சீர்குலைந்திருந்த எரிபொருள் விநியோகம் இன்று பிற்பகல் வழமை நிலைமைக்கு திரும்பும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.


அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை துணைப்பேச்சாளர்களான டொக்டர் ராஜித சேனாரத்ன மற்றும் தயாசிரி ஜயசேகர ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக அரசாங்கம் பொது மக்களின் நலனைக்கருத்திற்கொண்டு மேற்கொண்டுள்ள அத்தியாவசிய சேவைகள் தொடர்பான சட்டத்தை, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோர் படித்துப்பார்த்து செயற்படவேண்டும் என்றும்துணைப்பேச்சாளர் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

வேலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் தொடர்பில், அரசாங்கம் அத்தியாவசிய சேவையாக எரிபொருள் விநியோககத்தை அறிவித்துள்ள து. குறித்து விடுத்துள்ள அறிவிப்பின் கீழ் ஊழியர்களின் நிலைமை குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டகேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

பொதுமக்களின் அத்தியாவசிய சேவையொன்றை அரசாங்கம் பிரகடனப்படுத்டுத்தும் போது கடமைக்கு திரும்பாதபட்சத்தில் அவ்வாறான ஊழியர் ஒருவர் கடமையிலிருந்து விலகிச்சென்றதாக கருதப்படுவார் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

செய்தியாளர்: வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோரின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

அமைச்சர் ராஜித சேனாரத்ன: இது வெறுமனே அரசியல் கோரிக்கைகளே ஆகும். இதில் ஊழியர்களின் நலன்களை குறித்த எந்த கோரிக்கையும் இல்லை. ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் அரசாங்கமே தீர்மானிக்கவேண்டும். பாராளுமன்றம் இது குறித்து முடிவுகளை மேற்கொள்ளவேண்டும். இரவில் பசில் ராஜபக்ஷவின் வீட்டில் சாப்பிட்டுவிட்டு காலையில் எழுந்து இவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்கின்றனர். அதற்கு அரசாங்கம் செவிசாய்க்க முடியாது.

செய்தியாளர்: தனியார் துறையினருக்கு எரிபொருள் விநியோகத்திற்காக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் அவர்களின் நிலை என்ன?

அமைச்சர் ராஜித சேனாரத்ன :அவர்களின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்படும். புதியவர்களுக்கு அவை வழங்கப்படும் . விநியோக நடவடிக்கையை வழங்க பலர் காத்திருக்கின்றனர்.

அமைச்சரவை துணைப்பேச்சாளர்களான: டொக்டர் ராஜித சேனாரத்ன , கயந்த கருணாதிலக மற்றும் தயசிறி ஜயசேகர : ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான ஒப்பந்த விடயம் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. அரசாங்கம் கொண்டுள்ள தீர்மானம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும். அதற்கமைவாக இந்த விடயம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விவாதம் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

இதற்கு மாற்று சிறந்த ஆலோசனைகள் முன்வைக்கப்படுமாயின் அதனை கருத்தில் கொள்ளப்படவேண்டும் என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடாகும். அவ்வாறான ஆலோசனைகளை நாம் ஏற்றுக்கொள்வோம்.

செய்தியாளர் : பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கும், 1980ம் ஆண்டு ஜுலை வேலைநிறுத்த நிலைமை ஏற்படுமா?

அமைச்சர் ராஜித சேனாரத்ன :ஜுலை வேலை நிறுத்தத்தின் போது அத்தியாவசிய சேவை பிரகடனப்படுத்தப்படவில்லை. அதுவேறு இது வேறு. அந்தநேரத்தில் அதற்கெதிராக நானும் குரல் கொடுத்தேன். தற்பொழுது அத்தியாவசிய சேவையாக எரிபொருள் சேவையை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இதனை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோர் கவனத்தில் கொள்ளவேண்டும்.

செய்தியாளர்: இராணுவத்தரப்பில் இது குறித்து என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன: எரிபொருள் விநியோகம் சீர்குலைந்தமையினால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த விநியோகத்தினை சீர்செய்வதற்கு அரசாங்கம் அறிவிப்பு விடுத்துள்ளது. இந்த விநியோக மற்றும் கடமைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது எமது கடமையாகும். அதனையே இராணுவத்தினர் செய்கின்றனர். நேற்று முதல் இராணுவம் பொலிஸாரின் உதவியுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

செய்தியாளர்: இந்த விடயத்தில் பொலிஸாரின் செயற்பாடு என்னவென்று பொலிஸ் ஊடக பேச்சாளர் விளக்குவாரா?

பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகருமான ருவான் குணசேகர : பொலிஸார் முழுமையாக இதற்கு ஒத்துழைப்பு வழங்குவர். விநியோகத்திற்கு தடைகள் ஏற்படுத்தக்கூடாது. தடையேற்படுத்தகூடாது என்று சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

செய்தியாளர்: தடையேற்படுத்துவோருக்கெதிரான தண்டனை என்ன?

பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகருமான ருவான் குணசேகர : இடையூறு அல்லது தடையேற்படுத்துவோர் கைதுசெய்யப்படுவர்.