2017.11.14 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்


01. அபாயகரமான கழிவுகள் மற்றும் இரசாயன பொருட்களை முகாமைத்துவம் செய்வதற்காக முறையான செயன்முறையொன்றை தயாரித்தல் (விடய இல. 08)

கழிவு முகாமைத்துவம் தொடர்பான அனைத்து தரப்பினரையும் ஒன்று சேர்த்துக் கொண்டு இலங்கையினுள் அபாயகரமான கழிவுகள் மற்றும் இரசாயன பொருட்களை முகாமைத்துவம் செய்வதற்கான தேசிய கொள்கை மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு உகந்த செயன்முறை ஆகியவற்றை தயாரிப்பது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. மட்டக்களப்பு விமான நிலையத்தில் விமானம் செலுத்துவது தொடர்பான பயிற்சி பாடசாலை ஒன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 10)

சிவில் விமான சேவை தொடர்பில் சாதகமான பல விடயங்களை கொண்டுள்ள மட்டக்களப்பு விமான நிலையத்தில் தேசிய விமான சேவைகள் தொடர்பில் அக்கறைக் கொண்டு தரப்பினரிடத்தில் இருந்து யோசனைகள் கோரப்பட்டு இருந்தன.

அதனடிப்படையில், மட்டக்களப்பு விமான நிலையத்தில் தேசிய விமான சேவைகள் கட்டுப்பாட்டு மற்றும் விமானம் செலுத்துவது தொடர்பான பயிற்சி பாடசாலை ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் M/s Skurai Aviation நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை செயற்படுத்துவது தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. மலைநாட்டு புகையிரத மார்க்கத்தில் காணப்படுகின்ற பள்ளத்தாக்குகள் மற்றும் மண்சரிவிடங்களை மறுசீரமைப்பு செய்தல் (விடய இல. 13)

மலைநாட்டு புகையிரத மார்க்கத்தின் ரம்புக்கண மற்றும் பதுளை ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் உள்ள பிரதேசத்துக்கு முன்னுரிமை வழங்கி மண்சரிவு அபாயம் கொண்ட இடங்கள் மற்றும் நிலையற்ற பள்ளத்தாக்குகள் மறுசீரமைப்பு மற்றும் வடிகால் அமைப்புகளை விருத்தி செய்தல் ஆகிய முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை, அடுத்து வருகின்ற 05 வருட காலப்பரிவினுள், தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு மற்றும் இலங்கை புகையிரத திணைக்களத்துடன் இணைந்து செயற்படுத்துவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல் (விடய இல. 14)

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 07 மற்றும் 08ம் திகதிகளில் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள விஞ்ஞான மாநாட்டின் இடைநடுவில் கைச்சாத்திடுவது தொடர்பில் விஞ்ஞானம், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. செலசினெ தொலைக்காட்சி நிறுவனத்தினை அரசாங்கத்துக்கு உரித்தான வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாக ஸ்தாபித்தல் (விடய இல. 15)

ஏனைய போட்டித்தன்மைமிக்க நிறுவனங்களுடன் போட்டியிடுவதற்கு உகந்த வகையில் 2007ம் ஆண்டு 07ம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் அரசாங்கத்துக்கு பூரண உரித்தான்மையுடன் வரையறுக்கப்பட்ட பிணைக்கொண்ட தனியார் கம்பனியாக செலசினெ தொலைக்காட்சி நிறுவனத்தினை ஸ்தாபிப்பது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. இலங்கை ஊடகவியல் பயிற்சி நிறுவனத்தினை விருத்தி செய்தல் (விடய இல. 16)

இலங்கையின் ஊடகத்துறைக்கு அவசியமான தொழில் பயிற்சிகளை வழங்கும் தேசிய நிறுவனமாக இலங்கை ஊடகவியல் பயிற்சி நிறுவனத்தினை உருவாக்குவது தொடர்பிலான 03 வருட திட்டமொன்றை செயற்படுத்துவது தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் நிறுவனத்தின் அடிப்படை வசதிகளை விருத்தி செய்வதற்கும், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கும் இந்நிறுவனத்தின் பயிற்சி நிகழ்ச்சிகளை விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு அவசியமான நிதியினை திரட்டிக் கொள்வது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. பௌத்த விவகாரங்கள் திணைக்களத்தின் 'பௌத்த ஜயந்தி' புத்தகநிலையத்தின் விற்பனை நடவடிக்கைகளை விருத்தி செய்தல் (விடய இல. 21)

பௌத்த மதம் தொடர்பில் கற்கின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்கள் மற்றும் வாசகர்களின் இலகுத்தன்மையினை கவனத்திற் கொண்டு புத்தகங்களை சலுகை விலையில் விற்பனை செய்வதன் அவசியத்தை கவனத்திற் கொண்டு, அங்கு விற்பனை செய்கின்ற சில புத்தகங்களுக்கு விலைக்கழிவினை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் பௌத்த மத விவகார அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. நடுத்தர வருமானம் கொண்ட வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான துரித வேலைத்திட்டம் (விடய இல. 23)

நடுத்தர வருமானம் கொண்ட வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான துரித வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு பொருத்தம் என இனங்காணப்பட்டுள்ள அக்மீமன, குருநாகல், புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் ஆணமடுவ ஆகிய பிரதேசங்களில் காணப்படுகின்ற அரசுக்கு உரித்தான காணித்துண்டுகளை, தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு விடுவிப்பது தொடர்பில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. அரச தொழிற்சாலை திணைக்களத்தின் செயற்றிறனை அதிகரித்தல் (விடய இல. 24)

அரச தொழிற்சாலை திணைக்களத்தின் செயற்றிறன் மற்றும் உற்பத்தி அளவினை அதிகரிக்கும் நோக்கில் உயரத்தில் பொருத்தப்படுகின்ற நவீன 08 டொன் எடைக்கொண்ட திணைக்களத்தின் தேவையின் நிமித்தம் கொள்வனவு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், அத்திணைக்களத்தின் நிறுவன கட்டமைப்பினை கட்டியெழுப்புவதற்காக வளங்களை திட்டமிடுவதற்கான மென்பொருளொன்றினை அறிமுகப்படுத்துவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியினை ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. காணி அபிவிருத்தி கட்டளைகள் சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 25)

காலத்துக்கு ஏற்றாற் போல் மிகவும் சரலமான நிபந்தனைகளை உள்ளடக்கிய கொடுப்பனவு அட்டையொன்றினை அறிமுகப்படுத்துதல், கொடுப்பனவு அட்டையின் கீழ் வசிப்பிற்காக வழங்கப்படுகின்ற காணிகளை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கு வாய்ப்புக்களை செய்து கொடுத்தல், அடுத்த உரிமையினை குறிப்பிடாது கொடுப்பனவு அட்டை உரித்தான நபர் ஒருவர் மரணிக்கும் போது அவருக்கு உரித்தான கொடுப்பனவு அட்டை சொத்தின் உரிமையினை சாதாரண சிவில் சட்டத்தின் கீழ் கிடைக்கும் வகையிலான திருத்தங்களை உட்படுத்தி காணி அபிவிருத்தி கட்டளைகள் சட்டத்தினை திருத்தம் செய்வதற்காக சட்டமாதிபர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கு காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. பொதுநலவாய நாடுகளின் உள்ளூராட்சி மன்றங்கள் அமைப்பின் வருடாந்த கூட்டத்தொடர் மற்றும் மாநாட்டினை 2019ம் ஆண்டில் இலங்கையில் நடாத்துதல் (விடய இல. 26)

பொதுநலவாய நாடுகளின் உள்ளூராட்சி மன்றங்கள் அமைப்பின் வருடாந்த கூட்டத்தொடர் மற்றும் மாநாட்டினை 2019ம் ஆண்டில் இலங்கையில் நடாத்துவதற்கான யோசனைகளை, இவ்வருடம் நவம்பர் மாதம் 21-24ம் திகதி வரை மோல்டா இராஜ்யத்தில் நடக்கின்ற அவ்வமைப்பின் மாநாட்டில் முன்வைப்பது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் கௌரவ பைசர் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. புனர்வாழ்வு ஆணையாளர் நாயக பணியகத்தினை சட்டமாக்குவதற்காக சட்ட மூலம் ஒன்றை தயாரித்தல் (விடய இல. 27)

நீதிமன்ற கட்டளைகளின் அடிப்படையில் புனர்வாழ்வளிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்ற முறைத்தவறிச் சென்ற போர்வீரர்கள், தீவிரவாத அல்லது அழிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் மற்றும் விச ஒளடதங்களுக்கு அடிமையானவர்கள் போன்றவர்களை புனர்வாழ்வளித்து, அவர்களை சமூகமயமாக்குவதற்கு மற்றும் அவர்கள் தொடர்பான பின்னூட்டல்களை மேற்கொள்வதற்கு ஏதுவான வகையில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயக பணியகத்தினை பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் முறையான முறையில் ஸ்தாபிப்பது தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம். சுவாமிநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. சபுகஸ்கந்தை மின்னுற்பத்தி நிலையங்களுக்காக 2017/2018ம் ஆண்டுக்கு அவசியமான Lubricating Oil இனை கொள்வனவு செய்தல் (விடய இல. 36)

சபுகஸ்கந்தை மின்னுற்பத்தி நிலையங்களுக்காக 2017ஃ2018ம் ஆண்டுக்கு அவசியமான 1.1 மில்லியன் லீடர் Lubricating Oil இனை கொள்வனவு செய்வதற்கான டென்டரினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் ஒரு லீடர் Lubricating Oil இனை 234.43 ரூபா வீதம் M/s Chevron Lanka PLC நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்கள் மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க அவர்கள் ஆகியோர் இணைந்து முன்வைத்த ஒன்றிணைந்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. புத்தளம் அனல் மின்னுற்பத்தி நிலையத்தில் உற்பத்தியாகும் நிலக்கரி சாம்பல்களை வெளியேற்றுதல் (விடய இல. 39)

புத்தளம் அனல் மின்னுற்பத்தி நிலையத்தில் உற்பத்தியாகும் நிலக்கரி சாம்பல்களுக்கு அதிக கேள்வி நிலவுகின்றது. அதனால் அம்மின்னுற்பத்தி நிலையத்தில் சேமிக்கப்பட்டு காணப்படுகின்ற சாம்பல்களினை வெளியேற்றுவதற்காக அரசாங்க டென்டர் செயன்முறையின் கீழ் கேள்வி மனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதனடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ள கேள்வி மனுக்களில் பொருத்தமான நிறுவனம் ஒன்றுக்கு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் மற்றும் கொள்முதல் மேன்முறையீட்டு சபையின் சிபார்சின் பெயரில் குறித்த சாம்பல்களை வெளியேற்றுவதற்கான அவகாசத்தை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஏற்படுத்துவதற்கான உபாயமுறைகளை தயாரிப்பதற்கான ஆலோசனை நிறுவனம் ஒன்றை தெரிவு செய்தல் (விடய இல. 41)

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஏற்படுத்துவதற்கான உபாயமுறைகளை தயாரிப்பதற்கான ஆலோசனை நிறுவனம் ஒன்றை தெரிவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் மற்றும் கலந்துரையாடல் ஒப்புதல் குழுவின் பெயரில் 1.425 மில்லியன் அமெரிக்க டொலர் தொகைக்கு McKinsey & Company நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் கௌரவ ஹரின் பிரனாந்து அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. மகாவலி 'ஈ' (E) வலயத்தினை இலங்கை மகாவலி அதிகார சபையின் விசேட அதிகார பிரதேசமாக பிரகடனப்படுத்தல் (விடய இல. 42)

மகாவலி 'ஈ' (E) வலயத்தில் அபிவிருத்தி திட்டமொன்றினை செயற்படுத்துவதற்கு ஏதுவான வகையில் அங்கு அபிவிருத்தி மற்றும் நிர்வாக அதிகாரத்தினை இலங்கை மகாவலி அதிகாரசபைக்கு குறித்தளிப்பது பொருத்தம் என இனங்காணப்பட்டுள்ளது. அதற்காக உரிய வன ஜீவராசிகள் வனங்களின் எல்லைகளை மீண்டும் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

அதனடிப்படையில் மகாவலி 'ஈ' (நு) வலயத்தினை இலங்கை மகாவலி அதிகார சபையின் விசேட அதிகார பிரதேசமாக வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் பிரகடனப்படுத்துவது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்கள் ஆகியோர் இணைந்து முன்வைத்த ஒன்றிணைந்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. மகாவலி நீர் பாதுகாப்பு மற்றும் முதலீட்டு வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை செயற்படுத்துவதற்காக கடன் உதவிகளை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 43)

மகாவலி நீர் பாதுகாப்பு மற்றும் முதலீட்டு வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை செயற்படுத்துவதற்காக முழு முதலீடு 242 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அதில் 32 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பங்களிப்பினை இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ளது. மேலதிக 210 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து கடனாக பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதனடிப்படையில் அக்கடன் தொகையினை பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கலந்தாலோசித்து, கடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. குற்றங்களை தடுப்பதற்கு உரிய காரணங்களில் புரிந்துணர்வின் மூலம் சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வெளியிடுவது தொடர்பில் சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 46)

குற்றங்களை தடுப்பதற்கு உரிய காரணங்களில் புரிந்துணர்வின் மூலம் சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வெளியிடுவது தொடர்பில் சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு 2017ம் ஆண்டு ஜுன் மாதம் 13ம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் இரு நாட்டு அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வெளியிடப்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிற்கு வருவதற்கும், அதனை சில வருடங்கள் செயற்படுத்தியதன் பின்னர் அது தொடர்பில் இரு நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் நீதி அமைச்சர் கௌரவ தலதா அதுகோரல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. அரச மற்றும் தனியார் ஒத்துழைப்பின் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விருத்தி செய்வதற்குரிய கைச்சாதிடப்பட்டுள்ள சலுகை ஒப்பந்தத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 48)

அரச மற்றும் தனியார் ஒத்துழைப்பின் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விருத்தி செய்வது தொடர்பில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பல 2017-07-29ம் திகதி சலுகை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. அச்சலுகை ஒப்பந்தத்தின் விதப்புரைகளுக்கு அமைய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட நாளிலிருந்து 180 நாட்களுக்குள் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை நிபந்தனைகளை குறித்த தரப்பினர் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதுடன், அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒப்பந்தத்தின் 4.2 விதப்புரையின் அடிப்படையில் அடிப்படை நிபந்தனைகளை பூர்த்தி செய்ததன் பின்னர் CM Port அல்லது அதனுடன் இணைந்த நிறுவனத்தின் மூலம் தமது 'முதலீட்டு பெறுமதியினை' இலங்கை அரசாங்கத்துக்கு பின்வரும் அடிப்படையில் செலுத்த வேண்டும்.

1. பிணை வைப்பாக 5 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையினை ஏற்கனசே விசேட கணக்கொன்றில் வைப்பிலிடப்பட்டுள்ளதுடன், ஒப்பந்தம் செயற்படுத்தப்படும் நாளிலிருந்து அத்தொகையானது இலங்கை துறைமுக அதிகார சபைக்கு மாற்றப்பட வேண்டும்.

2. ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் திகதியிலிருந்து 01 மாத காலத்தினுள் பிணை வைப்பானது குறைக்கப்பட்டதன் பின்னர் வரும் முதலீட்டு பெறுமதியில் 10% இனை (தவனை 01) செலுத்த வேண்டும்.

3. ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் திகதியிலிருந்து 03 மாத காலத்தினுள் முதலீட்டு பெறுமதியில் 30% இனை (தவனை 02) செலுத்த வேண்டும்.

4. ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் திகதியிலிருந்து 06 மாத காலத்தினுள் முதலீட்டு பெறுமதியில் 60% இனை (தவனை 03) செலுத்த வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பெயரில் CM Port இன் மூலம் ' முதலீட்டு பெறுமதியினை' செலுத்தும் திகதியினை முன்னோக்கி கொண்டு வருவதற்கும், ஒப்பந்தம் செயற்படுத்தப்படும் ஆரம்ப திகதியில் செலுத்தப்படும் தொகையினை அதிகரிப்பதற்கும் கீழ்க்காணும் அடிப்படையில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. ஒப்பந்தம் செயற்படுத்தப்படும் தினத்தில் பிணை வைப்பினை கழித்து வரும் முதலீட்டு பெறுமதியில் 30% இனை செலுத்துதல் (தவணை 01).

2. ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் திகதியிலிருந்து 01 மாத காலத்தினுள் பிணை வைப்பானது குறைக்கப்பட்டதன் பின்னர் வரும் முதலீட்டு பெறுமதியில் 10% இனை (தவனை 02) செலுத்த வேண்டும்.

3. ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் திகதியிலிருந்து 06 மாத காலத்தினுள் முதலீட்டு பெறுமதியில் 60% இனை (தவனை 03) செலுத்த வேண்டும்.

அதனடிப்படையில் மேற்குறிப்பிடப்பட்ட வகையில் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு ஏதுவான வகையில் சலுகை ஒப்பந்தத்தின் உரிய உறுப்புரைகளை திருத்தம் செய்வதற்கும், அதற்காக மேலதிக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கும் துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. சித்திரவதை செய்தல் மற்றும் வேறு கொடூர, மனிதாபிமானமற்ற அல்லது அவமானமான கவனிப்புகளுக்கு உள்ளாக்குதல் அல்லது தண்டனைகளுக்கு எதிரான கூட்டின் கீழ் காணப்படுகின்ற Optional Protocol இல் இணைதல் (விடய இல. 49)

சித்திரவதை செய்தல் மற்றும் வேறு கொடூர, மனிதாபிமானமற்ற அல்லது அவமானமான கவனிப்புகளுக்கு உள்ளாக்குதல் அல்லது தண்டனைகளுக்கு எதிரான கூட்டில் இலங்கை 1984ம் ஆண்டு கைச்சாத்திட்டதுடன், 1994ம் ஆண்டு அக்கூட்டில் உறுப்புரைகளை இந்நாட்டு சட்டத்தின் மூலம் வலுப்படுத்தியது.

சித்திரவதை செய்தல் மற்றும் வேறு கொடூர, மனிதாபிமானமற்ற அல்லது அவமானமான கவனிப்புகளுக்கு உள்ளாக்குதல் அல்லது தண்டனைகளுக்கு எதிரான கூட்டின் கீழ் காணப்படுகின்ற Optional Protocol இல் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கும், அவ்விணைப்பின் அடிப்படையில் தடுப்பு முகாம்களை மேற்பார்வை செய்வதற்கும், அதன் வசதிகளை மேம்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் கௌரவ திலக் மாரப்பன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. 2017ம் ஆண்டு நவம்பர் மாதத்தின் ஆரம்ப வாரத்தில் ஏற்பட்ட பெட்ரோல் தட்டுப்பாடு தொடர்பில் பரிசீலனை செய்வது தொடர்பில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை (விடய இல. 50)

2017ம் ஆண்டு நவம்பர் மாதத்தின் ஆரம்ப வாரத்தில் நிலவிய பெட்ரோல் தட்டுப்பாடு தொடர்பில் பரிசீலனை செய்வது தொடர்பில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கையினை அக்குழுவின் தலைவர் கலாநிதி சரத் அமுணுகம அவர்களினால் அமைச்சரவையில் முன்வைத்தார்.

பெற்றோலிய வளங்களை மொத்தமாக களஞ்சியப்படுத்தும் செயன்முறையில் சில காலங்களாக நிலவிவருகின்ற மோசமான முகாமைத்துவமே குறித்த பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு அடிப்படை காரணமாக இனங்காணப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையொன்று ஏற்படுவதற்கு சரியாக பொறுப்பு கூறவேண்டிய அதிகாரிகளை இனங்காண்பதற்காக அது தொடர்பில் தொழில்நுட்ப அறிவு கொண்ட அதிகாரிகள் மூவர் அடங்கிய பரிசீலனை குழுவொன்றை நியமித்து அறிக்கையொன்றை பெற்றுக் கொள்வது உகந்தது எனவும் அதன் மூலம் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இவ்வாறான நிலைமையொன்று எதிர்காலத்தில் ஏற்படுவதை தடுப்பதற்காக மேலதிக களஞ்சியசாலையொன்றை ஸ்தாபித்தல், நவீன மொத்த எரிபொருள் தொகையினை முகாமைத்துவம் செய்யும் முறையினை பின்பற்றுதல் போன்ற சிபார்சுகளையும் அக்குழு முன்வைத்துள்ளது. இக்குழுவின் சிபார்சின் பெயரில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.