செய்தி வெளியீடு

 2019.01.29 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்:

01. நீர் வழிகள் ஊடாக கரையோரத்திலும் கடலிலும் சேரும் கழிவு பொருட்களை கட்டுபடுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 8ஆவது விடயம்)
கரையோரத்துக்கும் கடலிலும் சேரும் 90 சதவீதமான கழிவுப் பொருட்கள் தரைப்பகுதியில் இடம்பெறும் மனிதர்களின் செயற்பாடு மற்றும் கைத்தொழில் துறைகளே காரணமாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு இவற்றுடன் சமூக பொருளாதார மற்றும் பயன்பாடு பிரச்சனைகள் உருவாகியுள்ளன. கரையோரத்தின் தரத்தை உறுதிசெய்வதற்காக சர்வதேச தர ரீதியில் கருதப்படும் டென்மார்க்க சுற்றாடல் மதிப்பீடு தொடர்பான அடிப்படையின் மூலம் வெளியிடப்படும் டீடரந கடயபள சான்றிதழை இலங்கையின் கரையோரப்பகுதிக்காக பெற்றுக்கொள்வதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதே போன்று இந்த நாட்டின் சுற்றுலா தொழிற்துறைக்கு கரையோரம் மற்றும் கடலை அண்டிய பிரேதசங்களின் மூலம் 70சதவீதமான பங்களிப்பு வழங்கப்படுவதனால் உலகில் சிறந்த சுற்றுலா தொழிற்துறையாக இலஙகைக்கு கிடைத்தள்ள தரத்தை பாதுகாத்து 2020ஆம் ஆண்டளவில் 4மில்லியன் சுற்றுலா பயணிகளை கவரும் இலக்கை பூர்த்தி செய்வதற்கு சுத்தமான கரையோரம் மற்றும் சமுத்திரத்தை முன்னெடுப்பது தேவையாக உள்ளது. இதற்கமைவாக நீர்வழிகள் மாசடையாமல் சுத்தமாக முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்களை மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் என்ற ரீதியில் மேதகு ஜனாதிபதி அவர்கள் முன்வைத்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. மர தயாரிப்புக்களுக்காக வன அபிவிருத்தி –(நிகழ்ச்சி நிரலில் 9ஆவது விடயம்)
இலங்கையின் மரங்களின் தேவை வருடாந்தம் அதிகரித்து வருவதினால் அதற்கமைவாக மரங்களுக்காக தற்பொழுது உற்பத்தி செய்யப்பட்டுள்ள காட்டு உற்பத்திகள் மூலமான பயன்களை மேம்படுத்துவதற்காகவும் புதிய வன உற்பத்தியைமுன்னெடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதிய வன உற்பத்தியை மேற்கொள்வதற்காகவவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மற்றும் மன்னார் மாவட்டங்களில்500 ஹெக்டயர் நிலம் அடையாளங் காணப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மரங்களுக்கான கோரிக்கையை பூர்த்தி செய்வதற்கு மேலதிகமாக பிரதேச ரீதியில் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கும் வனவளத்தை மேம்படுத்துவதன் மூலம் உலகளாவிய வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கும் பங்களிப்பை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக மகாவலி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் என்ற ரீதியில் மேதகு ஜனாதிபதி அவர்கள் முன்வைத்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. வடக்கு மற்றும் கிழக்கு மகாணங்களில் மீள்குடியமர்வு பணிகளை துரிதமாக முன்னெடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 11ஆவது விடயம்)
மோதலின் காரணமானஅழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்வு பணிகள் நிலையான இயற்கை கழிவறை சுகாதார வசதிகள் நீர்விநியோகம் வீதிகள் மற்றும் மின்சார தொடர்புகள் போன்ற பொருளாதார அடிப்படை வசதிகள் கல்வி மற்றும் சுகாதார வசதிகளை நிறுவப்படுவதை துரிதமாக மேற்nhள்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக வீட்டுரிமையாளரினால் நிர்மாணப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய வீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் 4750 வீடுகளைக் கொண்ட வீட்டு அலகொன்றை நிர்மாணிப்பதற்கும் இந்த பிரதேசத்திற்கு தேவையான பொருளாதார சமூக அடிப்படை வசதிகளை மேமப்படுத்துவதற்கும் பனையுடன் தொடர்புபட்ட தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக திக்காமம் டிஸ்டிலரிஸ் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கும் கௌரவ பிரதமரும் தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறன் ஆறறல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. அரச நிறுவனங்களில் திட்டமிடுதல் மற்றும் முகாமைத்தவ அருங்கலை முறையாக அபிவிருத்தி பெறுபேறுக்கான முகாமைத்துவம் (MFDR) என்ற எண்ணக்கருவை பயன்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 12ஆவது விடயம்)
அபிவிருத்தி அடைந்த நாடுகளைப் போன்று அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலும் நவீன திட்டமிடல் மற்றும் முகாமைத்துவ அருங்கலை முறை அபிவிருத்தி பெறுபேறுக்காக முகாமைத்தவம் என்ற எண்ண்கருவில் அரச துறைகளில் முகாமைத்துவத்தை சுழற்சி முறையாக ஆக பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தேசிய பேண்தகு அபிவிருத்திஇலக்கிறகான முக்கிய பணியக புள்ளி சுட்டெண் இலக்கத்தை நோக்கி அரச முகாமைத்துவ பணி மேற்கொள்ளப்படுகிறது. அபிவிருத்தி பெறுபேறுக்கான முகாமைத்துவ செயற்பாட்டின் ஆரம்பமாக 5அமைச்சுக்கள் மற்றும் 2 மாகாண சபைகளுக்கான உத்தேச திட்டமாக நிறுவனமயப்படுத்துவதற்கும் இதன் வெற்றியின் அடிப்படையில் அனைத்து அரச நிறுவனங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த எண்ணக்கரு திட்டத்தை பயன்படுத்துவதற்hகக கௌரவ பிரதமரும் தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறன் ஆற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. பிராந்திய வணிக விமான பயணங்களை முன்னெடுப்பதற்காக பலாலி (காங்கேசன்துறை) விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 13ஆவது விடயம்)
சுற்றுலா தொழிற்துறையின் மேம்பாட்டுக்கான விமான போக்குவரத்தை முன்னெடுப்பதற்காக பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக நேர அட்டவணைக்கு அமைய சர்வதேச வர்த்தக பயணிகள் விமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பலாலி விமான நிலையத்தை பயன்படுத்தவதற்கும் பலாலி விமான நிலைய தேவையான அபிவிருத்தி பணிகளை 1950மில்லியன் ரூபா முதலீட்டுடன் இலங்கை விமானப் படையின் மூலம் துரிதமாக மேற்கொள்வதற்காக கௌரவ பிரதமரும் தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறன் ஆறறல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. கண்டி பல்லின போக்கலரத்து நிலையத்தை நிர்மாணிப்பதன் காரணமாக அழுத்தத்திற்குள்ளான நபர்களுக்கு நஷ்டஈடு வழங்கல் - (நிகழ்ச்சி நிரலில் 21ஆவது விடயம்)
மூலோபாய நகர அபிவிருத்தி திட்டத்தில் கண்டி பல்லின போக்கவரத்து முனைகளை Terminals அமைப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அடையாளங் காணப்பட்டுள்ளது. 11700 மில்லியன் ரூபா முதலீட்டுடன் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் மூலம் கண்டி நகரத்தின் மக்கள் வாழ்க்கையில் மற்றும் கலாசார உரிமையில் தரமானதாக அபிவிருத்தி செய்வதற்கு பங்களிப்பு செய்யக்கூடிய சுற்றாடலுக்கு பொருத்தமான போக்குவரத்து கட்டமைப்பொன்றை அமைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் காரணமாக இந்த பிரதேசத்திவ் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் அடங்கலாக சுமார் 820பேர் தமது வாழ்வாதாரத்தை இழப்பதாக அடையாளங் காணப்பட்டுள்ளது. இந்த தி;ட்டத்தின் காரணமாக பாதிக்கப்படும் நபர்களுக்கு செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகையை கணக்கிடுவதற்காக நியமிக்கப்பட்ட உரிமையை மதிப்பீடும் வேதியியல் மதிப்பீட்டுக் குழுவின் சிபாரிசுக்கமைய சம்மந்தப்பட்ட இழப்பீட்டை செலுத்துவதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. தேயிலை மற்றும் தெங்கு பெருந்தோட்ட துறைகளில் பலன்களை மேம்படுத்தவதற்hகாக வசதிகளை வழங்குதல் - (நிகழ்ச்சி நிரலில் 23ஆவது விடயம்)
சிறிய தேயிலைத் தோட்டம் மற்றும் தெங்கு தோட்டங்களினால் தொழிற்துறைக்கு மொத்த உற்பத்திக்கு வழங்கும் பங்களிப்பு கடந்த பல வருடங்களில் அதிகரித்து வருவதாக மதிப்பீடுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதுடன் இந்த பங்களிப்பை மேலும் மேம்படுத்தவதற்கு சாத்தியககூறு இரப்பதாக அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக சிறிய தேயிலைத் தோட்டம் தெங்கு தோட்டங்களின் உற்பத்திகளின் நன்மைகளை அதிகரிப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இதற்காக பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவுணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. விவசாய திணைக்களத்தின் விதை மற்றும் நடுவதற்கான பொருட்களை விநியோகிக்கும் கட்டமைப்பை நவீனமயப்படுத்தல் ( நிகழ்ச்சி நிரலில் 26ஆவது விடயம்)
நெல் ,மேலதிக உணவுப் பயிர் மற்றும் மரக்கறி வகைகளுக்கு உறுதிசெய்யப்பட்ட விதை மற்றும் நடுவதற்கான பொருட்கள் அபிவிருத்தி மத்திய நிலையத்தில் 27விதை பண்ணைகள் மூலமும் ஒப்பந்த அடிப்படையில் விதை உற்பத்தி வேலைத்திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படுகின்றது. இந்த விதைப்பண்ணைகளில் மேற்கொள்ளப்படும் உற்பத்தி செயற்பாடுகளுக்கான உரிய நீர்பாசன வசதி இல்லாமை இயந்திர உபகரணங்கள் இல்லாமை களஞ்சிய வசதி போதுமானதாக இல்லாமை , போக்குவரத்து வசதி இல்லாமை மற்றும் தேவையான வசதிகள் இல்லாததின் காரணமாக அடிப்படை விதைகளுக்கான தேவைக்கான இலக்கை பூர்த்தி செய்வது சிரமமாக உள்ளது. இதனால் விதை செயலாக்க இயந்திரமயம் மாஇழுப்பல்லம, அம்பாறை மற்றும் அலுத்தரம விவசாயப் பண்ணை ஆகியவற்றை ஒன்றிணைந்த விதை மற்றும் நாட்டும் பொருட்பளுக்கான கட்டமைப்பொன்றை அமைத்தல் பெல்வேஹர மற்றும் படஅத்த விவசாய பண்ணைகளுக்கு மேலதிக பயிர் உற்பத்தி விதைகளை தெரிவுசெய்வதற்கான புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை கொள்வனவு செய்தல் ரஹங்கல சீதாஎலிய படஅத்த மற்றும் அம்பாறை விவசாய பண்ணைகளில் நான்கு களஞ்சியசாலைகளை நிர்மாணித்தல் விதை மற்றும் நடும்; பொருள் அபிவிருத்தி மத்திய நிலையங்களில் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்துதல் விவசாயத்திற்கான நீர் விநிபோகத்தை விரிவுபடுத்துதல் போன்ற பணிகளை மேம்படுத்தவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்காக 335 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்காக விவசாய கிராம பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
09. பேண்தகு விவசாய அபிவிருத்தி மத்திய நிலையமொன்றினை அமைப்பதன் மூலம் உணவு பாதுகாப்பை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 28 ஆவது விடயம்)
மாகந்துரயில் அமைந்துள்ள இயற்கை விவசாயத்திற்கான விசேட கேந்திரத்தின் மூலம் இயற்கை விவசாய விவசாய தொழிற்துறை மற்றும் இயற்கை உரம் தொடர்பான ஆய்வு மற்றும் தொழில்நுட்பங்களை பரிமாறுவதுடன் மாகந்துர விவசாய ஆய்வு மற்றும் மத்திய நிலையத்தின் மூலம் பயி;ர் மேம்பாடு ஊக்குவித்தல் போசாக்கு போன்ற துறைகள் குறித்த ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்பொழுது சுற்றாடலுக்கு பொருத்தமான விவசாய அபிவிருத்தி மற்றும் ஆய்வு நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையமொன்றை அமைப்பதன் தேவை ஏற்பட்டிருப்பதினால அதற்கமைவாக இந்த 2 நிறுவனங்களையும் ஒன்றிணைத்த பேண்தகு விவசாய அபிவிருத்தி மத்திய நிலையத்தை அமைப்பதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக விவசாய கிராம பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. விதை மற்றும் நடும் பொருட்களின் தரத்தை உறுதிசெய்தல் (நிகழ்ச்சி நிரலில் 29ஆவது விடயம்)
தரமான விதை மற்றும் நடும் பொருள் பாவனை மூலம் அறுவடையை 15 – 20 சதவீதம் வரையிலான அளவில் மேம்படுத்த முடியும் என்று அடையாளங் காணப்பட்டுள்ளது. இதனால் இதற்கு தரமான விதை உற்பத்தியில் தேவையான உபகரணங்கள் மற்றும் சேவைகள் விவசாயிகளுக்கு வழங்குதல் புதிய தாவர வகை வளர்ச்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதி நடும் பொருட்களை பிரபலயப்படுத்தல் சந்தையில் விற்பனைக்குள்ள விதை மற்றும் பொருட்களின் தரத்தன்மையை உறுதிசெய்தல் தரமான நடும் பொருட்கள் உறபத்தி தொடர்பில் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களை தெளிவுபடுத்தவதற்கு ஊடக பிரசார முறையை பயன்படுத்துதல் மற்றும் நடும் பொருள் உற்பத்தி தொழிற்துறை பணிகளை விரிவுபடுத்துவதற்காக திட்டம் வகுக்கப்படும். இந்த பணிகளுக்காக தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு விவசாய கிராம பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம ;மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. 1980ஆம் ஆண்டு இலக்கம் 33 கீழான பூச்சிக்கொல்லிகளை கட்டுப்படுத்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் ஒழுங்குருத்தும் பொறிமுறையை வலுவூட்டல் (நிகழ்ச்சி நிரலில் 30ஆவது விடயம்)
இலங்கையில் பூச்சிக்கொல்லிகளை ஒழுங்குருத்தல் பணி 1994ஆம் ஆண்டு இலக்கம் 6 மற்றும் 2011ஆம் ஆண்டு இலக்கம் 31 சட்டங்களில் திருத்தம் 1980ஆம் ஆண்டு இல 33 பூச்சிக்கொல்லிகளை கட்டுப்படுத்துதல் சட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சட்டம் நடைமுறை ஆரம்பம் 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவிய சுமார் 70 வகையான பூச்சிக்கொல்லிகளின் எண்ணிக்கை தற்பொழுது சுமார் 700ஆக பாரிய அளவில் அதிகரித்துள்ளது. இதே போன்று தொழிற்துறையில் உலக ரீதியில் இடம்பெற்றுள்ள அளவு மற்றும் அபிவிருத்திககு; அமைவாக பூச்சிகொல்லிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஒழுங்குபடுத்த வேண்டும். இதற்கமைவாக பூச்சிக்கொல்லிகளில் அடங்கியுள்ள தரத்தன்மையை பாதுகாத்தல் உணவு பயிர்களுக்கு தேவையான ஒழுங்குருத்தலில் அவசியத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை வலுவூட்டுதல் தேசிய உணவு பாதுகாப்புத் தன்மை மற்றும் பாவணையாளர்களை பாதுகாப்பதற்காக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாதகமான வசதிகளை விரிவுபடுத்துதல் உலகளாவிய விவசாய தயாரிப்பு மேம்பாடு மற்றும் சிறந்த விவசாய நடைமுறையை பிரபல்யடுபத்துதல் விவசாய துறையில் பூச்சிக்கொல்லிகள் மாத்திரமின்றி அவை மற்றும் தொடர்புபட்ட ஏனைய துறைகளை உள்ளடக்கும் வகையில் ஒழுங்குறுத்தல் நடைமுறையை விரிவுபடுத்தல் தேவையான தரவுக்கட்டமைப்பை கட்டியெழுப்புதல் நிர்வாக கட்டமைப்பை வலுவூட்டல் பணிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக விவசாய கிராம பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் சமர்ப்பித்தஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. தேசிய அளவில் விஞ்ஞான ஆய்வு கூடமொன்றை அமைப்பதன் மூலம் உணவு பாதுகாப்பை மேம்படுத்துதல் ( நிகழ்ச்சி நிரலில் 31ஆவது விடயம்)
இரசாயன உரம் இஙற்கை உரம் மற்றும் கிருமிநாசினி ஆகியவற்றை பயன்படுத்தும் தன்மை மற்றும் மேலதிக பயன்பாடு ஒழுங்குறுத்தல் உணவு மண் மற்றும் நீர்த்தேவை மற்றும் கழிவு மட்டம் மதிப்பிடுவதற்கும் நவீன வசதிகளைக் கொண்ட விஞ்ஞான ஆய்வுக் கூடமொன்றை அமைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்மைவாக விஞ்ஞன கூடம் மற்றும் உபகரணங்கள் வசதிகளை வழங்குவதற்கு இதன் மூலம் பரிசோதனை ஆய்வை. மேம்படுத்துதல் மற்றும் தரத்தை உறுதிசெய்வதற்கும் விவசாய பயன்பாடுகள் மற்றும் முறையாக பயன்படுத்தல் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்கும் விவசாய இரசாயன பொருள் மற்றும் உரப்பாவணை மற்றும் விநியோகித்தல் முறை பயிற்சியை வழங்குவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக விவசாய கிராம பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் சமர்ப்பித்தஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. இருதரப்பு விமான சேவை உடன்படிக்கையை எட்டுதல் நிகழ்ச்சி நிரலில் இல 40,43,44,45)
விமான சேவை பணிகள் தொடர்பில் சர்வதேச புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கில் ஆப்கானிஸ்தான் கட்டார் இஸ்ரேல் மற்றும் சிம்பாபே ஆகிய நாடுகளுடன் இலங்கையருக்காக அதிகார மட்டத்தில் உடன்பட்டுள்ள விமான சேவை உடன்படிக்கைகளில் அதிகார பிரதிநிதியினால் கையெழுத்திடவும் அதன் பின்னர் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பங்களிக்கும் வகையில் இந்த இருதரப்பு விமான சேவை உடன்படிக்கையை முன்னெடுபதற்கும் போக்குவரத்து விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கள அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. 1978 இலக்கம் 2இன் கீழான நீதிமன்ற அமைப்பு சட்டத்தில் 45ஆவது சரத்தை திருத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 49ஆவது விடயம்)
1978 இலக்கம் 2 இன் கீழான நீதிமன்ற அமைப்பு சட்டத்தின் 45ஆவது சரத்துக்கமைய ஏதேனும் காலம் மாவட்டம் அல்லது தொகுதிக்காக சமாதான நீதவான்களை நியமிக்கும் அதிகாரத்தை நீதிமன்ற விடயத்திற்கு பொருப்பான அமைச்சருக்கு வழங்குதல் இதற்கமைவாக இதன் பதவிக்கு நியமிக்கப்படுபவரின் குடியிருப்பை கவனத்தில கொண்டு பொருத்தமான வகையில் ஏதேனும் நீதிமன்ற வலய அல்லது மாவட்டம் அல்லது தொகுதி ஒன்றில் சேவை மேற்கொள்ளக்கூடிய வகையில் சமாதான நீதவான்கள் நியமிக்கப்படுவர். இருப்பினும் அடிக்கடி நீதிமன்ற வலயம் மாற்றப்படுவதன் காரணமாக சமாதான நீதவான்கள் தமது நீதிமன்ற வலயங்களை அடையாளங் காண்பதில் ஏற்படும் சிரமங்களை கவனத்தில் கொண்டு நீதிமன்ற வலயத்திற்கு மாவட்டத்திற்கு அல்லது தொகுதிக்கு சமாதான நீதிவான்களை நியமிப்பதற்கு பதிலாக நிர்வாக மாவட்டத்திற்காக சமாதான நீதிவான்களை நியமிக்க கூடிய வகையில் 1978ஆம் ஆண்டு இலக்கம் 2 இன் கீழான நீதிமன்ற செயற்பாட்டு சட்டத்தின் 45 ஆவது சரத்தை திருத்துவதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக திருத்த சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ள திருத்தத்தை வர்தமானியில் வெளியிடுதல் மற்றும் அதன் பின்னர் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. களனி கல்வி வலயத்தில் தமிழ் மொழி தேசிய பாடசலையொன்றை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 55ஆவது விடயம்)
கம்பஹா வத்தளை பிரதேசத்தில் வாழும் தமிழ் மொழியில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தவதற்காக அருண் பிரசாத் அமைப்பினால் கல்வி அமைச்சிடம் பரிசு உறுதிபத்திரத்தின் மூலம் வழங்குவதற்கு உள்ள சொத்தை பயன்படுத்தி அருண் மாணிக்க வாசகம் இந்து வித்தியாலம் என்ற பெயரில் தமிழ் மொழி இந்து இன மக்களுக்காக பாசாலை யொன்ற களனி கல்வி வலயத்தில் அமைப்பதற்காக தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழி சமூக மேம்பாடு இந்து மத அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. முக்கியத்துவத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய வடக்கு மற்றும் ழக்கு வீதி அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 59ஆவது விடயம்)
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்வோரின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்;படுத்தி அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக அந்த பிரதேசங்களில் வீட்டு கட்டமைப்பை புனரமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாட்டு குழுவின் சிபாரிசுக்கமைய வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான வீதிகளை புனரமைப்பதற்கான ஒப்பந்தம் சீர்சி – நேம் கூட்டு வர்த்தகத்திடமும், வடக்கு மாகாண உள்ளுராட்சி மன்ற திணைக்களத்திற்கு சொந்தமான வீதிகளை புனரமைப்பதற்கான ஒப்பந்தம் வரையறுக்கப்பட் கேடீர் வீரசிங்க மற்றும் தனியார் நிறுவனத்திற்கும் கிழக்கு மாகாணத்த்pலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்ட வீதிகளை புனரமைக்கும் ஒப்பந்தம் ஆலோசனை பொறியியலாளர் மற்றும்; தனியார் நிறவனத்திடமும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு உட்பட்ட வீதிகளை புனரமைப்பதற்கான ஒப்பந்தம் நவலோக் கன்ஸ்ட்ரக்ஷன் தனியார் நிறவனத்திற்கும்; கிழக்கு உள்ளுராட்சி மன்றத்தக்கு உட்டபட்ட வீதி புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தை வரையறுக்கப்பட்ட சீனோ ஐக்ரோ கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்காக கௌரவ பிரதமரும் தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறன் ஆறறல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. களனி ஸ்ரீ ஜயவர்தனபுர சபரகமுவ மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகங்களில் வசதிகளை அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 61ஆவது விடயம்)
உயர்கல்வி துறையில் தரத்தை மேலும் மேம்படுத்தவதற்காக பல்கலைக்கழகங்களில் அபிவிருத்தி வசதிகளை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஐந்து மாடி தங்குமிட கட்டிடமொன்றை நிர்மாணித்தல், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தில் 7 மாடிகளைக்கொண்ட பல செயற்பாடு கட்டிடமொன்றை நிர்மாணிக்கும் திட்டத்தின் முதலாவது கட்டமாக அங்கு 3 மாடிகள் அமைக்கப்படவுள்ளன. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்திற்காக பீட கட்டிடமொன்றை நிர்மாணிக்கும் திட்டத்தின் முதலாவது கட்டம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் விரிவுரை மண்டப கட்டிடம் மற்றும் இங்கு பொறியியல் பீடத்தின் பல்லின செயற்பாடு கட்டிடமொன்றை நிர்மாணிக்கப்பட்டு வரும் பணிகளை; நடைமுறைப்படுத்தும் பொருட்டு நகர திட்டமில் நீர்வநியோகம் மற்றம் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. ஹொரண பாதுக்கை மற்றும் அபரண வாழைச்சேனை நீர் Transmission வலைப்பினலை ; மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 63ஆவது விடயம்)
இலங்கை மின்சாரசபைக்கு உட்பட்ட Transmission வலைப்பின்னலை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் பசுமை எரிசக்தி அபிவிருத்தி மற்றும் மின்சக்தி தொழிற்துறையின் அடிப்படையில் மேம்படுத்துவதற்கான முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் ஹொரண பாதுக்கை இடையில் 25 கிலோமீற்றர் Transmission நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் ஹபரண – வாழைச்சேனைக்கிடையில் வுசயளெஅளைளழைn கொண்ட 2 கட்டமைப்புக்களை மேட்கொள்வதற்கான ஒப்பந்தம் ஆஃ ள ஊhiயெ யேவழையெட நுடநஉவசiஉ நுபெiநெநசiபெ உழ. டுவன நிறவனத்திடம் வழங்கப்படவுள்ளது. இதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் சமர்ப்பித்தஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. தேசிய Transmission மற்றும் விநியோகிக்கும் கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் வலைப்பின்னல் . மேம்படுத்தும் திட்த்தின் கீழ் அதற்கானவற்றை நிர்மாணித்தல் மற்றும் வலுவை மேம்படுத்தவதற்கான ஒப்பந்தம் (நிகழ்ச்சி நிரலில் 64ஆவது)
மின்கட்டமைப்பில் Transmission மற்றும் விநியோக கட்டமைப்பை அபிவிருத்தி செயல்திறன் அடிப்படையில் மேம்படுத்துதல் கூறுகள். 4இன் கீழ் நடைமுறைப்படுத்தவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 3ஆவது கூறு ரீதியில் திட்டமிடப்பட்டுள்ளவற்றை நிர்மாணித்தல் மற்றும் வலுவை மேம்படுத்துவதற்கான திட்ட ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டநிலையியற் பெறுகைக் குழுவின் M/ s China National Electric Engineering co. Ltd மற்றும் நிறுவனத்தினால் எட்டபட்ட கூட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் ; எரிசக்தி வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் சமர்ப்பித்தஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. லக்விஜய நிலக்கரி மின்அணுவில் நிலக்கரி பிரிவின் வலுவை மேம்படுத்துதல் ( நிகழ்ச்சி நிரலில் 20ஆவது விடயம்)
நுரைச்சோலையில் லக்விஜய நிலக்கரி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பிரிவில் நிலக்கரி பயன்பாடு 742421 மெட்ரிக்தொன் ஆவதுடன் இதன 3 மாத காலத்திற்கு நிலக்கரி தேவையை களஞ்சியப்படுத்துவதற்கான வசதி போதுமானதாகும் இதனை 6 மாதத்திற்கு தேவையான நிலக்கரி தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் விரிவுபடுத்துவதற்காக இதன் களஞ்சிய கொள்வனவை 1.21மெட்ரிக் தொன்களாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட் நிலையான பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய M/s China Machinery Engineering Corporation குழுமவிடம் வழங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் சமர்ப்பித்தஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு புதிதாக களஞ்சிளசாலையை நிர்மாணித்தல் மற்றும் தற்பொழுதுள்ள களஞ்சியசாலைகைளை சீர்செய்தல் ( நிகழ்ச்சி நிரலில் 68ஆவது விடயம்)
விவசாய துறையை மேம்படுத்தி விவசாயிகளுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக இந்த துறை மற்றும் தொடர்புபட்ட அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக பெலிஅத்த மற்றும் மீகஹஜயபுர ஆகிய பிரதேசங்களில் 2000 மெற்றிக் தொன் வலுவைக் கொண்ட நவீன தொழில்நுட்பத்தினைக் கொண்ட 2 களஞ்சியசாலைகளை நிர்மாணிப்பதற்கும் நாடு முழுவதிலுமுள்ள 39 களஞ்சிய சாலைகளை சீர்செய்வதற்கும் விவசாய கிராம பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம ;மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் சமர்ப்பித்தஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 2019.01.07 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்:

1. அருகிவரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள விலங்குகள் மற்றும் தாவரங்கள் விசேட தொடர்பு குறி;த்த சர்வதேச வர்த்தகம் தொடர்பிலான இணக்கப்பாட்டின் (nternational Trade in Endangered Species of Wild Fauna and Flora ) தரப்பினரின் 18வது மகாநாட்டுக்கு அனுசரனை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 6 ஆவது விடயம்)
அருகிவரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள விலங்குகள் மற்றும் தாவரங்கள் விசேட தொடர்பு குறி;த்த சர்வதேச வர்த்தகம் தொடர்பிலான இணக்கப்பாட்டின் (வெநசயெவழையெட வுசயனந in நுனெயபெநசநன ளுpநஉநைள ழக றுடைன குயரயெ யனெ குடழசய )தரப்பினரின் 18வது மகாநாட்டை பொறுப்பேற்று நடத்துவதற்கான பொறுப்பு இலங்கையிடம் வழங்கப்பட்டுள்ளது. அதன் மகாநாடு 2019ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 3ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இதற்காக 183 நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கலாக சுமார் 400 பேர் கலந்துகொள்வார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மகாநாட்டை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மகாநாட்டு மண்டப வளவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக பண்டாரநாயக்க சர்வதேச மண்டபம் ஏனைய கட்டடங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட சேவைகளை பெற்றுக்கொள்ளுவதற்கு 230.37மில்லியன் ரூபாவை செலுத்துவதற்காக சுற்றலா அபிவிருத்தி வனவிலங்கு மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
02. கலால் வரி கட்டளை சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல் (நிகழ்ச்சி நிரலில் 8 ஆவது விடயம்)
கலால் வரி கட்டளைச்சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட கலால் வரி அறிவிப்பு அந்த சட்டத்தின் ஒழுங்குகளுக்கு அமைவாக பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதற்கமைவாக தனது உற்பத்தியில் 100சதவீதத்தை ஏற்றுமதிக்காக தயாரிக்கும் முதலீட்டு சபையின் அங்கிகாரம் பெற்ற தொழிற்சாலையினால் தயாரிப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்படும் தேசிய ரீதியில் அல்லாத மது சாருக்கு பதிலாக செலுத்தப்பட வேண்டிய வரிக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக கலால் வரி கட்டளைச்சட்டத்தின் 22 (3) சரத்துக்கு அமைவாக வெளியிடப்பட்ட 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் திகதி இலக்கம் 2091ஃ50 என்ற விசேட வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்ட கலால் வரி அறிவிப்பு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. வரி நிவாரணம் வழங்குவதற்காக 2017 ஆம் ஆண்டு இலக்கம் 24 கீழான இலங்கை உள்நாட்டு இறைவரி வருமான சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல். (நிகழ்ச்சி நிரலில் 9ஆவது விடயம்)
பல்வேறு தரப்பினரினால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையை கவனத்தில் கொண்டு சிறுவர் இதுரும்பொலி என்ற நீண்டகால சேமிப்பு வருமானத்தின் அடிப்படையில் அரசாங்கத்தினால் பெறப்படும் அரச வருமான உரி தேவைப்படாத அடிப்படையிலான வரியை விடுவித்தல் மற்றும் கூலியின் அடிப்படையில் வைக்கப்படும் வட்டி வீதத்தை குறைப்பதற்கு குறைப்பதற்காக 2017 ஆம் ஆண்டு இல 24இன் கீழான இலங்கை உள்நாட்டு இறைவரி வருமான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்காரம் அளித்துள்ளது.
04. பொல்துவ குறுக்கு வழிப்பாதையை சுஹுருபாய தொடக்கம் கனத்த பார என்ற வீதி வரையில் விரிவுபடுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 17 ஆவது விடயம்)
கொழும்பு நகருக்குள் அமைந்துள்ள அரசாங்கத்தின் அனைத்து நிர்வாக மற்றும் அலுவலக கட்டிடங்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே நிர்வாக நகரத்திற்கு இடம் மாற்றும் நடவடிக்கைகளுக்கு அமைவாக அந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இதற்கு வசதிகளை செய்யும் வகையில் தெமட்டகொட தொடக்கம் சுற்றுவட்டம் வீதி ஊடாக வீதியொன்றை நிர்மானிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்தோடு இதுவரையில் இதில் ஒரு பகுதி பொல்துவ சந்தியிலிருந்து கொஸ்வத்தை வரையிலான பகுதியை நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டத்தின் கீழ் முதல் கட்டம் பொல்துவ சந்தியில் இருந்து சுஹுருபாய வரையிலான அபிவிருத்தி பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அத்தோடு இரண்டாம் கட்டத்தின் கீழ் சுஹஷ{ருபாய வரையில் அபிவிருத்தி பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டத்தின் கீழ் சுஹுருபாய தொடக்கம் கனத்த வீதி வரையிலான பகுதிக்கான அபிவிருத்தி பணிக்ள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை பூர்த்தி செய்வதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்காரம் அளித்துள்ளது.
05. பிரஜைகள் கல்வி நெறியின் கீழ் 91வது பிரிவாக சட்ட கற்கைநெறி விடயத்தை உள்ளடக்குதல் (நிகழ்ச்சி நிரலில் 20ஆவது விடயம்)
சட்டத்தை மதிக்கும் ஒழுக்கமிகு எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்காக அன்றாடம் வாழ்க்கைக்குத் தேவையான சட்டம் தொடர்பான அறிவு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுவதன் தேவை அடையாளங்காணப்பட்டுள்ளது. இதற்காக தரம் 6 தொடக்கம் க.பொ.த சா.தர வரையிலான கற்கைநெறியின் கீழ் பிரஜைகள் கல்வி கற்கை நெறியில் வீதி ஒழுங்குச் சட்டம் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான சட்டம் அடிப்படை உரிமை தொடர்பான சட்டம் சுற்றாடல் மற்றும் பொது சொத்து தொடர்பான சட்டம் அடிப்படை குற்றவியல் சட்டம் ஆட்கடத்தல் தொடர்பான சட்டம் குறைந்த வயதினரை பலவந்தமாக பாலியியலுக்கு உட்படுத்தும் குற்றம் தொடர்பிலான சட்டம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புக்கான சட்டம் போன்ற பிரஜைகள் என்ற அடிப்படை ரீதியில் அறிந்துகொள்ள வேண்டிய சட்டம் தொடர்பிலான விடயங்களை உள்ளடக்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொண்டு அறிக்கையொன்றை தயாரிப்பதற்காக கல்வி நீதி ஆகிய துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறவனங்களின் பிரதிநிதிகளைக்கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துகோரள சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
06. பாணந்துறை ஆதார வைத்தியசாலையை அபிவிரு;ததி செய்தல் மற்றும் வைத்திய உபகரணங்களுக்கான நிதியுதவி (நிகழ்ச்சி நிரலில் 23 ஆவது விடயம்)
பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்காக 6 மாடிகளைக் கொண்ட கட்டிடமொன்றை அமைத்தல் பணியாளர்கள் சபைக்கு உத்தியோகபூர்வ தங்குமிட வசதியை நிர்மாணித்தல் கழிவு நீரை சுத்திகரிப்பதற்கான கட்டமைப்பு உள்ளிட்டவற்றை நிர்மாணித்தல் மற்றும் அதற்குத் தேவையான வைத்திய மற்றும் ஏனைய உபகரணங்களை விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்;ட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கு அமவாக 106.49 மில்லியன் யூரோக்களுக்கு ஜெர்மனியை சேர்ந்த குinவைந டுயமெய (pஎவ) டுவன என்ற நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்தன அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
07. மாத்தளை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் உத்தேச 5 மாடிக் கட்டிடமொன்றை நிர்மாணிக்கும் பணிகளை பூரணப்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 24 ஆவது விடயம்)
மாத்தளை மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்காக புதிய 5 மாடி கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு ஆரம்ப நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்யும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இநத கட்டிடத்தை பயன்படுத்துதற்காக மேலும் மேற்கொள்ளப்படவேண்டிய மின்சாரம், தொடர்பாடல் தீ பாதுகாப்புக்கான அறைகளை ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட மேம்படுத்தல் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைவாக ஆரம்ப ஒப்பந்தத்தை ஆஃளு ஆஐஊசுழு ஊழளெவசரஉவழைளெ (Pஎவ) டுவன நிறுவனத்திற்கு வழங்குவதற்hக உள்நாட்டலுவல்கள் மற்றும் பொது நிர்வாக அலுவல்கள் மற்றும் மாகாண சபை உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அவேர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்காரம் அளித்துள்ளது.
08. பிடிபன தலகல வீதியில் பிடிபன சந்தி தொடக்கம் தாம்பே வீதி வரையிலான 4கிலோ மீ;ற்றர் வீதியை மேம்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 25 ஆவது விடயம்)
மேல் மாகாண வலய தொழில் நுட்ப நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ள உத்தேச மாலபே கடுவலை அத்துருகிரிய மற்றும் ஹோமாகம நகரம் ஏனைய பிரதேசங்களுடன் கொண்டுள்ள போக்குவரத்து தொடர்புகளை மேம்படுத்துவதற்காக முக்கிய 5 அபிவிருத்தி திட்டங்களுக்கு முக்கியத்தவம் வழங்கும் அடிப்படையில் அடையாளங் காணப்பட்டுள்ளன. இதில் பிடிபன தலகல வீதியில் பிடிபன சந்தி தொடக்கம் தாம்பே வீதி வரையிலான மத்திய நிலையம் வரை நான்கு கிலோ மீற்றர் தூரத்தை மேப்படுத்துவதற்hக திட்டத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகை குழுவும் பெறுகை மேம்முறையீட்டு குழுவின் சிபாரிசுக்கமைய குinவைந டுயமெய (pஎவ) டுவன. நிறுவனத்திற்கு வழங்குவதற்காக பெருநகர மற்றும் மேல்மாகாண அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்காரம் அளித்துள்ளது.
09. ஹய்லெவல் வீதியில் வளவுவத்தைக்கு அருகாமையில் இருந்து கட்டுவனக்கருகையில் தியகம் வீதி வரையிலான கொட்டாவே தொடக்கம் மாஹேன்வத்தை வரையிலான புதிய நுழைவாயில் வீதியை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 26ஆவது விடயம்)
ஹயிலெவல் வீதியில் வளவுவத்தைக்கு அருகாமையில் இருந்து கட்டுவன அருகாமையில் தியகம் வீதி வரையில் கொட்டாவையில் தொடக்கம் மாஹேன் வத்தை வரையிலான புதிய நுழைவாயில் வீதியை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கபட்பட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய 713 மில்லியன் ரூபாவுக்க ஆஃள ர்உசஎநயட ஊழளெவசரஉவழைn {pஎவ) டவன. நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்காரம் அளித்துள்ளது.
10. கொழும்ப பிரதேசத்தில் வெள்ளத்தை கட்டுப்படுத்தவதற்காக கால்வாய் வான் கதவுகளை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 27 ஆவது விடயம்
கொழும்பு தலைநகரத்தடன் தொடர்புபட்ட நகர அபிவிரத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ள கால்வாய் வான் கதவுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கு அமைவாக ஆஃளு னுபுநுளு – சுசு- ஐNனுழுநு.நயளவ என்ற கூட்டு நிறுவனத்திடம் வழங்குவதற்காக பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது
11. கொலன்னாவ கால்வாய் அகழுவதற்கான பரிந்துரையை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 28 ஆவது விடயம்)
கொழும்பு நகரத்தில் வெள்ளத்தை கட்டுபடுத்துவதற்காக 4.8 கிலோ மீற்றர் நீளமான கொலன்னாவ கால்வாயை அகழுவதற்கான 1 11 111 மற்றும் 4 என்ற ரீதயிலான உப பிரிவுகளின் 4 யின் கீழான திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஐஐ மற்றும் ஐஐஐ கட்டங்களின் கீழான ஒப்பந்த்தங்கள் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் கிந்தம்பாஹுவ வாய்க்கால் ஆரம்பப் பிரிவு புனரமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் கால்வாயை அகழுவதற்கும் கால்வாயின் நீர் வழிந்தோடுவதில் தடைகளை ஏற்படும் இடங்களி;ல் அந்த தடைகளை நீக்குதல் கால்வாய் கட்டிடங்களை நிர்மாணித்தல் உள்ளிட்ட வசதிகளுடன் பாதையை நிர்மாணித்தல் மற்றும் வான்கதவுகளை நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கபட்ட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய 859.5 மில்லியன் ரூபாவுக்கு நு ரூ ஊ சுசு என்ற கூட்டு நிறுவனத்திடம் வழங்குவதற்காக பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது
12. கொலன்னாவை கால்வாயை ஆழப்படுத்துவதற்கான பரிந்துறையை நடைமுறைப்படுத்துதல் - 4வது கட்டம் (நிகழ்ச்சி நிரலில் 29 ஆவது விடயம்)
கொழும்பு தலைநகத்திற்கு அருகாமையில் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்படவுள்ள உத்தேச கால்வாயை அகழும் திட்டத் தில் 4வது திட்டத்தின் கீழ் கிற்தம்பாஹூவ கால்வாயின் இறுதிப்பகுதியை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் மூலம் இந்தப் பகுதி வெள்ளத்தில் மூழ்குவதற்கு வழிவகுக்கும் தடைகளை அகற்றுதல் கட்டிடங்களை நிர்மாணித்தல் பிடர்பைல்களைப் பயன்படுத்தி கட்டப்பகுதியை வவூட்டுதல் போன்றவற்றுடன் கூடிய நுழைவாயில் வீதியை அமைத்தல் கால்வாய்களில் உள்ள மண்ணை அகற்றுதல் பாலங்களை மீள நிர்மாணித்தல் மற்றும் வான்கதவுகளை நிர்மாணித்தல் மற்றும் அவற்றின் இயந்திரப்பணிகளை மேற்nhள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அமைச்சரவையினால் நியமிக்கபட்பட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய கொலன்னாவ கால்வாயை அகழும் பரிந்துரையை நடைமுறைப்படுத்தும்; 4 வது கட்டத்திற்கான ஒப்பந்தத்தை 1431.68 மில்லியன் ரூபாவுக்கு குரூஊ சுசு என்ற கூட்டு நிறுவனத்திடம் வழங்குவதற்காக பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள்; சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்காரம் அளித்துள்ளது.
13. சென் செபஸ்தியன் தெற்கு நீர் இறைக்கும் திட்டத்தை தயாரித்து நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 30 ஆவது விடயம்)
கொழும்பு தலைநகரத்திற்கு அருகாமையில் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தவதற்கு உத்தேசிப்பட்டுள்ள சென் செபஸ்தியன் தெற்கு நீர் இறைக்கும் திட்டத்தை தயாரித்து நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைவாக ஆஃள. ஊhiயெ புநழ நுபெiநெநசiபெ ஊழசிழசயவழைn என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள்; சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது
14. கிரிமண்டல மாவத்தை வீதியை அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 31 வது விடயம்)
கிரிமண்டல மாவத்தை வீதியை புதிய நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேம்படுத்த வேண்டும் என்று அடையாளங் காணப்பட்டுள்ளது. இது கொழும்பு மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள 4 வீதிகளிகன் மத்தியில் ஒன்றாகும் இதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய 358.9மில்லியன் ரூபாவுக்கு யு.ஆ.ளு.மு.பு.ஊ குழும வர்த்தகத்திடம் வழங்குவதற்காக பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது
15. சென் செபஸ்தியன் தெற்கு நீர் இறைக்கும் ஆலோசனை சேவைக்கான ஒப்பந்தத்தை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில 33ஆஆவது விடயம்)
கொழும்பு தலைநகரத்திற்கு அருகாமையில் மாநகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள சென் செபஸ்தியன் தெற்கு நீரை அகற்றும் மற்றும் வழங்குதல் பொருத்துதலுக்கான ஒப்பந்தத்தை மதிப்பிடுதல் ஒப்பந்த முகாமைத்துவம் மற்றும் எதிர்கால கண்காணிப்பு தொடர்பான ஒப்பந்த முகாமைத்துவத்திற்காக ஆலோசனை ஒப்பந்த ஆலோசன சேவையை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஆலோசனை சேவை மானியக் குழுவின் சிபாரிசுக்கமைய ஸ்பெயின் நுPவுஐளுயு ளுநுசுஏஐஊஐழுளு னுநு ஐNபுநுNஐநுசுஐயு. ஏன்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது
16. வர்த்தமானி அறிவிப்பை பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பித்தல் (நிகழ்ச்சி நிரலில் 60 ஆவது விடயம்)
அரசாங்கத்தின் வருமானம் தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்தம் பொருட்டு வர்த்தமானி அறிவிப்பு 7 ஜ 1989 இலக்கம் 13 கீழ் உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டம் 2002 இல 14 கீழான பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மானியமத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் எத்தகைய உத்தரவுக்குமாக இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ள கால எல்லைக்குள் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கமைவாக 2018.04.30 முன்னர் இலங்கை சுங்கப் பகுதியில் வாகனத்தை விடுவித்துக் கொள்வதற்காக நிலவிய ஒப்பந்தத்ததை விலக்கிக்கொள்வதற்கான 2018 அக்டோபர் 11ஆம் திகதி 2080ஃ31 சிகரட் தயாரிப்பு மீதான வரி திருத்தத்திற்கான 2018 அக்டோபர் 16ஆம் திகதியன்று 2082ஃ11 என்ஜின் வலு சென்றிமீற்றர் 1000க்கு மேற்பட்ட மோட்டார் வாகனத்திற்கான வரியில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக 2018 ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி 2082ஃ10 2018.08.01 திகதி அல்லது அதற்கு முன்னர் கடன் சான்று டநவவநச ழக உசநனவை அடிப்படையில் மேற்கொள்ளட்ட வாகனங்களை இறக்குமதிக்கான நிவாரண ஒப்பந்தத்தை வரையறுப்பதற்கான 2018 அக்டோபர் 16ஆம் திகதி 2083ஃ2 சுற்றலாப் பயணிகளுக்கான வெட் வரியை திரும்ப செலுத்துதலை அறிமுகப்படுத்தவதற்கான 2018 அக்டோபர் 23 ஆம் திகதி 2088ஃ2 சுற்றுலா பயணிகளுக்கான வெட் வரியை திரும்ப செலுத்துதலை மேற்கொள்ளக்கூடிய பெறுமதியை 2018.அக்டோபர் 23ஆம் திகதி 2088ஃ25 மற்றும் சீனி இறக்கமதியின் போது அறவிடப்பட்ட வெட் வரியை நீக்குவதற்கான 2018 அக்டோபர் 23ஆம் திகதி 2083ஃ20 ஆகிய வர்த்தமானி அறிவிப்புக்கான பாராளுமன்ற அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்காரம் அளித்துள்ளது
17. 2007 இல 48 கீழான விசேட பொருட்கள் வரி சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவி;பபுக்கு பாராளுமன்ற அனமதியைப் பெற்றுக்கொள்ளதல் (நிகழ்ச்சி நிரலில் 62 ஆவது விடயம்)
2007 இலக்கம் 48கீழான விசேட வர்த்தகப் பொருட்கள் வரி சட்டத்தினால் அடிக்கடி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புக்கான பரிந்துரைக்கு பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றக்கொள்ள வேண்டும். இதற்கமைவாக 2007 இலக்கம் 47 இன் கீழான விசேட பொருட்கள் வரி சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டு அமைச்சரவையினால் அங்கிகாரம் பெறபட்டது. இருப்பினும் பாராளுமன்றத்தின் அனுமதிக்காக இதுவரையில் சமர்ப்பிக்கப்படாத 8 வர்த்தமானி அறிவிப்புக்கள் மற்றும் நுகர்வோரான பொதுமக்கள் விவசாயிகளுக்கான நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் 2007 இலக்கம் 48இன் கீழான விசேட வர்த்தக வரி பொருட்கள் சட்டத்தன கீழ் மேலும் 7 வர்தத்தமானி அறிவிப்பக்களுக்கு பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்கு நிதி மற்றம் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது
18. 2011 இலக்கம் 18 கீழான துறைமுகம் மற்றம் விமான நிலையங்கள் அபிவிருத்தி சட்டத்திற்கு அமைவாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளல் (நிகழ்ச்சி நிரலில் 63 ஆவது விடயம்)
2017 வரவு செலவு திட்டத்திற்கு அமைவாக 2011இல 18 கீழான துறைமுகம் மற்றம் விமான நிலையங்கள் அபிவிருத்தி சட்டத்தின் சரத்து 3(3) அமைவாக வெளியிடப்பட்ட இலக்கம் 2079ஃ34 இலக்கம் 20180711ஆம் திகதி;யன்று அதி விசேட வர்தத்தமானி அறிவிப்பின் மூலம் தேசிய கைத்தொழில் துறை அபிவிருத்தி செயற்பாட்டின் செயல்திறன்களை மேம்படுத்தும் நோக்குடன் அடையாளங்காணப்பட்டுள்ள அதி தொழில்நுட்பம் மற்றும் தன்னியக்க இயந்திரங்களுக்காக 75 சதவீத துறைமுக மற்றம் விமான நிலைய அபிவிருத்தி வரி நிவாரணத்தை வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி பெற்றுகொள்வதற்காக அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது
19. 2019 நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டு திருத்த சட்டத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் (நிகழ்ச்சி நிரலில் 65 ஆவது விடயம்)
2019ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவு திட்டம் தற்பொழுது தயாரிக்கப்பட்டு வருகிறது. அரச நிதி துறைக்கான வேலைத்திட்டத்தை வலுபடுத்தம் நோக்கிலும் 2021ஆம் ஆண்டளவில் இலக்கை அடைவதற்கு திட்மிடப்பட்டுள்ள நடுத்தர அரச நிதி இலக்கை வெற்றிக்கொள்ளக்கூடிய வகையில் ஒழுங்குபடுத்தும் பொருட்டு கடந்த வாரத்தில் நடைபெற்ற அசை;சரவை கூட்டத்தின் போது அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைவாக 2019ஆம்ஆணடு நிதியாண்டில் முதல் 4 மாத காலப்பகுதிக்கு இடைக்கால கணக்கறிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரச செலவு உள்ளிட்டவற்றை உள்ளடக்கி புதிய ஒதுக்கீட்டு திருத்த சட்ட மூலத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு திட்மிடப்பட்டுள்ளது.
இருப்பினும் தயரிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டு சட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் பொதுச்செலவுக்காக செலுத்த வேண்டிய செலவு 2 312 பில்லியன் ரூபாவாவதுடன் அதில் 1436பில்லியன் ரூபா மீண்டு வரும் செலவினத்துக்காகவும் 876பில்லியன் ரூபா நிதி முதலீட்டு செலவாகவும் கொண்டுள்ளது. இதற்கு மேலதிகமாக அரச கடன் சேவைகள் விதவைகள் அநாதைகள் ஓய்வூதியகொடுப்பனவுகளை செலுத்துதல் ஒன்றிணைக்கப்பட்ட நிதியை செலுத்துவதற்கான அதிகாரத்தை பெற்றுள்ள செலவை மேற்கொள்வதற்காக 2232 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று அரசாங்கத்தின் முன்கொடுப்பனவு செலவு பணிகளுக்காக 6 பில்லியன் ரூபாவை உள்ளடக்கிய 2019ஆம் ஆண்டு செலவிட எதிர்பார்த்தள்ள தொகை 4550 பில்லியன் ரூபாவாகும். தற்பொழுது உள்ள வரிவிகிதசார கட்டமைப்புக்கு அமைவாக 2019ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் செலவு மற்றும் வெளிநாட்டு வருமானத்தின் பெறுமதி 2390 பில்லியன் ரூபாவாகும். இதே போன்று உள்ளுர் மற்றும் வெளிநாட்டு மூலம் பெற்றக்கொள்வதற்கு தேவையான மொத்த கடன் அளவு 2160பி;லியன் ரூபாவாகும்.இதற்கமைவாக 2019ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்;ப்பிப்பதற்காக நிதி மற்றம் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்ரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
20. வடக்கு மாகாணத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 66 ஆவது விடயம்)
கடந்த தினங்களில் தென்மேற்கு பருவபெயர்சி காலநிலை வலுவடைந்ததினால் நாட்டில் பாதகமான சீரற்ற காலநிலை ஏற்பட்டதினால் கிளிநொச்சி முல்லை தீவு யாழ்ப்பாணம் உள்ளிட்ட13 வடக்கு மாகாண பிரதேச செயலாளர் பிரிவுகளில் 39 895 குடும்பங்களைச் சேர்ந்த 123862 பேர் பாதிக்கபடப்டுள்னர.; அததோடு கிளிநொச்சி முல்லைதீவு மாவட்டங்களில் 474வீடுகள் முழுமையாகவும் 4522 வீடுகள் ஓரளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்புக்களை உரிய முறையில்மதிப்பீடு செய்து முழுமையான இழப்பீட்டை வழங்கும் வரையில் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டிய மற்றும் துப்பரவு செய்தல் முதலானவற்றுக்காக வீட்டு உரிமையாளர்களுக்கு 10 000ரூபா முற்பணத்தை வழங்குவதற்கு தேவையான நிதி மற்றும் பொருட்கள் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதே போன்று பாதிக்கப்பட்டவர்களின் நாளாந்த வாழ்க்கை நிலைமை வழமைக்கு கொண்டுவருவதற்கும் இந்த குடும்பங்களுக்கு இரண்டு வார காலத்திற்கு உலர் உணவு நிவாரணம் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்க தேவையான நிவாரணம் வழங்குதல் பாதிக்கபட்பட அடிப்படை வசதிகள் மற்றும் பொது கட்டிடங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை புனரமைப்பதற்கும் பாதிக்கப்பட்ட விவசாய உற்பத்தி பயிர்களுக்கும் கால்நடை வளங்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணத்தை வழங்குவதற்கு தேவையான நிதியை வழங்குவதற்காக அரச நிர்வாகம் மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

Latest News right

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” புத்தளம் மாவட்ட செயற்திட்டத்தின் நிறைவு விழா நாளை ஜனாதிபதி தலைமையில்

Mar 21, 2019
“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” புத்தளம் மாவட்டத்திற்கான செயற்திட்டத்தின் நிறைவு விழா ஜனாதிபதி…

பாளி மொழியிலான தேரவார திரிபீடகத்தை யுனெஸ்கோ உலக மரபுரிமை ஆவணத்தில் உள்ளடக்குவதற்கு தொழிநுட்ப செயன்முறைக்கான குழு நியமனம்

Mar 21, 2019
பாளி மொழியிலான தேரவாத திரிபீடகத்தை யுனெஸ்கோ உலக மரபுரிமை ஆவணத்தில் உள்ளடக்குவதற்கான…

“பூ அபிமானி” ஹரித ஹரசர” பாராட்டு விழா ஜனாதிபதி தலைமையில்

Mar 19, 2019
புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தினால் சூழல் நேய தேசமொன்றை உருவாக்கும் நோக்கில்…

இலஞ்ச, ஊழலை ஒழிக்கும் ஐந்தாண்டு தேசிய செயற்திட்டம் வெளியிடப்பட்டது

Mar 18, 2019
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக வகைகூற வேண்டிய முக்கிய நபரை இலங்கை அரசாங்கத்திடம்…

“திரிபீடகாபிவந்தனா” (புனித திரிபீடக) வாரம் நாளை ஆரம்பம்

Mar 15, 2019
இலங்கை பிக்கு பரம்பரையின் உன்னத பங்களிப்பில் பேணப்பட்டு வந்த தூய பௌத்த போதனைகள்…

கென்யா சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு

Mar 14, 2019
கென்யாவின் நைரோபி நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் மாநாட்டின் நான்காவது…

ஐ.நா. சுற்றாடல் மாநாட்டில் விசேட அதிதியாக கலந்துகொள்ள ஜனாதிபதி கென்யா பயணம்

Mar 13, 2019
கென்யாவின் நைரோபி நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் விசேட அதிதியாக…

மாத்தறை மாவட்ட சாரணிய சங்கத்தின் நூற்றாண்டு ஜம்போரி நிகழ்வின் உத்தியோகபூர்வ இலட்சினை வெளியிடும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

Mar 12, 2019
மாத்தறை மாவட்ட சாரணிய சங்கத்திற்கு நூறு வருடங்கள் நிறைவுபெறுவதை முன்னிட்டு இடம்பெறும்…

Please publish modules in offcanvas position.