செவன அதிஷ்ட சீட்டிழுப்பு மூலம் வழங்கப்படும் சுப்பர் பரிசாக புதிய வீடொன்றை வழங்குவதில் ஏற்பட்டுள்ள நடைமுறைப் பிரச்சினையைக் கவனத்தில் கொண்டு பரிசாளியின் வீட்டுக் கனவை நனவாக்கக்கூடிய வகையில் இந்த பரிசுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதி வெற்றியாளருக்கு நாட்டில் நிலவும் வரிகளுக்குட்பட்டதாக பணத்தொகையை வழங்குவதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளளது.
02. பொறுப்பு முகாமைத்துவ செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துதல்
2019ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி அன்று அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் செயல்பாட்டுடனான பொறுப்பு முகாமைத்துவ சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட கடனை பெற்றுக் கொள்ளும் வரையறைக்குள் எதிர்காலத்தில் அரச கடனை திருப்பி செலுத்துவதற்காக தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை மத்திய வங்கியின் நிதி சபையின் சிபாரிசுக்கமைய சர்வதேச புரிந்துணர்விற்கான ஜப்பான் வங்கி (JPIC) மூலம் வழங்கப்படவுள்ள கடன் உத்தரவாதத்துடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (60 பில்லியன் ஜப்பான் யென்கள்) பெறுமதியைக் கொண்ட 10 வருட முதிர்வு கால முறிகளை விநியோகித்தல் மற்றும் இந்த விடுவிப்புக்காக Mizuho securities company Ltd. SMBC Nikko Securities Inc. மற்றும் Mitsubishi UFJ Morgan Stanley Securities Co. Ltd. என்ற 3 நிறுவனங்கள் ஒன்றிணைந்த முன்னோடி அமைப்பாளர்களை நியமிக்கும் பொருட்டு நிதியமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் / உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையில் உயர் கல்வித்துறையில் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை
உயர்கல்வி துறையில் கல்வி ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வை மேம்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்தும் நோக்குடன் கொழும்பு பல்கலைக்கழகத்தினால் சுவிட்சர்லாந்தில் சூரிச் பல்கலைக்கழகம். சீனாவில் ஹுபெய் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் சின்சுவா பல்கலைக்கழம் ஆகியவற்றுடன் இரு தரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவது தொடர்பில் நகர திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. நகர திண்மக் கழிவு சாக்கடை கழிவு நீக்கத்திற்குரிய Fillets அகற்றும் வசதிகள் ( அறுவக்காலு) நிர்மாணித்தல், விநியோகித்தல் மற்றும் அமைத்தல்
அறுவக்காலுவில் நகர திண்மக் கழிவு சாக்கடை கழிவு நீக்கத்திற்குரிய Fillets அகற்றுதல் வசதிகளை ஏற்படுத்துதல், விநியோகித்தல் மற்றும் அமைத்தல் /நிர்மாணிக்கும் ஒப்பந்தம் China Harbour Engineering Company Limited (CHEC) மற்றும் southwest Municipal Engineering and Research Institute of China (SEMEDRIC) என்ற நிறுவனங்களுக்கு இடையில் கூட்டு நடவடிக்கையாக வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த திட்டத்தின் நிர்மாணம் , நடைமுறைப்படுத்துதல் மற்றும் பராமரித்தல் காலப்பகுதிக்குள் ஏற்படும் எதிர்பாராத செலவுக்காக ஒப்பந்தத்தில் 10 சதவீதமான 9, 048 ,225.92 அமெரிக்க டொலர்கள் மற்றும் இலங்கை ரூபா 162, 293, 621.11 ஐ ஒதுக்கீடு செய்வதற்காக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. கலப்பு அபிவிருத்தி திட்டத்திற்காக கொட்டாவையில் அமைந்துள்ள காணியொன்றை 99 வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குதல்
கொட்டாவை ஐலெவல் வீதிக்கு எல்லையில் அமைந்துள்ள 1 ஏக்கர் 1 ரூட் 19.40 பேர்ச் காணியின் ஒரு பகுதியில் ஆடம்பர வர்த்தக மத்திய நிலையம், சொகுசு விற்பனை நிலையம, பொழுது போக்கு நடவடிக்கை மற்றும் 80 வீடுகளைக் கொண்ட தங்குமிட சுற்றுலா பயணிகளுடன் தொடர்புபட்ட கலப்பு அபிவிருத்தி திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக மாரகம நாவின்ன ஐலெவல் வீதி இல 310 இல் அமைந்துள்ள ரிச்சட் பீரிஸ் டிஸ்ரிபியுட்டர்ஸ் லிமிடட் என்ற நிறுவனத்திடம் 99 வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. கம்பஹா சியத்த சதுப்பு நில பூங்காவை நிர்மாணித்தல்
சுகித்த புரவர என்ற நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் யக்கல கம்பஹா வீதியில் பண்டாரகம் மஹாவித்தியாலகத்திற்கு எதிரில்; அமைந்துள்ள அளவில் 16 ஹெக்டயரான கைவிடப்பட்ட வயல் காணியொன்று விவசாய அபிவிருத்தி திணைக்களம் உள்ளிட்ட ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அனுமதியின் அடிப்படையில் சுற்றாடல் மற்றும் பொழுது போக்கிற்கான அலுவல்கள் உள்ளடக்கப்பட்ட சதுப்பு பூங்காவாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்திற்காக பெற்றுக் கொள்ளப்படும் காணியில் 10 சதவீதமும் இந்த திட்டத்தினால் காணியை இழக்கும் நபர்களுக்கு ஆகக் கூடிய வகையில் 6 பேர்ச் காணி என்ற ரீதியில் திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்வதற்கும் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. பேண்தகு விவசாய அபிவிருத்திக்காக முதலீட்டு மேம்பாடு தொடர்பான பிராந்திய நிபுணர்களின் அறிவுரை அடங்கிய சந்திப்பு: அரச தனியார் விவசாய ஒத்துழைப்பு
சார்க் அமைப்பின் இணக்கப்பாட்டு நாடுகளுக்கு இடையில் பல்வேறு துறைக்கான அறிவு மற்றும் அனுபவத்தை பரிமாறிக் கொள்ளும் நோக்குடன் பேண்தகு விவசாய அபிவிருத்திக்காக முதலீட்டு மேம்பாடு தொடர்பான பிராந்திய நிபுணர்களின் அறிவுரை அடங்கிய சந்திப்பு: அரச தனியார் விவசாய ஒத்துழைப்பு என்ற செயலமர்வு 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் முன்வைத்த விடயங்களை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.
08. விரைவு தபால் சேவை தொடர்பான ஆசிய பசுபிக் வலய வருடாந்த மகாநாடு
2019ஆம் ஆண்டில் சர்வதேச விரைவு தபால் சேவை தொடர்பான ஆசிய பசுபிக் வலய வருடாந்த மகாநாட்டை (EMS Symposium) இலங்கையில் நடத்துவதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக உத்தேச மகாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளின் பங்களிப்பு குறைவடையக் கூடும் என்பதினால் இதனை இந்த வருடத்தில் வேறொரு நாட்டில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட வருட மகாநாடு 2019ஆம் ஆண்டில் இலங்கையில் நடத்த முடியாதிருப்பதாக அமைச்சரவைக்கு அறிவிப்பதற்கும் இந்த வருடாந்த மகாநாடு 2020ஆம் ஆண்டில் இலங்கையில் நடத்துவதற்கான அனுமதிக்காக தபால் சேவை மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. இலங்கை தேசிய இந்து பேரவை
தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மற்றும் சமூக மேம்பாட்டை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை வலுப்படுத்துதல், இந்து மத நம்பிக்கை, இந்து கலாச்சாரம் மற்றும் இந்து மரபுரிமையை மாவட்ட மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் பாதுகாப்பதற்கும் வலுவுடன் இலங்கையை கட்டியெழுப்புவதற்காக சமூகத்தில் ஏனைய சமூகங்களுடன் சமத்துவத்துடன் செயல்படல் போன்ற இலக்கை எட்டும் எதிர்பார்ப்புடன் இலங்கையில் வாழும் அனைத்து இந்து மக்கள் குழுக்களை பிரிநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கை தேசிய இந்து பேரவை என்ற பெயரில் சபையொன்றை ஸ்தாபிப்பதற்காக தேசிய ஒருமைப்பாடு,அரசகரும மற்றும் சமூக மேம்பாடு, இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
10. கடல் சார்ந்த மீட்பு ஓருங்கிணைப்பு மத்திய நிலையம்
இலங்கையை சமுத்திர கேந்திரம் என்ற ரீதியில் அபிவிருத்தி செய்யும் அரச கொள்கையின் கீழ் கடல் பிராந்தியத்தில் கடற்றொழில் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடல், அனர்த்தத்திற்குள்ளாகும் வள்ளங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மிகவும் செயல் திறனுடன் ஈடுபடல் மற்றும் மீட்டெடுக்கும் சேவையை வழங்கும் நோக்குடன் கடல் சார்ந்த மீட்பு ஓருங்கிணைப்பு மத்திய நிலையத்தை ஸ்தாபிக்கும் திட்டத்தின் பிரதான தரப்பினருக்காக இலங்கை கடற்படை மற்றும் ஏனைய தரப்பினராக இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களம், இலங்கை விமானப்படை மற்றும் வர்த்தகம் மற்றும் கடற்படை, செயலகப் பணிகளை மேற்கொண்டு நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்த திட்டம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய இந்திய அரசாங்கத்தினால் வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ள 6 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தின் மூலம் Bharat Electronic Limited (BEL) – India என்ற நிறுவனத்துடன் மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. 2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவு 400 க்கு அமைவாக இலங்கை பொலிஸின் ஆற்றலை மேம்படுத்துவதற்காக தேசிய போட்டித்தன்மையுடனான கேள்வி மனுவை கோரும் நடைமுறையின் கீழ் மோட்டார் சைகிள்களை கொள்வனவு செய்தல்
இலங்கை பொலிஸின் ஆற்றலை அதிகரிப்பதற்காக 125 சிசி ரக 400 மோட்டார் சைக்கிள்களை தேசிய போட்டி மிகு கேள்வி மனு கோரும் நடைறையின் கீழ் விலை மனுக்களை பெற்றுக்கொண்டு கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக கோரப்படும் விலைகள் தொடர்பில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள முறையில் 1 மோட்டார் சைக்கிள் அனைத்து வரிகளையும் உள்ளடக்கிய வகையில் 322,650 ரூபா பெறுமதிக்கு 480 மோட்டார் சைக்கிள்களை வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனத்திடம் கொள்வனவு செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. 2019 ஆம் அண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கான ஸ்ரீலங்கன் விமான நிலையத்தின் CFM56-5B விமானத்திற்கான இஞ்சினின் செயலாக்கம் மற்றும் பராமரித்தல் (MRO) சேவை ஒப்பந்தத்தை வழங்குதல்
ஸ்ரீலங்கன் விமான சேவை தற்போது கெண்டுள்ள CFM56-5B A320 உள்ளிட்ட 3 விமானங்களுக்காக பயன்படுத்தப்படும் 7 இன்ஜின்கள் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி காலவரையறைக்குள் 10 முறை செயலாக்கத்திற்கு உட்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்காக வரையறுக்கப்பட்ட போட்டியின் அடிப்படையில் கோரப்பட்ட விருப்பு வெளிப்படுத்தலுக்கு அமைவாக ஆகக்குறைந்த விருப்பு வெளிப்படுத்தலாக தெரிவு செய்யப்பட்டுள்ள GE Engine Services> LLC (GE) என்ற நிறுவனத்திடம் சம்பந்தப்பட்ட பணியை நிறைவேற்றுவதற்கான பெறுகையை 57,785,317 அமெரிக்க டொலர்களுக்கு வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டிடமொன்றுக்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி பணியாளர் சபைக்கான உத்தியோகபூர்வ தங்குமிட கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக மேற்கொள்ளப்படும் பெறுகை செயற்பாட்டுக்கு அமைவாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்ட வகையில் நசிஹா ஹார்ட்வெயார் மற்றும் கன்ஸ்ரக்ஷன் என்ற நிறுவனத்திடம் அதற்கான ஒப்பந்தத்தை 272.01 மில்லியன் ரூபாவிற்கு வழங்குவதற்காக நகர திட்டமிடல், நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. மீளக் கொள்வனவு செய்யும் நடவடிக்கையின் கீழ் 14 பெக்கோ இமல்சிபிக்கேஷன் என்ற உபகரணங்களை விநியோகித்தல், கொண்டு வந்து ஒப்படைத்தல், ஸ்தாபித்தல், நடைமுறைப்படுத்துதல் மற்றும் பராமரிப்பதற்கான பெறுகை
கண்ணில் வெள்ளை படர்வதை அகற்றுவதற்காக சத்திர சிகிச்சையினை மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படும் பெகோ இமல்சிபிக்கேஷன் என்ற 14 உபகரணங்களை விநியோகித்தல், கொண்டு வந்து ஒப்படைத்தல், நடைமுறைப்படுத்துதல், ஸ்தாபித்தல் மற்றும் பராமரிப்பதற்காக ஆரம்ப ஒப்பந்த நிறுவனமான M/s Delmege Forsyth & Co. Ltd. என்ற நிறுவனத்திடம் மொத்த செலவு காப்புறுதி மற்றும் சரக்கு சுமைக் கட்டணத்தை அதிகரித்து மீண்டும் சரக்கு வகையில் அனுப்பாணை செய்வதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. பசுமை எரிசக்தி அபிவிருத்தி மற்றும் எரிசக்தி செயல்திறன் அடிப்படையில் மேம்படுத்தும் முதலீட்டு வேலைத்திட்டம் - பிரதான துணை கோபுரத்தை நிர்மாணித்தல்
எரிசக்தி அபிவிருத்தி மற்றும் எரிசக்தி செயல்திறன் அடிப்படையில் மேம்படுத்தும் முதலீட்டு வேலைத்திட்டத்தில் 2 ரிரான்சி 5 பொதியின் கீழ் 33/11KV பிரதான துணை கோபுரத்தை நிர்மாணிக்கும் ஒப்பந்தம் நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய கொழும்பு 8 கிங்ஸ் வீதி இல 36 இல் அமைந்துள்ள Siemens Ltd in Consortium with Dimo (Pvt) Ltd, நிறுவனத்திடம் வழங்குவதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
16. கண்டி புறநகர் ரயில் திட்டத்தின் சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான நிர்மாணப் பணிக்கான திட்ட ஆலோசனை சேவை
கண்டி புறநகர் ரயில் திட்டத்தின் சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் நிர்மாணப் பணிக்கான திட்ட ஆலோசனை சேவைக்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கான ஆலோசனை சேவை ஒப்பந்தம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உடன்பாடு மற்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஆலோசனை பெறுகைக்குழுவின் சிபாரிசின் அடிப்படையில் கூட்டு வர்த்தக தரப்பிலான IDOM Consulting, Engineering, Architecture, S.A.U (SPA) மற்றும் Saman Corporation (KOR) மற்றும் ஆலோசகர்களான Resources Development Consultants Ltd. (SRI) என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. தொழிலாளர் உறவு தொடர்பான புள்ளிவிபரவியலாளரின் 19ஆவது சர்வதேச மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட புதிய தரத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்தும் தொழிலாளர் வலு தொடர்பாக தரத்தை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான சாத்தியம் குறித்து முன்னோடி மதிப்பீடுகளை மேற்கொள்ளுதல்
தொழிலாளர் உறவு தொடர்பான புள்ளிவிபரவியலாளரின் 19ஆவது சர்வதேச மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட புதிய தர தொடர் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் இந்த தரத்தை சர்வதேச தொழிலாளர் உறவு தரமாக சர்வதேச தொழிலாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக உலக வங்கியின் நிதி மானியமாக கிடைக்கப் பெறும் 212,000.00 அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்தி குடிசன மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் மூலம் சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் உலக வங்கியின் தொழில்நுட்ப ஒத்துழைப்பின் புதிய தொழிலாளர் வலுக்கான தரத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பான சாத்தியம் குறித்து முன்னோடி மதிப்பீடுகளை மேற்கொள்ளுவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது விநியோகம் அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதி வழங்கப்படும் 2ஆவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் கிராமிய வீதிகளை புனரமைத்தல் / மேம்படுத்துதல் மற்றும் பராமரிப்பதற்கான ஒப்பந்தம் 11 பொதிகளை வழங்கல்
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதி வழங்கப்படும் 2ஆவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் கிராமிய வீதிகளை புனரமைத்தல் / மேம்படுத்துதல் மற்றும் பராமரிப்பதற்கான ஒப்பந்தம் 11 பொதிகள் மத்தியில் 8 பொதிகள் Maga Engineering (pvt) Ltd என்ற நிறுவனத்திடமும் 2 பொதிகள்China National Technical Import and Export Corporation (china) in Joint venture with R.R. construction (Pvt) Ltd என்ற நிறுவனத்திடமும் 1 பொதி China State Construction Engineering Corporation Ltd, China நிறுவனத்திடமும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய வழங்குவதற்காக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கனிய வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. 2019 அக்டோபர் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 2020 ஜூலை மாதம் 14ஆம் திகதி வரையிலான 9 மாத காலப்பகுதிக்குள்; பெற்றோல் (92 Unl) மற்றும் பெற்றோல் (95Unl) ஒன்றிணைந்த கப்பல் அளவிலான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை எட்டுதல்
பெற்றோல் (92 Unl) 1,924,000 பீப்பாக்கள் சிங்கப்பூர் கனிய வள பொது விலை மற்றும் பீப்பாய்க்கு பெறுமதி சேர்க்கப்பட்ட 3.456 டொலர் என்ற வீதத்திலும் பெற்றோல் (95 Unl) 476,000 பீப்பாய்க்களை சிங்கப்பூர் கனிய வள பொதுவான விலைக்கும் மற்றும் பீப்பாய்களுக்கு பெறுமதி சேர்க்கப்பட்ட 3.876 டொலருக்கும் 2019ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் திகதி தொடக்கம் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் திகதி வரையிலான 9 மாத காலப்பகுதிக்குள் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய M/s Vitol Asia Pte.Ltd., Singapore என்ற நிறுவனத்திடம் வழங்க பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கனிய வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. 2019 நிதி சட்டத்திற்கு குழு நிலை திருத்தம்
2018ஆம் ஆண்டு இல 35 இன் கீழான நிதி சட்டத்தின் கீழ் மோட்டார் வாகனம் மீதான காபன் வரி விதிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் முதல் பதிவு தொடக்கம் இடம்பெற்ற காலம், என்ஜின் வலு மற்றும் எரிபொருள் வகைக்கு அமைவான வரி விதிப்பு தீர்மானிக்கப்பட்ட போதிலும் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கை, துறைசார்ந்த நிபுணர்களின் அவதானிப்பு மற்றும் பிரதேச செயலாளர் மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதிலுள்ள சிரமங்களை கவனத்தில் கொண்டு இந்த அடிப்படை மாற்றத்தை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக நிதி அமைச்சரினால் குறிப்பிட்டு தெரிவிக்கப்படும் வகையிலும் மதிப்பீட்டு எரிபொருள் பயன்பாடு அடிப்படையில் காபன் வரி அறவிடக்கூடிய வகையில் தேவையான திருத்தம் நிதி சட்டத்தில் திருத்தத்தை தெரிவுக்குழுவின் சந்தர்ப்பத்தில் அறிமுகப்படுத்தக்கூடிய வகையில் திருத்த சட்டமூலத்தை மேற்கொள்ளுமாறு சட்ட வரைவுப் பிரிவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. தேசிய புதுமை படைத்தல் பிரதிநிதி நிறுவனத்தை அமைக்கும் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளுதல்
புதுமை படைத்தல் மற்றும் அரசியல் யாப்பு தன்மை தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் தொடர்புகளை மேற்கொள்ளும்; தரப்பினரின் மூலம் மேற்கொள்ளப்படும் புதிய தயாரிப்பு வணிகமயப்படுத்துதலை இலகுபடுத்தி அதன் மூலம் உற்பத்தி துறைக்கு நன்மைகளைப் பெற்றுக் கொடுத்தல், செயற்பாட்டு நகல் மற்றும் ஊடறுத்தலை தடுத்து திட்டம் மற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படததுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு விரிவுபட்ட வகையில் சம்பந்தப்பட்ட தரப்பினரினால் மேற்கொள்ளப்பட்ட நடைமுறையை மதிப்பீடு செய்தல், தொடர்பு மற்றும் அவதானித்தல், இந்த துறைக்கான விடயங்கள் தொடர்பில் நிகழ்ச்சி நிரல்களை வகுத்தல் மற்றும் வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் போது நிதிஅமைச்சிற்கு ஒத்துழைப்பு வழங்குதல் போன்ற முக்கிய நோக்கங்கள் உடனான தேசிய கண்டுபிடிப்பு சார்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களை அமைப்பதற்கான சட்ட திருத்த மூலம் மூலப்பிரிவினால் தயாரிக்கப்பட்ட திருத்த சட்டமூலம் மொழி அடிப்படையில் அரசாங்கத்தின் வர்த்தமானியில் பிரசுரித்தல் மற்றும் அதன்பின்னர் அதனை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கென அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22. தரு சம்பத என்ற பெயரில் அதிஷ்ட இலாப சீட்டொன்றை ஆரம்பித்தல் மற்றும் அதன் வருமானத்தை சிறுவர்களை பாதுகாத்தல் - தேசிய பொறுப்பு நிதியத்தில் வைப்பீடு செய்தல்.
ஆதரவற்ற நிலைமைக்குள்ளான பிள்ளைகள் மற்றும் விசேட ஆற்றலைக் கொண்ட பிள்ளைகளின் சேமநலன் மற்றும் அவர்களது எதிர்கால பாதுகாப்பிற்காக சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பில் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தில் பொறுப்பு கட்டளை சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய நிதியம் படிப்படியாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டியுள்ளது. இதனால் வாரத்தில் ஒருமுறை சீட்டிழுப்பு மேற்கொள்ளப்படும் அதிஷ்ட இலாப சீட்டாக தரு சம்பத என்ற அதிஷ்ட இலாப சீட்டு தேசிய லொத்தர் சபை மூலம் விற்பனை செய்யப்பட்டு இந்த அதிஷ்ட இலாப சீட்டிற்கான செலவை பெற்றுக் கொண்ட பின்னர் மேலதிகமானவற்றை மாதத்திற்கு ஒரு முறை சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய பொறுப்பு நிதியத்திற்கு வைப்பீடு செய்வதற்காக நிதி அமைச்சரின் கண்காணிப்பின் கீழ் தேசிய லொத்தர் சபைக்கு அனுமதி வழங்குவதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.