புத்த ராஷ்மி வெசாக் வலயம் குறித்த இறுதிக் கலந்துரையாடல், நேற்று (20) அலரி மாளிகையில் பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரீயின் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடல்களில் முக்கியமாக புத்த ராஷ்மி வெசாக் வலயத்தின் அமைப்பு ரீதியான செயல்பாடுகள் மற்றும் வெசாக் வலயம் இடம்பெறுகின்ற காலப் பகுதியில் எரிசக்தி பயன்பாடு பற்றி அவதானம் செலுத்தின.
எரிபொருள் மற்றும் மின்சாரப் பயன்பாடு மீது அரசு விதித்திருந்த விதிமுறைகளில் வெசாக் பண்டிகைக்காக தளர்வு அளிக்கப்பட்டிருப்பது இங்கு தெரிவிக்கப்பட்டதுடன், வெசாக் வலயத்தின் செயல்பாடுகளை வெற்றிகரமாக ஏற்பாடு செய்து ஒருங்கிணைக்க நியமிக்கப்பட்ட குழுக்களின் அதிகாரிகளிடமிருந்தும் தகவல்கள் பெறப்பட்டன.
தற்போதைய நெருக்கடி காரணமாக, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச எரிபொருள் மற்றும் மின்சாரச் செலவில் நடைபெறும் கொள்கைப் பூஜைக்கு முன்னுரிமை அளித்து, அமிசா பூஜையுடன் வெசாக் பகுதியை அலங்கரிக்க புத்த ரஷ்மி வெசாக் வலயம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாண்டு வெசாக் வலயம் மாலை 7 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை நடைபெறும் என கொழும்பில் உள்ள கங்காராமய விகாரையின் பிரதம அதிகாரி, வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரோ தெரிவித்தார்.
கங்காராமய விகாரையின் பிரதம அதிகாரி, வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரோ, முப்படைகள், இலங்கை காவல்துறை, சிவில் பாதுகாப்பு சேவைகள் திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம், எரிசக்தி அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



