ஜனாதிபதி அவர்கள் அடுத்தவரும் சில நாட்களில் இந்திய விஜயம் மேற்கொள்ளமாட்டார் – ஜனாதிபதி செயலகம்

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் எதிர்வரும் சில நாட்களில் எந்தவொரு இந்திய விஜயத்திலும் ஈடுபடமாட்டாரென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களும் ஆன்மீக தலைவர் தலாய்லாமா அவர்களும் இந்திய பீஹார் மாநிலதில் புதிய நாலந்தா மகா விகாரை பல்கலைக்கழக நிகழ்வில் பங்குபறறவுள்ளதாக கடந்த கடந்த வெள்ளிக்கிழமை ‘சிலோன் ருடே’ பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தி பொய்யானது எனவும், எவ்விதத்திலும் உறுதிப்படுத்தப்படாமல் வெளியிடப்பட்டிருப்பதனால் அச் செய்தியை நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய ஜனாதிபதி அவர்கள் அடுத்துவரும் சில நாட்களில் எந்தவொரு இந்திய விஜயத்திலும் ஈடுபடமாட்டாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.