இலங்கை ஊடகவியலாளர்களின் தொழில் தன்மையினை உயர்த்தும் நோக்கில் வருடாந்தம் செயற்படுத்தப்பட்டு வருகின்ற “அஸிதிஸி வெகுசன ஊடக புலமைப் பரிசில் நிகழச்சித் திட்டம்” இம்முறையும் வெகுசன ஊடக அமைச்சினால் செயற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் “அஸிதிஸி வெகுசன ஊடக புலமைப்பரிசில் – 2023” நிகழ்ச்சிக்காக விண்ணப்பம் கோரல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட வேண்டிய இறுதித் திகதி 2023 ஒக்டோபர் மாதம் 11ஆந் திகதி ஆகும்.

நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களில் மூன்று வருட சேவைக் காலத்தினைப் பூர்த்தி செய்துள்ள முழு நேர அல்லது பகுதி நேர அடிப்படையில் சேவையில் ஈடுபட்டுள்ள 18-55 வயதிற்குற்பட்ட ஊடகவியலாளர்கள், சுதந்திர ஊடகவியலாளர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள், வெப் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக தொழில் நுட்ப கலைஞர்களுக்கு இப்புலமைப் பரிசிலுக்காக விண்ணப்பிக்க முடியும். மேலும், விண்ணப்பிக்கின்ற பாடநெறி நேரடியாக ஊடகத் துறையுடன் தொடர்புபட்டதான பாடநெறியாக அமைதல் வேண்டும். விண்ணப்பதாரி அரசாங்க தகவல் திணைக்களத்தினால் 2023ஆம் ஆண்டிற்காக ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் அடையாள அட்டையினைப் பெற்றிருத்தல் வேண்டும்.

ஊடகவியலாளர்களுக்கு இந்த புலமைப் பரிசில் திட்ட முறைமை மூலம் இரண்டு முறை பயனைப் பெற்றுக் கொள்ளவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதுடன், முதற் சந்தர்ப்பத்தில் தகைமை பெற்று 5 வருடங்கள் கடந்த பின்னர் முதற் பாடநெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த வெகுசன ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது சந்தர்ப்பத்திற்காக விண்ணப்பிக்கலாம்.

இந்த புலமைப் பரிசில் திட்ட முறைமை மூலம் இளமானி மற்றும் முதுமானிப் பாடநெறிகளுக்காக இரண்டு இலட்சம் (ரூ. 200,00.00) அல்லது குறுங் கால அல்லது நீண்ட கால சான்றிதழ் பாடநெறி, டிப்ளோமா, உயர் டிப்ளோமா பாடநெறிகளுக்காக வேண்டி ஒரு இலட்சம் (ரூ. 100,00.00) ரூபா அதிகபட்சமாக இந்தப் புலமைப் பரிசில் நிதி வழங்கப்படுகின்றது.  புலமைப் பரிசிலுக்காக தகைமை பெறுகின்ற ஊடகவியலாளர்களுக்கு பாடநெறிக்கான கட்டணத்தில் 50% ஐ பாடநெறியின் ஆரம்பத்தில் முதற் தவனையாகவும், எஞ்சிய 50% இல் 25% ஐ பாடநெறியின் இரண்டாவது தவனையிலும் எஞ்சிய 25% ஐ பாடநெறியினை பூர்த்தி செய்து சான்றிதழை முன்வைத்ததன் பிற்பாடு வழங்கப்படும்.

வெகுசன ஊடக அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்படுகின்ற தேர்வுக் குழுவொன்றினால் விண்ணப்பதாரிகள் நேர்முகத் தேர்வின் மூலம் பரிசீலிக்கப்பட்டு புலமைப் பரிசில் வழங்குவதற்காக தெரிவு செய்யப்படுவார்கள்.

இதற்காக விண்ணப்பிக்கின்ற அனைத்து விண்ணப்பங்களும் 2023.10.11ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் பணிப்பாளர் (ஊடகம்), வெகுசன ஊடக அமைச்சு, இலக்கம் 163, “அசிதிசி” மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொடை, கொழும்பு 05 என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

அஸிதிஸி வெகுசன ஊடக புலமைப் பரிசில் நிகழ்ச்சித் திட்டம் – 2023 தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக 0112-513645/0112-514632/0112-513469 என்ற தொலைபேசி இலக்கங்கis தொடர்பு கொள்ளவதினூடாக அல்லது மாதிரி விண்ணப்பப் படிவம் வெகுசன ஊடக அமைச்சின் https://www.media.gov.lk இணையத் தளத்தில் நுழைவதினூடாக பெற்றுக் கொள்ள முடியும்.