நாட்டில் நிலவிய அணர்த்த நிலைமை காரணமாக நூற்றுக்கு 85 வீதமான வீதிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

அணர்த்தத்தினால் சேதமடைந்த அனைத்து வீதிகளும் எதிர்வரும் வாரங்களில் போக்குவரத்திற்காக திறந்து வைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் கலந்துரையாடலின் போது வீதி அபிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திரு. விமல் கண்டம்பி அவர்கள் தெரிவித்துள்ளார்.  அவர் மேலும், இதுபற்றிக் கூறும் போது , கொழும்பு – கண்டி பிரதான வீதிகள் கனேதென்ன மற்றும் கடுகன்னாவைக்கு இடையேயுள்ள பகுதி பிற்பகல் 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இரவு நேரத்தில் தொடர்ந்தும் மூடப்படுவதாகவும் தெரிவித்தார்.