சில சிவில் சமூக அமைப்புகளும் சில ஊடக அமைப்புகளும், அடக்குமுறை மற்றும் வன்முறை அரசு இல்லாமல் தங்களால் இயங்க முடியாது என்றும், அத்தகைய வன்முறை, கொடூரமான மற்றும் தீய அரசு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்படக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாக வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன கடந்த (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று சுதந்திரமான மற்றும் அமைதியான சூழல் கொண்ட ஒரு நாடு உருவாக்கப்பட்டுள்ளது என்றும், வெகுசன ஊடக சமூகங்கள் மற்றும் தகவல் ஆணைக்குழு போன்றவற்றின் சார்பாக அரசாங்கம் எடுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மீறி, சில அமைப்புகள் தவறான கருத்துக்களைப் பரப்ப முயற்சிக்கின்றன என்றும் பிரதி அமைச்சர் கூறினார்.

20ஆம் தேதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் அவர்கள், ஒரு குறிப்பிட்ட ஊடக அமைப்பு, தான் கூறிய ஒரு அறிக்கையைத் திரித்து ஒரு ஊடக அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளதாகக் கூறினார். இது தற்செயலாக நடக்கவில்லை என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.