79வது உலக சுகாதாரப் பேரவை மே 16ஆம் திகதி ஜெனீவாவில் தொடங்கி, மே 22ஆம் திகதி வரை இடம்பெறுகின்றது.

இந்தப் பேரவையில் ஒரே நேரத்தில் நடைபெறும் பல அமர்வுகளில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ அவர்கள், பங்கேற்க உள்ளார். மேலும், இன்று (18) நடைபெறும் பிரதான பேரவையிலும் அவர் உரையாற்ற உள்ளார்.

 இந்தப் பேரவை நடைபெறும் காலத்தில், பூட்டான், தாய்லாந்து, வங்காளதேசம் உள்ளிட்ட பேரவையில் பங்கேற்கும் பல நாடுகளின் சுகாதார அமைச்சர்களுடனும், நிப்பான் அறக்கட்டளை உள்ளிட்ட பல அமைப்புகளுடனும் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ அவர்கள், இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.

2025 அக்டோபர் மாத்தில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்திற்கான 78வது உலக சுகாதாரப் பேரவைக்கு சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸ அவர்கள் தலைமை தாங்கினார்.

அதன்படி, இலங்கையின் சுகாதாரப் பொறுப்பு அமைச்சராகவும், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தின் தலைவராகவும், டாக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸ 79வது உலக சுகாதார மாநாட்டில் பிரதிநிதித்துவம் செய்வார்.