2018.01.16 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்


(இது அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் நேரடியாக பெறப்பட்ட தமிழ்மொழிபெயர்ப்பாகும்)
01. Smallholder Agribusiness Partnership நிகழ்ச்சித்திட்டம் (விடய இல. 05)
தமது விவசாய நிலங்களின் அபிவிருத்தி மற்றும் வணிக மட்டத்தில் குறித்த வியாபாரத்தினை பலப்படுத்துவதற்காக இளைஞர் விவசாயிகளுக்கு அவசியமான நிதி வசதிகளை வழங்குவது Smallholder Agribusiness Partnership நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான அம்சமாகும். அதனடிப்படையில் உற்பத்தி குழுக்கள், விவசாய குழுக்கள் மற்றும் இளைஞர் விவசாய உற்பத்தியாளர்களுக்கு அவசியமான நிதியுதவிகளை செய்து கொடுப்பதற்காக வேண்டி 6.5 சதவீத வருடாந்த வட்டி வீதத்தில் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கடன் வசதிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. இலங்கை புகையிரத திணைக்களத்துக்கு உரித்தான அனைத்து நிலங்களுக்காகவும் நில மதிப்பீடு மற்றும் சமூக பொருளாதார மதிப்பீடு என்பவற்றை செயற்படுத்தல் (விடய இல. 08)

புகையிரத திணைக்களத்துக்கு உரித்தான நிலங்களின் எல்லைகளை அளவிட்டு, தெளிவாக எல்லைகளை நிர்ணயித்து, முறையான வரைபடத்தில் உள்வாங்குவதற்கும், அதில் வசிப்பவர்களை இனங்காண்பதற்காக அனைத்து புகையிரத நிலங்களுக்காகவும் நில மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கும், புகையிரத நிலங்களை சட்டவிரோதமாக பிடித்துக் கொண்டு வசித்து வருகின்ற நபர்களை மீள குடியமர்த்துவதற்கும், குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள புகையிரத நிலங்களை முகாமைத்துவம் செய்வதனை முறைப்படுத்துவதற்காக புகையிரத திணைக்களத்துக்கு உரிய அனைத்து இடங்களும் உள்ளடங்கும் வகையில் சமூக – பொருளாதார மதிப்பீடு ஒன்றை மேற்கொள்வதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. இராஜதந்திர மற்றும் கடமைகளின் நிமித்தம் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் உரித்தான நபர்கள் வீசா அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக் கொள்வதில் இருந்து விடுவிப்பதற்காக இலங்கை மற்றும் டர்கிமினிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் செய்து கொள்ளப்படுகின்ற ஒப்பந்தம் (விடய இல. 14)

இராஜதந்திர மற்றும் கடமைகளின் நிமித்தம் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் உரித்தான நபர்கள் வீசா அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக் கொள்வதில் இருந்து விடுவிப்பதற்காக இலங்கை மற்றும் டர்கிமினிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் கௌரவ எஸ்.பி.நாவின்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. பெறுமதி சேர்த்து ஏற்றுமதி செய்வதற்காக வேண்டி பிரிஸ்டல் இழைகளை இறக்குமதி செய்தல் (விடய இல. 21)

தேங்காயுடன் தொடர்பான உற்பத்தியான பிரிஸ்டல் இழைகள் மெட்ரிக் தொன் 8,000க்கும் 15,000 இடைப்பட்ட தொகை 20 நாடுகளில் இருந்து வருடாந்தம் இறக்குமதி செய்யப்படுவதுடன், அதன் மூலம் குறிப்பிடத்தக்களவு அந்நிய செலாவணி எமது நாட்டுக்கு கிடைக்கின்றது. தேசிய தென்னை பயிர் செய்கை சாதாரண நிலைமைக்கு திரும்பும் வரை, சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு மற்றும் தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் சிபாரிசுகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு பெறுமதி சேர்த்து ஏற்றுமதி செய்வதற்காக மூலப்பொருளாக இந்தியாவில் இருந்து பிரிஸ்டல் இழைகளை இறக்குமதி செய்வது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கௌரவ நவின் திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. இலங்கை மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையில் விவசாய ஒத்துழைப்புக்கள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 22)

இலங்கை மற்றும் துர்க்கி ஆகிய நாடுகளுக்கு இடையில் விவசாய ஒத்துழைப்புக்கள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையிலிருந்து துருக்கி குடியரசுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற தேயிலை தொகையினை அதிகரிப்பது தொடர்பில் இலங்கை தேயிலை சபையின் மூலம் விசேட ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடப்பட உள்ளதாக அமைச்சரவையின் கவனத்திற் கொள்ளப்பட்டது.

06. இலங்கையின் பிரதான பழவகை பயிர்களின் உற்பத்தியினை அதிகரித்தல், பெறுமதி சேர்த்து விருத்தி செய்தல் மற்றும் வணிகமயமாக்கலுக்காக தொழில்நுட்ப உதவியினை பெற்றுக் கொள்ளல் (விடய இல.23)

வாழை, அன்னாசி மற்றும் மாம்பழம் ஆகிய பழவகை பயிர்களை இலக்காகக் கொண்டு அதன் உற்பத்தி, தரம் மற்றும் பலன் என்பவற்றை அதிகரிப்பதற்கும், பெறுமதி சேர்ப்பதனை விருத்தி செய்வதற்கும், பழவகை பூங்காக்கள் மற்றும் தயாரிப்பு நிலையங்களுக்காக முதலீடுகளை கவர்ந்து கொள்வதற்கு ஏதுவான வகையில் அரச-தனியார் இணை செயன்முறையினை விருத்தி செய்வதற்குமான வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்குமான தொழில்நுட்ப உதவியினை பெற்றுக் கொடுப்பதற்கு மக்கள் சீன குடியரசின் தெற்கு – தெற்கு ஒத்துழைப்பு (South – South Cooperarion) அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், வாழை, அன்னாசி மற்றும் மாம்பழம் ஆகிய பழங்கள் தொடர்பிலான வேறுபட்ட மூன்று வேலைத்திட்டங்கள் வௌவேறு மாவட்டங்களை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாத்துறைக்கு பாரிய பங்களிப்பினை செலுத்துகின்ற மேற்கூறப்பட்ட வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம், சீன அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றுக்கு இடையில் முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. சந்தேகநபர் ஒருவர்/ குற்றவாளி ஒருவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் அவசியத்தினை இணங்கண்ட சரியான சந்தர்ப்பங்களில் வெளியேற்றுவதற்காக 1979ம் ஆண்டு 15ம் இலக்க குற்றவியல் வழக்குகள் கட்டளைகள் சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 26)

சந்தேகநபர் ஒருவர்ஃ குற்றவாளி ஒருவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் அவசியத்தினை இணங்கண்ட சரியான சந்தர்ப்பங்களில் வெளியேற்றுவதற்காக 1979ம் ஆண்டு 15ம் இலக்க குற்றவியல் வழக்குகள் கட்டளைகள் சட்டத்தினை திருத்தம் செய்வது தொடர்பில் நீதியமைச்சர் கௌரவ தலதா அதுகோரல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

08. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கௌரவ மாகாண சபை உறுப்பினர்களுக்காக வழங்கப்படுகின்ற தபால் வசதிகளை அதிகரித்தல் (விடய இல. 231)

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற வருடாந்த இலவச தபால் வசதிகளை 175,000 ரூபாவிலிருந்து 350,000 ரூபா வரையிலும், கௌரவ மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற வருடாந்த இலவச தபால் வசதிகளை 24,000 ரூபாவிலிருந்து 48,000 ரூபா வரையிலும் அதிகரிப்பது தொடர்பில் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் கௌரவ எம்.எச்.ஏ.ஹலீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

09. பொலிஸ் பயிற்சி மற்றும் விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சி ஆகிய பிரிவுகளில் ஒத்துழைப்பினை விருத்தி செய்து கொள்வதற்காக வியட்நாம் பொதுமக்கள் பொலிஸ் பயிற்சி நிறுவனம் மற்றும் இலங்கையின் தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை ஏற்படுத்தல் (விடய இல. 35)

பொலிஸ் பயிற்சி மற்றும் விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சி ஆகிய பிரிவுகளில் ஒத்துழைப்பினை விருத்தி செய்து கொள்வதற்காக வியட்நாம் பொதுமக்கள் பொலிஸ் பயிற்சி நிறுவனம் மற்றும் இலங்கையின் தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. அரச – தனியார் இணைப்பின் மூலம் கொழும்பு, கிரேன்ட் ஒரியன்டல் ஹோட்டலினை விருத்தி செய்தல் (விடய இல. 36)

அரச – தனியார் இணைப்பின் மூலம் கொழும்பு, கிரேன்ட் ஒரியன்டல் ஹோட்டலினை அதிசொகுசு ஹோட்டல் ஒன்றாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக சாத்தியவள ஆய்வினை மேற்கொள்வதற்கு சிங்கப்பூரின் HPL Hotels and Resorts நிறுவனத்தின் மூலம் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த யோசனைகளை மதிப்பிடுவதற்காக வேலைத்திட்ட குழுவொன்றை நியமிப்பதற்கும், அரசாங்கத்தின் வழிகாட்டல்களுக்கு அமைவாக இது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்கள், அரச வியாபார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ கபீர் ஹாஷpம் அவர்கள் மற்றும் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வியாபாரங்கள் அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்கள் ஆகியோர் முன்வைத்த ஒன்றிணைந்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. அகுரேகொடை, இராணுவ தலைமையகத்தில் பிரதான நீர் வழங்கல் பிரிவினை ஸ்தாபித்தல் (விடய இல. 39)

அகுரேகொடை, இராணுவ தலைமையகத்தில் பிரதான நீர் வழங்கல் பிரிவினை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 494.48 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் M/s Frigi Engineering Service (Pvt) Ltd. கம்பனிக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

12. விமான பயணங்கள் தொடர்பான தகவல்களை முகாமைத்துவம் செய்வதற்கான பிரிவொன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 40)

விமான பயணங்கள் தொடர்பான தகவல்களை முகாமைத்துவம் செய்வதற்கான பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்காக பிரான்ஸ் நிறுவனம் ஒன்றும் கனடா நிறுவனம் ஒன்றும் தமது யோசனைகளை முன்வைத்துள்ளது. விலைமனுக்களை மதிப்பிடுகின்ற தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு மற்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் குறித்த ஒப்பந்தத்தினை 3.3 யூரோ மில்லியன்கள் மற்றும் 65 மில்லியன் ரூபா இணைந்த சமமான தொகைக்கு பிரான்சின் ஆஃள வுhயடநள யுசை ளுலளவநஅள ளு.யு.ளு. கம்பனிக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. நகர பொது பயணிகள் போக்குவரத்து சேவையினை விருத்தி செய்வதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்காக இலத்திரனியல் பேரூந்துகள் 50 கொள்வனவு செய்தல் (விடய இல. 41)

நகர பொது பயணிகள் போக்குவரத்து சேவையினை விருத்தி செய்வதற்காக Bus Rapid Transit System ஒன்றினை கொழும்பு நகரில் ஸ்தாபிப்பதற்கும், இதற்காக சொகுசு இலத்திரனியல் பேரூந்துகள் 50இனை இலங்கை போக்குவரத்து சபைக்காக கொள்வனவு செய்தற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல் - கட்டம் - 02 (விடய இல. 43)

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல் - கட்டம் - 02 இனை செயற்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை 2018ம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கும், அதற்கான தகுந்த ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்வதற்காக விலைமனுக்களை கோருவதற்கும் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷமன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. மெதிகிரிய நீர் வழங்கல் செயன்முறையின் 03ம் கட்டத்தினை செயற்படுத்தல் (விடய இல. 44)

மெதிகிரிய நீர் வழங்கல் செயன்முறையின் 03ம் கட்டத்தின் கீழ் பகிர்ந்தளிக்கும் பிரிவிற்காக திட்டத்தினை தயாரித்தல் மற்றும் நிர்மானிப்பதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 1,230 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு M/s Squire Mech Engineering (Pvt) Ltd. கம்பனிக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் வேலைத்திட்டத்தின் கட்டம் 01 இனை செயற்படுத்தல் (விடய இல. 45)

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் வேலைத்திட்டத்தின் கட்டம் 01 இற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்திடம் இருந்து கிடைக்கின்ற 6.17 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் தேசிய நிதியத்திலிருந்து பெறப்படுகின்ற 2,349 மில்லியன் நிதியினையும் சேர்த்து வருகின்ற தொகைக்கு M/s Access Engineering PLC கம்பனிக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. புதிய நீதிமன்ற கட்டிடம் ஒன்றை நிர்மாணித்தல் (விடய இல. 47)

2018ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை உபயோகித்து வெலிமடை, தெல்தெனிய, பூகோடை, கந்தளாய் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள நீதிமன்ற தொகுதிகளுக்காக வேண்டி புதிய கட்டிடங்களை நிர்மானிப்பது தொடர்பில் நீதியமைச்சர் கௌரவ தலதா அதுகோரல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. 2019ம் ஆண்டு இலங்கையினால் தலைமைத்தாங்குவதற்கு ஏற்பாடாகியுள்ள CITES CoP, 18 ஆவது மாநாட்டினை முன்னின்று நடாத்துவதற்கான அரச ஒப்பந்தம் (Host Country Agreement) (விடய இல. 53)

2019ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதியிலிருந்து 2019ம் ஆண்டு ஜுன் மாதம் 03ம் திகதி வரை CITES CoP, 18 ஆவது மாநாடானது இலங்கையில் இடம்பெறவுள்ளதுடன், அதில் தலைமைத்தாங்குவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கும் Convention on International Trade in EndangeredSpecies of Wild Fauna and Flora – CITES இடையில் ர்ழHost Country Agreement ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. செயற்றிறனான கடன் முகாமைத்துவ சட்டமூலம் (விடய இல. 56)

தயாரிக்கப்பட்டுள்ள செயற்றிறனான கடன் முகாமைத்துவ சட்டமூலத்தினை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி அதனை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 57)

பல்வேறு நன்மைகளை உள்ளடக்கிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரதும் சிபார்சுகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள இறுதி சட்டமூலத்திற்கு சட்டமாதிபரின் சான்றுப்படுத்தலினை பெற்றுக் கொள்வதற்கு உட்பட்டு, இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு இலங்கை சார்பில் கைச்சாத்திடுவது தொடர்பில் அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. தகவல் மற்றும் தொடர்பாடல் தொடர்பில் இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்படுகின்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 59)

தகவல் மற்றும் தொடர்பாடல் தொடர்பில் இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்படுகின்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

22. இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மிகவும் சிக்கலான நிதிக்குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்குகளை துரித கதியில் விசாரிப்பதற்காக விசேட மேல் நீதிமன்றமொன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 60)

சட்டத்தில நிச்சயித்துக் குறிப்பிடப்பட்டுள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மிகவும் சிக்கலான நிதிக்குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்குகளை சட்டமாதிபர் அல்லது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணைகளை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரால் முன்மொழியப்படுகின்ற மேல் நீதிமன்றங்களுக்கு ஒப்படைக்க முடியும். இச்சட்டமூலம் தற்போது சட்டமாதிபரின் மேற்பார்வைக்காக முன்வைக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் கௌரவ தலதா அதுகோரல அவர்களினால் முன்வைக்கப்பட்ட குறித்த தகவல்கள் தொடர்பில் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டது.