நாட்டின் ஒவ்வொரு துறையிலும் தரமான மற்றும் நிலைத்த மாற்றங்களை ஏற்படுத்துவதும், இரக்கமுள்ள சமூகத்தை உருவாக்குவதும் போன்ற சிறப்பு இலக்குகளுடன், இனம், மதம், கட்சி வேறுபாடுகள் இன்றி வலுவான இலங்கை அடையாளத்துடன் நாட்டை முன்னேற்றும் பொறுப்பு அரசு உட்பட முழு மக்களுக்கும் இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்துள்ளார்.

புதிய ஆண்டை முன்னிட்டு வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டு பிரதமர் இதை குறிப்பிட்டுள்ளார். அந்தச் செய்தி வருமாறு:  கல்வித் துறையில் தரமான மற்றும் நிலைத்த மாற்றத்தை அடையாளப்படுத்தும் கல்வி மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துதல், அரசு சேவையின் அனைத்து துறைகளையும் டிஜிட்டல் மயமாக்குதல், புதுமையான சிந்தனைகளுடன் கூடிய தொழில்முனைவோருக்கு, கலைஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் உலகளாவிய நிலைக்கு உயர வழிவகை செய்தல், போதைப்பொருள் இல்லாத, சுற்றுச்சூழல் நட்பு மற்றும் இரக்கமுள்ள சமூகத்தை உருவாக்குதல் போன்ற பல சிறப்பு இலக்குகளுடன், இனம்–மதம்–கட்சி வேறுபாடுகள் இன்றி வலுவான இலங்கை அடையாளத்துடன் இந்த நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு அரசு உட்பட மொத்த மக்களிடமும் இருப்பதை இம்முயற்சியில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

2026 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் இச்சமயம், கடந்த 2025 ஆம் ஆண்டைப் பற்றி சிந்திப்பது காலோசிதமானது என்று நம்புகிறேன். ஜனநாயக அரசாக தீர்மானமான முன்னேற்றமான பல அடியெடுத்து வைக்க முடிந்த ஆண்டாக 2025 ஐ ஒருபுறம் பெருமையுடன் நினைக்க முடிகிறது.

புதிய அரசியல் பண்பாட்டின் கீழ், அரசியல் நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தலும், ஊழல் அற்ற திறமையான அரசு சேவைக்கான அடித்தளத்தை அமைத்தலிலும் முன்னேற்றம் சாதிக்க முடிந்தது என்று நம்புகிறேன். பொருளாதார ஸ்திரத்தன்மை, உலகளவில் நம் நாட்டை நோக்கி உருவாகி வரும் நேர்மறையான கருத்துப்போக்குகள், வெளிப்படைத்தன்மையுள்ள ஆட்சி முறை மற்றும் சட்டத்தின் மேலாதிக்கத்தை உறுதி செய்தல் போன்ற பல முக்கிய அம்சங்கள் வழியாக 2025 ஆண்டைப் பற்றி திருப்தியுடன் நினைக்க முடிகிறது.

எனினும், 2025 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் நாம் எதிர்கொண்ட துரதிருஷ்டவசமான இயற்கை அனர்த்தம் நம் நாட்டிற்கு சவாலான காலமாக இருந்தது. அது அனைவரின் மனதையும் அதிர்ச்சியடையச் செய்தாலும், அத்தகைய தருணத்தில் இலங்கையர்களாகிய நீங்கள் வெளிப்படுத்திய சகோதரத்துவம், இரக்கம் மற்றும் ஒருவருக்கொருவர் உதவிசெய்த விதம் உலகம் முழுவதும் பேசப்படும் விஷயமாகியது. உருவான 2026 புதிய ஆண்டை நாம் அந்தச் சவால்களை சமாளித்த வலிமையுடன், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மனங்களை ஆற்றுப்படுத்திவும், சேதமடைந்த மக்களின் வாழ்க்கையை மீண்டும் வழமையான நிலைக்கு கொண்டு வர கடுமையான அர்பணிப்புடன் சந்திக்கின்றோம்.  கல்வித் துறையில் தரமான மற்றும் நிலைத்த மாற்றத்தை ஏற்படுத்தும் கல்வி மறுசீரமைப்பு, அரசு சேவையின் அனைத்து துறைகளையும் டிஜிட்டல் மயமாக்குதல், புதுமையான சிந்தனைகளுடன் கூடிய தொழில்முனைவோருக்கும், கலைஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் உலகளாவிய அளவில் உயர வழிவகை செய்தல், போதைப்பொருள் இல்லாத, சுற்றுச்சூழல் நட்பு மற்றும் இரக்கமுள்ள சமூகத்தை உருவாக்குதல் போன்ற பல சிறப்பு இலக்குகளுடன், இனம்–மதம்–கட்சி வேறுபாடுகள் இன்றி வலுவான இலங்கை அடையாளத்துடன் இந்த நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு அரசு உட்பட அனைத்து மக்களிடமும் இருப்பது என்பதை இச்சமயம் மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.

உங்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளம் நிரம்பிய வெற்றிகரமான புதிய ஆண்டாக அமையட்டும்!

கலாநிதி ஹரிணி அமரசூரிய,
பிரதமர்,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு