2018.05.15 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்
(இது அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் நேரடியாக பெறப்பட்ட தமிழ்மொழிபெயர்ப்பாகும்)

01.கொழும்பு மாநகர சபைக்கு தீயணைக்கும் வாகனங்கள்/ உபகரணங்களை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 08)

காலத்தின் தேவையினை கவனத்திற் கொண்டு, கொழும்பு மாநகர சபைக்கு தீயணைக்கும் வாகனங்கள் / உபகரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளது. அதனடிப்படையில், குறித்த வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு அவசியமான 10.5 மில்லியன் வட்டியற்ற கடன் தொகையினை பெற்றுத்தருவதற்கு ஒஸ்ட்ரியாவின் யுனிகிரடிட் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. குறித்த கடன் தொகையினை பெற்றுக் கொள்வதற்கு அவசியமான கடன் ஒப்புதல்களில் ஈடுபடுவதற்கும், உரிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. ரஜரட்ட மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடங்களுக்கு மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார அறிவியல் பீடத்துக்கு அவசியமான மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொடுப்பதற்காக வேண்டி நிதி திரட்டுதல் (விடய இல. 09)

ரஜரட்ட மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடங்களுக்கு மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார அறிவியல் பீடத்துக்கு அவசியமான மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு அவசியமான 4.9 மில்லியன் வட்டியற்ற கடன் தொகையினை பெற்றுத்தருவதற்கு ஒஸ்ட்ரியாவின் யுனிகிரடிட் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. குறித்த கடன் தொகையினை பெற்றுக் கொள்வதற்கு அவசியமான கடன் ஒப்புதல்களில் ஈடுபடுவதற்கும், உரிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. ஆரம்ப சுகாதார பாதுகாப்பு பிரிவினை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக நிதியினை திரட்டிக் கொள்ளுதல் (விடய இல. 10)

ஆரம்ப சுகாதார பாதுகாப்பு பிரிவினை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கு அவசியமான 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் பெற்றுத் தருவதற்கு உலக வங்கியுடன் இணைந்த நிறுவனமான மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி இணக்கத்தினை தெரிவித்துள்ளது. அக்கடன் தொகையினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி அவ்வங்கியுடன் நிதி உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. மன்னார் மடு தேவாலயத்தினை சூழ 300 வீடுகளை நிர்மானித்தல் (விடய இல. 11)

மடு தேவாலயத்துக்கு வருகின்ற பக்தர்களின் நலன் கருதி, அவர்களின் பயன்பாட்டுக்காக 300 வீடுகளை அப்பகுதியில் நிர்மானிப்பதற்கு யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளது. அத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு அவசியமான 300 மில்லியன் ரூபா நிதியினை இந்திய அரசாங்கம் பெற்றுத் தருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், குறித்த நிதியினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ஜோன் அமரதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. அமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தினை ஸ்தாபித்தல் (விடய இல. 14)

பண்டித் டபிள்யு. டி. அமரதேவ அவர்களின் பணியினை பாராட்டும் பொருட்டு 'அமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தினை' பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் ஸ்தாபிப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. அதனடிப்படையில், சட்ட வரைஞர்களினால் தயாரிக்கப்பட்டுள்ள அமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி மைய சட்ட மூலத்தினை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அனுமதிக்காக வேண்டி பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. பண மோசடியினை தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவதனை கட்டுப்படுத்தல் தொடர்பிலான தேசிய ஒருங்கிணைப்பு குழுவுக்கு புதிய அங்கத்தவர்களை நியமித்தல் (விடய இல.16)

காலத்தின் தேவையினை கருத்திற் கொண்டு, பண மோசடியினை தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவதனை கட்டுப்படுத்தல் தொடர்பிலான தேசிய ஒருங்கிணைப்பு குழுவுக்கு புதிய அங்கத்தவர்களை நியமித்து அதன் பணியினை விரிவுபடுத்துவது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. அண்மையில் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மோதலினால் பாதிப்புக்கு உள்ளான வியாபார சொத்துக்களுக்காக சலுகை வட்டி வீதத்தில் கடன் வசதிகளை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 18)

அண்மையில் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மோதலினால் பாதிப்புக்கு உள்ளான வியாபார சொத்துக்களுக்காக 2 சதவீத சலுகை வட்டி வீதத்தின் கீழ் 500,000 ரூபாவினை அதி உச்ச அளவாக கொண்டு கடன் வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு 2018-03-20ம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது முடிவெடுக்கப்பட்டது. எனினும் குறித்த தொகையினை கொண்டு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை மறுசீரமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவருகிறது. அதனால் அவ்வாறு பாதிக்கப்பட்ட வியாபார சொத்துக்களுக்காக 2 சதவீத சலுகை வட்டி வீதத்தின் கீழ் வழங்கப்படக் கூடிய அதி உச்ச கடன் தொகையாக 01 மில்லியன் ரூபாவினை வரையறுப்பது தொடர்பில் அரச தொழிற்முயற்சிகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ லக்ஷமன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

08. தோட்டப்பிரிவில் சுகாதார வசதிகளை கட்டியெழுப்புதல் (விடய இல. 24)

தோட்டப்பகுதிகளில் காணப்படுகின்ற தோட்ட டிஸ்பென்சரி எனப்படுகின்ற மருந்தகங்கள் 450 வரையில் தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் செயற்படுத்தப்பட்டு வருவதுடன், இம்மருந்தகங்களை விருத்தி செய்வதன் ஊடாக தோட்டப்புற மக்களின் சுகாதார நிலைமையினை கட்டியெழுப்புவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், நாட்டின் எனைய பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படுகின்ற சுகாதார சேவையினை போன்று வசதிகளை தோட்டப்புற மக்களுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கு ஏதுவான வகையில் தோட்டப்புற சுகாதார பிரிவினை அரச சுகாதார பிரிவுடன் இணைப்பதற்கும், அதன் கீழ் தற்போது தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் பராமரிக்கப்படுகின்ற தோட்ட சுகாதார நிலையங்களை கட்டம் கட்டமாக அரசாங்கத்துக்கு கையகப்படுத்திக் கொள்வதற்கும் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாகடர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

09. தொற்றா நோய்களுக்கான காரணிகளாக அமைகின்ற எச்சரிக்கை மிகுந்த விடயங்களை கட்டம் கட்டமாக இனங்காண்பதற்கான தேசிய மதிப்பீடு - 2018 (விடய இல. 25)

தொற்றா நோய்களை இனங்கண்டு அவற்றிலிருந்து விடுபடுவதற்கான திட்டங்களை வகுக்கம் நோக்கில் தொற்றா நோய்களுக்கான காரணிகளாக அமைகின்ற எச்சரிக்கை மிகுந்த விடயங்களை கட்டம் கட்டமாக இனங்காண்பதற்கான தேசிய மதிப்பீடு (ளுவுநுPளு) மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 2003ம் ஆண்டிலிருந்து ஒவ்;வொரு 05 வருடத்துக்கு ஒருமுறையும் குறித்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் இவ்வருடமும் ஆகஸ்ட் மாதம் 50 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் நாடு தழுவிய ரீதியில் குறித்த மதிப்பீட்டினை மேற்கொள்வது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாகடர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

10. இலங்கைக்காக அவசர விமான மற்றும் தொழில்நுட்ப மீட்டெடுக்கும் பிரிவொன்றை செயற்படுத்தும் வேலைத்திட்டம் (விடய இல. 26)

அவசர அனர்த்த நிலைமைகளின் போது பாதிப்புக்கு உள்ளாகின்ற நபர்களை அவ்விடத்தில் இருந்து அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வேண்டி ஆகாய மார்க்கத்தின் ஊடாக துரித கதியில் கொண்டு வருவதற்காக வேண்டி அவசர விமான மற்றும் தொழில்நுட்ப மீட்டெடுக்கும் பிரிவொன்றை செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. டீதைழn ளுவசபைநச ளுவகைரபெ எனும் பெயர் கொண்ட ஜேர்மனியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலாப நோக்கமற்ற அமைப்பின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள வேலைத்திட்ட யோசனைகளின் அடிப்படையில் அவசர நிலைமைகளின் போது துலங்குகின்ற 08 உலங்கு வானூர்திகள் மற்றும் 25 தொழில்நுட்ப மீட்டெடுக்கும் வாகனங்கள் ஆகியவற்றின் மூலம் தேவையான சேவைகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பீட்டு தொகை 190 மில்லியன் ரூபா என்பதுடன், அக்கடன் தொகையினை நீண்ட கால சலுகை கடன் தொகையாக பெற்றுக் கொடுப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் சாத்தியவள ஆய்வொன்றினை மேற்கொள்வதற்காக வேலைத்திட்ட குழு மற்றும் கலந்துரையாடல் குழு ஆகியவற்றை நியமிப்பது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாகடர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. கடற் துறையின் அபிவிருத்திக்காக இலங்கை மற்றும் கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை ஏற்படுத்திக் கொள்ளல் (விடய இல. 27)

கடற் துறையின் அபிவிருத்திக்காக தொழில்நுட்ப தகவல்களை இரு நாடுகளுக்குமிடையில் பரிமாறிக் கொள்ளும் நோக்கில், இலங்கையின் துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சு மற்றும் கொரிய குடியரசின் சமுத்திர மற்றும் மீன்பிடி கைத்தொழில் அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. ஏதேனுமொரு குறைப்பாட்டினால் அச்சு ஊடகங்களை உணர்வதற்கு முடியாத (Print Disabled) நபர்களுக்காக அவ் அச்சு ஊடகங்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு மற்றும் பகிர்ந்தளிப்பதற்கு ஏதுவான வகையில் பதிப்புரிமை (Copy Right) தொடர்பில் விதிவிலக்குகளை அறிமுகம் செய்வதற்காக வேண்டி 2003ம் ஆண்டு 36ம் இலக்க சொத்து உரிமை சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 31)

ஏதேனுமொரு குறைப்பாட்டினால் அச்சு ஊடகங்களை உணர்வதற்கு முடியாத (Print Disabled) நபர்களுக்காக அவ் அச்சு ஊடகங்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு மற்றும் பகிர்ந்தளிப்பதற்கு ஏதுவான வகையில் பதிப்புரிமை (Copy Right) தொடர்பில் விதிவிலக்குகளை அறிமுகம் செய்வதற்காக உலக புலமைச் சொத்து அமைப்பினால் (World Intellectual Property Organization (WIPO))நிர்வகிக்கப்படுகின்ற மரகெஸ் ஒப்பந்தத்தின் (Marrakesh Treaty) மூலம், அங்கத்துவ நாடுகளுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் குறித்த ஒப்பந்தத்தினை அங்கீகரிப்பதற்கு முன்னர் தற்போது காணப்படுகின்ற 2003ம் ஆண்டு 36ம் இலக்க சொத்து உரிமை சட்டத்தினை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை 2016ம் ஆண்டு அங்கீகாரத்தினை வழங்கியுள்ளது. அதனடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள 2003ம் ஆண்டு 36ம் இலக்க சொத்து உரிமை திருத்தச் சட்ட மூலத்தினை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அனுமதிக்காக வேண்டி பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்குமாக கைத்தொழில் மற்றும் வணிக விவகார அமைச்சர் கௌரவ ரிஷhட் பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. ஹொரண 'சொரணவத்தை' காணியினை நடுத்தர வர்க்க வீட்டு வேலைத்திட்டத்துக்காக பயன்படுத்தல் (விடய இல. 36)

ஹொரண 'சொரணவத்தை' காணியினை நடுத்தர வர்க்க வீட்டு வேலைத்திட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வசதிகளை விருத்தி செய்வதற்காக பயன்படுத்துவதற்கு பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. மன்னாரில் காற்று மின்னுற்பத்தி நிலையமொன்றை நிர்மானிக்கும் வேலைத்திட்டம் (விடய இல. 39)

100 மெகா வொட் கொள்ளளவினைக் கொண்ட காற்று மின்னுற்பத்தி நிலையமொன்றை மன்னார் தீவில் நிர்மானிப்பதற்கு அவசியமான நிதியினை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் குறித்த வேலைத்திட்டத்தினை மன்னார் தீவில் செயற்படுத்துவது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. இலங்கை பிக்குகள் பல்கலைக்கழக சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 41)

பிக்குமார்கள் மற்றும் பிக்குணிகளுக்கும் உயர் கல்வி வாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் இலங்கை பிக்குகள் பல்கலைகழக சட்டம் ஸ்தாபிக்கப்பட்டது. காலத்தின் தேவையினை கவனத்திற் கொண்டு பிக்குகள் மற்றும் பிக்குணிமார்களுக்கு அவர்களுக்கான பட்டப்பின் படிப்பினை உறுதி செய்யும் வகையில் 1996ம் ஆண்டு 26ம் இலக்க இலங்கை பிக்குகள் பல்கலைக்கழக சட்டத்தினை திருத்தம் செய்வதற்கு உகந்த சட்ட மூலம் ஒன்றை வரைவதற்கு சட்டமாதிபர் திணைக்களத்துக்கு அலோசனை வழங்குவதற்கு முன்னால் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ கபீர் ஹாஷpம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை அது தொடர்பில் தற்போதைய உயர் கல்வி மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட இணக்கத்துக்கு அமைவாக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16.சர்வதேச தேரவாத பௌத்த பல்ககலைக்கழக சங்கத்தின் 05 ஆவது சர்வதேச மாநாட்டினை நடாத்துவதற்காக கொண்டு நடாத்துதல் (விடய இல. 42)

சர்வதேச தேரவாத பௌத்த பல்ககலைக்கழக சங்கத்தின் 05 ஆவது சர்வதேச மாநாட்டினை 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 27,28 மற்றும் 29ம் திகதிகளில் கொழும்பு மற்றும் அநுராதபுரம் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகங்களின் தலைமையில் மற்றும் இலங்கை பிக்குகள் பல்கலைக்கழகத்தின் பங்குபற்றலுடன் அம்மாநாட்டினை இலங்கையில் கொண்டு நடாத்துவது தொடர்பில் உயர் கல்வி மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. இலங்கை சமூக பாதுகாப்பு சபைக்காக கேட்போர் கூடமொன்றை நிர்மாணித்தல் (விடய இல. 45)

அரச சேவையில் ஓய்வூதியம் கிடைக்காத அனைவருக்கும் ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு நன்மைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இலங்கை சமூக பாதுகாப்பு சபை செயற்படுகின்றது. குறித்த சபையின் பணிகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக கேட்போர் கூடமொன்றின் அவசியம் எழுந்துள்ளது. அதனடிப்படையில், இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் பிரதான காரியாலயம் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடியினை கேட்போர் கூடமாக விருத்தி செய்வதற்கு அவசியமான நிதியினை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

18. தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பெயரினை 'இலங்கை சமூக சேவை கல்லூரி' என திருத்தம் செய்தல் (விடய இல. 46)

அறிஞர் பெருமக்களினால் முன்வைக்கப்பட்ட அம்சங்களை கவனத்திற் கொண்டு, தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பெயரினை 'இலங்கை சமூக சேவை கல்லூரி' என திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு உரித்தான காணிகளை வெளி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு குத்தகையின் அடிப்படையில் பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 52)

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு உரித்தான காணிகளை வெளி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடும் போது 1972ம் ஆண்டு 01ம் இலக்க காணி மறுசீரமைப்பு சட்டத்தின் விதப்புரைகளுக்கு அமைவாக உரிய அமைச்சரின் அங்கீகாரத்தினை பெற்றிருக்க வேண்டும். எனினும், சில சந்தர்ப்பங்களில் மாத்திரமல்லாமல் ஏனைய சந்தர்ப்பங்களில் இதற்காக அமைச்சரவையின் அங ;கீகாரத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும் என 2011ம் ஆண்டு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது. பயனாளிகளை தெரிவு செய்யும் போது நடுநிலையான முறையில் சரியாக நபர்களை தெரிவு செய்வதற்கான செயன்முறையொன்றை பயன்படுத்துவதன் கீழ், சிரேஷட அதிகாரிகளின் குழுவொன்றின் சிபார்சினை அடிப்படையாகக் கொண்டு, 05 ஏக்கர் வரையான அதிஉயர் அளவினை கொண்ட காணிகளை வெளியேற்றும் சட்டத்தின் விதப்புரைகளுக்கு அமைவாக, உரிய அமைச்சரின் மூலம் விடுவிக்க முடியும் என அமைச்சரவை தீர்மானித்தது.

20. அரசாங்கத்தின் அனுசரணை கிடைக்காத 13 தனியார் பாடசாலைகளுக்காக அரச அனுசரணையினை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 59)

பிள்ளைகளுக்கு தரமான மற்றும் போட்டித்தன்மைமிக்க கல்வியினை பெற்றுக் கொடுப்பதற்கு தகுதி கொண்ட, தற்போது அரசாங்கத்தின் எவ்வித அனுசரணையும் கிடைக்கப் பெறாத 13 தனியார் பாடசாலைகளை அரச அனுசரணை கிடைக்கப் பெறுகின்ற பாடசாலைகளாக கருதி செயற்படுவது தொடர்பில் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. 2018ம் ஆண்டு தேசிய மிலாதுன் நபி விழாவினை ஒட்டியதாக மன்னார் மாவட்டத்தினுள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் (விடய இல. 60)

2018ம் ஆண்டுக்கான தேசிய மீலாதுன் நபி விழாவினை மன்னார் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் தேசிய பாடசாலையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட காலமாக இடம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்த அப்பிரதேச முஸ்லிம் மக்களின் பொதுத் தேவைகளை இந்நிகழ்விற்கு சமாந்தரமாக அபிவிருத்தி செய்வதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், குறித்த பணியினை மேற்கொள்வதற்காக மத்திய அரசு, வட மாகாண சபை மற்றும் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களின் பங்களிப்பினை பெற்றுக் கொள்வது தொடர்பில் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் கௌரவ எம்.எச்.ஏ. ஹலீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

22. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், வருகை தரும் பகுதியினுள் பண பரிமாற்ற கவுன்டர் ஒன்றினை முன்னெடுத்துச் செல்வதற்கான அனுமதியினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 65)

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், வருகை தரும் பகுதியினுள் பண பரிமாற்ற கவுன்டர் ஒன்றினை முன்னெடுத்துச் செல்வதற்கான அனுமதியினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில், கொமர்ஷல் பேங்க் ஒப் சிலோன் பிஎல்சி, சம்பத் வங்கி பிஎல்சி, தொமஸ் குக் தனியார் கம்பனி, இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகிய நிதி நிறுவனங்களுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

23. முலன்காவில் நீர் வழங்கல் திட்டத்தினை ஸ்தாபித்தல் (விடய இல. 68)

கிளிநொச்சி, முலன்காவில் நீர் வழங்கல் திட்டத்தினை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தத்தை, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில், 608.49 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு M/s Ceylex Engineering (Pvt.) Ltd. and Prathibha Industries Limited ஆகிய இணைந்த வியாபாரத்துக்கு வழங்குவது தொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

24. ஹம்பாந்தோட்டை 220/132kv உப மின்னிலயத்தினை நிர்மானித்தல் மற்றும் விருத்தி செய்தல் (விடய இல. 70)

ஹம்பாந்தோட்டை 220/132kv உப மின்னிலயத்தினை நிர்மானித்தல் மற்றும் விருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில், 1,866.31 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு M/s Chint Electric Co. Ltd. நிர்வனத்துக்கு வழங்குவது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

25. வெல்லமன்கர மீன்பிடி துறைமுகத்தினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தினை வழங்குதல் (விடய இல. 71)

வெல்லமன்கர மீன்பிடி துறைமுகத்தினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தினை, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில், 1,862.25 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு M/s R.R. Construction (Pvt) Ltd. நிர்வனத்துக்கு வழங்குவது தொடர்பில் முன்னால் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை, அது தொடர்பில் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் மற்றும் கிராமிய பொருளாதார விவகாரங்கள் தொடர்பான தற்போதைய அமைச்சர் கௌரவ விஜித் விஜயமுனி சொய்சா அவர்களின் இணக்கத்துடன் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

26. பொலன்னறுவை, கதுறுவலை புலதிசி சந்தை தொகுதி மற்றும் விவசாய பொருளாதார மத்திய நிலையம் என்பவற்றினை நிர்மாணித்தல் (விடய இல. 73)

பொலன்னறுவை, கதுறுவலை புலதிசி சந்தை தொகுதி மற்றும் விவசாய பொருளாதார மத்திய நிலையம் என்பவற்றினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தினை, 623.2 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு பொறியியல் பணிகள் தொடர்பிலான மத்திய ஆலோசனை பணியகத்துக்கு வழங்குவது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

27.South Asian Institute of Technology and Medicine – SAITM மருத்துவ பீட மாணவர்களின் கல்வியியல் பிரச்சினைகளை தீர்த்தல் (விடய இல. 74 மற்றும் 80)

பல்வேறு தரப்பினர்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் அடிப்படையில், SAITM நிறுவனத்தின் மருத்துவ பீட மாணவர்களை கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு உள்வாங்குவது தொடர்பில் கீழ்வரும் சிபார்சுகளை செயற்படுத்துவதற்காக சட்ட ரீதியிலான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மற்றும் உயர் கல்வி மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் திகதியிலிருந்து 2017ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி வரை மருத்துவ கற்கைகளை மேற்கொள்வதற்காக SAITM நிறுவனத்தின் கீழ் பதிவு செய்துள்ள மாணவர்களுள், அரச பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு உள்வாங்குவதற்கு அவசியமான அடிப்படை தகைமைகளை கொண்டுள்ள மாணவர்களை மாத்திரம் ஜெனரால் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு உள்வாங்கிக் கொள்ளல்.
• குறித்த மாணவர்களை உள் வாங்கிக் கொள்வதற்கு அவசியமான தகைமைகள் மற்றும் நிபந்தனைகளை நிர்ணயிப்பதற்கு ஜெனரால் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழக முகாமைத்துவ சபைக்கு அதிகாரத்தினை வழங்குதல்.
• ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு சேர்த்துக் கொள்ளப்படுகின்ற SAITM நிறுவனத்தின் கீழ் பதிவு செய்துள்ள மாணவர்களுள், ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படுகின்ற பரீட்சையில் சித்தியடைகின்ற மாணவர்களுக்கு அப்பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டத்தினை வழங்குதல்.

28. ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் பக்தர்களுக்காக பகிர்ந்தளிப்பதற்கு அவசியமான பேரீத்தம் பழங்களை கொள்வனவு செய்தல் (விடய இல. 78 மற்றும் 83)

ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் பக்தர்களுக்காக பகிர்ந்தளிப்பதற்கு அவசியமான பேரீத்தம் பழங்கள் சவுதி அரசாங்கத்தினால் வருடா வருடம் நன்கொடையாக வழங்கப்பட்டு வந்தன. எனினும் இம்முறை சவுதி அரேபியாவினால் குறித்த பேரீத்தம் பழங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு முடியாமல் போயுள்ளது. எனினும் தனிப்பட்ட மூன்று நன்கொடையாளர்களினால் இம்முறை 03 மெட்ரிக் தொன் பேரீத்தம் பழங்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளன.

அதனால், ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் பக்தர்களுக்காக பகிர்ந்தளிப்பதற்கு தேவையான மேலதிக பேரீத்தம் பழங்கள் 250 மெட்ரிக் தொன் தொகையினை சதோச நிறுவனத்தின் மூலம் கொள்வனவு செய்வது தொடர்பில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் கௌரவ எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

29. மண்ணென்ணெய்யினை மானிய விலையில் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் (விடய இல. 81)

எரிபொருள் விலையேற்றத்தினால் பாதிக்கப்படுகின்ற மின்சாரம் அற்ற குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்கள் மற்றும் சிறு அளவிலான இயந்திர படகுகள் பயன்படுத்துகின்ற மீன்பிடி பிரஜைகளுக்காக மண்ணென்ணெய்யினை மானிய விலையில் பெற்றுக் கொடுப்பதற்கான செயன்முறையொன்றினை தயாரிக்குமாறு உரிய நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கனிய வள அபிவிருத்தி அமைச்சர் கௌரவ அர்ஜுண ரணதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கவனத்திற் கொண்டு, மண்ணென்ணெய் விலை அதிகரிக்கப்பட்ட பெறுமானத்திற் அமைவாக, இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டதைப் போன்று மண்ணென்ணெய்க்காக மானிய விலையொன்றை தொடர்ந்தும் பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

30. எரிபொருள் விலையேற்றத்திற்கு சமாந்தரமாக பேருந்து கட்டணங்களையும் திருத்தம் செய்தல் (விடய இல. 84)

2018-05-11 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலையேற்றத்தின் விளைவினால் பேருந்து கட்டணங்களையும் திருத்தம் செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதனடிப்படையில், 2018-05-16ம் திகதி முதல் செயற்படுத்தப்படும் வகையில் குறைந்த பேரூந்து கட்டணமானது 10 ரூபாவாக அமையும் வகையில், ஏனயை கட்டணங்களை 6.56 சதவீதமாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.