2018.02.14 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்
(இது அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் நேரடியாக பெறப்பட்ட தமிழ்மொழிபெயர்ப்பாகும்)


01. தேசிய பாதுகாப்பு நிதியச்சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 07)

இராணுவ வீரர்களின் நன்மைக்கருதி உருவாக்கப்பட்டுள்ள 1985ம் ஆண்டு 09ம் இலக்க தேசிய பாதுகாப்பு நிதிச்சட்டத்தினை மேலும் நன்மைப்பயக்கும் வகையில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதனடிப்படையில், தயாரிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலத்தினை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. ஹசலக நீர் வழங்கல் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கான நிதியினை திரட்டிக் கொள்ளல் (விடய இல. 11)

ஹசலக நீர் வழங்கல் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ளதுடன், அச்செலவினை பரிபூரணப்படுத்துவதற்கு அவசியமான நிதியினை திரட்டிக் கொள்ளும் பொருட்டு 6,235 மில்லியன் ரூபா கடன் தொகையினை பெற்றுக் கொடுப்பதற்கு மக்கள் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், குறித்த கடன் உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி மக்கள் வங்கியுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான அதிகாரத்தினை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு வழங்குவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. பாரிய இரத்தினபுரி நீர் வழங்கல் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கான நிதியினை திரட்டிக் கொள்ளல் (விடய இல. 12)

பாரிய இரத்தினபுரி வழங்கல் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ளதுடன், அச்செலவினை பரிபூரணப்படுத்துவதற்கு அவசியமான நிதியினை திரட்டிக் கொள்ளும் பொருட்டு 1,528.9 மில்லியன் ரூபா கடன் தொகையினை பெற்றுக் கொடுப்பதற்கு இலங்கை வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், குறித்த கடன் உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி இலங்கை வங்கியுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான அதிகாரத்தினை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு வழங்குவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கை மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 13)

சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கை மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ஜோன் அமரதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. இரத்மலானை விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான நீண்ட கால திட்டம் (விடய இல. 14)

தேசிய மற்றும் சர்வதேச விமான சேவை வசதிகளை செயற்றிறனாக வழங்குகின்ற விமான நிலையமாக இரத்மலானை விமான நிலையத்தினை விருத்தி செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள 2018ம் ஆண்டிலிருந்து 2030 ஆண்டு வரை செயற்படுத்துகின்ற உபாய முறை திட்டங்கள் அடங்கிய 'Way to 2030' நீண்ட கால அபிவிருத்தி திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. பொலன்னறுவை பிரதேச கொன்சியுலர் அலுவலகத்தினை ஸ்தாபித்தல் (விடய இல.15)

பொலன்னறுவையில் வாழும் மக்களின் நலன்கருதி பிரதேச கொன்சியுலர் அலுவலகம் ஒன்றை பொலன்னறுவை தமன்கடுவை பிரதேச செயலகத்துக்கு அருகில் அமைந்துள்ள கட்டிடத்தில் அமைப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் கௌரவ திலக் மாரப்பன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. 'ஜேர்மனி கைத்தொழில் மற்றும் வணிக பிரதிநிதிகள் குழு அலுவலகம்' ஒன்றை இலங்கையில் ஸ்தாபித்தல் (விடய இல. 16)

சிறு மற்றும் மத்திய தர வியாபாரிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் 'ஜேர்மனி கைத்தொழில் மற்றும் வணிக பிரதிநிதிகள் குழு அலுவலகம்' ஒன்றை கொழும்பில் ஸ்தாபிப்பதற்கான வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் கௌரவ திலக் மாரப்பன மற்றும் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம ஆகியோர் இணைந்து முன்வைத்த ஒன்றிணைந்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

08. குற்றச்செயல் ஒன்றிற்கான பொறுப்பினை வகிக்கும் குறைந்த வயதெல்லையினை அதிகரிப்பதற்கு உரிய 1979ம் ஆண்டின் 15ம் இலக்க குற்றவியல் நடைமுறைச்சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 19)

இலங்கை சட்டத்தின் அடிப்படையில் 08 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு குற்றத்துக்கான பொறுப்புக்கள் சுமத்தப்படாது. எனினம் இது மிகக் குறைந்த வயதாக உளவியல் வைத்தியர்கள் மற்றும் அதனுடன் தொடர்பான நிபுனர்களின் எண்ணமாகும். அதனடிப்படையில், ஆகக் குறைந்த வயதெல்லையினை 12 வயதாக அதிகரிப்பதற்கும், 12 வயதுக்கு அதிகமான மற்றும் 14 வயதுக்கும் குறைந்த பிள்ளைகளுக்கு குறித்த குற்றம் தொடர்பிலான புத்திக் கூர்மை காணப்பட்டதா என்பதை கணிப்பிடும் அதிகாரத்தினை மாவட்ட நீதவான்களுக்கு வழங்கும் வகையில் 1979ம் ஆண்டின் 15ம் இலக்க குற்றவியல் நடைமுறைச்சட்டத்தினை திருத்தம் செய்வது தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தினை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றத்தில் சமரப்பிப்பதற்குமாக நீதியமைச்சர் கௌரவ தலதா அதுகோரல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

09. புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஆராய்ச்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 23)

இலங்கையில் புற்றுநோய் ஆவணங்களை மக்கள் தொகையின் அடிப்படையில் மேலும் விரிவு படுத்துவதற்கு முடியும் என சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. அதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கும், சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் இடையில் ஆராய்ச்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. ஆயுர்வேத மருத்துவ சபையின் நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக புதிய தேசிய மருத்துவ சபை சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துதல் (விடய இல. 24)

தேசிய மருத்துவ முறைமையின் நலன் கருதி 1961ம் ஆண்டு 31ம் இலக்க ஆயுர்வேத சட்டத்தில் 'ஆயுர்வேத மருத்துவ சபை' எனும் பகுதியினை அகற்றி, ஆயுர்வேத மருத்துவ சபையின் நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக புதிய தேசிய மருத்துவ சபை சட்;டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. 2018ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள Enterprise Sri Lanka நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சலுகை கடன் யோசனை திட்டத்தினை செயற்படுத்தல் (விடய இல. 27)

2018ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள Enterprise Sri Lanka நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சலுகை கடன் யோசனை திட்டத்தினை செயற்படுத்துவதற்காக 2018ம் ஆண்டில் 20,230 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போன்று 2018ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் பிரேரிக்கப்பட்டுள்ள Green Loan சலுகை கடன் திட்டத்தின் கீழ் பொலிதீன் பாவனைக்கு பதிலாக துரித கதியில் உக்கிச் செல்கின்ற மூலப்பொருட்களை உற்பத்தி செய்வதற்காக தேசிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கும், சுற்றுலாத்துறைக்கு சேவை வழங்குகின்ற சிறு அளவிலான ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் Homestay திட்டத்தின் கீழ் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்துள்ள வீட்டு உரிமையாளர்களுக்கும் நிதி வசதியளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்கடன் யோசனை முறையினை அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஊடாக செயற்படுத்துவது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

12.பானந்துரை பிரதேச செயலகத்தினை விரிவுபடுத்துவதற்காக இலங்கை மின்சார சபையிடத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப்படுகின்ற காணிக்கு பதிலாக மாற்று காணியொன்றை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 31)

பானந்துரை பிரதேச செயலகத்தினை விரிவுபடுத்துவதற்காக இலங்கை மின்சார சபையிடத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப்படுகின்ற காணிக்கு பதிலாக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தான 120 பேர்ச்சஸ் காணியினை குறித்தொதுக்குவதற்கும், அதற்காக பானந்துரை பட்டிய வடக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள 124 பேர்ச்சஸ் விசாலமான காணியினை இலவசமாக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பெற்றுக் கொடுப்பதற்குமாக பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. இலத்திரனியல் Phytosanitary Certificates களை வழங்கும் நியம வேலைத்திட்டமொன்றினை செயற்படுத்துதல் (விடய இல. 38)

தாவர மற்றும் தாவரத்துடன் தொடர்பான திரௌவியங்களை பரிமாற்றத்தினை முறைப்படுத்துவதனையும் பாதுகாப்பதனையும் சர்வதேச ரீதியில் விருத்தி செய்வதன் மூலம் இலங்கைக்கு புதிய சந்தை மற்றும் விற்பனை அவகாசங்கள் கிடைக்கின்றன. குறித்த இலத்திரனியல் சான்றிதழினை வழங்குவதன் மூலமே இந்நிலைமை ஏற்படுகின்றது. குறித்த வேலைத்திட்டத்தினை பரிட்சித்து பார்ப்பதற்காக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்நியம வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச தாவர பாதுகாப்பு ஒத்துழைப்பின் வழிகாட்டலின் கீழ் அவுஸ்திரேலியா கமத்தொழில் மற்றும் நீர் வளங்கள் திணைக்களத்தின் மூலம் அனுசரணை வழங்கப்படுகின்றது. இந்நியம வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கும், அது தொடர்பில் இலங்கை கமத்தொழில் திணைக்களம் மற்றும் அவுஸ்திரேலியாவின் கமத்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. திரைப்பட கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்காக திரைப்பட கூட்டுத்தாபன அறக்கட்டளையின் மூலம் பெற்றுக் கொடுக்கப்படுகின்ற ஓய்வூதிய கொடுப்பனவினை அதிகரித்தல் (விடய இல. 41)

திரைப்பட கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்காக திரைப்பட கூட்டுத்தாபன அறக்கட்டளையின் மூலம் பெற்றுக் கொடுக்கப்படுகின்ற ஓய்வூதிய கொடுப்பனவினை 5,000 ரூபா வரை அதிகரிப்பதற்கும், திரைப்பட கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் 163 பேருக்கு குறித்த கொடுப்பனவினை வழங்குவதற்கு ஏதுவான வகையில் திரைப்பட கூட்டுத்தாபன நிதியத்திற்கு 10 மில்லியன் ரூபா நிதியினை திறைசேரியில் இருந்து பெற்றுக் கொடுப்பதற்கும் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ ரன்ஜித் மத்தும பண்டார அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. வெல்லஸ்ஸ சுதந்திர போராட்டத்திற்கு 200 வருட பூர்த்தி கொண்டாட்டத்திற்கு சமாந்தரமாக மொனராகலை மாவட்டத்தினுள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் (விடய இல. 42)

வெல்லஸ்ஸ சுதந்திர போராட்டத்திற்கு 200 வருட பூர்த்தி கொண்டாட்டத்திற்கு சமாந்தரமாக மொனராகலை மாவட்டத்தினுள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ ரன்ஜித் மத்தும பண்டார அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த உரிய அமைச்சுக்களுக்கு 2018ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை பயன்படுத்தி குறித்த மாவட்டத்தில் குறித்த வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் மேலும் தீர்மானிக்கப்பட்டது.

16. உள்ளுராட்சி மன்ற சட்டத்தின் பிரதான விதிகளை திருத்தம் செய்தல் (விடய இல. 49)

நாட்டில் ஜனநாயக ஆட்சியினை உள்ளுராட்சி மன்றங்களில் நிலைநாட்டும் நோக்கில் சிபார்சுகளை முன்வைப்பதற்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களை உள்ளடக்கி, உரிய திருத்தங்களை மேற்கொள்வதற்காக சட்ட மூலம் ஒன்றை தயாரிப்பதற்காக சட்டமாதிபருக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்சூராட்சின மன்றங்கள் அமைச்சர் கௌரவ பைசர் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. மலையக புகையிரத வீதியில் போக்குவரத்துக்காக புகையிரத இயந்திரங்கள் 12 இனை கொள்முதல் செய்தல் (விடய இல. 60)

மலையக புகையிரத வீதியில் போக்குவரத்துக்காக புகையிரத இயந்திரங்கள் 12 இனை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் ஒரு இயந்திரம் 4.056 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அமெரிக்காவின் M/s General Electric Companyக்கு வழங்குவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 61)

2018ம் ஆண்டு பல்கலைக்கழங்களுக்கு புதிதாக சேர்த்துக் கொள்ளப்படுகின்ற மாணவர்களின் நன்மைக்கருதி பின்வரும் வகையில் பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• வவுனியா வளாகத்தின் வாசிகசாலை மற்றும் தகவல் தொழில்நுட்ப மத்திய நிலையத்துக்காக மூன்று மாடிகளைக் கொண்ட கட்டிடங்கள் 02 இனை நிர்மாணித்தல்.
• ருஹுணு பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடத்திற்காக மூன்று மாடிகளைக் கொண்ட விரிவுரை மண்டபம் ஒன்றை நிர்மாணித்தல்.
• அநுராதபுரம் பிக்குகள் பல்கலைக்கழகத்தின் பணியாளர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை அமைத்தல்.
• களனி பல்கலைக்கழகத்தின், பாலி மற்றும் பௌத்த கல்வி முதுமானி பட்ட நிறுவனத்துக்காக நான்கு மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றை நிர்மாணித்தல்.

19. அம்பாறை மாவட்ட பெரிய வைத்தியசாலையில் Stroke பிரிவொன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 64)

அம்பாறை மாவட்ட பெரிய வைத்தியசாலையில் ளுவசழமந பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தத்தினை, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 213.9 மில்லியன் மதிப்பீட்டு தொகைக்கு M/s Link Engineering (Pvt) Ltd. வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. இலங்கை இராணுவத்தினருக்கு அவசியமான 75,000 பூட் காலணிகள் சோடிகளை (Boot High Leg) கொள்முதல் செய்தல் (விடய இல. 71)

இலங்கை இராணுவத்தினருக்கு அவசியமான 75,000 பூட் காலணிகள் சோடிகளை (Boot High Leg) கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தினை, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 232 மில்லியன் மதிப்பீட்டு தொகைக்கு M/s Irosha International (Pvt) Ltd. வழங்குவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. மஹவையிலிருந்து ஓமந்தை வரையான புகையிரத வீதியினை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 72)

மஹவையிலிருந்து ஓமந்தை வரையான புகையிரத வீதியினை அபிவிருத்தி செய்வதற்காக தெரிவுசெய்யப்பட்ட அடிப்படை தகைமைகளை பூர்த்தி செய்துள்ள 03 நிறுவனங்களிடத்திலிரு;து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதனடிப்படையில், குறித்த வீதியினை மஹவ – அநுராதபுரம் மற்றும் அநுராதபுரம் - வவுனியா எனும் அடிப்படையில் இரு கட்டங்களாக துரித கதியில் பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

22. இலங்கை துரித திண்மக் கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக நிதியினை திரட்டிக் கொள்ளல் (விடய இல. 77)

பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு ஆகியவை இணைந்து முன்னெடுக்கின்ற இலங்கை துரித திண்மக் கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு 274 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அத்தொகையில் 115 மில்லியன் அமெரிக்;க டொலர்களை பெற்றுக் கொள்வது தொடர்பில் உலக வங்கியின் மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியுடன் கடன் ஒத்துழைப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

23. இலங்கையில் ஆங்கிள மொழிக் கல்வியினை விருத்தி செய்வதற்காக ஐக்கிய அமெரிக்காவின் சமாதான படையணி ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 78)

இலங்கையில் ஆங்கில மொழிக் கல்வியினை விருத்தி செய்வதற்காக ஐக்கிய அமெரிக்காவின் சமாதான படையணி ஒத்துழைப்பினை மீண்டும் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் கௌரவ திலக் மாரப்பன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

24. தற்போது ஏற்பட்டுள்ள மண்ணென்ணெய் தவறாகப் பயன்பாட்டினை தடுத்தல் (விடய இல. 79)

தற்போது ஏற்பட்டுள்ள மண்ணென்ணெய் தவறாகப் பயன்பாட்டினை தடுப்பதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை கவனத்திற் கொண்டு, சட்ட விரோதமாக எரிபொருள் கலப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அல்லது மண்ணென்ணெய் தொடர்பில் வேறு சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடும் மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் எரிபொருள் நிலையங்களின் முகவர் உரிமையான்மையினை இல்லாதொழிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ அர்ஜுன ரணதுங்க அவர்கள் இணைந்து முன்வைத்த அவர்களினால் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.