கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2532 பரீட்சை நிலையங்களில் இன்று (10) ஆரம்பமாகியுள்ளது.
உயர்தரப் பரீட்சை இன்று (10) முதல் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை 2532 பரீட்சை நிலையங்களில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகளின் அடிப்படையில் பரீட்சையில் ஏதேனும் மாற்றம் செய்யப்படுமா என்பது தீர்மானிக்கப்படும் என்றும், தற்போது எவ்வித தடையுமில்லை என்பதால் திட்டமிட்ட கால அட்டவணையின்படி உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை (Tuition classes) நடத்துவது கடந்த (04) ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் தடை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பரீட்சை தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யலாம்:
பொலிஸ் தலைமையகம் - 0112421111
பொலிஸ் அவசர அழைப்பு இலக்கம் - 119
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கம் - 1911
பாடசாலைப் பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளை - 0112784208, 0112784537



