்தின் கீழ் அரச நிறுவனங்கள் கொண்டுள்ள தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 2017 பெப்ரவரி மாதம் 3ம் திகதி முதல் அதன் விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அரச அதிகாரிகளால் இந்த சட்டத்தின் கீழான விதிகளை நடைமுறைப்படுத்தும் பொழுது பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவது தொடர்பில் நிறுவன கட்டளைகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக அரச சேவை ஆணைக்குழுவின் கருத்தை கவனத்தில் கொண்டு நிறுவன - இரண்டாவது பிரிவை திருத்துவதற்காக திருத்த சட்டமூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றுநிரூப ஆலோசனைகளை வழங்குவதற்காக அரச நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்ட ஒழுக்கு தொடர்பான அமைச்சர் திரு. ரஞ்சித் மத்தும பண்டார சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. முன் மாதிரி கிராம வேலைத்திட்டம் ஊடாக கிராமசக்தி வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தை சமுகமயப்படுத்தல் - (நிகழ்ச்சி நிரலில் 36 ஆவது விடயம்)
மேதகு ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் கிராம சக்தி பொதுமக்கள் திட்டத்தை சமூகமயப்படுத்துவதற்காக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் மாதிரி கிராம வேலைத்திட்டத்தை பயன்படுத்த முடிவதுடன் இதன்மூலம் கிராம மக்களை கூட்டாக ஊக்குவிப்பதன் மூலம் அவர்களுக்கு வாழ்வாதார அபிவிருத்திக்கான ஆற்றல் கிட்டும். இதற்கமைய மாதிரி கிராமத்தை கேந்திரமாக கொண்டு கிராம சக்தி என்ற பொதுமக்கள் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் திரு.சஜித் பிரேமதாச சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. இல்லறம் துறந்து பௌத்த சீளம் அனுபவிக்கும் மாதர்களுக்கான கல்வி நிறுவனத்தை ஸ்தாபித்தல் - (நிகழ்ச்சி நிரலில் 38 ஆவது விடயம்)
இலங்கையில் தற்பொழுது 4,000 இல்லறம் துறந்து பௌத்த சீளம் அனுபவிக்கும் மாதர்கள்; உள்ளனர். இவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் தொண்டு ரீதியில் செயற்படும் கல்வி நிறுவனங்கள் பல உண்டு. இந்த நிறுவனங்களின் தேவை மற்றும் அனுசரனையை அரசாங்கத்தினால வழங்குவதற்காக 1979ம் ஆண்டு இலக்கம் 64 கீழான பிரிவென கல்வி சட்டம் திருத்தப்படவுள்ளது. இந்த திருத்தம் மேற்கொள்ளப்படும் வரையில் இல்லறம் துறந்து பௌத்த சீளம் அனுபவிக்கும் மாதர்களுக்கான கல்வியை மேம்படுத்துவதற்காக பௌத்த தசில் மாதா கல்வி நிறுவனம் என்ற பெயரில் பதிவு செய்து இந்த நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக கல்வியமைச்சர் திரு.அகிலவிராஜ் காரியவசம் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. தேசிய புனித ஹஜ் சட்டம் - (நிகழ்ச்சி நிரலில் 39 ஆவது விடயம்)
ஹஜ் யாத்திரையில் ஈடுபடுவதற்காக வருடத்தில் 7,000 இற்கும் 10,000 இற்கும் இடைப்பட்ட பக்தர்கள் முஸ்லிம் மத மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கின்றனர். இருப்பினும் ஹஜ் யாத்திரைக்காக இலங்கைக்கு வருடாந்தம் 2,200 இற்றும் 3400 இற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலானவர்களுக்கே அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கிறது. இதனால் யாத்திரியர்கள் மற்றும் சுற்றுலாவில் ஈடுபடுவோடுரை தெரிவு செய்வது மிகவும் சிரமமாக அமைந்துள்ளது. இதனால் புனித ஹஜ் யாத்திரை மற்றும் அது தொடர்பிலான பணிகளை ஒழுங்குபடுத்துவதற்காக புனித ஹஜ் சட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்று ஆலோனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டமூலத்தை தயாரிப்புக்கான ஆலோசனை வழங்குவதற்காக தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
16. பலசரக்கு மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தயாரிப்பு சந்தைப்படுத்தல் சபையின் செயற்பாட்டுத் திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 43 ஆவது விடயம்)
பலசரக்கு மற்றும் அதனுடன் தொடர்புபட்ட சந்தைப்படுத்தல் சபையினால் பலசரக்கு மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தயாரிப்புகளை அபிவிருத்தியை தேசிய மற்றும் உள்ளுர் ரீதியில் மேம்படுத்தும் நோக்கில் அதன் தரத்தை மேம்படுத்துவதற்கான சேவைகள் இயற்கை உர தயாரிப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கும் ஆய்வுகளை மதிப்பீடு செய்தல் உள்ளிட்டவற்றின் அபிவிருத்திக்காக சமூக ஊக்குவிப்பு மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் திரு.தயா கமகே சமர்ப்பித்த செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. 1976ம் ஆண்டு இலக்கம் 24 இற்குட்பட்ட இலங்கை சேவை முகாமைத்துவ நிறுவன சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளல் - (நிகழ்ச்சி நிரலில் 46 ஆவது விடயம்)
மனித வள முகாமைத்துவ துறையில் தொழில் தகுதியை பூரணப்படுத்தும் நீண்டகால 1,200 உறுப்பினர்களை பிரதிநிதிதுவப்படுத்தும் இலங்கை சேவையாளர் முகாமைத்துவ நிறுவனம் 1959ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இது 1976ம் ஆண்டு இலக்கம் 24 இன் கீழ் இலங்கை முகாமைத்துவ நிறுவன சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டது. நிறுவனத்தின் பெயர் வரையறுக்கப்பட்ட இலங்கை சேவையாளர் முகாமைத்துவ நிறுவனமாக முன்னெடுக்கப்பட்டு இலங்கை சேவையாளர் முகாமைத்துவ நிறுவன சட்டத்தின் திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் இதற்கு முன்னர் வழங்கப்பட்டது. இதற்காக தயாரிக்கப்பட்ட திருத்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்திற்காக இந்த திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில ;சமர்பிப்பதற்குமாக தொழில் மற்றும் தொழிற்சங்க தொடர்புகள் அமைச்சர் திரு.ரவீந்திர சமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. அரச வைத்தியசாலைகளில் பெட்சிற்றி PET CT இயந்திரத்தை செயற்படுத்துவதற்காக சஙிக்லோட்ரோன் (CYCLOTRON) (நிகழ்ச்சி நிரலில் 51 ஆவது விடயம்)
மனித உடம்பு மற்றும் திசு செயற்பாடுகளை வெளிப்படுத்துவதற்காக பேட்சிற்றி இயந்திரத்தின் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன் இவ்வாறான பரிசோதனைக்காக FDG 18 என்ற கதிரியக்க மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த கதிரியக்க மருந்தை தயாரிப்பதற்காக சைக்ளோட் குளோன்(CYCLOTRON) இயந்திரம் தேவைப்படுகிறது. புற்றுநோய் தொடர்புபட்ட மற்றும் அது தொடர்பான விடயங்களை கண்காணிப்பதற்கும் புற்று நோயாளர்களுக்கு முறையான சிகிச்சையை வழங்குதல் போன்ற பணிகளுக்காக பெட்சிற்றி ஸ்கேன் Pநுவு ஊவு சேவை அவசியமானதாகும். தற்போது இலங்கையில் தனியார் வைத்தியசாலைக்கு உட்பட்ட ஒரு பெற்சிட்சி இயந்திரம் மாத்திரமே செயற்படுகிறது. அத்தோடு இதன்மூலம் பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக சுமார் 150000 ரூபா அறவிடப்படுகிறது. இதற்காக பயன்படுத்தப்படும் FDG-18 கதிரியக்க மருந்துக்காக பாரிய தொகையை செலவிட வேண்டியுள்ளது. இலங்கை தேசிய வைத்தியசாலையில் பெற்சிட்டி ஸ்கான் இயந்திரம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான இயந்திரம் ஒன்றை மஹரகம அபேட்சா வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ளது. இந்த இயந்திரத்திற்கான FDG-18 என்ற கதிரியக்க மருந்து எதிர்காலத்தில் தேவைப்படும். இலங்கையில் உள்ள பெட்சீடி இயந்திரம் வெற்றிகரமாகவும் செயற்றிறன் மிக்கதாகவும் பயன்படுத்த வேண்டுமாயின் நாட்டில் சைக்குளோட் ரோன் இருப்பது அவசியமாகும். இதற்கு தீர்வாக உரிய காலப்பகுதிக்காக கொள்வனவு செய்வதற்கு உடன்படிக்கைக்கு எட்டிய வகையில் இலங்கையில் சைக்குளோட் ரோனர் இயந்திரம் ஒன்றை பொருத்துவதற்கான ஆலோசனை ஒன்றை MS Access International pvt Ltd நிறுவனத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையில் உள்ள முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டு இதன் திட்ட ஆலோசனையை பாராட்டுவதற்கும் அது தொடர்பான பேச்சுவார்த்தை இணக்கப்பாட்டை மேற்கொள்வதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை இணக்கப்பாட்டு குழுவொன்றை நியமிப்பதற்கு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன சமர்ப்பித்த ஆலோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
19. புத்தளம் அருவாக்காடு பிரதேசம் வரையிலும் கழிவு பொருட்களை எடுத்துச் செல்வதற்காக ரயில் என்ஜின் ஒன்றை கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 54 ஆவது விடயம்)
இலங்கையில் நகர பிரதேசங்களில் சேகரிக்கப்படும் திண்மக் கழிவு முகாமைத்துவம் முக்கிய பிரச்சனையாக நிலவி வருகிறது. அத்தோடு இதற்கு தீர்வாக நகர திண்ம கழிவு அகற்றுவதற்காக புத்தளம் அருவாக்காடு பிரதேசத்தில் காணியில் மேற்கொள்வதற்காக திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் களனியில் இருந்து அருவாக்காடு வரையில் ரயில் மூலம் கழிவுப்பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுவதற்கு 4 ரயில் என்ஜீன்கள், 34 கொள்கலன் வெகன்கள் மற்றும் 94 கொள்கலன் பெட்டிகள் தேவைப்படுகின்றன. இதற்கமைவாக இந்த பணிக்கு தேவையான நான்கு ரயில் என்ஜின்கள் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்வனவு குழுவின் சிபாரிசுக்கு அமைய 8.27 மில்லியன் அமெரிக்க டொலரில் சீனாவின் ஆஃளு னுழபெகயபெ நுடநஉவசiஉ ஐவெநசயெவழையெட ஊழசிழசயவழைn என்று நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதற்காக மாநகர மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் திரு.பாட்டலி சம்பிக்க ரணவக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
20. உத்தேச கல்பிட்டிகல நீர்த்தேக்க திட்டத்தை மதிப்பீடு செய்தல் மற்றும் நிர்மாண பணிகளை பரிசோதிப்பதற்காக ஆலோசனை சேவை பெற்றுக்கொள்ளல் (நிகழ்ச்சி நிரலில் 57 ஆவது விடயம்)
உமாஓய பல்லின திட்டத்தை நிர்மாணிப்பதன் மூலம் உமாஓய கீழ் கட்டட பகுதியில் பத்மெடில திட்டத்தில் நீர்த்தேவையை பூர்த்தி செய்வதற்காக கல்பிட்டிகல நீர்த்தேக்க திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை வகுப்பது தொடர்பான மதிப்பீடு செய்தல், நிர்மாண பணிகளை மதிப்பீடு செய்வதற்காக பொறியிலாளர்கள் தொடர்பாக மத்திய ஆலோசனை பணியகத்தின் ஆலோசனை சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு நீர்பாசன மற்றும் நீர்வள மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. வரி நிவாரணத்தை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட வரி சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளல் - (நிகழ்ச்சி நிரலில் 64 ஆவது விடயம்)
அரசாங்கத்தின் வருமானத்தை நிலையானதாக முன்னெடுப்பதற்காக பெறுமதி சேர்க்கப்பட்ட ஏயுவு(வற்) சட்டம், தேசியத்தை கட்டியெழுப்பும் வரி (NPவு) சட்டம் மற்றும் பொருளாதார சேவை கட்டண சட்டம் (நுளுஊ) ஆகிய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை கவனத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சில வரி நீக்கப்படுவது பொருத்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக வைத்திய ஆலோசனை கட்டணம், சனலிங் கட்டணம் மற்றும் வைத்திய தொழில் துறையினருக்கு செலுத்தப்படும் கட்டணத்தின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி அதாவது வற்றை அகற்றுதல், 2017 ஆகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ் வழங்கப்பட்ட நிர்மாண சேவை தேசியத்தை கட்டியெழுப்பும் வரியில் இருந்து விடுவிப்பதற்கும் இலங்கை மத்திய வங்கிக்கு – உட்படாத நாணய பரிமாறல் பொருளாதார சேவை கட்டணத்தை விடுவிப்பதற்காக சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் திரு.மங்கள் சமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.