உலகத்தை பாவத்திலிருந்து மீட்பதற்காக இந்த உலகில் அவதரித்த அவரின் மனிதநேயக் கருணையின் போதனைகள், மனிதகுலத்தின் விடுதலைக்கான பாதையை உருவாக்கியதாக கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கையாகும்.

இன்று (24) நள்ளிரவில் ஆரம்பமாகும் ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் பிரதான திருப்பலி, உஸ்வெட்டகெய்யாவிலுள்ள புனித மரியா தேவாலயத்தில் நடத்தப்படவுள்ளது.

கொழும்பு பேராயர், அதிமேன்மை மிக்க மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இந்த பிரதான திருப்பலி நடைபெற உள்ளது.

நள்ளிரவில் பாரம்பரிய வழிபாட்டு முறைகளின்படி, தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மாட்டுத் தொழுவத்தில் இயேசு குழந்தையின் திருவுருவை நிறுவுதல் உள்ளிட்ட பாரம்பரியச் சடங்குகளுக்குப் பிறகு, அவரால் பிரதான திருப்பலி நடத்தப்படும்.

முந்தைய ஆண்டுகளில் கிறிஸ்துமஸ் விழா மிகுந்த கொண்டாட்டத்துடன் அனுசரிக்கப்பட்டாலும், இந்த ஆண்டு பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிக்கும் வகையில் கிறிஸ்துமஸை மிக எளிமையாகக் கொண்டாடுமாறு, பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை அனைத்து கிறிஸ்தவ விசுவாசிகளையும் கேட்டுக்கொண்டார்.

அதனைப் பின்பற்றி, இந்த ஆண்டு ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் தின நினைவுகளை மிகவும் எளிமையாகக் கொண்டாட கிறிஸ்தவ விசுவாசிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துமஸை முன்னிட்டு, கொழும்பு நகரம் உட்பட நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்கள் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் மற்றும் ஒளி அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளதை காணலாம்.