01. ஐக்கிய நாடுகள் உலக உணவு வேலைத்திட்டத்தில் (WFP) இலங்கைக்குரிய உபாய முறைகள் திட்டத்தினை செயற்படுத்தல் (விடய இல. 08)


ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேறான அபிவிருத்தி திட்டத்திற்கிணங்க உலக உணவு திட்டத்துடன் இணைந்து, 2018-2022 வரையான காலப்பகுதியினுள் இலங்கை அரசாங்கத்தினால் செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள உபாய முறைகள் திட்டத்தின் மூலம் பல்வேறு இலக்குகளை அடைந்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த உபாய முறைகளை செயற்படுத்துவதற்காக 46.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுத் தருவதற்கு உலக உணவு வேலைத்திட்டம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், குறித்த நிதியுதவியினை பெற்றுக் கொள்வது தொடர்பில் உலக உணவு அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கும், அதன் உபாய முறைகளை உரிய அமைச்சிகளின் வாயிலாக செயற்படுத்துவதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


02. த சொய்சா மகப்பேற்று வைத்தியசாலையில் நவீன குழந்தைகள் மற்றும் பிரசவ பரிசீலனை மத்திய நிலையமொன்றை ஸ்தாபிக்கும் வேலைத்திட்டம் (விடய இல. 10)


த சொய்சா மகப்பேற்று வைத்தியசாலையில் நவீன குழந்தைகள் மற்றும் பிரசவ பரிசீலனை மத்திய நிலையமொன்றை ஸ்தாபிக்கும் வேலைத்திட்டத்தினை துரித கதியில் செயற்படுத்துவதற்காக ஸ்டேன்டர்ட் சார்டட் வங்கியிடமிருந்து 17.99 மில்லியன் யூரோ நிதியினையும், சம்பத் வங்கியிடமிருந்து 8.45 மில்லியன் யூரோ நிதியினையும் பெற்றுக் கொள்வதற்கும், அதற்கான கடன் ஓப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


03. இலங்கைக்கு வருகின்ற குடியேற்றுவாசிகளின் சுகாதார மதிப்பீட்டு வேலைத்திட்டங்களை செயற்படுத்தல் (விடய இல. 13)


இலங்கைக்கு வருகின்ற குடியேற்றுவாசிகளின் சுகாதார மதிப்பீட்டு வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்காக துரித நடவடிக்கைகளை எடுப்பதற்கான அவசியம் இனங்காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில், குடியிருப்பு விசா விண்ணப்பதாரிகளின் சுகாதார மதிப்பீட்டு வேலைத்திட்டமொன்றை இந்நாட்டில் ஸ்தாபித்தல் மற்றும் செயற்படுத்துவதற்காக இலங்கையினை பிரதிநிதித்துவப்படுத்தி சுகாதார, போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு மற்றும் சர்வதேச குடியேற்றவாசிகளின் அமைப்பு (IOM) ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் சுகாதார, போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. மாற்று நிதி மூலதாரங்கள் - 2018 (விடய இல. 15)


2018ம் ஆண்டு வரவு செலவு திட்ட யோசனைகளின் படி 2018ம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் உயரிய கடன் பெறும் எல்லை 1,895 பில்லியன்களாகும். வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்துதல் மற்றும் கடன் சேவைகளுக்காக வருடத்தின் முதல் காலாண்டினுள் 732 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நிதி நிலைமைகளை முறையாக பேணுவதற்காக 2018ம் ஆண்டில் ஒப்பீட்டளவில் உயர்ந்த செலவுடன் கூடிய இலங்கை அபிவிருத்தி முறிகளை செலுத்தி விடுவித்தல் பொருத்தமானது என இனங்காணப்பட்டுள்ளது. அதற்காக இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின் வெளிநாட்டு செலாவணி வங்கிப்பிரிவு அல்லது கடல் கடந்த வங்கிப்பிரிவின் மூலம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நிதியினை திரட்டிக் கொள்வது தொடர்பில் வேலை பார்க்கின்ற நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ இரான் விக்ரமரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


05. முல்லைத்தீவு நீர் வழங்கல் திட்டம் (விடய இல. 26)


முல்லைத்தீவு நீர் வழங்கல் திட்டத்தினை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 894.74 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் M/s Ceylex Engineering (Pvt) Ltd. மற்றும் இந்தியாவின் Pratibha Industries Ltd. ஆகியவற்றுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இணை வியாபாரத்திற்கு JV வழங்குவது தொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


06. கண்களுடன் சம்பந்தப்பட்ட சத்திர சிகிச்சைகளுக்காக பயன்படுத்துகின்ற கண் வில்லைகளை கொள்முதல் செய்தல் (விடய இல.27)


கண்களுடன் சம்பந்தப்பட்ட சத்திர சிகிச்சைகளுக்காக பயன்படுத்துகின்ற கண் வில்லைகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 322.84 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் M/s Vision (Pvt) Ltd. மற்றும் நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


07. தொழில்நுட்ப தொழில் கல்வி மற்றும் பயிற்சி பிரிவிற்காக முகாமைத்துவ தகவல் பிரிவொன்றை அறிமுகம் செய்தல் (விடய இல. 28)


தொழில்நுட்ப தொழில் கல்வி மற்றும் பயிற்சி பிரிவிற்காக முகாமைத்துவ தகவல் பிரிவொன்றை அறிமுகம் செய்வதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அப்பணியினை 2018ம் ஆண்டினுள் ஆரம்பிப்பத்து துரித கதியில் செயற்படுத்துவது தொடர்பில் நிபுணத்துவ அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சர் கௌரவ சந்திம வீரக்கொடி அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


08. பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் நோர்வே ராஜதானியின் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கு இடையில் உயர் கல்வி துறையில் ஒத்துழைப்பினை விருத்தி செய்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளல் (விடய இல. 32)


பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் நோர்வே ராஜதானியின் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கு இடையில் உயர் கல்வி துறையில் ஒத்துழைப்பினை விருத்தி செய்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் முன்னால் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை, அவ்விடயம் தொடர்பான தற்போதைய அமைச்சர் கௌரவ கபீர் ஹாஷpம் அவர்களின் இணக்கத்தினையும் கவனத்திற் கொண்டு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


09. 70ஆவது உலக சுகாதார தினத்தின் ஆரம்ப நிகழ்வை கொழும்பில் நடாத்துதல் (விடய இல. 33)


உலக சுகாதார அமைப்பின் 70ஆவது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற உலக சுகாதார தினத்தின் ஆரம்ப நிகழ்வை 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 07ம் திகதி கொழும்பில் நடாத்துவதற்கான தலைமையினை வகிப்பது தொடர்பில் சுகாதார, போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


10. இலங்கையின் உள்ளுராட்சி மன்றங்களுக்காக கழிவுகளை சேகரிக்கும் இயந்திரங்களை பெற்றுக் கொடுப்பதற்கு அவசியமான நிதியினை திரட்டிக் கொள்ளல் (விடய இல. 37)


இலங்கையின் உள்ளுராட்சி மன்றங்களுக்காக கழிவுகளை சேகரிக்கும் 190 இயந்திரங்களை பெற்றுக் கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவற்றினை பெற்றுக் கொடுப்பதற்காக செலவாகும் தொகையினை உள்ளடக்கும் வகையில் 14 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகரிக்காத கடன் தொகையினை, கொரியாவின் ஏற்றுமதி - இறக்குமதி வங்கியின் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக உரிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


11. இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் ((BIDTI) மற்றும் பாகிஸ்தானின் வெளிநாட்டு சேவைகள் அகடமி (FSA) ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல் (விடய இல. 44)


இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர சேவைகளுக்கு இடையில் பயிற்சிகள் மற்றும் தொழில் அபிவிருத்தி தொடர்பில் ஒத்துழைப்புக்களை விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் (BIDTI) மற்றும் பாகிஸ்தானின் வெளிநாட்டு சேவைகள் அகடமி (FSA) ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் பாகிஸ்தான் நாட்டில் மேற்கொள்ள உள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கைச்சாத்திடுவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் கௌரவ திலக் மாரப்பன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


12. இலங்கையின் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் (ITI) மற்றும் பாகிஸ்தானின் இரசாயன மற்றும் உயிரியல் விஞ்ஞான சர்வதேச நிலையம் (ICCBS) ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 45)


இரசாயன மற்றும் உயிரியல் விஞ்ஞான துறைகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வினை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் இலங்கையின் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் (ITI) மற்றும் பாகிஸ்தானின் இரசாயன மற்றும் உயிரியல் விஞ்ஞான சர்வதேச நிலையம் (ICCBS) ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் பாகிஸ்தான் நாட்டில் மேற்கொள்ள உள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கைச்சாத்திடுவது தொடர்பில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


13. இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் (SLIDA) மற்றும் பாகிஸ்தானின் அரச கொள்கைகள் தொடர்பான தேசிய கல்லூரி ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 46)


இந்நாட்டு அரச சேவையாளர்களின் தரத்தினை விருத்தி செய்யும் நோக்கில் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் (SLIDA) மற்றும் பாகிஸ்தானின் அரச கொள்கைகள் தொடர்பான தேசிய கல்லூரி ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ ரன்ஜித் மத்தும பண்டார அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


14. நிதி மோசடிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதிவசதியளித்தல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக வேண்டி 2007ம் ஆண்டு 07ம் இலக்க கம்பனிச் சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 47)


அண்மையில் Financial Action Task Force (FATF) அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி இலங்கையானது நிதி மோசடிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதிவசதியளித்தல் என்பவற்றை கட்டுப்படுத்துவதற்கு பலமான செயன்முறையொன்றை கொண்டிருக்கவில்லை என்பதை எடுத்துரைத்தது. இதனை கருத்திற் கொண்டு குறித்த நிலைமையினை மாற்றியமைப்பதற்காக 2007ம் ஆண்டு 07ம் இலக்க கம்பனிகள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 2007ம் ஆண்டு 07ம் இலக்க கம்பனிகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை மேற்கொள்வதற்கும், அதற்கு அவசியமான சட்ட திருத்தங்களை மேற்கொள்ளுமாறு சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கும் வேலை பார்க்கும் கைத்தொழில் மற்றும் வணிக விவகார அமைச்சர் கௌரவ ஏ.டி.சம்பிக பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


15. 2018ம் ஆண்டின் சிறுபோக நெற்பயிர் செய்கைக்காக இரசாயன பசளைகளை வழங்குதல் (விடய இல. 51)


2018ம் ஆண்டின் சிறுபோக நெற்பயிர் செய்கைக்காக இரசாயன பசளைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில், 01 மெட்ரிக் தொன் யூரியா – கிரேனியுலா பசளையினை 307.18 அமெரிக்க டொலர்கள் வீதம் 24,000 மெட்ரிக் தொன் குறித்த பசளையினை M/s. Ameropa Asia (Pvt) Ltd. நிறுவனத்திடமிருந்தும், 01 மெட்ரிக் தொன் ட்ரிபல் சுபர் பொஸ்பேட் பசளையினை 333.5 அமெரிக்க டொலர்கள் வீதம் 18,000 மெட்ரிக் தொன் பசளையினை M/s. Agri Commodities & Finance FZE நிறுவனத்திடமிருந்தும், 01 மெட்ரிக் தொன் மியூரியேட் ஒப் பொடேஷ; பசளையினை 315.85 அமெரிக்க டொலர்கள் வீதம் 18,000 மெட்ரிக் தொன் பசளையினை M/s. Agricultural Resources & Invesment (Pvd) Ltd. நிறுவனத்திடமிருந்தும் கொள்வனவு செய்வது தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


16. இலங்கை தேசிய பாதுகாப்பு கல்வியல் நிறுவனம் மற்றும் இஸ்லாமாபாத் உபாய முறைகள் கல்வியல் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 52)


தேசிய பாதுகாப்பு கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பினை விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் இலங்கை தேசிய பாதுகாப்பு கல்வியல் நிறுவனம் மற்றும் இஸ்லாமாபாத் உபாய முறைகள் கல்வியல் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


17. கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்குரிய சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட வியாபார சொத்துக்களுக்காக சலுகை வட்டி வீதத்தின் கீழ் கடன் வசதிகளை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 53)


2018ம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்ப வாரத்தில் கண்டி நிர்வாக மாவட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட பிரச்சினைக்குரிய சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக சலுகையளிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள பாதிக்கப்பட்ட அவ்வாறான வியாபாரங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, உரிய நிபந்தனைகள் மற்றும் நியமங்களுக்கு உட்பட்டு, 2மூ சலுகை வட்டி வீதத்தின் கீழ் கடன் வசதிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரச வியாபார மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.