அமைக்கப்பட்டுள்ள மகாவலி ஆலோசனை சேவை பணியகம் (தனியார்) நிறுவனம் விவசாயம் , கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சிடம் ஒப்படைத்தல்
இலங்கை மகாவலி அதிகார சபை 1998 ஆம் ஆண்டில் மறுசீரமைக்கப்பட்ட பின்னர் நிறுவனம் பதிவாளர் சட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள மகாவலி ஆலோசனை சேவை பணியகம் (தனியார்) உள்ளுர் மற்றும் சர்வதேச திட்டங்களிலும் நீர்பாசனத் துறையில் ஆலோசனை சேவையை வழங்குதல் மற்றும் அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்களுக்கு ஆலோசனை சேவையை வழங்குதல் மற்றும் திட்ட அறிக்கையை தயாரித்தல் போன்ற நோக்குடன் செயல்படுகின்றது. சட்டமா அதிபரின் கருத்திற்கு அமைவாக கலைப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நிறுவனம் விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம் மற்றும் நீரியல் வள கடற்றொழில் அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு ஆலோசனை சேவையை வழங்குவதற்கும் கிராமிய தொழிற்துறை அலுவல்கள் பிரிவிற்கான சிறிய அளவிலான பொறியியல் நிர்மாணப் பணிகளுக்காக பயனுள்ள வகையில் பயன்படுத்தக் கூடிய வகையில் இதன் அனைத்து நிதி மற்றும் பௌதீக சொத்துக்கள், பொறுப்புக்கள் பணியாளர் சபை உடன்படிக்கையில் உள்ள ஆலோசனை சேவைகள் தற்பொழுது மேற்கொள்ளப்படும் அனைத்து செயற்பாடுகளுடன் இந்த அமைச்சிடம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கையளிப்பதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் மற்றும் விவசாயம்;, கிராமிய பொருளாதர அலுவல்கள் மற்றும் நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த கூட்டு பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. யாழ்ப்பாணயட்ட கங்ஹக் - யாழ்ப்பாணத்திற்கு நதி என்ற திட்டம்
யாழ் தீவகத்தில் நதி இல்லாமை அங்கு நீர் தட்டுப்பாட்டை தவிர்த்தல் மற்றும் வடமராட்சி களப்பிற்கு எல்லையில் உள்ள கிணற்று நீரின் உவர்ப்புத் தன்மையைக் குறைத்தல், அந்த பிரதேச விவசாய நடவடிக்கைளுக்கான நீர் விநியோகத்தை ஒரு வருடத்திற்கான 8 மில்லியன் கனமீட்டர் அளவில் அதிகரித்தல், நன்னீர் கிடைக்கும் தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் குடிநீர் மற்றும் வீட்டுத் தேவைக்கான நீரை வழங்குவதை அதிகரிக்கும் நோக்குடனான 2 கட்டங்களைக் கொண்ட 5 வருட (5) திட்டமாக யாழ்ப்பாணயட்ட கங்ஹக் - யாழ்ப்பாணத்திற்கு நதி என்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத 12,610 ஹெக்டயர் மற்றும் நெல் புற்தரையுடன் 1,315 ஹெக்டயர் நிலப்பரப்பை அபிவிருத்தி செய்வதற்கும் அதன் மூலம் நிவாரணம் வழங்கப்படுவதுடன் 300,000 இற்கும் மேற்பட்ட பொது மக்கள் நன்மையடைவார்கள். இதற்கமைவாக இந்த திட்டம் 3,609 மில்லியன் ரூபா நிதியின் மூலம் நடைறைப்படுத்துவதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. கெலிஓயா நகர பஸ்தரிப்பு நிலையம் மற்றும் பொருளாதார மத்திய நிலையத்தை நிர்மாணித்தல்
நுவரெலியா – கொழும்பு பிரதான வீதியில் அமைந்தள்ள கெலிஓயா பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் பஸ்களை நிறுத்தி வைப்பதற்கு போதுமான வசதி இல்லை. பொதுமக்களுக்கும் பஸ் சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் தேவையான வசதிகள் இல்லாமையினால் அதனை அண்மித்துள்ள வீதியின் இரு மருங்கிலும் உள்ள தெருவோர வியாபாரிகளினால் நகரத்தில் நெரிசல் நிலை ஏற்படுவதை கவனத்தில் கொண்டும், நகரத்தில் நெரிசல் நிலை தீவிரமடைதல் போன்ற விடயங்களை கவனத்தில் கொண்டு நகரத்தின் எதிர்கால புதிய அபிவிருத்தி பணிகளுக்கு தேவையான வசதிகளைக்கொண்டதாக பஸ் தரிப்பு நிலையம் மற்றும் பொருளாதார மத்திய நிலையத்திற்காக 3 மாடி கட்டிடமொன்றை 233.23 மில்லியன் ரூபா மொத்த செலவில் நிர்மாணிப்பதற்காக தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு மற்றும் வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அலுவல்கள் அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. வனவிலங்கு அறக்கட்டளையை மூடல்
அறக்கட்டளை கட்டளைச் சட்டத்தின் ஒதுக்கீட்டிற்கு அமைவாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கையின் வனஜீவராசிகள் அறக்கட்டளை பாதுகாத்தல் மற்றும் வனஜீவராசிகளின் பாதுகாப்புக்காக தற்பொழுது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதுடன் அரச நிதி சுற்றுநிருபம் இல 02ஃ2018 அமைவாக மூடிவிடப்படுவது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கவைமாக அதனை மூடிவிடுவதைத் தொடர்ந்து அது கொண்டுள்ள அனைத்து சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வனஜீவராசிகள் காப்புறுதி திணைக்களத்திற்கு வழங்குவதற்கும் சேவையில் இருந்து விலகியிருப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ள பணியாளர்களுக்கு இழப்பீடு மற்றும் பணிக்கொடையை வழங்குவதற்கும் இழப்பீட்டைப் பெற்று சேவையிலிலிருந்து வெளியேறுவதற்கு விருப்பம் தெரிவிக்காத அதன் பணியாளர், அங்கத்தவர்களுக்கு அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்த வகையில் இணைத்துக் கொள்வதற்கும் அறக்கட்டளை கொண்டுள்ள ரந்தெனிகல பயிற்சி மத்திய நிலையம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் பயிற்சி நிலையமாக தொடர்ந்து முன்னெடுப்பதற்கு சுற்றுலா அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. 2003 ஆம் ஆண்டு இல 3 இன் கீழான அரச நிதி முகாமைத்துவம் (பொறுப்பு) சட்டத்திற்கு அமைவான திருத்த கொள்கை தொடர்பான திருத்த சட்டமூலம்
மிகவும் பொறுப்புடனான அரச நிதி முகாமைத்துவம் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கான வழிகாட்டல் என்ற ரீதியில் கடைப்பிடிக்க வேண்டிய அரச நிதி இலக்கை அறிமுகப்படுத்தும்; நோக்குடன் 2003ஆம் ஆண்டு இல 3 இன் கீழான அரச நிதி முகாமைத்துவம் (பொறுப்பு) சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தில் குறிப்பிட்டபடி மொத்த அரச கடன், மொத்த உற்பத்தியில் சதவீதப்படி 2006 ஆம் ஆண்டளவில் 85 சதவீத மட்டத்திலும் 2013ஆம் ஆண்டில் 60 சதவீத மட்டத்திலும் குறைப்பதற்கும் வரவு செலவு திட்டத்தில் துண்டு விழும் தொகையை மொத்த தேசிய உற்பத்தியின் சதவீதம் என்ற ரீதியில் 2013ஆம் ஆண்டளவில் 5 சதவீத மட்டத்தில் தக்கவைத்துக் கொள்வதற்கும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இருப்பினும் இலங்கை பொருளாதாரம் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்ட பல்வேறான உள்ளுர் மற்றும் உலகளாவிய அழுத்தத்தின் காரணமாக இந்த இலக்கை அடைவதற்கு முடியாமல் போனமையினால் இந்த பொருளாதார இலக்கில் 2013 ஆம் ஆண்டு மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய அரச நிதி நிலைமையின் அடிப்படையில் வரவு செலவு திட்ட துண்டு விழும் தொகை மற்றும் மொத்த அரச கடன் தொகை பொருளாதாரத்திற்கு தாக்கு பிடிக்கக்கூடிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதினால் அதற்காக அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய அரச நிதி இலக்கை பிரகடனப்படுத்தி ஆரம்ப சட்டத்தின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கை திருத்துவதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. பந்தயம் மற்றும் சூதாட்ட வரி (திருத்தம்) திருத்த சட்டமூலம்
2019ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் மற்றும் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27அம் திகதி அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைவாக ஏனைய பந்தய வர்த்தகத்தை முன்னெடுப்பதற்காக வருடத்தில் அறவிடப்படும் கட்டணம் 200 மில்லியன் ரூபாவிலிருந்து 400 மில்லியன் ரூபா வரையில் அதிகரித்து சூதாட்ட வர்த்தகத்தை முன்னெடுப்பதற்கான வரியை வருடத்திற்கு 1 மில்லியன் ரூபாவாக குறிப்பிட்டு இலங்கை பிரஜையிடம் மாத்திரம் கஷினோவில் பிரவேச கட்டணத்தை அறவிடுவதற்காகவும் மொத்த வசூலின் அடிப்படையிலான வரியை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரித்து சட்டத்திருத்த வரைவினால் திருத்த சட்டமூலம் மேற்கொண்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 1988ஆம் ஆண்டு இல 40 இன் கீழான பந்தய மற்றும் சூதாட்ட வரி (திருத்தம்) சட்டத்திருத்தத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்காகவும் அதன் திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. 2017ஆம் ஆண்டு இல 7 இன் கீழான வெளிநாட்டு நாணய சட்டத்தின் 7ஆவது சரத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட கட்டளை
அனுமதி வழங்கப்பட்டுள்ள முதலீட்டுக்கான வெளிநாட்டு நாணய சொத்து கணக்கு வழக்கில் பந்தி 1 இல் வரையறை மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய நிபந்தனைகள் தொடர்பிலான அதிகாரத்தை வழங்குவதற்காக அமைச்சரவை அனுமதியுடன் 2017ஆம் ஆண்டு இல 12 இன் கீழான வெளிநாட்டு நாணய சட்டத்தின் 7ஆவது சரத்தின் கீழ் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதி கட்டளை இல 01 வகுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு அமைவாக ஏற்றுமதியாளர்களினால் தமது ஏற்றுமதி மூலம் சம்பாதிக்கப்பட்ட ஏற்றுமதி வருமானம், ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்ட தினத்திலிருந்து 120 நாட்களுக்குள் இலங்கைக்கு கொண்டு வரவேண்டும். இருப்பினும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவோரை கவரும் வகையில் ஏற்றுமதியாளர்களின் கோரிக்கை அடிப்படையில் மேலே குறிப்பிடப்பட்ட 120 காலக்கெடுவை 180 நாட்களாக நீடிப்பதற்காக இலங்கை மத்திய வங்கியின் நிதி சபையிடமிருந்து கிடைத்துள்ள உடன்பாடு கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கவைமாக 2017ஆம் ஆண்டு இல 12 இன் கீழான வெளிநாட்டு நாணய சட்டத்தின் 7ஆவது சரத்துக்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ள 2017 இல 1 இன் கீழான கட்டளையை திருத்தத்தை மேற்கொள்வதற்கும் இந்த சட்டத்தில் 29ஆவது சரத்திற்கு அமைவாக இந்த திருத்தத்தை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. 2006ஆம் ஆண்டு இல 12 கீழான முத்திரைக் கட்டணம் (விசேட ஒழுஙகு விதிகள்) சட்டம் மற்றும் 2011 இல 1 கீழான மாகாண சபை மற்றும் (முத்திரை கட்டணத்தை மாற்றுதல்) சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல்
2008ஆம் ஆண்டு இல 10 கீழான முத்திரை கட்டணம் (விசேட ஒழுங்குவிதிகள்) சட்டத்தில் திருத்தம். 2006ஆம் ஆண்டு இல 12 இன் கீழான முத்திரை கட்டணம் (விசேட ஒழுங்குவிதிகள்) சட்டத்தின் 7ஆவது சரத்திற்கு அமைவாக முத்திரைக் கட்டணம் தீர்க்கப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரம் பெற்றவரினால் தேசிய வருமான ஆணையாளர் நாயகத்திற்கு பிரதானமாக முன்வைக்கப்படும்; முத்திரை கட்டணத்தை செலுத்த வேண்டிய தொகையிலும் பார்க்க கூடுதலாக அல்லது தவறாக செலுத்தப்பட்டிருக்கும் பொழுது அந்த பணத்தை திருப்பி செலுத்துமாறு கோரிக்கை சமர்ப்பிக்கப்படும் சந்தர்ப்பத்தை காணக்கூடியதாக இருக்கின்றது. இருப்பினும் அவ்வாறான விடயத்தை முன்வைக்கும் உரிமை மாத்திரம் போலியற்ற மற்றும் சட்டரீதியிலானது என்பது தேசிய வருமான ஆணையாளர் நாயகத்தினால் திருப்திக்கு உள்ளானால் 2011ஆம் ஆண்டு இல 13இன் கீழான மாகாண சபை பிரதேச (முத்திரைக் கட்டணம் மாற்றுதல்) சட்டத்தில் அதற்கான சட்ட ஏற்பாடுகள் இல்லை என்பதினால் திருப்பி செலுத்த முடியாது. இதனால் இதற்கு வழிசெய்யும் வகையில் 2006ஆம் ஆண்டு இல 12 கீழான முத்திரைக் கட்டணம் (விசேட ஒழுங்குவிதிகள்) சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக சட்ட திருத்தம் ஒன்றை வகுப்பதற்கு அதன் திருத்த சட்ட தயாரிப்புக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. ஜனாதிபதியின் நிதியம் தொடர்பான கணக்காய்வாளரின் அறிக்கை - 2017
இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் அரசியல் யாப்பின் 154 கீழான (3) சரத்தில் குறிப்பிடப்பட்ட ஒழுங்கு விதிகளுடன் வாசிக்கப்பட வேண்டிய 1978 இல 7 கீழான ஜனாதிபதி நிதியத்தின் சட்டத்தின் 9 (2) சரத்திற்கு அமைவாக 2017 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நிறைவுடன் நிதி ஆண்டுக்கான அறிக்கைக்கான அமைவான ஜனாதிபதியின் நிதியத்தின் கணக்காய்வாளரினால் கணக்குப் பரிசோதனை செய்யப்படவுள்ளது. இதற்கமைவாக இது தொடர்பில் கணக்காய்வாளரின் அறிக்கை அந்த நிதியத்தின் சட்டத்தில் 10ஆவது சரத்திற்கு அமைவாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. சுங்க கட்டளைச் சட்டத்தின் (235ஆவது அதிகாரம்) 69ஆவது சரத்திற்கு அமைவாக தனியார் சுங்க ஒழுங்குறுத்தலுக்கான கொள்கை கட்டமைப்பு
2016ஆம் ஆண்டு தொடக்கம் பொது சுங்க வரம்புக் கொள்கை கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும் 2016 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் முன்மொழிவுக்கு அமைவாக புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட பொது அல்லது தனியாரின் எத்தகைய சுங்கப்பிணையத்திலுள்ள கிடங்கிற்காக (Bonded warehouse) ஆகக்குறைந்தது 50,000 சதுர அடியாக இருக்க வேண்டும் என்பதுடன் தற்போதுள்ள கிடங்கு அந்த தேவைக்கு அமைவாக தயார்ப்படுத்தப்பட வேண்டும். எவ்வாறிருந்த போதிலும் திட்டத்தின் தன்மைக்கு அமைவாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுங்கப்பிணையத்திலுள்ள கிடங்கின் உரிமையாளர்கள் மற்றும் தனியார் கிடங்கை ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்த்துள்ள வர்த்தகர்கள் விருப்பமின்மையை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கு அமைவாக சம்பந்தப்பட்ட சதுர அடி தொடர்பிலான வரையறையை பொது சுங்கப்பிணையத்திலுள்ள கிடங்கிற்காக மாத்திரம் மேலும் செல்லுபடியான வகையில் தனியார் சுங்கப்பிணையத்திலுள்ள கிடங்கு அமைந்திருக்க வேண்டிய சதுர அடியளவை சுங்கப்பணிப்பாளர் நாயகத்தினால் வியாபாரத்தின் தன்மைக்கு அமைவாக தீர்மானிக்கக்கூடிய வகையிலும் உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களின் தேவைக்கு அமைவாக கிடங்கை நிர்மாணிக்கக்கூடிய வகையில் கட்டளையின் (235 ஆவது அதிகாரம்) 69 ஆவது சரத்தின் கீழ் தனியார் சுங்கப்பிணையத்திலுள்ள கிடங்கை ஒழுங்குறுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கொன நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. சுங்க வரி செலுத்தாத ஏனைய வரி வகைகளை தர்க்கரீதி ஆக்குதல்
வருடாந்தம் அரச வருமானத்தை அதிகரி;ப்பதற்காகவும், இறக்குமதிக்காக ஏற்படக்கூடிய போட்டித்தன்மையில் தேசிய உற்பத்தியை பாதுகாப்பதற்காகவும் விதிக்கப்படும் விசேட வர்த்தக பொருள் வரி, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி, செஸ் வரி உள்ளிட்ட சுங்க வரி அல்லாத வரியின் காரணமாகவும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதுடன் தேசிய உற்பத்திக்கான பொருளாதார போட்டித்தன்மை குறைவடைவதன் காரணமாக அவற்றின் மூலமான பலன்கள் மற்றும் செயல்திறன் தன்மைகள் குறைவடைகின்றது. இதன் வரி சர்வதேச வர்த்தகத்திற்கு தடையாக காணப்படுகின்றது. அத்தோடு இதனால் பொருளாதாரத்திற்கு சிறந்த சாத்தியத்தை எற்படுத்தும் பிரிவிடம் முதலீட்டை மேற்கொள்வதற்கு தடையாக கருதப்படுகின்றது. இதனால் உண்மையிலேயே பாதுகாப்பு வழங்கப்படவேண்டிய தயாரிப்பு கைத்தொழிற் துறையை பாதுகாப்பதற்கு வழிவகை மேற்கொள்வதுடன், முறையாக அதன் வரி நிலையை நீக்குவதற்காக 5 வருட (2020-2024) மூலோபாய திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறைந்த உற்பத்தி செலவுடனான பொருட்கள் நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள அழட்சி சார்ந்த எதிர்ப்பு பெயர்ச்சி சார்ந்த எதிர்ப்பு வரி முதலானவற்றின் பாதுகாப்பு நடவடிக்கையின் மூலம் தேசிய கைத்தொழில் துறைக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்.
12. வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல்
2011ஆம் ஆண்டு இல 23 இன் கீழான வரி மேன்முறையீட்டு ஆணைக்குழு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வரி மேன்முறையீட்டு ஆணைக்குழு முன்னிலையில் இது வரையில் 63 பில்லியன் ரூபா பெறுமதியுடைய 495 மேன்முறையீடுகள் இருப்பதினால் மேன்முறையீட்டைத் தீர்ப்பதற்கான நிதி சபையின் எண்ணிக்கையை அதிகரிப்பது பொருத்தமானது என அடையாளங் காணப்பட்டுள்ளது. இருப்பினும் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் நிதி சபையின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாமை ஆணைக்குழு அங்கத்தவர்களாக உயர் நீதிமன்றத்தின் அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் சேவையைப் பெற்றுக் கொள்வதில் ஏற்படும் சிரமம் முதலானவற்றில் தடையுண்டு என்பதினால் வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவிற்கு நிமிக்கப்பட்ட அங்கத்தவர்களின் எண்ணிக்கை (09) ஒன்பது தொடக்கம் (12) பன்னிரண்டு வரையில் அதிகரிப்பதற்கு நியமிக்கப்பட்ட நிதி சபையின் எண்ணிக்கை மூன்று (03) தொடக்கம் (04) நான்கு வரை அதிகரிப்பதற்கும் அங்கத்தவர்களின் 12 பேர் மத்தியில் நால்வர் (04) இலங்கையின் உயர் நீதிமன்றத்தின் அல்லது மேலன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நிதியரசர்களின் அல்லது சட்டமா அதிபர் திணைக்களத்தின் அல்லது பிரதி சொலிஸ்டார் ஜெனரால் அல்லது அதற்கு அமைவான பதவி வகித்த ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகளின் மத்தியில் நியமிப்பதற்காக மானியம் வழங்குவதற்கும்; 2017 இல 24 இன் கீழான தேசிய வருமான சட்டத்தில் வெளியிடப்பட்ட மதிப்பீடுகளுக்கு எதிராக மேன்முறையீட்டை மேற்கொள்வதற்கு அல்லது விசாரிப்பதற்கு வரி மேன்முறையீடு ஆணைக்குழுவின் சட்டத்தில் ஒழுங்கு விதிகள் இல்லை என்பதினால் அதற்கு தேவையான மானியத்தை உள்ளடக்கி வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு திருத்த சட்டமூல வரைவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13.அரசதுறை செயல்திறனை மேம்படுத்தம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உலக வங்கியின் சீர்திருத்தம் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடம் இருந்து 25.05 அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக் கொள்ளல்.
இலத்திரனியல் அரச பெறுகை கட்டமைப்பு, அரச நிதி முகாமைத்துவ தகவல் கட்டமைப்பு மற்றும் கலால் வரி வருமான முகாமைத்துவ கட்டமைப்பு உள்ளிட்ட தகவல் கட்டமைப்பாக அறிமுகப்படுத்தி மத்திய அரசாங்கம் மற்றும் அரச நிதி முகாமைத்துவத்தின் ஒழுங்குவிதி தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ள இலங்கை அரசாங்கம் உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இணக்கப்பாட்டுடன் அரசதுறை செயல்திறனை மேம்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மிகவும் நன்மை உள்ள நிபந்தனைகள் சிலவற்றுடன் 25.0 மில்லியல் அமெரிக்க டொலர் கடன் தொகையின் நிதி அழுத்தம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் நிதி சபையின் கருத்துக்களை கேட்டறிந்து உலக வங்கியின் மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடம் இருந்து பொற்றுக்கொள்வதற்காக அந்த வங்கியுடன் நிதி உடன்படிக்கை எட்டும் வகையில் நிதி அமைச்சுக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பி;த்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. கண்டி போதனா வைத்தியசாலையை தேசிய மட்டத்திலான வைத்தியசாலையாக தரம் உயர்த்துதல்.
கண்டி போதனா வைத்தியசாலையை தேசிய மட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதன் மூலம் நேயாளர்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளை கருத்தில் கொண்டு இந்த வைத்தியசாலையை ஷஷதேசிய வைத்தியசாலை – கண்டி' என்ற ரீதியில் மீண்டும் பெயரிடுவதற்கும் இதன் நிறுவக தலைமை அதிகாரியாக பிரதிப்பணிப்பாளர் நாயகம் தரத்திலான அதிகாரி ஒருவரை நியமிப்பதற்குமாக சுகாதாரம் போசாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. இலங்கை ரயில் சேவை, மூடிய சேவைத்திணைக்களமாக தரமுயர்த்தல் மற்றும் அதற்காக விஷேட மற்றும் தனித்தன்மை வாய்ந்த சம்பள கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல்.
ரயில் சேவையை மூடிய சேவை (Close) ஒன்றாக தரமுயர்த்தல் மற்றும் பொருத்தமான சம்பள கட்டமைப்பொன்றை தயாரிப்பது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக பதில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்களினால் இது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரையை நடைமுறைப்படுத்தும் பொழுது ஏற்படக்கூடிய நடைமுறைப்பிரச்சினைகள் மற்றும் அவற்றை குறைக்கும் வகையில் அதன் பரிந்துரையை நடைமுறைப்படுத்துதற்காக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் மதிப்பீடு செய்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கென அரச நிர்வாகம், இடர் முகாமைத்துவம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் தலைமையிலான அதிகாரிகள் குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. அவுஸ்ரேலியாவின் நிவாரண கடன் பரிந்துரை முறையின் மூலம் கண்டி போதனா வைத்தியசாலை வளவில் சாய்வான எலும்பை சரியான முறையில் தயாரிப்பதற்கான திட்டத்தை வழங்குதல்.
கண்டி போதனா வைத்தியசாலை வளவில் சாய்வான எலும்பை உரிய வகையில் சரி செய்யும் திட்டம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசிற்கு அமைய அவுஸ்ரேலியாவின் நிவாரண கடன் பரிந்துரையின் ஊடாக M/s porr GmbH என்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்கு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேசிய வைத்திய தறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. செயற்படுத்தப்பட்ட செறிவுகளுடனான புரோ தொரோமின் கட்டமைப்பிற்கான தடுப்பூசி 500 IEU என்ற 3,250 தடுப்பூசி மருந்து குப்பிகளை விநியோகிப்பதற்கான பெறுகை
இமோபீலியா நோயாளர்களின் இரத்தப்பாய்ச்சலை தடுக்கம் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் செயற்படுத்தப்பட்ட செறிவுகளுடனான புரோ தொரோமின் கட்டமைப்பிற்கான தடுப்பூசி 500 IEU என்ற 3,250 தடுப்பூசி மருந்து குப்பிகளை விநியோகிப்பதற்கான பெறுகை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவின் சிபாரிசிற்கு அமைய சுவிஸ்லாந்தின் M/s Baxalta GmbH வழங்குவதற்காக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. அரசதுறையில் நிலவும் தொழில்வாய்ப்பு மற்றும் பயிற்சிக்கான சந்தர்ப்பம் தொடர்பான தகவல்களை ஸ்மாட் சிறிலங்கா என்ற நிறுவனத்தினூடாக வெளியிடுவதன் மூலம் இளைஞர்களின் வேலை இன்மையை குறைத்தல்.
தொழில் வழிகாட்டி ஆலோசனை செயற்பாடுகளை தேசிய ரீதியில் தொடர்பு படுத்தல் மற்றும் மதிப்பிடுதலுக்கான அதிகாரிகளை அடிக்கடி பயிற்றுவித்தல், நவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி தொழில் வாய்ப்பிற்கான தொடர் கற்கை நெறி, தொழில்கள் மற்றும் வர்த்தக தகவல்களை உள்ளடக்கிய மென் பொருளை நிர்மாணித்தல் மற்றும் அபிவிருத்தி செய்தலும் ஸ்மாட் சிறிலங்கா நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்கு அமைவாக அரசாங்கத்தின் வர்த்தமானியின் மூலம் அறிவிக்கப்படும் தொழில்வாய்ப்பு உள்ளிட்டவை அரசாங்கத்தின் அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களில் நிலவும் தொழில் வாய்ப்பிற்கான சந்தர்ப்பம், இணைத்துக்கொள்ளும் அறிவிப்பு அரசாங்கத்தின் அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்கள், அரச வங்கி மற்றும் நிதி நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் வர்த்தகர்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சுய தொழில் வாய்ப்பிற்காக வழங்கப்படும் விஷேட கடன் பரிந்துரைமுறை மற்றும் தொழில்நுட்ப நிவாரண சேவைகள், உள்ளுர் மற்றும் வெளிநாட்டு தொழில் முயற்சிக்கான சந்தர்ப்பம் தொடர்பான தகவல்கள் அரசாங்கத்தின் அமைச்சுக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களினால் வழங்கப்படும் தொழில் ரீதியிலான பயிற்சிக்கான சந்தர்ப்பம் உள்ளிட்ட தகவல்கள் ஷஷஸ்மாட் சிறிலங்கா' மென் பொருளில் வெளியிடுவதற்கும் அரசாங்கத்தின் பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் தொழில் அடிப்படையிலான மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் பயிற்சியாளர்கள் இந்த மென் பொருளில் பதிவு செய்வதற்கான நிறுவனங்கன் தொழில் வழிகாட்டி ஆலோசனை அலகுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு ஸ்மாட் சிறிலங்கா நிறுவனத்திற்கு அதிகாரத்தை வழங்குவதற்குமாக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பிற்கு பாராளுமன்ற அனுமதியை பெற்றுக் கொள்ளல்
நுகர்வோரான பொது மக்களுக்கும் உள்ளுர் விவசாயிகளுக்கும் நிவாரணத்தை வழங்கும் நோக்கில் 2007 ஆம் ஆண்டு இலக்கம் 48 இன் கீழான விஷேட வர்த்தக பொருட்கள் வரி சட்டத்தி;ன் கீழ் வெளியிடப்பட்டுள்ள 2019 ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி அன்று இலக்கம் 2134/44 என்ற அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பு, 2019 ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி அன்று இலக்கம் 2135/54 என்ற அதி விஷேட வர்த்தமானி அறிவிப்பு, 2019 ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி அன்று இலக்கம் 2135/67 என்ற அதி விஷேட வர்த்தமானி அறிவிப்பு, 2019 செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி அன்று இலக்கம் 2139/74 என்ற அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பு, 2019 செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி அன்று இலக்கம் 2140/20 என்ற அதி விஷேட வர்த்தமானி அறிவிப்பு மற்றும் 2019 செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி அன்று இலக்கம் 2143/03 என்ற அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பு, 2019 ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி அன்று இலக்கம் 2143/21 என்ற அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பு முதலான 7 வர்த்தமானி அறிவிப்பு மற்றும் 1962ஆம் ஆண்டு இலக்கம் 19 இன் கீழான வருமான பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இறக்குமதி சுங்க வரி திருத்தத்தை உள்ளடக்கி 2019 செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி அன்று இலக்கம் 2140/19 என்ற அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பு மற்றும் 2019 செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி அன்று இலக்கம் 2142/87 என்ற அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பிற்கு பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. அரச கடன் முகாமைத்துவ செயலகத்தை அமைத்தல்
இலங்கை கடன் முகாமைத்துவம் தொடர்பில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதுடன் இந்த பணிக்காக தனியான நிறுவனம் ஒன்று இருப்பதன் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக அரச முகாமைத்துவத்திற்காக அரச முகாமைத்துவம் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நிதி அமைச்சின் கீழ் ஸ்தாபிப்பதற்காக கொள்கை ரீதியில் அனுமதியை பெற்றுக் கொள்வதற்கும் அரச கடன் முகாமைத்துவ சட்ட திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கும் உத்தேச செயலகத்தை அமைப்பதற்கான நிறுவக கட்டமைப்பு ஒன்றை அபிவிருத்தி செய்வதற்கு திறைசேரி செயலாளரின் தலைமையிலான 5 நபர்களைக் கொண்ட அரச கடன் முகாமைத்துவ குழுவொன்றை அமைப்பதற்கும், இந்த பணிகளுக்காக தேவையான மானியத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. இலங்கை ஆசிரியர் சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவைகளை மூடிய சேவைகளாக (closed) தரமுயர்த்துதல் மற்றும் பொருத்தமான சம்பள கட்டமைப்பொன்றை தயாரித்தல்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களில் சேவைக்கான நியாயமான சம்பள அளவை பெற்றுக் கொடுக்க முதற் கட்ட நடவடிக்கையாக ஆசிரியர் சேவையை மூடிய சேவையாக தரமுயர்த்துவதற்கும் இந்த சேவைக்கான பொருத்தமான சம்பள கட்டமைப்பை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்ரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சேவையை மூடிய சேவையாக தரமுயர்த்துவதற்கும் இந்த சேவைக்கான பொருத்தமான சம்பள கட்டமைப்பை தயாரிப்பதற்கு குறிப்பிடத்தக்க காலம் செல்வதுடன் இடைக்கால பரிந்துரையாக அரச துறை சம்பள மதிப்பீடு தொடர்பிலான விஷேட ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பில் கல்வி அமைச்சின் சிபாரிசு மற்றும் பரிந்துரையில் உள்ளடக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட இடைக்கால சம்பள பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு சம்பளம் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பிலான ஆணைக்குழுவின் சிபாரிசுகளை பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.