டிசம்பர் மாதம் துவக்குதத்துடன் கிறிஸ்துவர்கள் ஆராதனையுடனும் ஆனந்தத்துடனும் ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்மஸ் கொண்டாடத் தயார் ஆகின்றனர். அமைதியின் செய்தியுடன் உலகிற்கு வந்த பெத்லகேமில் பிறந்த இயேசு குழந்தையின் பிறப்பு செய்தி, ஆனந்தத்துடன் கொண்டாடுவது கிறிஸ்துவர்களின் விருப்பமாகும்.
ஆனால் இம்முறை டிசம்பர் மாதம் வழக்கம்போல மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்ததாக இல்லை. முழு நாட்டையே அதிரவைத்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நமது சகோதர சகோதரிகளின் துன்பமும் வருத்தங்களும் மத்தியில் இதை எதிர்கொள்கின்றோம்.
ஆனால் கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தத்தையும் இயேசு அவர்கள் காட்டிய பாதையையும் முன்வைத்துஇ நமது மக்களால் அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி ஒற்றுமையுடனும் கூட்டிணைப்புடனும் இருந்து, பேரிடரில் சிக்குண்ட தமது சகோதரர்களிற்காக அன்பும் இரக்கமும் காட்டி, ‘அடுத்தவரை நேசிக்கவும்’ என்ற இயேசுவின் உயர்ந்த போதனையை உலகிற்கு காட்டியுள்ளனர்.
நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர அனைவரும் ஒரே குறிக்கோளுடன், பொது பொறுப்புணர்வுடன், நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றுபட வேண்டிய தருணத்தில் நாம் உள்ளோம். உண்மையான மாற்றத்தைக் காத்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை எந்தவிதத்திலும் சிதைக்காமல், அவர்கள் எதிர்பார்க்கும் “புதிய நாட்டை” கட்டியெழுப்பும் ஒன்றுபட்ட நோக்கத்திற்காக நாங்கள் தொடர்ந்து உழைக்கிறோம்.
மேலும் சிறந்த நாளை உருவாக்கும் கனவிற்காக, குடிமக்களாக நாம் அனைவரும் அன்புடனும் இரக்கத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்று இந்த கிறிஸ்துமஸ் நாளில் நாம் உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.
இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கும் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
டாக்டர் ஹரினி அமரசூரிய,
பிரதமர்,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு.



