2026 புதிய ஆண்டின் வருகை, நாம் நாடாக முன்னேறிச் செல்ல வேண்டிய புதிய திசையை மீண்டும் மதிப்பீடு செய்து பார்ப்பதற்கும், பொறுப்பான முடிவுகளை எடுக்கும் புதிய யுகத்திற்குள் காலடி எடுப்பதற்கும் முக்கியமான வாய்ப்பாக இருப்பதாக வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் இன்று (01) வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்ற புதிய ஆண்டுக்கான கடமை ஆரம்பிக்கும் நிகழ்வை முன்னிட்டு உரையாற்றியபோது தெரிவித்தார்.
கடந்த 2025 ஆம் ஆண்டில் நாடு எதிர்கொண்ட கடுமையான இயற்கை அனர்த்தங்கள், பொருளாதார மற்றும் சமூக சவால்களுக்கிடையிலும், அரசின் வருவாய் இலக்குகளை வெற்றிகரமாக அடைய அரசுத் துறை அதிகாரிகள் காட்டிய அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு மற்றும் சவால்களை அஞ்சாது எதிர்கொண்ட தைரியம் காரணமாக அது சாத்தியமாகியதாக அவர் நன்றியுடன் குறிப்பிட்டார். மேலும், அவர்களின் அர்ப்பணிப்பு, அரசின் புதிய கொள்கைகள், சீர்திருத்தங்கள் மற்றும் நாட்டை மீண்டும் உருவாக்கும் செயல்முறைக்கான வலுவான அடித்தளமாக அமைந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த மறுமலர்ச்சி பயணத்தில் வெகுஜன ஊடகத் துறைக்குரிய பங்கு மிக முக்கியமானது என்பதை அமைச்சர் வலியுறுத்தி, உண்மை, பொறுப்பு, தொழில்முறைநிலை மற்றும் பொதுநலன் ஆகிய மதிப்புகளின் அடிப்படையில் உருவாகும் ஊடக சூழல், நாட்டின் புதிய யுகத்திற்கு அத்தியாவசியமானது எனக் குறிப்பிட்டார். அதற்காக 2026 ஆம் ஆண்டில் வெகுஜனஊடகத் துறையில் சட்டரீதியான, நிறுவல் ரீதியான மற்றும் தொழில்முறை சீர்திருத்தங்களை மேலும் வலுப்படுத்தி, அரசின் புதிய கண்ணோட்டத்துடன் இணைந்த பொறுப்பான ஊடக அமைப்பை உருவாக்குவது வெகுஜனஊடக அமைச்சின் முக்கிய குறிக்கோள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இறுதியில், வெகுஜனஊடக அமைச்சின் அனைத்து அதிகாரிகளும் தங்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்விலும் வெற்றியும் நலனும் பெற்று, தங்கள் இலக்குகளை அடைய வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.



