01. இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான வேற்றரசுக்கு ஆட்களை ஒப்படைத்தல் சம்பந்தமான உடன்படிக்கை (விடய இல. 09)

 

இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட வேற்றரசுக்கு ஆட்களை ஒப்படைத்தல் சம்பந்தமான உடன்படிக்கை, பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டதுடன், குறித்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. காலநிலை மாற்றங்களின் பாதகமான தாக்கங்களுக்கு இயைபாக்கமடையும் தேசிய செயற்படுத்துகைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தல் (விடய இல. 12)

பல்வேறு நன்மைகள் பொருந்திய காலநிலை மாற்றங்களின் பாதகமான தாக்கங்களுக்கு இயைபாக்கமடையும் தேசிய செயற்படுத்துகைத் திட்டத்தை 2016 – 2025 வருட காலப்பகுதியினுள்ஈ துறை சார்ந்த அடிப்படையில் முக்கியத்துவமளித்து நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட குறித்த கொள்கைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. ஆக்கபூர்வ திறன் மற்றும் மனச்சாட்மிக்க அரச சேவைக் கலாச்சாரத்திற்கான ஒரு பொதுவான வினைத்திறன் உடைய கட்டமைப்பினை அறிமுகப்படுத்துதல் (விடய இல. 14)

பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் அமுலாக்கப்படும் வகையில் தேசிய மனிதவள அபிவிருத்திச் சபை, இலங்கை நிருவாக அபிவிருத்தி நிறுவகம், முகாமைத்துவத்திற்கான பட்டப்பின் கற்கை நிறுவகம், முகாமைத்துவ சேவை திணைக்களம், பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு, அரச சேவை ஆணைக்குழு, கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் ஆகியவற்றுடன் இணைந்து ஆக்கபூர்வ திறன் மற்றும் மனச்சாட்மிக்க அரச சேவைக் கலாச்சாரத்திற்கான ஒரு பொதுவான வினைத்திறன் உடைய கட்டமைப்பினை அறிமுகப்படுத்துவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. அரசாங்க உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களுக்காக Lease – Back OPEX Module தொகுதிகளை நடைமுறைப்படுத்துதல் (விடய இல. 16)

அரச துறைக்கு மேலதிகமாக தேவைப்படும் கட்டடங்களை நிர்மாணிப்பதற்காக 2016ம் ஆண்டில் 21.4 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அது 2017ம் ஆண்டில் 16.3 பில்லியன் ரூபாய்களாக குறைக்கப்பட்டது. அதனடிப்படையில் அரசுக்கு தேவையான கட்டிடங்களுக்கான இடவசதிகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு தனியார் பொது ஒத்துழைப்பு முறை மூலம் பரவலான அரசுத் தறை நடவடிக்கைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய நிதி ஆதாரமாக Lease – Back OPEX Module தொகுதிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. மண்சரிவு அபாயம் நிறைந்த வலயங்களில் வசிக்கும் குடும்பங்களுக்காக நிலையான வீடுகளை நிர்மாணித்தல் (விடய இல. 20)

இலங்கையில் 09 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிறைந்த பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 14,680 ஆக இனங்காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில், குறித்த குடும்பங்களுக்காக பாதுகாப்பான இடங்களில் காணி ஒன்றையும் வீடொன்றையும் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்தால் நிதியுதவி அளிப்பதற்கும், அதன் போது வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற வீடமைப்பு திட்டங்களை பெற்றுக் கொள்வது தொடர்பிலும், குறித்த குடும்பங்களை அவ்வாறான பகுதிகளில் மீண்டும் வசிப்பதில் இருந்து விலகி இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

06. அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் அரச உத்தியோகத்தர்களை அறிவுறுத்தல் (விடய இல.21)

அனர்த்த முகாமைத்துவ துறையில் பாண்டித்தியம் பெற்ற அரச, தனியார் துறையினரின் பங்களிப்புடன் சகல அரச உத்தியோகத்தர்களையும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் அறிவுறுத்துவது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. அனர்த்த இடர் குறைப்பு மற்றும் பதிலளித்தல் ஆகியவற்றில் உள்ளுராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பினையும் பெற்றுக் கொள்ளல் (விடய இல. 22)

உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொருப்பமான மாகாண முதலமைச்சருடன் இணைந்து அனர்த்த முகாமைத்துவ சட்டத்தில் குறிப்பிடப்பதன் பிரகாரம் அனர்த்த இடர் குறைப்பு, தணித்தல், தயார்நிலை, பதிலளித்தல், மீண்டெழல் செயற்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கி நிறுவனங்களுக்கென அனர்த்த முகாமைத்துவ திட்டத்தை உருவாக்குவதற்கு ஒவ்வொரு மாகாண சபைகளுக்கும் உதவுதற்கும், அதற்காக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

08. 2017ம் ஆண்டின் முதற் காலாண்டில் அரசாங்கத்தின் வருமானம், செலவு தொடர்பான அறிக்கையினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் (விடய இல. 25)

2017ம் ஆண்டின் முதல் காலாண்டில் அரச வருமானம் 436 பில்லியன் ரூபாய்களாகும். அரச வருமானத்தில் 95மூ ஆன 415பில்லியன் ரூபாய்கள் வரி பணத்தில் பெறப்பட்டவையாகும். இவ்வாறு தகவல்கள் அடங்கிய அறிக்கையானது மாதாந்தம் பெறப்பட்ட வருமானம் மற்றும் செலவு என்பவற்றை வௌ;வேறாக சுட்டிக்காட்டப்பட்டும், முழு மொத்த காலாண்டு அறிக்கை வேறாக சுட்டிக் காட்டப்பட்டும் தயாரிக்கப்பட்ட அறிக்கையினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

09. கலேவலயில் பொலிஸ் நிலையம் ஒன்றை அமைப்பதற்காக காணியொன்றை பொலிஸ் திணைக்களத்திற்கு ஒதுக்கீடு செய்தல் (விடய இல. 31)

கலேவலயில் பொலிஸ் நிலையம் ஒன்றை அமைப்பதற்காக கலேவலயிலுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தான 24 ஏக்கர் காணியில், 1 ½ ஏக்கர் காணித்துண்டொன்றை பொலிஸ் திணைக்களத்திற்கு ஒதுக்கீடு செய்து கொள்வது தொடர்பில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. திறைசேரி நிதிகளின் மூலம் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் அமுலாக்கம் செய்யும் அபிவிருத்தி திட்டங்கள் (விடய இல. 32)

2017ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் 06 பிரதான வேலைத்திட்டங்களின் கீழ் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பிரதான மூன்று கூறுகளாக பிரிக்கப்பட்டு மொத்தம் 39 வேலைத்திட்டங்களை 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியினை திறைசேரியில் இருந்து பெற்று நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் அமுலாக்கம் செய்வது தொடர்பில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களின் மூலம் அமைச்சரவைக்கு எடுத்துக் கூறப்பட்டது.

11. ஹோமாகமை – பிட்டிபனை தொழில்நுட்பவியல்சார் நகரத்திற்கு இட்டுச் செல்லும் பிரதான அணுகுவீதியான கொட்டாவ – பின்ஹேன வீதியினை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 33)

துரித கதியில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதியாக இனங்காணப்பட்டுள்ள ஹோமாகமை – பிட்டிபனை தொழில்நுட்பவியல்சார் நகரத்திற்கு இட்டுச் செல்லும் பிரதான அணுகுவீதியான கொட்டாவ – பின்ஹேன வீதியினை மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் மூலம் அபிவிருத்தி செய்வது தொடர்பில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. பசுபிக் வெள்ளை இறால் வளர்ப்புக்காக தாய்லங்கா அகுவா தனியார் கம்பனிக்கு தேவையான நிலப்பகுதியினை வழங்குதல் (விடய இல. 36)

வெள்ளை புள்ளி நோய் காரணமாக வருமானம் ஈட்டித் தரும் இலங்கை இறால் வளர்ப்பு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே குறித்த நோய்க்கு தாக்கு பிடிக்கின்ற மற்றும் உலச சந்தையில் அதிக விலைக்கு விற்பனையாகின்ற பசுபிக் வெள்ளை இறால் வளர்ப்புக்காக தாய்லங்கா அகுவா தனியார் கம்பனிக்கு மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குள் 250 ஏக்கர் கொண்ட நிலப்பகுதியினை 30 வருட குத்தகை அடிப்படையில் வழங்குவது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. கரும்பு ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக இலங்கையின் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கரும்பு ஆராய்ச்சி நிறுவனம், சீன மக்கள் குடியரசின் யுனான் மாகாணத்தில் அமைந்துள்ள யுனான் விவசாய கற்கை அகடமி மற்றும் யுனான் கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் என்பவற்றுக்கிடையிலான ஆய்வறிவு ஒத்துழைப்பு (விடய இல. 37)

கரும்பு ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக இலங்கையின் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கரும்பு ஆராய்ச்சி நிறுவனம், சீன மக்கள் குடியரசின் யுனான் மாகாணத்தில் அமைந்துள்ள யுனான் விவசாய கற்கை அகடமி மற்றும் யுனான் கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் என்பவற்றுக்கிடையிலான ஆய்வறிவு ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி தரநியமங்களை 'முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி தேசிய தரநியமங்கள்' ஆக மாற்றியமைத்தல் (விடய இல. 45)

இலங்கையில் 3-5 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ள முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி தரநியமங்களை 'முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி தேசிய தரநியமங்கள்' எனப்பிரகடனப்படுத்துவதற்கும், அத்தரநியமங்களை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் செயற்படுத்துவதற்குமாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அலுவல்கள் அமைச்சர் சந்திராணி பண்டார அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. இலங்கை தொழில்நுட்ப சேவைசார் பயிலுனர்களுக்கு ஜப்பானில் தொழில்நுட்ப சேவைசார் பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தில் வாய்ப்பளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 46)

இலங்கை தொழில்நுட்ப சேவைசார் பயிலுனர்களுக்கு ஜப்பானில் தொழில்நுட்ப சேவைசார் பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தில் வாய்ப்பளிப்பதற்காக ஜப்பானில் புகழ்பெற்ற மனித வள அபிவிருத்தி நிர்வனமான International Manpower Development Organization (IM Japan) நிர்வனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ தலதா அதுகோரல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. பொலன்னறுவை புதிய தபால் கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக காணிகளை முறையாக தபால் திணைக்களத்திற்கு பொறுப்பேற்றுக் கொடுத்தல் (விடய இல. 48)

பொலன்னறுவை புதிய தபால் கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக கதுறுவெல நகரத்தில் தற்போது தலைமை தபால் அலுவலகம் தாபிக்கப்பட்டுள்ள புகையிரதத் திணைக்களத்திற்கு உரித்தான காணிப் பகுதியை தபால் திணைக்களத்திடம் முறையாக பொறுப்பளிப்பது தொடர்பில் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் கௌரவ எம்.எச்.எம். ஹலீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. மேல் மாகாண வீதி அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ், வாதுவ – மொறொன்துடுவ வீதி (பீ449) மற்றும் பெல்லன – மொறகல வீதி (பீ544) ஆகியவற்றை அபிவிருத்தி செய்தல் மற்றும் புனரமைத்தலுக்கான ஒப்பந்தத்தினை வழங்குதல் (விடய இல. 55)

சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்தால் நிதியளிக்கப்படும் மேல் மாகாண வீதி அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ், வாதுவ – மொறொன்துடுவ வீதியின் (பீ449) 0 லிருந்து 5.3 கி.மீ வரையிலான வீதிப் பிரிவு மற்றும் பெல்லன – மொறகல வீதியின் (பீ544) 0 லிருந்து 9.8 கி.மீ வரையிலான வீதிப் பிரிவு ஆகியவற்றை அபிவிருத்தி செய்தல் மற்றும் புனரமைத்தலுக்கான ஒப்பந்தத்தினை குறைந்த விலை மனுக்கோரலின் அடிப்படையில் Maga Engineering (Pvt.) Ltd நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பில் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. பாலுறுப்பு நோய்கள் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கான கட்டிடம் ஒன்றை அமைத்தல் (விடய இல. 57)

நோயாளர்களின் சிரமத்தையும், நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களையும் கருத்திற் கொண்டு பாலுறுப்பு நோய்கள் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் பிரதான காரியாலயம் அமைந்துள்ள பிரதேசத்தில் 04 மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றை புதிதாக நிர்மாணிப்பது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. கொழும்பு – கிழக்கு (முல்லேரியாவ) ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் உருவகப்படுத்தப்பட்ட நிலையமொன்றை அமைத்தல் (விடய இல. 55)

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையான கொள்ளல் குழுவின் பரிந்துரை மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவின் பரிந்துரை ஆகியவற்றுக்கு அமைய கொழும்பு – கிழக்கு (முல்லேரியாவ) ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் உருவகப்படுத்தப்பட்ட நிலையமொன்றை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை M/s Link Engineering (Pvt.) Ltd நிர்வனத்துக்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்காக விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவொன்றை அமைத்தல் (விடய இல. 57)

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையான கொள்ளல் குழுவின் பரிந்துரை மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவின் பரிந்துரை ஆகியவற்றுக்கு அமைய திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்காக விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவொன்றை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை M/s Link Engineering (Pvt.) Ltd நிர்வனத்துக்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. களுத்துறை பொது வைத்தியசாலையில் நிருவாகக்கட்டிடம் அமைத்தல் கட்டம் - 11 (விடய இல. 60)

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையான கொள்ளல் குழுவின் பரிந்துரை மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவின் பரிந்துரை ஆகியவற்றுக்கு அமைய களுத்துறை பொது வைத்தியசாலையில் நிருவாகக்கட்டிடம் அமைத்தல் கட்டம் - 11 இற்கான ஒப்பந்தத்தை இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

22. இலங்கையின் அரச பெறுகை முறையினுள் இலத்திரனியல் அரசாங்க பெறுகையினை அறுமுகம் செய்தல் (விடய இல. 61)

இலத்திரனியல் அரசாங்க பெறுகை நடைமுறையானது பெறுகை மீளமைப்புக்கு ஒரு ஊக்கியாக செயற்படுகின்றது. அரசாங்க பெறுகை நடைமுறையினை பலம்வாய்ந்த முறையொன்றாக மாற்றுவதற்கு இவ்விலத்திரனியல் அரசாங்க பெறுகையானது அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் உருவாக்கப்படுவது தேசிய முன்னுரிமையான விடயமாக காணப்படுகின்றது. அதனடிப்படையில் இலங்கையின் அரச பெறுகை முறையினுள் இலத்திரனியல் அரசாங்க பெறுகையினை அறுமுகம் செய்வதற்கும், தேசிய பெறுகை ஆணைக்குழுவின் இணக்கத்துடன் அதற்கு உகந்த பெறுகை கொள்கை கட்டமைப்பை தயாரிப்பதற்கு அரச நிதியின் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் மற்றும் பிற நிர்வனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கும் நிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

23. கலப்பு அபிவிருத்தி செயற்றிட்டத்திற்காக தலபத்பிட்டிய வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள காணியொன்றை குத்தகை அடிப்படையில் வழங்குதல் (விடய இல. 63)

கலப்பு அபிவிருத்தி செயற்றிட்டத்திற்காக தலபத்பிட்டிய வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள காணியொன்றை வரையறுபக்கப்பட்ட மொனார்ச் இம்பிரியல் (தனியார்) நிறுவனத்திற்கு 1,200 மில்லியன் ரூபா தொகைக்கு, நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 99 வருட குத்தகையின் அடிப்படையில் வழங்குவது தொடர்பில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

24. அஞ்சல் திணைக்களத்துக்காக சிறப்பு சேவை யாப்பை அங்கீகரித்துக் கொள்ளல் (விடய இல. 72)

அரச நிர்வாக சுற்றறிக்கை 06/2006 க்கு அமைய சகல அரசாங்க திணைக்களங்களிலும் ஆட்களைச் சேர்த்துக் கொள்ளும் சட்ட விதிகளைத் தயாரிக்க வேண்டுமென்பதுடன் அதன்படி அஞ்சல் திணைக்களத்தில் பல்வேறு தரத்துக்காக புதிய ஆட்களைச் சேர்த்துக் கொள்ளும் சட்ட விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் படி தயாரிக்கப்பட்டுள்ள சட்ட விதிகள் காலத்துக்கு காலம் திருத்தியமைக்கப்பட்டதுடன், தற்போது அதனை முழுவதுமாக மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனடிப்படையில் அஞ்சல் திணைக்களத்துக்காக சிறப்பு சேவை யாப்பை தயாரிப்பது தொடர்பில் பரிசீலித்து சிபார்சுகளை முன்வைப்பதற்காக பிரதமரின் செயலாளரினால் பெயரிடப்படுகின்ற சிரேஷ;ட அதிகாரிகளின் தலைமையில் மற்றும் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவம், நிதி மற்றும் வெகுசன ஊடகம், தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் ஆகிய அமைச்சுக்களின் மற்றும் தேசிய ஊதியம் மற்றும் சேவையாளர் எண்ணிக்கை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் கௌரவ எம்.எச்.எம். ஹலீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

25. மாலபை டாக்டர் நெவில் பெர்னாந்து இலங்கை ரஷ;ய நட்புறவு மருத்துவமனையை அரசாங்கத்திற்கு ஒப்படைத்தல் மற்றும் தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ நிறுவகத்தின் எதிர்கால முகாமைத்துவ கட்டமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் (விடய இல. 75)

கொழும்பு கிழக்கு, மாலபே, தெற்காசிய மருத்துவ நிறுவகத்தில் மருத்துவப் பட்டப் படிப்பினை கற்கின்ற மாணவர்களுக்கு சிகிச்சை முறை பயிற்சியளிப்பதற்காக 2013ம் ஆண்டிலே டாக்டர் நெவில் பெர்னாந்து போதனா மருத்துவமனை நிறுவப்பட்டது. 100 படுக்கைகளுடன் கூடிய றை வசதிகள் மற்றும் 500 படுக்கைகளுடன் கூடிய சாதாரண வாட்டுக்களை உள்ளடக்கிய 600 படுக்கைகள் உள்ளடங்கிய தனியார் மருத்துவமனை ஒன்றாக இது வரையில் இந்த மருத்துவமனை இயங்கி வருகின்றது. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கி வரும் அரசாங்க மதிப்பீட்டு நிறுவன அறிக்கையின் பிரகாரம் 3.55 பில்லியன் ரூபா பெறுமதியான இவ்வைத்தியசாலையினை அரசாங்கத்திற்கு பெற்றுத்தருவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டு, எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சைட்டம் நிறுவனம் இலங்கை வங்கியிடமிருந்து பெற்றுக் கொண்ட கடன் தொகையினை 10 வருட காலத்தினுள் செலுத்திய பின்னர், அதன் முழு உரிமையினையும் அரசாங்கத்துக்கு மாற்றிக் கொள்வதற்கும், சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் கீழ் இயங்கும் நிர்வாக சபையினால் குறித்த வைத்தியசாலையினை முகாமைத்துவம் செய்து, இலவசமாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் மற்றும் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும், குறித்த நிர்வனத்தின் உரிமையினை விஸ்தரிப்பது தொடர்பில் உரிய அனைத்து தரப்பினரையும் கேட்டறிந்து மாற்று முன்மொழிவுகளை முன்வைக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

26. மேல் மாகாண வலயத்தினுள் உருவாகும் நகர திண்ம கழிவு முகாமைத்துவத்திற்கான நீண்ட கால தீர்வு – புத்தளம், அருவக்காலு சுகாதார நில நிரப்பல் வேலைத்திட்டம் (விடய இல. 77)

மேல் மாகாண வலயத்தினுள் உருவாகும் நகர திண்ம கழிவு முகாமைத்துவத்திற்கான நீண்ட கால தீர்வாக, புத்தளம், அருவக்காலு சுகாதார நில நிரப்பல் பகுதிக்கு குறித்த கழிவுகளை புகைவண்டிpயில் பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்திற்காக மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபை ஆகியவற்றின் அடிப்படை சூழல் அறிக்கையினை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அதன் அறிக்கையினை ஜுலை மாதம் இறுதியளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பின்னர் அதன் ஆரம்ப கட்ட வேலைத்திட்டங்களை 06-08 மாத காலப்பகுதிக்குள் செய்து முடிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கான நிதியுதவிகளை உலக வங்கி வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் குறித்த வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்வதற்காக விலை மனுக்கோரலினை மேற்கொள்வதற்கும், அதற்கு அவசியமான நிலப்பரப்பினை வரையறுக்கப்பட்ட சிமெந்து கூட்டுத்தாபனத்திற்கு உரித்தான அருவக்காலு காணியில் இருந்து பெற்றுக் கொள்வதற்கும், குறித்த நிலப்பகுதியினை பெற்றுக் கொள்வதற்காக உரிய கம்பனிகளுடன் பேச்சுவார்த்தைகளின் ஈடுவடுவதற்கு உரிய நிலையியல் கொள்முதல் குழுவிற்கு அதிகாரமளிப்பதற்கும் மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.