01.தென் அதிவேக வீதியில் பொதுமக்கள் போக்குவரத்து பேரூந்துகளுக்காக அனுமதிப்பத்திரங்களை வழங்குதல் (விடய இல. 12)
தென் அதிவேக வீதியில் பொதுமக்கள் போக்குவரத்து பேரூந்துகளுக்காக அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் தற்போது பின்பற்றப்படுகின்ற முறை தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள உத்தரவுகள் மற்றும் சட்டமாதிபரின் ஆலோசனையின் அடிப்படையில் திருத்தம் செய்வதற்கும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் சட்டத்தில் குறித்த உறுப்புரையை திருத்தம் செய்வதற்கும், காலி வீதியில் போக்குவரத்துச் செய்யும் பேரூந்து உரிமையாளர்களுக்கு இது குறித்த முன்னுரிமையினை வழங்கி தென் பிராந்திய அதிவேக நெடுஞ்சாலைக்காக திரும்பவும் கேள்விப்பத்திரங்களை அழைப்பதற்கும் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. மாத்தறை 'ஆற்றங்கரையோரப் பூங்காவின்' அபிவிருத்தி (விடய இல. 14)
மாத்தறை 'ஆற்றங்கரையோரப் பூங்காவின்' அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வாசிகசாலை ஒன்றை அமைத்தல், விளையாட்டரங்கு ஒன்றை நிர்மாணித்தல், நீரினை அண்மித்த வீட்டு அபிவிருத்தி நடவடிக்கைகள், அலுவலகம் மற்றும் நிர்வாக அபிவிருத்தி நடவடிக்கைகள், தேசிய உற்சவங்களுக்காக மத்திய நிலையம் ஒன்றை நிர்மாணித்தல், படகு போக்குவரத்து வசதிகளுடன் கூடிய ஆற்றினை மையமாகக் கொண்ட விளையாட்டுக்களை மேம்படுத்தல் மற்றும் வாகன தரிப்பிடங்களை அமைத்தல் போன்றவை மேற்கொள்ளப்படுவதுடன், அதன் முதற்கட்டமாக ஆற்றுக்கரை மண்சரிவை தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக தற்போது உரித்தாக்கப்பட்டுள்ள இடங்களின் உரிமையினை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கைமாற்றிக் கொள்வதற்கும், வேலைத்திட்டத்தின் இறுதியில் அதன் செயற்பாடுகள் மற்றும் பேணுகைக்காக மாத்தறை மாநகர சபைக்கு கையகப்படுத்துவதற்குமாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்கள் மற்றும் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. இலங்கை சர்வதேச தொடர்புகள் மற்றும் திறமுறை கற்கைகளுக்கான லக்ஷ;மன் கதிர்காமர் நிறுவகத்திற்கும் நேபாளம் உலக அலுவல்கள் மன்றத்திற்குமிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடல் (விடய இல. 15)
உரிய துறைகளில் தமது அனுபவங்களை பரிமாறிக் கொள்ளும் நோக்கில் இலங்கை சர்வதேச தொடர்புகள் மற்றும் திறமுறை கற்கைகளுக்கான லக்ஷ;மன் கதிர்காமர் நிறுவகத்திற்கும் நேபாளம் உலக அலுவல்கள் மன்றத்திற்குமிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விவசாயப் பீடத்தை விரிவு படுத்துவதற்காக அருகில் அமைந்திருக்கும் காணியை சுவீகரித்துக் கொள்ளல் (விடய இல. 17)
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விவசாயப் பீடத்தை விரிவு படுத்துவதற்காக தற்போது சுவீகரித்துக் கொள்ளப்பட்டுள்ள அருகில் அமைந்திருக்கும் 3.6 ஹெக்டேயார் காணியை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நிதியினை பெற்றுக் கொள்வது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. பொது போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக பேரூந்து சேவைகளை மேம்படுத்துதல் (விடய இல. 23)
2017ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் திகதி முதல் 23ம் திகதி வரையான காலப்பகுதியினுள் பாராளுமன்ற வீதியில் ராஜகிரிய சந்தியிலிருந்து ஆயுர்வேத சந்திவரை கொரியா சர்வதேச இணைவாக்க முகாமையகத்தின் தொழில்நுட்ப உதவியினை பெற்று முன்னோடி பேரூந்து போக்குவரத்து கருத்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இவ்ஒத்திகை சிறந்த முறையில் திட்டமிடப்பட்டதுடன், பெறுபேறுகள் அறிவியல்சார் செயல்முறை கையாளுவதன் மூலம் அளவிடப்பட்டன. மேலும் பொது போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள இலகு ரக புகையிரத போக்குவரத்து மற்றும் புகையிரத இலத்திரனியல் மயப்படுத்தல் ஆகிய வேலைத்திட்டங்களை முடிப்பதற்கு இன்னும் பல ஆண்டுகள் செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், துரித தீர்வொன்றாக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்மொழியப்பட்ட பின்வரும் தீர்வுகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
• அலுவலக நேரங்களில் கீழ்க்காணும் வீதிகளில் பேரூந்து போக்குவரத்துக்கு முன்னுரிமை ஊடுவழியினை அமைத்தல்,
- காலி வீதியில், மொரடுவையிலிருந்து இரத்மலானை வரை மற்றும் வெல்லவத்தை பாலத்திலிருந்து கொல்லுபிட்டிய வரை கொழும்பை நோக்கி பயணிக்கும் பேரூந்துகளுக்கான முன்னுரிமை ஊடுவழி
- பாராளுமன்ற வீதியில், பாராளுமன்ற சந்தியிலிருந்து ராஜகிரிய, பொரளை, மருதானை மற்றும் புறக்கோட்டையினூடாக கொழும்பு கோட்டை வரை கொழும்பை நோக்கி பயணிக்கும் பேரூந்துகளுக்கான முன்னுரிமை ஊடுவழி
- கொழும்பு, சித்தம்பலம் ஏ. காடினல் மாவத்தையிலுள்ள விமானப்படை சந்தியிலிருந்து புறக்கோட்டை வரை கொழும்பை நோக்கி பயணிக்கும் பேரூந்துகளுக்கான முன்னுரிமை ஊடுவழி
- துங்முல்ல சந்தியிலிருந்து நூதனசாலை சந்திவரை கொழும்பை நோக்கி பயணிக்கும் பேரூந்துகளுக்கான முன்னுரிமை ஊடுவழி
- நகர மண்டபத்திலிருந்து துங்முல்ல சந்தி வரை கொழும்பிலிருந்து வெளியில் பயணிக்கும் பேரூந்துகளுக்கான முன்னுரிமை ஊடுவழி
• பாரம்பரிய பேரூந்துகள் மற்றும் முச்சக்கர வண்டி இறக்குமதி செய்வதற்காக வரிச்சலுகை வழங்குவதற்கு பதிலாக, சலுகை கடன் முறையின் மூலம் டுழற குடழழச அடங்கிய காற்று சீரமைப்பினைக் கொண்ட போக்குவரத்து பேரூந்து இறக்குமதியினை விருத்தி செய்தல்.
• பேரூந்துகளில் இலத்திரனியல் அட்டைகளை பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் முறைமையினை அறிமுகம் செய்தல்
• முச்சக்கர வண்டிகள், வாடகை வண்டிகளுக்கான தரிப்பிடங்களை நவீனமயப்படுத்தல்.
06. வரட்சி நிலைமைக்கு முகங்கொடுப்பதற்காக உலர் வலயங்களில் விவசாயக் கிணறுகளைப் புனரமைத்தல் (விடய இல.26)
வரட்சி நிலைமைக்கு முகங்கொடுப்பதற்காக உலர் வலயங்களில் காணப்படும் 14 மாவட்டங்களிலுள்ள விவசாயக் கிணறுகளைப் புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. எல்லங்கக் கிராமியக் குளங்கள் முறைமையை மேம்படுத்துதல் (விடய இல. 27)
எல்லங்கக் கிராமியக் குளங்கள் முறைமையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவு இணங்கண்டறிந்த கிராமியக் குளங்கள் முறைமையினுள் அடங்கும் 21 குளங்கள் மற்றும் அந்த முறைமையின் கீழ் காணப்படும் 258 கிராமியக் குளங்கள், அவற்றுடன் இணைந்த சுற்றாடல் ஆக்கக் கூறுகளை அடுத்து வரும் 05 வருட காலப்பகுதியினுள் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினால், கமநல அமைப்புக்களின் பங்களிப்புடன் செயற்படுத்துவது தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. 2016ம் ஆண்டு வரவு - செலவுத்திட்ட முன்மொழிவுகளின் பிரகாரம் இலங்கைப் பொலிஸ் சேவையின் சம்பள அதிகரிப்புக்குரிய மேலதிக நிதியை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 32)
2016ம் ஆண்டு வரவு - செலவுத்திட்ட முன்மொழிவுகளின் பிரகாரம் இலங்கைப் பொலிஸ் சேவையின் சம்பள அதிகரிப்புக்குரிய 1,042 மில்லியன் ரூபா மேலதிக நிதியை பெற்றுக் கொள்வது தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
09. கொகரல்ல பொலிஸ் நிலையத்தை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தின் கால எல்லையை நீடித்தல் (விடய இல. 33)
கொகரல்ல பொலிஸ் நிலையத்தை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தின் மிகுதி வேலைகளை செய்து முடிப்பதற்கு தேவையான நிதியினை பெற்றுக் கொள்வதற்கும், குறித்த கருத்திட்டத்தின் கால எல்லையை நீடிப்பது தொடர்பிலும் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10.இலங்கை ஹதபிம அதிகார சபையின் விடயப்பரப்பை விஸ்தரித்தல் மற்றும் புதுப்பித்தல் (விடய இல. 34)
இலங்கை ஹதபிம அதிகார சபையின் விடயப்பரப்பை புதுப்பிப்பதன் அவசியம் தொடர்பில் ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவின் சிபார்சுகளை செயற்படுத்தி, அவ்வதிகார சபையின் பணிகளை நாடு பூராகவும் விஸ்தரிப்பது தொடர்பில் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11.இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் கட்டிடங்களுக்கான ஒப்பந்தப் பணிகளை ஒப்படைத்தல் (விடய இல. 35)
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் கட்டிடங்களுக்கான ஒப்பந்தப் பணிகளை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையான பெறுகைக் குழுவின் சிபார்சின் பெயரில் ஒப்படைப்பது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12.துறைமுகத்தினையும் முன்மொழியப்பட்ட விசேட கைத்தொழில் வலயத்தினையும் உள்ளடக்கி அம்பாந்தோட்டையில் ஒருங்கிணைக்கப்பட்ட நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் திட்டம் பற்றிய சாத்திய வள ஆய்வொன்றினை நடாத்துதல் (விடய இல. 36)
துறைமுகத்தினையும் முன்மொழியப்பட்ட விசேட கைத்தொழில் வலயத்தினையும் உள்ளடக்கி அம்பாந்தோட்டையில் ஒருங்கிணைக்கப்பட்ட நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் திட்டம் பற்றிய சாத்திய வள ஆய்வொன்றினை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப மற்றும் நிதி வசதிகளை சைனா ஹெவி மெசினறி நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்கும், அவ்வாய்வின் முடிவுகளின் படி குறித்த வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்காக சுவிஸ் செலேன்ஜ் செயன்முறையில் ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவு செய்வதற்கும் நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. பௌத்த அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு தேவையான சீரூடைத் துணிகளைக் (சாரி) கொள்வனவு செய்தல் - 2017 (விடய இல. 38)
2017ம் ஆண்டுக்காக பௌத்த அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு தேவையான 72,000 சீரூடைத் துணிகளைக் (சாரி) புடவைக் கைத்தொழில் திணைக்களத்திடமிருந்து நேரடியாக கொள்வனவு செய்வது தொடர்பில் புத்தசாசன அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. 2017ம் ஆண்டுக்கான அரசாங்க கடன்பெறல் நிகழ்ச்சித் திட்டத்தினைச் செயற்படுத்துவதற்காக இலங்கை அபிவிருத்தி முறிகளை விடுவித்தலின் அளவை அதிகரித்தல் (விடய இல. 44)
2017ம் ஆண்டுக்கான அரசாங்க கடன்பெறல் நிகழ்ச்சித் திட்டத்தினைச் செயற்படுத்துவதற்காக இலங்கை அபிவிருத்தி முறிகளை விடுவித்தலின் அளவை 1,500 மில்லியன் ஐக்கிய அமெரிக்கா டொலரிலிருந்து 3,000 ஐக்கிய அமெரிக்க டொலர் வரை அதிகரிப்பது தொடர்பில் நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. ஐக்கிய நாடுகள் அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச வெசாக் பண்டிகைத் தினத்தை முன்னிட்டு நடைபெறும் கலாசார நிகழ்ச்சித்திட்டம் (விடய இல. 45)
ஐக்கிய நாடுகள் அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச வெசாக் பண்டிகைத் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மே மாதம் 12ம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஒரு கலை நிகழ்ச்சியும், மே மாதம் 13ம் திகதி தாமரைத் தடாகத்தில் ஒரு கலை நிகழ்ச்சியும் நடாத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ எஸ்.பி. நாவின்ன அவர்களினால் அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டது.
16.பிலியந்தலை கஹபொலயில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பௌத்த மத்திய நிலையக் கட்டிடம் (விடய இல. 46)
சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு புத்தசாசன அமைச்சு மற்றும் லைட் ஒப் ஏஷpயா நிறுவனம் இணைந்து பிலியந்தலை கஹபொலயில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மாதிரி சாக்கிய நகரத்தின் நிர்மாணப்பணிகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. அதற்காக 500 மில்லியன் ரூபா நிதியினை முதலிடுவதற்கு குறித்த நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. குறித்த வேலைத்திட்டத்தின் முதற் கட்ட நிர்மாணப்பணிகளை சர்வதேச வெசாக் தினத்தில் நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் புத்தசாசன அமைச்சு மற்றும் லைட் ஒப் ஏஷpயா நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் புத்தசாசன அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் போது ஒத்துழைப்பினை வழங்குதல் தொடர்பில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 50)
பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் போது ஒத்துழைப்பினை வழங்குதல் தொடர்பில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இரு நாடுகளும் இணைந்து செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் முறையான ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கு முன்னர் குறித்த தரப்பினரை நன்கு விசாரித்து உரிய ஒவ்வொரு அமைச்சின் மூலமும் வேறு வேறாக அமைச்சரவை பத்திரம் ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டும் என அமைச்சரவையின் கவனத்திற் கொண்டு வரப்பட்டது.
18. இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பாக முன்மொழியப்பட்ட சட்டத்திற்கான கொள்கை மற்றும் சட்ட வரைவு (விடய இல. 52)
பாதுகாப்பு அமைச்சரின் மேற்பார்வை மற்றும் ஏனைய அமைச்சர்களின் கருத்துக்களை கவனத்திற் கொண்டு, திருத்தியமைக்கப்பட்ட இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட சட்டத்திற்கான கொள்கை மற்றும் சட்ட வரைவு கௌரவ பிரதமர் அவர்களினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதுடன் அதற்கு அமைச்சரவையின் அனுமதிப்பதற்கும், குறித்த கொள்கை மற்றும் சட்ட வரைபின் அடிப்படையில் இலங்கை பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட சட்டத்தினை வரைவதற்கு சட்டமாதிபருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்தது.
19. கொழும்பு மாநகர சபையின் கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்துவதற்காக சுகாதார முறையிலான குப்பை நிரப்பும் நிலத்தை நிர்மாணித்தல் (விடய இல. 53)
கொழும்பு மாநகர சபையின் கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்துவதற்காக சுகாதார முறையிலான குப்பை நிரப்பும் நிலத்தை நிர்மாணிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாகாண சபைகள் மற்றம் உள்ளூராட்சி அமைச்சு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு, மாநகர சபைகள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு போன்ற அமைச்சுக்களின் செயலாளர்களை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பேராதெனிய பல்கலைக்கழகத்தின் கழிவு முகாமைத்துவ ஆய்வுப்பிரிவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கவனத்திற் கொண்டு, வத்தளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உஸ்வெடிகெய்யாவ, முதுராஜவெல பிரதேசத்திலுள்ள அரசாங்கத்துக்கு சொந்தமான 05 ஏக்கர் நிலப்பகுதியில் நாளொன்றுக்கு 400 மெட்ரிக் தொன் அளவிலான கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்துவதற்காக சுகாதார முறையிலான குப்பை நிரப்பும் நிலத்தை நிர்மாணிப்பதற்கு சிபார்சு செய்யப்பட்டது. 2017ம் ஆண்டுக்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை பயன்படுத்தி குறித்த வேலைத்திட்டத்தை துரித கதியில் மேற்கொள்வது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பைசல் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. கொழும்பு மற்றும் அண்மித்துள்ள பிரதேசங்களில் நகர அலங்காரத்தை முறையாக பேணுவதற்கு செயற் படையையும், தொழிற்பாட்டு அலுவலகத்தையும் ஸ்தாபித்தல் (விடய இல. 54)
கொழும்பு மற்றும் அண்மித்துள்ள பிரதேசங்களில் அமைந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களினால் மேற்கொள்ளப்படும் முறையற்ற கழிவு முகாமைத்துவத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்சினையினை கவனத்திற் கொண்டு, அது தொடர்பில் நேரடியாக சம்பந்தப்படுகின்ற நிறுவனங்களை உள்ளடக்கி, நகர அலங்காரத்தை முறையாக பேணுவதற்கு செயற் படையையும், தொழிற்பாட்டு அலுவலகத்தையும் ஸ்தாபிப்பதற்கும், அதன் மூலம் பொதுமக்களை அறிவுறுத்துவதற்கும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பைசல் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. கண்டி, கொஹகொட கழிவுப் பொருட்கள் அகற்றப்படும் இடத்தை அண்மித்து கொம்போஸ்ட் உரத்தை/ மின்சக்தியை உற்பத்தி செய்யும் கருத்திட்டம் (விடய இல. 55)
கண்டி, கொஹகொட கழிவுப் பொருட்கள் அகற்றப்படும் இடத்தை அண்மித்து கொம்போஸ்ட் உரத்தை/ மின்சக்தியை உற்பத்தி செய்யும் கருத்திட்டத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அவ்வவ் பிரதேசங்களில் வாழும் பொதுமக்களை நட்டஈடு வழங்கி அவ்விடத்திலிருந்து வெளியேற்றவும், இவ்வேலைத்திட்டத்தினால் பெறப்படுகின்ற மின்சார்தை குறித்த முறையில் இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கு தேவையான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கும் கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22. மீத்தொடமுல்ல மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள குப்பை மேடு சரிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் பாதிப்புக்கு உள்ளான பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குதல் (விடய இல. 56)
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் மற்றும் குறித்த அமைச்சர்கள் அரச அதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றலுடன் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16,19 மற்றும் 21ம் திகதிகளில் இடம்பெற்ற கூட்டங்களின் பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மக்களுக்காக வீடுகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டமொன்றை அரசாங்கத்தினால் மேற்கொள்வதற்கும், அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்காக 03 மாதங்களுக்கு உள்ளடங்கும் வகையில் மாதாந்தம் 50,000 ரூபா வீதம் வீட்டு வாடகை கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதற்கும், நிரந்தர வீடுகளில் குடியேறுவதற்கு செல்லும் குடும்பங்களுக்காக போக்குவரத்து செலவுகளை பெற்றுக் கொள்வதற்கும், தற்போது நலன்புரி நிலையங்களில் வசிக்கும் குடும்பங்களுக்காக, அவர்கள் நிரந்தர வீடுகளில் குடிபோகும் வரை உலர் உணவுகள் மற்றும் இதர சலுகைகளை பெற்றுக் கொடுப்பதற்கும், பாதிப்புக்கு உள்ளான வீடுகளுக்கு தேவையான வீட்டு உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி 250,000 ரூபா நிதியுதவியினை செய்வதற்கும், பாதிப்புக்கு உள்ளான பாடசாலை சிறுவர்களுக்கு தேவையான சீருடைகள், பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாடசாலை பாடப்புத்தகங்கள் என்பவற்றை பெற்றுக் கொடுப்பதற்கும், குறித்த பகுதியை அனர்த்த எச்சரிக்கை வலயமாக வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
23. 2013ம் ஆண்டு 02ம் இலக்க குற்றவியல் வழக்கு கோவை (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்திருத்தம் - (கைதிகளின் உரிமைகள் - சட்ட ஆலோசனை பெறல்) - (விடய இல. 57)
2013ம் ஆண்டு 02ம் இலக்க குற்றவியல் வழக்கு கோவை (சிறப்பு ஏற்பாடுகள்) சட்ட மூலத்தை வர்த்தமானியில் பிரசுரித்து அதனை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. குறித்த சட்டத்தில் மேலும் திருத்தங்களை மேற்கொண்டு கைதிகள் சட்ட ஆலோசனை பெறுவதை மேலும் முறைமைப்படுத்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதன் போது பிரேரிக்கப்பட்டுள்ள திருத்தங்களை பாராளுமன்ற செயற்குழு கூடலின் போது உள்ளடக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையின் கவனத்திற் கொள்ளப்பட்டது.
24. பாணந்துரை மற்றும் பகலயகொட வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிலையத்தை ஸ்தாபித்தல் (விடய இல. 58)
பாணந்துரை வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிலையத்தை 370 மில்லியன் ரூபா செலவில் ஸ்தாபிப்பதற்கும், பகலயகொட வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிலையத்தை 170 மில்லியன் ரூபா செலவில் ஸ்தாபிப்பதற்கும், குறித்த வேலைத்திட்டம் தொடர்பான ஆலோசனை சேவையினை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு ஒப்படைப்பதற்கும் திறன்கள் அபிவிருத்தி மற்றம் வாழ்க்கைத்தொழில் பயிற்சி அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
25. கொழும்பு தேசிய நெடுஞ்சாலைகள் கருத்திட்டத்தின் 1ம் கட்டத்தின் கீழ் ஒருகொடவத்தை – அம்பத்தலே வீதியினை புனரமைத்தல் (விடய இல. 59)
சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்தின் மூலம் நிதியளிக்கப்படுகின்ற கொழும்பு தேசிய நெடுஞ்சாலைகள் கருத்திட்டத்தின் 1ம் கட்டத்தின் கீழ் ஒருகொடவத்தை – அம்பத்தலே வீதியினை 2.90 கி.மீ லிருந்து 4.20 கி.மீ மற்றும் 5.44 கி.மீ லிருந்து 7.70 கி.மீ வரையிலான வீதிப் பிரிவுகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக் குழுவின் சிபார்சின் பெயரில் முழஅரவாi – ர்ஊஆ நுபெiநெநசiபெ துஏ நிறுவனத்திற்கு வழங்குவதற்கு உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
26. பின்னவல யானை சரணாலயம் மற்றும் மிருக காட்சிசாலையில் வசிக்கும் யானைகளை தகுதிவாய்ந்த நபர்களுக்கு மற்றும் மத ஸ்தலங்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல் (விடய இல. 66)
பின்னவல யானை சரணாலயம் மற்றும் மிருக காட்சிசாலையில் வசிக்கும் யானைகளை தகுதிவாய்ந்த நபர்களுக்கு மற்றும் மத ஸ்தலங்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கும், அதற்கான நிபந்தனைகள் அடங்கிய விதிமுறைகளை வெளியிடுவதற்கும், தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களத்தின் கீழ் முகாமைத்துவம் செய்யப்படும் யானைகளிலிருந்து பெரஹெரவுக்காக பெற்றுக் கொடுப்பதற்கும், யானைகளின் பதிவுகளை முறையாக மேற்கொள்வதற்கும், பாதுகாப்பு வழங்குவது தொடர்பான நிபந்தனைகள் அடங்கிய விதிமுறைகளை வெளியிடுவதற்கும் நிலையான அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பேரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.