ஜனாதிபதியின் செயலாளர், கலாநிதி நந்திகா சனத் குமாநாயக்க மற்றும் பௌத்தலோக வெசாக் குழுவின் பிரதிநிதிகளுக்கு இடையே நேற்று (18) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த வெசாக் திருவிழாவை முன்னிட்டு 25வது முறையாக ஏற்பாடு செய்யப்படும் பௌத்தலோக வெசாக் வலயம, பௌத்தலோக மாவத்தை மையமாகக் கொண்டு மே 30 முதல் ஜூன் 01 வரை நடைபெற உள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதி அலுவலகத்தின் தலையீட்டின் மூலம் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்கேற்புடன் இதை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, மேலும் அது தொடர்பான முன்னேற்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கான வசதிகளை வழங்குவது குறித்தும் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கொழும்பு மேயர் விராய் கேலி பல்தசார், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷன் கமகே, அகில இலங்கை பௌத்த மாநாட்டின் தலைவர் சந்திர நிமல் வாகிஷ்ட, பிரதி தலைவர் ரொஷான் மத்துமகே, பொருளாளர் வசந்த டி சில்வா, ஆகியோர் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஆதரவளிக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



