சீனாவில் நடைபெற்ற அரச நிர்வாகம் குறித்த விசேட நாடாளுமன்றப் செயலமர்வில் பங்கேற்பதற்காக இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழுவினர் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். இத்தூதுக்குழுவின் உத்தியோகபூர்வ தலைவராக (Head of the Delegation) வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன செயற்பட்டார்.
இத்தூதுக்குழுவில் பிரதி அமைச்சர் திரு. டி.பி. சரத் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
*சீன அரச நிர்வாகக் கட்டமைப்பு குறித்த ஆய்வு*
சீன வர்த்தகத் திணைக்களம் மற்றும் ஐசிசி (ICC) நிறுவனம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த திறன்மிக்க செயலமர்வின் போது; சீனப் பண்புகளுடனான ஜனநாயகம் குறித்த ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் சிந்தனைஇ "முழுச் செயல்முறை மக்கள் ஜனநாயகம்" (Whole-Process People’s Democracy) அத்துடன் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு (CPPCC) மற்றும் "இரு அமர்வுகள்" (Two Sessions) ஆகியவற்றின் செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதற்கு மேலதிகமாக, இலங்கைத் தூதுக்குழுவினருக்கு சீன தேசிய மக்கள் காங்கிரஸ் (National People’s Congress) உள்ளிட்ட அந்நாட்டின் முக்கிய அரச நிறுவனங்களுக்கு நேரில் விஜயம் செய்துஇ அவற்றின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை நேரடியாகக் கண்காணிப்பதற்கான விசேட வாய்ப்பும் கிடைத்தது.
*சர்வதேச தேயிலை தினக் கொண்டாட்டத்திலும் பங்கேற்பு*
இந்த உத்தியோகபூர்வ விஜயத்திற்கு இணைந்ததாக, சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச தேயிலை தின (International Tea Day) உத்தியோகபூர்வக் கொண்டாட்ட நிகழ்வும் நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக (Chief Guest) பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன கலந்துகொண்டார்.
அத்துடன்இ இந்த மிக வெற்றிகரமான மற்றும் பயனுள்ள நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்த ஐசிசி (ICC) நிறுவனம், சீன வர்த்தகத் திணைக்களம் மற்றும் இதற்கான தூதரக மட்டத்திலான ஒருங்கிணைப்புப் பணிகளை வழங்கிய இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் ஆகியவற்றுக்கு பிரதி அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் தமது விசேட நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.




