பிரபல சங்கீத வித்துவான், கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி, இன்று (21), நாளையும் (22) மற்றும் நாளை மறுநாளும் (23) ஆகிய மூன்று நாட்களை அரச அனுதாப நாளாக (தேசிய துக்க நாளாக) அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, குறித்த நாட்களில் அனைத்து அரசு நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.