2018.02.27 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்01. ஆராய்ச்சி ஆணைக்குழுவின் மூலம் கண்டுபிடிக்கப்படுகின்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு வழக்கு தொடரும் அதிகாரத்தினை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகனை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு வழங்குதல் (விடய இல. 05)

விசாரணை ஆணைக்குழுவின் மூலம் கண்டுபிடிக்கப்படுகின்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு வழக்கு தொடரும் அதிகாரத்தினை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகனை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்துக்கு வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்வதற்கான அவசியம் எழுந்துள்ளது.
அதற்காக, 1948ம் ஆண்டு 17ம் இலக்க விசாரணை ஆணைக்குழு சட்டத்தினை திருத்தம் செய்வத்றகாக தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தினை பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் அங்கீகரிக்க வேண்டும் என சட்டமாதிபரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தயாரிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலத்தினை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. கிளஸ்டர் குண்டுகள் தொடர்பான சர்வதேச மாநாட்டுக்கு இலங்கை உள்நுழைதல் (விடய இல. 06)

யுத்த காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக சில தரப்பினரின் மூலம் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதும், 'இலங்கை பாதுகாப்பு பிரிவினரால் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக எவ்வித ஆதாரங்களும் இல்லை என்றும், இதற்கு பின்னரும் அவ்வாறு பயன்படுத்த மாட்டாது' என்பதும் அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். நிலையான சமாதானம் மற்றும் நிலைப்பாடு தொடர்பில் இலங்கையில் காணப்படுகின்ற அர்ப்பணிப்பினை வெளிக்காட்டும் வகையில், இதுவரை 102 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ள கிளஸ்டர் குண்டுகள் தொடர்பான சர்வதேச மாநாட்டினை இலங்கையும் ஏற்றுக் கொள்வது தொடர்பில் (to accede) பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. 1956ம் ஆண்டு 21ம் இலக்க வெடிப்பொருட்கள் கட்டளை சட்டத்தில் திருத்தம் செய்தல் (விடய இல. 07)

தற்காலத்துக்கு பொருத்த வகையில் 1956ம் ஆண்டு 21ம் இலக்க வெடிப்பொருட்கள் கட்டளை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்காக சட்டத்துடன் தொடர்பான நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றினை நியமிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. காலநிலை மாற்றம் தொடர்பிலான சவால்களுக்கிடையில் நீர் வளத்தினை பயனுள்ள விதத்தில் முகாமைத்துவம் செய்தல் (விடய இல. 08)

நீர் முகாமைத்துவத்துடன் தொடர்பான அனைத்து நிறுவனங்களையும் உள்ளடக்கி, பெறுமதியான நீர் வளங்களை முகாமைத்துவம் செய்வதற்காக ஒன்றிணைந்த முகாமைத்துவ கட்டமைப்பு ஒன்றினை ஸ்தாபிப்பது தொடர்பில் சிபார்சுகளை மூன்று மாத காலத்தினுள் முன்வைப்பதற்காக ஜனாதிபதி செயலாளரின் தலைமையிலான ஜனாதிபதி செயலணி ஒன்றினை ஸ்தாபிப்பது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. தேசிய மிருககாட்சி சாலை திணைக்களத்துக்காக வெளிநாட்டு மிருகங்களை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 09)

மிருகங்கள் பறிமாற்ற வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில் 1982ம் ஆண்டு 41ம் இலக்க தேசிய மிருகக்காட்சி சாலை சட்டத்தின் விதப்புரைகளை திருத்தம் செய்யும் வரை, மிருக பறிமாற்ற வேலைத்திட்டம் மற்றும் மிருக நன்கொடைகள் மூலம் தேவையான மிருகங்களை பெற்றுக் கொள்ளல் மற்றும் இலங்கைக்கு வெளிநாட்டு பறவைகள் மற்றும் வீட்டு மிருகங்களை பெற்றுத்தரும் நபர்கள் மற்றும் நிறுவனங்களின் மூலம் முறையான கொள்முதல் செயன்முறையின் கீழ் மிருகங்களை கொள்வனவு செய்வதற்காக தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு அதிகாரத்தினை வழங்குவது தொடர்பில் முன்னாள் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள், அதற்காக அவ்விடயத்துக்கு பொறுப்பான தற்போதைய அமைச்சர் கௌரவ ரவிந்திர சமரவீர அவர்களினதும் இணக்கத்தினையும் கவனத்திற் கொண்டு அமைச்சரவையின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. மத்திய அதிவேக வீதியுடன் தொடர்புபடுகின்ற கண்டி மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் அமைந்துள்ள வீதிகளை அபிவிருத்தி செய்தல் (விடய இல.14)

மத்திய அதிவேக வீதியினை அமைப்பதன் மூலம் கலகெதரயிலிருந்து கண்டி வரையான பெருந்தெருவில் வாகன நெரிசல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் கடுகஸ்தோட்டையிலிருந்து கலகெதர வரையான வீதியினை நான்கு சுவடுகளைக் கொண்ட வீதியான அபிவிருத்தி செய்வதற்கும், கடுகஸ்தோட்டை நகரத்தில் 04 சுவடுகளைக் கொண்ட புதிய மாற்று வீதியொன்றை நிர்மாணிப்பதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதியினை வழங்குவதற்கு இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், குறித்த வேலைத்திட்டம் தொடர்பான விரிவான வேலைத்திட்ட அறிக்கையொன்றை தயாரிப்பதற்கான ஆலோசனை சேவையினை பெற்றுக் கொள்வதற்காக இந்தியாவின் சுஐவுநுளு டுவன. நிறுவனத்தினை நியமிப்பது தொடர்பில் முன்னாள் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளினை, அவ்விடயம் தொடர்பில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் கௌரவ கபீர் ஹாஷpம் அவர்களின் இணக்கத்தினையும் கவனத்திற் கொண்டு அமைச்சரவையின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. வந்துரபீனு எல்ல நீர்தேக்கத்தினை நிர்மாணிப்பதற்கான சாத்தியவள அறிக்கை மற்றும் சூழலியல் தாக்கம் தொடர்பான மதிப்பீடு ஆகியவற்றை மேற்கொள்ளல் (விடய இல. 16)

3.6 கன மீற்றர் கொள்ளளவினைக் கொண்ட பிரேரிக்கப்பட்டுள்ள வந்துரபீனு எல்ல நீர்தேக்கத்தினை நிர்மாணிப்பதற்கான சாத்தியவள அறிக்கை மற்றும் சூழலியல் தாக்கம் தொடர்பான மதிப்பீடு ஆகியவற்றை மேற்கொள்வது தொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

08. The Regional Integrated Multi-Hazard Early Warning System for South Asia (RIMES) அமைப்பின் உப வலய மத்திய நிலையத்தினை இலங்கையில் ஸ்தாபித்தல் (விடய இல. 17)

இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தொழில்நுட்ப தகைமைகள் மற்றும் கொள்ளளவினை பலப்படுத்துவதற்காக கிடைக்கின்ற பங்களிப்பினை கவனத்திற் கொண்டு, The Regional Integrated Multi-Hazard Early Warning System for South Asia (RIMES) அமைப்பின் உப வலய மத்திய நிலையத்தினை வளிமண்டலவியல் திணைக்களத்தின் சூழலில் இரண்டு மாடிக்கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
09. 2017ஃ18 பெரும்போகத்திற்காக அரசாங்கத்தின் நெல் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்தல் (விடய இல. 18)

2017ஃ18 பெரும்போகத்திற்காக அரசாங்கத்தின் நெல் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர மற்றும் கிராமிய பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் கௌரவ பி.ஹெரிசன் ஆகியோர் முன்வைத்த யோசனைகளை கவனத்திற் கொண்டு, நெல்லினை கொள்வனவு செய்வதற்கான ஆகக் குறைந்த விலையினை உறுதி செய்வதற்காக அரச தலையீடு அவசியப்படுகின்ற மாவட்டங்களில், நாடு நெல் ஒரு கிலோ 38 ரூபா வீதமும், சம்பா கீரி சம்பா ஒரு கிலோ 41 ரூபா வீதமும், நெல் விற்பனை சபை மற்றும் உரிய மாவட்ட செயலகத்தின் தலையீட்டில் அடிப்படையில் அரசாங்கத்தின் மூலம் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. பொலன்னறுவை, கிளிநொச்சி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் களஞ்சியசாலை தொகுதியினை நிர்மாணித்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் (விடய இல. 19)

உலர் வலய விவசாயிகளின் அறவடைகளை களஞ்சியப்படுத்வதற்காக களஞ்சியசாலை வசதிகளை வழங்கும் நோக்கில், தற்போது பணிகள் நிறைவு பெற்று வருகின்ற பொலன்னறுவை, கிளிநொச்சி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் களஞ்சியசாலை தொகுதிகளை 2018ம் ஆண்டினுள் செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதோடு, அக்களஞ்சியசாலையின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக பிரதேச அபிவிருத்தி வங்கியுடன் முகாமைத்துவ ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுத் அதிகாரத்தினை உரிய மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குவதற்கும், அச்செயற்பாடுகளை நிர்ணயம் மற்றும் மேற்பார்வை செய்வதற்காக வேண்டி அவ்வவ் மாவட்டங்களிலுள்ள மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரத்தினை வழங்குவதற்கும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. அன்றாட மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் பயன்படுத்துகின்ற மீன்பிடி முறையில் இறையாக பயன்படுத்தப்படுகின்ற கணவாய் மற்றும் வெள்ளரிகளை இறக்குமதி செய்வதற்காக இறக்குமதி வரி சலுகையினை அளித்தல் (விடய இல. 23)

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக வேண்டி பயன்படுத்தப்படுகின்ற இறைகளின் விலை அதிகாமாக காணப்படுவதால் மீன்பிடி கைத்தொழில்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அதனால், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் சிபார்சின் அடிப்படையில், மீனவ சங்கங்களுக்கு இடையில் பகிர்தளிப்பதற்கு மாத்திரம் இறக்குமதி செய்யப்படுகின்ற மீன்பிடி இறைகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற சிறு வகை மீனினங்களின் இறக்குமதி வரி சலுகையினை பெற்றுக் கொடுப்பதற்கும், அதன் கீழ் இறக்குமதி செய்யப்படுகின்ற மீனின இறைகளை தேசிய நுகர்வுக்காக பயன்படுத்துவதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

12.இந்திய அரசாங்கத்தின் நன்கொடை வேலைத்திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட பிரஜைகளுக்கு 10,000 வீடுகளை நிர்மாணித்தல் (விடய இல. 29)

இந்திய பிரதமரினால் 2017ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுப்பயணத்தின் போது தோட்ட பிரஜைகளுக்காக மேலும் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அவசியமான நிதியினை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. மண்சரிவு அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கி அவ்வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக தகுதியான காணிகளை இனங்காணும் நடவடிக்கைகள் 2018ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஒரு வீட்டுக்காக 10 இலட்சம் ரூபா மதிப்பீட்டின் கீழ், பெருந்தோட்ட பிரஜைகளுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் சைச்சாத்திடுவது தொடர்பில் மலையக புதிய கிராமங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் பிரஜைகள் அபிவிருத்தி அமைச்சர் யூ. பழனி திகாம்பரம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13,14. முன்னாள் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது (விடய இல. 34 மற்றும் 36)

முன்னாள் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
01. கடானை, தேசிய பொலிஸ் விஞ்ஞான பீடத்தின் விடுதி கட்டிடம் மற்றும் நிர்வாக கட்டிடம் என்பவற்றை 836.28 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவின் கீழ், 2018-2020 ஆண்டு காலப்பிரிவினுள் செயற்படுத்தல்.
02. பொலிஸ் விசாரணை தரத்திலுள்ள அதிகாரிகளுக்கான தங்குமிட வசதிகள், சாப்பாட்டறை மற்றும் வாகன தரிப்பிடங்கள் என்பவற்றை 468.27 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவின் கீழ், 2018-2020 ஆண்டு காலப்பிரிவினுள் செயற்படுத்தல்.

15. LNG பிரிவு மற்றும் FSRU பிரிவினை ஸ்தாபிப்பதற்காக இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் நிர்வனங்களுக்கு இடையில் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 37)

கொழும்பு கெரவலபிட்டிய பிரதேசத்தில் LNG பிரிவு மற்றும் FSRU பிரிவினை ஸ்தாபிப்பதற்காக இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதன் உரிமையான்மையில் 15ம% ஆனது இலங்கை அரசாங்கத்துக்கு உரித்தான வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கா கேஸ் டர்மினல் நிறுவனத்துக்கும், 47.5ம% ஆனது இந்தியா அரசாங்கத்தினால் பெயரிடப்பட்டுள்ள Petronet LNG Ltd க்கும், 37.5ம% ஆனது ஜப்பான் அரசாங்கத்தினால் பெயரிடப்பட்டுள்ள Sojitz Corporation மற்றும் மிட்சுபிசி ஆகிய நிர்வனங்களுக்கு இடையிலான இணைக்கும் வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், அடிப்படை சாத்தியவள ஆய்வினை மேற்கொள்ளும் நோக்கில் உரிய தரப்பினர்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கும், முன்மொழியப்பட்டுள்ள இணை வியாபாரத்தினை ஸ்தாபிப்பதற்காக இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கான அதிகாரத்தினை இலங்கை அரசாங்கத்துக்கு உரித்தான வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கா கேஸ் டர்மினல் நிறுவனத்துக்கு வழங்குவதற்கும் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவீக்ரம அவர்கள் மற்றும் துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. பேராதெனிய பல்கலைக்கழக நூதனசாலையின் ஆராய்ச்சி பணிகளுக்காக அணுசரனையினை வழங்குதல் (விடய இல. 38)

பேராதெனிய பல்கலைக்கழக நூதனசாலையின் ஆராய்ச்சி பணிகளை மேம்படுத்துவதற்காக விசேட பணிகள் அமைச்சுக்கு 2018ம் ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 10 மில்லியன் ரூபா தொகையினை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட பணிகள் அமைச்சர் (கலாநிதி) சரத் அமுணுகம அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. புதிய களனி பாலத்திலிருந்து அதுருகிரிய வரையான தூண்களின் மீது பயணிக்கின்ற Elavated Highway ஒன்றினை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின், ராஜகிரிய தொடக்கம் அதுருகிரிய வரையான பகுதியினை செயற்படுத்துவதற்கான சாத்தியவள ஆய்வினை மேற்கொள்ளுதல் (விடய இல. 39)

புதிய களனி பாலத்திலிருந்து அதுருகிரிய வரையான தூண்களின் மீது பயணிக்கின்ற Elavated Highway ஒன்றினை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின், ராஜகிரிய தொடக்கம் அதுருகிரிய வரையான பகுதியினை செயற்படுத்துவதற்கான சாத்தியவள ஆய்வினை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தினை, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனை கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில், 98.73 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில்Resource Development Consultants (Pvt.) Ltd. மற்றும் M/s SMEC International Pty ஆகிய நிர்வனங்களுக்கு வழங்குவது தொடர்பில் முன்னாள் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள், அதற்காக இவ்விடயத்துக்கு பொறுப்பான தற்போதைய அமைச்சர் கபீர் ஹாஷிம் அவர்களின் இணக்கத்தினையும் கவனத்திற் கொண்டு அமைச்சரவையின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

18,19,20,21 மற்றும் 22. சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது (விடய இல. 41,42,43,44 மற்றும் 45)

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

01. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பக்கவாத சிகிச்சை பிரிவொன்றை அமைப்பதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 633.97 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் M/s Link Engineering (Pvt.) Ltd. க்கு வழங்குதல்.
02. பக்கவாத நோய்க்கான சிகிச்சையளிப்பதற்கு அவசியமான நுண்ணுயிர் கொள்ளி ஒளடதங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 1.08 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பீட்டு தொகைக்கு இந்தியாவின் M/s Scott Edil-Advance Research Laboratories & Education Ltd. நிறுவனத்துக்கு வழங்குதல்.
03. நோய்த்தடுப்புச்சக்தி குறைவான நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அவசியமான ஊசி மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 3.06 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பீட்டு தொகைக்கு இந்தியாவின் M/s Reliance Life Science (Pvt.) Ltd. நிறுவனத்துக்கு வழங்குதல்.
04. சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்காக அலுவலக இடவசதிகளை பெற்றுக் கொள்வதற்காக அமைச்சரவை கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில், 9.07 மில்லியன் ரூபா மாதாந்த வாடகையின் கீழ், இரண்டு வருட காலத்துக்காக கொழும்பு 10, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, இலக்கம் 26 இல் அமைந்துள்ள இடத்திலுள்ள 55,000 சதுர அடி அளவிலான Medi House (Pvt.) Ltd. நிறுவனத்துக்குரிய கட்டிடத்தினை பெற்றுக் கொள்ளல்.
05. அரச வைத்தியசாலைகளில் பயன்பாட்டிற்காக 250 அம்பூலன்ஸ் வண்டிகளை கொள்வனவு செய்வதற்கான யோசனையானது, கட்டம் கட்டமாக கொள்வனவு செய்வதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
23. திருகோணமலை கைத்தொழில் பேட்டையின் iii கட்டத்தினை ஸ்தாபித்தல் (விடய இல. 46)

திருகோணமலை கைத்தொழில் பேட்டையின் iii கட்டத்தினை ஸ்தாபிப்பதற்கு அவசியமான அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வணிக விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ரிஷhட் பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

24 மற்றும் 25. மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது (விடய இல. 48 மற்றும் 49)

மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

01. பொல்பிட்டிய - ஹம்பாந்தோட்டை 220kV மின்வழங்கல் மார்க்கத்தினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 5,794.32 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் M/s China Natioanal Cable Engineering Corporation க்கு வழங்குதல்.

02. இலங்கை மின்சார சபையின் பகிர்ந்தளிக்கும் வலய இலக்கம் 02 இற்கு அவசியமான ஏரியல் பண்டல் கடத்திகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 872.96 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் M/s Sierra Cables PLCக்கு வழங்குதல்.

26. சைபர் பாதுகாப்பு தொடர்பான சவால்களுக்கு வெற்றிகரமான முறையில் முகங்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல் (விடய இல. 54)
சைபர் பாதுகாப்பு தொடர்பான சவால்களுக்கு வெற்றிகரமான முறையில் முகங்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை Sri Lanka Computer Emergency Readiness Team – Sri Lanka CERT/CC அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. சைபர் பாதுகாப்பு தொடர்பில் அரச நிர்வனங்கள் மற்றும் பொதுமக்களினதும் கேள்விகள் அதிகரித்துள்ளமையினால் குறித்த அமைப்பினை தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிடல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிடல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் கௌரவ ஹரின் பர்னாந்து அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
27. தேசிய கண்காய்வு சட்டம் (விடய இல. 58)

முன்மொழியப்பட்ட தேசிய கணக்காய்வு சட்ட மூலத்தினை மேலும் திருத்தம் செய்வதற்காக வேண்டி சிபார்சுகளை முன்வைப்பதற்காக கலாநிதி சரத் அமுணுகம அமைச்சரின் தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவினால் முன்வைக்கப்பட்ட சிபார்சுகளை அமைச்சரவையின் கவனத்திற் கொள்ளப்பட்டதோடு, அச்சிபார்சுகளில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை உள்ளடக்குவதன் அடிப்படையில், தேசிய கணக்காய்வு சட்ட மூலத்துக்கு அங்கீகாரத்தினை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்தது.

28. சுகாதாரம் மற்றும் வைத்திய சேவையினை விருத்தி செய்யும் வேலைத்திட்டம் (விடய இல. 77)

தொற்றா நோய், விசேடமாக இருதய நோயினை இல்லாதொழிப்பதற்கு மற்றும் அதற்காக சிகிச்சை அளிப்பதற்கு அவசியமான சுகாதாரம் மற்றும் வைத்திய சேவையினை விருத்தி செய்யும் வேலைத்திட்டத்தினை அநுராதபுரம், கண்டி, குருநாகல், பதுளை மற்றும் திருகோணமலை ஆகிய பெரிய வைத்தியசாலைகளில் சிகிச்சை சேவையினை விருத்தி செய்யும் நோக்கில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அவசியமான நிதியினை வழங்குவதற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், குறித்த வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக 10,639 மில்லியன் ஜப்பான் யென் தொகையினை பெற்றுக் கொள்வதற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்துடன் கடன் ஒத்துழைப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும், குறித்த கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

29. 2018 சிறுபோக நெற்செய்கைக்காக இரசாயன உரங்களை வழங்குதல் (விடய இல. 62)

2018 சிறுபோக நெற்செய்கைக்காக இரசாயன உரங்களை துரித கதியில் வழங்குவதற்காக, துரித கொள்முதல் செயன்முறையினை பின்பற்றி போட்டித்தன்மையான விலைமனுக்களை கோருவதன் மூலம், தகுதியான வழங்குநர்களை தெரிவு செய்து உரங்களை பெற்றுக் கொள்வதற்கும், அதற்காக அரச உர நிறுவனங்கள் இரண்டிற்காகவும் திறைசேரி பத்திரங்களை வெளியிடுவதற்குமாக கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.