01.1956ம் ஆண்டு 21ம் இலக்க வெடிப்பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்தல் (விடய இல. 06)
காலத்தின் தேவைக்கேற்ப 1956ம் ஆண்டு 21ம் இலக்க வெடிப்பொருட்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்காக வேண்டி நியமிக்கப்பட்ட குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட சிபார்சுகளை உள்வாங்கி 1956ம் ஆண்டு 21ம் இலக்க வெடிப்பொருட்கள் சட்டத்துக்கு உரித்தான திருத்தச் சட்டத்தினை வரைவதற்காக வேண்டி சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. மறுசீரமைப்பு மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை (விடய இல. 08)
நாட்டில் இடம்பெற்ற கொடூர யுத்தம், மீண்டும் ஏற்படாது இருக்கும் வகையில், நாட்டு மக்களிடையே சகவாழ்வை ஏற்படுத்தும் வகையில், சகல இனத்தவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரதும் கருத்துக்களை பெற்று தயாரிக்கப்பட்ட, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பில் அரச கொள்கையாக செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற 'மறுசீரமைப்பு மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கையினை' செயற்படுத்துவது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் மற்றும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் தேசிய மொழிகள் அமைச்சர் கௌரவ மனோ கணேஷன் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. தல்பிடிகல நீர்த்தேக்க வேலைத்திட்டம் (விடய இல. 10)
பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள பத்மெடில்ல நீரினைக்கு மேலால், உமா ஓயாவுக்கு குறுக்கே அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள தல்பிடிகல நீர்த்தேக்க வேலைத்திட்டத்துக்கு 174 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறித்த மதிப்பீட்டு தொகையில் 85மூ இனை வழங்குவதற்கு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. எனவே அக்கடன் தொகையினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி இலங்கை அரசாங்கத்துக்கும் சீனாவின் குறித்த வங்கிக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவனத்தின் (AFD) அலுவலகம் ஒன்றை இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பில் இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தம் (விடய இல. 11)
பிரான்ஸில் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்காக அன்பளிப்பு கொள்கையினை செயற்படுத்துவதற்காக 'பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவனம்' உருவாக்கப்பட்டுள்ளதுடன், அதன் மூலம் உலகம் முழுவதும் சுமார் 60 நாடுகளுக்கும் மேலாக சேவையளிக்கப்படுகின்றது. இலங்கையின் பிரான்ஸ் தூதுவராலயத்துடன் இணைந்ததாக 2005ம் ஆண்டு பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவனத்தின் (AFD) அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டு, பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இரு நாடுகளுக்கும் இடையில் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில் பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவனத்தின் புதிய அலுவலகம் ஒன்றை இலங்கையில் ஆரம்பிப்பதற்கும், அவ்வலுவலகத்துக்கு இராஜதந்திர வரப்பிரசாதங்களை பெற்றுக் கொடுப்பதற்கும் ஏதுவான வகையில் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. பசுமை வலுச்சக்தி அபிவிருத்தி மற்றும் வலுச்சக்தி செயற்றிறனை விருத்தி செய்யும் முதலீட்டு வேலைத்திட்டம் - இரண்டாம் கட்டத்தினை செயற்படுத்துவதற்காக பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவனத்தின் நிதியுதவியினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 12)
பசுமை வலுச்சக்தி அபிவிருத்தி மற்றும் வலுச்சக்தி செயற்றிறனை விருத்தி செய்யும் முதலீட்டு வேலைத்திட்டம் - இரண்டாம் கட்டத்தினை செயற்படுத்துவதற்கு 260 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அத்தொகையில் 30 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை வழங்குவதற்கு பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. குறித்த கடன் தொகையினை பெற்றுக் கொள்வது தொடர்பில் பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்மொழியப்பட்ட பின்வரும் தீர்வுகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. தெரிவு செய்யப்பட்ட 03 மாவட்டங்களில் நிலக்கீழ் நீர் விநியோக வலையமைப்பை ஸ்தாபிப்பது தொடர்பான வேலைத்திட்டம் (விடய இல.13)
தெரிவு செய்யப்பட்ட 03 மாவட்டங்களில் நிலக்கீழ் நீர் விநியோக வலையமைப்பை ஸ்தாபிப்பது தொடர்பான வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு 20.63 மில்லியன் யூரோ செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அத்தொகையில் 85% இனை வழங்குவதற்கு நெதர்லாந்தின் ரபோ வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. எனவே குறித்த நிதியுதவியினை பெற்றுக் கொள்வது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கும் நெதர்லாந்தின் ரபோ வங்கிக்கும் இடையில் கடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்தல் (விடய இல. 14)
பல்வேறு வகையில் நன்மைபயக்கக் கூடிய காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பதற்காக 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை இந்திய இறக்குமதி – ஏற்றுமதி வங்கி வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. குறித்த வேலைத்திட்டமானது இலங்கை துறைமுக அதிகார சபையினால் மேற்கொள்ளப்படவுள்ளது. அதனடிப்படையில் குறித்த நிபந்தனைகள் தொடர்பில் இந்திய இறக்குமதி – ஏற்றுமதி வங்கியுடன் கலந்துரையாடி ஒப்புதல்களை பெற்று ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. தேசிய வீதி பாதுகாப்பு ஆணைக்குழுவினை ஸ்தாபித்தல் (விடய இல. 18)
வீதி விபத்துக்களினால் ஏற்படும் உயிர் மற்றும் உடைமைகளை சேதங்களை கட்டுப்படுத்துவதே இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கும் பாரிய சவாலாகும். இதற்கு தீர்வாக தேசிய வீதி பாதுகாப்பு ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதற்கு 2010ம் ஆண்டே அங்கீகாரம் கிடைத்த போதும், அது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இதுவரை மேற் கொள்ளப்படவில்லை. எனவே காலத்தின் அத்தியவசிய தேவையொன்றாக கருதப்படுகின்ற அதிகாரமிக்க நிறுவனமொன்றாக 'தேசிய வீதி பாதுகாப்பு ஆணைக்குழுவினை' ஸ்தாபிப்பதற்கும், உரித்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றின் ஊடாக அதற்காக சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
09. போக்குவரத்து சேவையில் தரமான அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் பகமுன பேரூந்து நிலையத்தை புதியதொரு இடத்தில் ஸ்தாபித்தல் (விடய இல. 19)
ரஜரட்ட நவோத்ய பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் போக்குவரத்து சேவையில் தரமான அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் 50 மில்லியன் ரூபா மதிப்பிட்டு செலவில் பகமுன பேரூந்து நிலையத்தை புதியதொரு இடத்தில் ஸ்தாபிப்பது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. இலங்கையில் நீர் சேவை தொழிற்றுறைக்கான சட்டத்திட்டங்கள் (விடய இல. 21)
நீர் நுகர்வோர்களின் உரிமைகளினை பாதுகாக்கும் நோக்கிலும், நீர் சேவை கைத்தொழில்களில் முதலீடுகளை அதிகரித்துக் கொள்வதற்கும் பலனுள்ள ஒழுங்குமுறையொன்று அவசியம் என இனங்காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினை 'செயற்பாட்டாளர்' ஆகவும், பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவினை 'வரையறுப்பவர்' எனும் ரீதியில் பலப்படுத்தி, இலங்கையில் நீர் சேவை தொழிற்றுறையினை முறைப்படுத்தவும், அதற்காக கொள்கை வழிகாட்டல்களை தயாரிப்பதனை நோக்காகக் கொண்டு நீர் சேவை கைத்தொழில் சட்டமூலத்தை தயாரிப்பது தொடர்பில் சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. இலங்கை தேசிய வைத்தியசாலையில் அவசர சேவை பிரிவொன்றுடன் கூடிய சீருநீரக பிரிவொன்றை (Urological Unit) ஸ்தாபித்தல் (விடய இல. 28)
1955ம் ஆண்டு இலங்கை தேசிய வைத்தியசாலையில் சீருநீரக பிரிவு (Urological Unit) ஸ்தாபிக்கப்பட்டது. இன்று அப்பிரிவானது மீண்டும் புனர்நிர்மாணம் செய்வதற்கு முடியாத நிலையில் காணப்படுகின்றது. பழைய கட்டிடம் ஒன்றில் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற குறித்த பிரிவினை பொருத்தமான பிறிதொரு கட்டிடத்தில் துரித கதியில் ஸ்தாபிக்க வேண்டியுள்ளது. இதற்காக தற்போது இயங்கி வரும் கட்டிடத்தை அகற்றி மூன்று மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடமொன்றை 150 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் நிர்மாணிப்பதற்கு அனுசரணை வழங்குவதற்கு ஈ.ஏ.எம். மெலிபன் டெக்ஸ்டய்ல்ஸ் தனியார் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் அவசர சேவை பிரிவொன்றுடன் கூடிய சீருநீரக பிரிவொன்றை (ருசழடழபiஉயட ருnவை) ஸ்தாபிப்பது தொடர்பில் குறித்த அனுசரணை நிறுவனம் மற்றும் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில், பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதி துறையில் ஒத்துழைப்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 29)
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில், பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதி துறையுடன் சம்பந்தப்பட்ட அறிவு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை பரிமாறிக்கொள்வதற்கும், அத்துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பினை விருத்தி செய்து கொள்வதற்கும் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. தேசக்கட்டுமான வரி (திருத்தம்) சட்டமூலம் (விடய இல. 33)
2017ம் ஆண்டு வரவு - செலவு திட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கி, சட்ட வரைஞர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட 2009ம் ஆண்டு 09ம் இலக்க தேசக்கட்டுமான வரி சட்டத்தினை திருத்தம் செய்வதற்கான சட்ட மூலத்தினை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காகவும், அதன் பின்னர் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்குமாக நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் பாணந்துரை நிலையத்துக்காக நான்கு மாடிகளைக் கொண்ட கட்டிடமொன்றை நிர்மாணித்தல் (விடய இல. 34)
சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் பாணந்துரை நிலையத்துக்காக நான்கு மாடிகளைக் கொண்ட கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்காக, பாணந்துரை பிரதேச செயலாளர் பிரிவின், உயன்கெலே கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சுக்கு உரித்தான இடமொன்றில் சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் புதிய பிரதேச பயிற்சி நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கும், அதற்கு தேவையான உபகரணங்களையும் பிற வசதிகளையும் பெற்றுக் கொடுப்பதற்கும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. அம்பாறை தொழில்நுட்ப கல்லூரியினை விருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் மீதமான வேலைகளை பூர்த்தி செய்தல் (விடய இல. 36)
முன்னைய ஆட்சி காலத்தில் பாதியளவில் மேற்கொள்ளப்பட்டு இடைநிறுத்தப்பட்ட அம்பாறை தொழில்நுட்ப கல்லூரியின் மீதமான வேலைகளை பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் மூலம் முன்வைக்கப்பட்ட சிபார்சுகளின் அடிப்படையில் 2017ம் ஆண்டின் வரவு – செலவு திட்ட நிதிக் ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்வது தொடர்பில் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. உயர் தொழில் நுட்ப தன்னியக்க எந்திரத் தொகுதிகள் மற்றும் உபகரணங்களின் இறக்குமதி மீதான இறைவரி ஊக்குவிப்புக்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பான சிபார்சுகளை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 40)
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற உயர் தொழில் நுட்ப தன்னியக்க எந்திரத் தொகுதிகள் மற்றும் உபகரணங்களின் இறக்குமதி மீதான இறைவரி ஊக்குவிப்புக்களை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும். அதனடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பரிசீலித்து, பொருத்தமான சிபார்சுகளை வழங்குவதற்காக வேண்டி கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் செயலாளரின் தலைமையிலான குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் கௌரவ ரிஷhட் பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. கடற்கரை மணலை அகழ்ந்து இறைத்து அதனை நிர்மாணிப்புக் கைத்தொழிலுக்கு விநியோகித்தல் (விடய இல. 42)
கடற்கரை மணலை அகழ்ந்து இறைத்து அதனை நிர்மாணிப்புக் கைத்தொழிலுக்கு விநியோகிக்கம் பணியினை இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் மேற்கொள்வதோடு, அதற்கான அனுமதி பத்திரத்தையும் பெற்றுள்ளது. 2017ம் ஆண்டின் 4 ஆம் காலாண்டில் முதுராஜவல பிரதேசத்திலுள்ள 10 – 16 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கடற்கரை பகுதியில், 4 மில்லியன் கியுபிக் மீட்டர்கள் அகழ்வதற்கு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் குறித்த அகழ்வு குறித்து பொருத்தமான நிறுவனம் ஒன்றை தெரிவு செய்வதற்கான கேள்வி மனுக்கோரலை மேற்கொள்வது தொடர்பில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. மேல் மாகாண வலயத்தினுள் நகர திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்கான நீண்ட கால தீர்வுகள் (விடய இல. 44)
மேல் மாகாணத்தில் வியாபித்துள்ள கழிவு பிரச்சினைக்கு நீண்ட கால தீர்வினை பெற்றுக் கொடுக்கும் பணியானது, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள பின்வரும் வேலைத்திட்டங்கள் மற்றும் திட்டங்களை செயற்படுத்துவது தொடர்பில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• மீத்தொடமுல்ல குப்பை மேடு தொடர்பில் இராணுவத்தினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை 05 மாதங்களினுள் பூர்த்தி செய்வதற்கும், அப்பிரதேசத்தை நகர வனப்பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுத்தல்
• தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள கழிவகற்றும் வேலைத்திட்டங்களுக்கான அடிப்படை சூழலியல் மதிப்பீட்டு செயன்முறையினை பின்பற்றி சூழலியல் அங்கீகாரத்தினை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அதிகாரிமளித்தல்
• கழிவுகளை தரம் பிரித்து வெளியேற்றுவதற்கு பொதுமக்களை அறிவுறுத்தல் மற்றும் பிரித்தொதுக்கப்பட்ட கழிவுகளை உரிய இடங்களுக்கு அனுப்புதல்
• 50,000 குடும்பங்களுக்கு அதிகமான தொகையினர் வசிக்கும் உள்ளூராட்சி நிறுவனங்களின் மூலம் அவர்களுடைய கழிவகற்றல் மற்றும் மீள்சுழற்சி மத்திய நிலையங்களை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்
• மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை டிரான்ஸ்போம்பர்ஸ் லிமிடட் நிறுவனம் ஆகியவை இணைந்து கழிவுகளின் மூலம் மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தினை ஆரம்பித்தல்
• புத்தளம், அருவக்காரு கழிவகற்றும் வேலைத்திட்டத்திற்காக இலங்கையில் அமைந்துள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மூலம் வெளிநாட்டு உதவிகளை பெற்றுக் கொள்ளல்
• களனி, குப்பை பறிமாற்றும் மத்திய நிலையத்தின் நிர்மாணப்பணிகளுக்கு தேவையான பூமிப்பகுதியினை இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் மூலம் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு பொறுப்பாக்கிக் கொள்ளல்.
19. தேயிலையின் இருக்கின்ற கூறுகள் உடனடியாக பரிசோதனை செய்ய யப்பான் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டு பகுப்பாய்பு கருவிகள் அறிமுகப்படுத்துவதற்காக துல்லியத்தன்மையினை உறுதிப்படுத்தும் மீளாய்வொன்றை மேற்கொள்ளல் (விடய இல. 46)
தேயிலையின் இருக்கின்ற கூறுகள் உடனடியாக பரிசோதனை செய்ய யப்பான் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டு பகுப்பாய்பு கருவிகள் அறிமுகப்படுத்துவதற்கு யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் யப்பானின் கவசாகி கிகோ வரையறுக்கப்பட்ட கம்பனி ஆகியவை இணக்கம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் தேயிலையின் இருக்கின்ற கூறுகள் உடனடியாக பரிசோதனை செய்ய யப்பான் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டு பகுப்பாய்பு கருவிகள் அறிமுகப்படுத்துவதற்காக துல்லியத்தன்மையினை உறுதிப்படுத்தும் மீளாய்வொன்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு இலங்கை தேயிலை சபை மற்றும் இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை ஒத்துழைப்பு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் மீளாய்வை மேற்கொள்வது தொடர்பில் குறித்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் கௌரவ நவின் திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. 'சூரியபள சங்கிராமய' வேலைத்திட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களுக்கு சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை உற்பத்திச் செய்யும் சூரிய சக்திப் பலகைகைப் பொதிகளைப் வழங்கும் கருத்திட்டம் (விடய இல. 50)
'சூரியபள சங்கிராமய' வேலைத்திட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களுக்கு சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை உற்பத்திச் செய்யும் சூரிய சக்திப் பலகைகைப் பொதிகளைப் வழங்கும் கருத்திட்டத்தினை முன்னெடுப்பதற்காக 2017ம் ஆண்டு வரவு – செலவு திட்டத்தின் மூலம் 350 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டது. அதன் முதற்கட்டமாக, அந்நிதியில் 75மூ இனை பயன்படுத்தி அனைத்து மாவட்டங்களிலும் தெரிவுசெய்யப்பட்ட அரச வைத்தியசாலைகளில் சூரிய சக்திப் பலகைகைப் பொதிகளை பொருத்துவதற்கும், எஞ்சிய 25மூ இனை பயன்படுத்தி தெரிவு செய்யப்பட்ட அரச நிறுவனங்களில் சூரிய சக்திப் பலகைகைப் பொதிகளை பொருத்துவதற்கும் மின்வலு மற்றும் மீளப்புத்தாக்க சக்தி அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. புதுபுத் மாபிய உபகார வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் (விடய இல. 54)
2017 ஐக்கிய நாடுகளின் வெசாக் தின வைபவத்தை முன்னிட்டு அமுல்படுத்தப்படுகின்ற புதுபுத் மாபிய உபகார வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த, பிக்குமாரின் குறைந்த வருமானம் பெறுகின்ற, வசிப்பதற்கு உகந்த வீடுகளற்ற குடும்பங்களுக்கு பௌத்த அலுவல்கள் பற்றிய திணைக்களத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய பிரதேச சாசனத்தை பாதுகாக்கும் சபைகளின் சிபார்சுகளின் அடிப்படையில் தேவையான இடங்களை இனங்கண்டு 500 சதுர அடிகள் குறையாத அளவினை கொண்ட ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்காக 500,000 ரூபா நிதியுதவியினை வழங்குவதற்கும், நாடளாவிய ரீதியில் அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 500 குடும்பங்களுக்காக இத்திட்டத்தின் கீழ் வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கும் புத்தசாசன அமைச்சர் கௌரவ விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் மற்றும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்கள் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22. ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தை தரமுயர்த்துதல் (விடய இல. 56)
ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக வேண்டி 199 மில்லியன் ரூபாய்களை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. அது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
23. சர்வதேச ஒப்பந்தங்களில் இலத்திரனியல் தொடர்பாடல் பயன்பாடு மீதான ஐக்கிய நாடுகள் சமவாயத்தினை ஒப்புக் கொள்ளல்; 2006ம் ஆண்டின் 19ம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்திற்கான திருத்தங்கள் (விடய இல. 61)
சர்வதேச ஒப்பந்தங்களில் இலத்திரனியல் தொடர்பாடல் பயன்பாடு மீதான ஐக்கிய நாடுகள் சமவாயத்தினை ஒப்புக் கொண்டு அதனை அமுல்படுத்துவதற்காக வேண்டி, 2006ம் ஆண்டின் 19ம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், சட்ட வரைஞர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட திருத்தச் சட்ட மூலத்தை வர்த்தமானி பிரசுரிப்பதற்கும், பின்னர் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் கௌரவ ஹரின் பிரனாந்து அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையின் கவனத்திற் கொள்ளப்பட்டது.
24. இறக்குமதி செஸ் வரியினைத் திருத்துதல் (விடய இல. 62)
தற்போது நடைமுறையிலுள்ள இறக்குமதி செஸ் வரி சட்டத்தினை அகற்றுவது தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
25. மாலி இலாச்சியத்தில் சமாதான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தேவையான இராணுவ உதவி வாகனங்கள் (Logistic Support Vehicles - Military) கொள்வனவு செய்தல் (விடய இல. 64)
மாலி இலாச்சியத்தில் சமாதான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தேவையான இராணுவ உதவி வாகனங்கள் (Logistic Support Vehicles - Military) கொள்வனவு செய்வதற்காக சர்வதேச விலை மனுக்கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 06 நிறுவனங்கள் தமது விலை மனுக்களை முன்வைத்துள்ளன. குறித்த விலைமனுக்களை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் பெறுகைக் குழுவின் சிபார்சின் அடிப்படையில் ஆராய்ந்து உரிய அடிப்படையில் குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
26. கொழும்பு தேசிய நெடுஞ்சாலைகள் கருத்திட்டத்தின் கீழ் - வல்கம – தியகம (B452) வீதிப்பிரிவினை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தினை வழங்குதல் (விடய இல. 69)
சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்தின் நிதியுதவின் பெயரில் கொழும்பு தேசிய நெடுஞ்சாலைகள் கருத்திட்டத்தின் கீழ் - வல்கம – தியகம (டீ452) வீதிப்பிரிவினை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் பெறுகைக் குழுவின் சிபார்சின் அடிப்படையில் ஆராய்ந்து உரிய அடிப்படையில் வழங்குவதற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
27. மொரட்டுவை, ஊவா வெல்லஸ்ஸ மற்றும் கட்புல ஆற்றுகைக் கலை போன்ற பல்கலைக்கழகங்களில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் கட்டிடங்களுக்கான ஒப்பந்தத்தினை வழங்குதல் (விடய இல. 70)
மொரட்டுவை, ஊவா வெல்லஸ்ஸ மற்றும் கட்புல ஆற்றுகைக் கலை போன்ற பல்கலைக்கழகங்களில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் கட்டிடங்களுக்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் பெறுகைக் குழுவின் சிபார்சின் அடிப்படையில் ஆராய்ந்து உரிய அடிப்படையில் வழங்குவதற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
28. களுத்துறை பொது வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சை கூடம் மற்றும் வார்ட்டு அமைத்தல் (கட்டம் - 11) (விடய இல. 74)
களுத்துறை பொது வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சை கூடம் மற்றும் வார்ட்டு அமைத்தல் (கட்டம் - 11) இற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் பெறுகைக் குழுவின் சிபார்சின் அடிப்படையில் ஆராய்ந்து உரிய அடிப்படையில் வழங்குவதற்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
29. பாடசாலைகளுக்கான நடமாடும் விஞ்ஞான கூட உபகரண பொதிகளை கொள்வனவு செய்தல் (விடய இல. 79)
க.பொ.த சாதாரண தரம் வரையான வகுப்புக்கள் மாத்திரம் கொண்ட விஞ்ஞான ஆய்வு கூடங்கள் அற்ற 3000 பாடசாலைகளுக்கு, விஞ்ஞான பாடத்திட்டத்தை மெம்படுத்தும் நோக்கில் பாடசாலைகளுக்கான நடமாடும் விஞ்ஞான கூட உபகரண பொதிகளை வழங்குவதற்கு 2016ம் ஆண்டு வரவு – செலவு திட்டத்தில் முன்மொமியப்பட்டது. அதற்கு உகந்த வழங்குனர்களை தெரிவு செய்யும் நோக்கில் தேசிய மட்டத்திலான கேள்வி மனுக்கோரலின் அடிப்படையில் பெறப்பட்ட விலை மனுக்களினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் பெறுகைக் குழுவின் சிபார்சின் அடிப்படையில் ஆராய்ந்து உரிய அடிப்படையில் பாடசாலைகளுக்கான நடமாடும் விஞ்ஞான கூட உபகரண பொதிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
30. 2016ம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் (விடய இல. 85)
2016ம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையினை தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
31. புதிய உள்நாட்டு வருமானச் சட்டம் (விடய இல. 86)
காலத்திற்கு ஏற்றாற் போல் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய உள்நாட்டு வருமானச் சட்டமூலத்தினை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் கௌரவ நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.