03.09.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.


01. அரச செலவு முகாமைத்துவும்
கேளரவ பிரதமரினதும் கௌரவ அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சர்களினதும் கௌரவ இராஜாங்க அமைச்சர்களினதும் கௌரவ பிரதியமைச்சர்களினதும் தனிப்பட்ட அலுவலக ஊழியர் மற்றும் ஏனைய வசதிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய வரையறைகளை அறிவித்து ஜனாதிபதி செயலகத்தினால் 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ள அரச செலவு முகாமைத்துவம் முன்னெடுக்கப்பட்;ட சுற்றுநிருபகத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை கவனத்தில் கொண்டு தற்காலத்திற்கு பொருத்தமான வகையில் உரிய திருத்தங்கள் மற்றும் புதிய விடயங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அந்த விடயங்கள் தொடர்பிலான புதிய சுற்றறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. போக்குவரத்து வாகன தவறு தொடர்பில் தரவு மற்றும் தகவல்கள் முகாமைத்துவத்துடன் தண்டப்பணத்தை சேர்த்தல் மற்றும் வாகன சாரதிகளுக்கு பாதகமான எச்சரிக்கையை குறிப்பிடும் புள்ளி முறையை நடைமுறைப்படுத்துவதற்காக விரிவான ஒன்றிணைந்த இலத்திரனியல் தீர்வை நடைமுறைப்படுத்துதல்.
போக்குவரத்து வாகன தவறு தொடர்பில் தரவுகள் மற்றும் தகவல்கள் முகாமைத்துவம் உடனடி தண்டப்பணம் சேகரித்தல் மற்றும் வாகன சாரதிக்கு பாதகமான எச்சரிக்கைப் புள்ளி முறையை நடைமுறைப்படுத்துவதற்காக விரிவான ஒன்றிணைந்த இலத்திரனியல் தீர்வை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நிதி அமைச்சின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அரச தனியார் புரிந்துணர்வுக்கான தேசிய பிரதிநிதிகளின் கண்காணிப்பு மற்றும் பரிந்துரையை உள்ளடக்கிய அறிக்கையை நடைமுறைப்படுத்துதல் அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக மேற்கொள்ளப்படவேண்டிய சாத்தியக்கூறு மதிப்பீட்டின் படி பேராதெனிய பல்கலைக்கழகத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைக்கு அமைவாக 22.2 மில்லியன் ரூபா (வட்டியற்ற) மதிப்பீடு செய்யப்பட்ட தொகைக்கு அவர்களால் மேற்கொள்ளவதற்காக பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. நெலும் (தாமரை) கோபுர திட்டம் - கொழும்பு தாமரை கோபுர கட்டிடத் தொகுதிக்காக உத்தேச வணிகமய செயற்பாடுகள்.
கொழும்பு நெலும் (தாமரை) கோபுர திட்டத்தை பூர்;த்தி செய்து இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குருத்தல் ஆணைக்குழுவிடம் விரைவில் ஒப்படைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தில் துணைநலன்களை இலங்கை மக்கள் அனுபவிக்கக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதைப் போன்று இதனை வணிக செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக விரைவில் வணிக நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதினால் இதற்கான பணிகளின் முகாமைத்துவத்திற்காக அரசாங்கத்திற்கான நிறவனமொன்றை ஸ்தாபிப்பதற்கென திறைசேரிக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. கழிவுப் பொருள் முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கை.
திண்மப்பொருள் மற்றும் வாயு போன்று கழிவுப் பொருள் பிரிவுக்குட்பட்ட தற்பொழுது உள்ள மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனைத்து கழிவுப் பொருட்களையும் உள்ளடக்கி அந்த கழிவுப் பொருள் முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களின் பொதுவான, மாறுபட்ட பொறுப்பை விரிவான முறையில் அடையாளங்கண்டு திருத்த சட்டமூலம் மேற்கொண்ட கழிவுப் பொருள் முகாமைத்துவம் தொடர்பாக தேசிய கொள்கையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்காக தேவையான சட்டக்கட்டமைப்பு மற்றும் விதிகளை தயாரிப்பதற்காகவும் அந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காகவும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. களனி தெற்கு ஆற்றங்கரை நீர் விநியோகத் திட்டம் - கட்டம் 2.
களனி வத்தளை மாஹர மியகம ஜாஹெலைப் போன்று சர்வதேச விமான நிலையம் சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் விமானப் படை முகாம் உள்ளிட்ட கட்டுநாயக்க பிரதேசத்திற்காக நீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கென தேசிய நீர் விநியோகம் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் நீர் விநியோகத்திட்டத்தின் 2ஆம் கட்ட கால எல்லையை 2020ஆம் ஆண்டு ஜுன் மாதம் 22ஆம் திகதி வரையில் நீடிப்பதற்காக நகரத்திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. 1978ஆம் ஆண்டு இல 16 இன் கீழான பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளல்
உயர் கல்வி நிறுவனத்தை அமைத்தல் பராமரித்தல் மற்றும் நிர்வாகிப்பதற்கான 1978ஆம் ஆண்டு இல 16 இன் கீழான பல்கலைக்கழக சட்டம் சமீப கால அபிவிருத்தியுடன் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் பயனுள்ள வகையில் ஒழுங்குருத்தலை மேற்கொள்வதற்காக வலுவான சட்டக் கட்டமைப்பொன்றை வழங்கும் வகையில் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டிய தேவை உண்டு. விசேட சபையொன்றினால் இது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள எண்ணக்கரு ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் நகரதிட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக இதன் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. அரச தனியார் பங்குடைமையின் மூலம் கொழும்பு துறைமுக நகரத்துக்குள் அரசாங்கத்திற்கு உட்பட்ட நிரப்பப்படும் காணியில் காட்சி மற்றும் மகாநாட்டு மத்திய நிலையம் சர்வதேச பாடசாலை மற்றும் வைத்தியசாலை ஆகியவற்றின் துரிதமான அபிவிருத்திக்காக மூலோபாய முதலீட்டாளர்களை கண்டறிவதற்கான பரிந்துரை.
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தில் காணியை நிரப்பும் பணி தற்பொழுது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட முக்கிய திட்டம் மற்றும் அபிவிருத்தி நிர்வாக ஒழங்கு விதிகளுக்கு அமைவாக அரச தனியார் பங்குடைமைக்காக தேசிய பிரதிநிதித்துவ நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள சர்வதேச பாடசாலைக்கு அமைவான காணிப்பகுதியில் மகாநாட்டு ஹோட்டல் ஒன்றிற்காக முதலீட்டை மேற்கொள்ளுவதுடன் கண்காட்சி மற்றும் மகாநாட்டு மத்திய நிலையம் மற்றும் சர்வதேச வைத்தியசாலைக்காக முதலீட்டாளர்களிடம் ஆலோசனைகளை கோருவதற்காக இந்த பரிந்துரை பெறுகை நடைமுறைக்கு அமைவாக மதிப்பீட்டை மேற்கொள்வதற்காக கலந்துரையாடல் குழுவொன்றையும் திட்ட குழுவொன்றையும் நியமிப்பதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. முத்துராஜவெல கைத்தொழில் வலயத்தில் உள்ள இலங்கை காணி அபிவிருத்தி மற்றும் அபிவிருத்தி செய்யும் கூட்டுத்தாபனம் கொண்டுள்ள 13 ஏக்கர் 1 ரூட் 00.95 பேர்ச் காணி பகுதியை சி ஏ கிரசின் தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குதல்
வெளி சுற்றுவட்டம் அதிவேக வீதி திட்டத்தின் பணிகள் தற்பொழுது பூர்த்தியடையும் நிலையை எட்டியுள்ளது. இதற்கமைவாக இந்த திட்டத்தின் ஒப்பந்த நிறுவனமான மெட லொஜிக்கல் கோப்பரேஷன் ஒப் சைனா நிறுவனத்திடம் திட்ட தேவைக்காக வருடாந்த குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள முத்துராஜவெல கைத்தொழில் வலயத்தில் உள்ள இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் கொண்டுள்ள 13 ஏக்கர் 1 ரூட் 00.95 பேர்ச் காணியை அதன் திட்டத்திற்காக தயாரிக்கபட்ட மணல் மற்றும் வீதி கட்டுமாணப் பணிகளுக்குத் தேவையான தரைத்தளங்களுக்கான கல்லை விநியோகிக்கும் சி ஏ கிரசின் தனியார் நிறுவனத்திற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களின் அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு அமைவாக 30 வருட கால எல்லைக்கு குத்தகைக்கு வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. இரத்தினபுரி தமிழ் வித்தியாலயத்திற்கு இரத்தினபுரி புதிய நகரத்தில் காணியை ஒதுக்கீடு செய்தல்

இரத்தினபுரி தமிழ் வித்தியாலயத்தின் அபிவிருத்தி திட்டத்திற்காக பதிய நகர வளவிலுள்ள 3 ஏக்கர் அளவிலான காணி ஒன்றை அரச காணியில் ஒதுக்கீடு செய்வது தொடர்பில் செயலாளர்களின் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக சப்ரகமுவ மாகாண கல்வி தகவல் தொழில் நுட்பம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சிற்கு ஒதுக்கீடு செய்வதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. பசுமைப் பூங்கா வரவு செலவு முன்மொழிவின் கீழ் மாநகர மற்றும் மேல்மாகாண அமைச்சிற்கு தேசிய வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட திறைசேரி மானியத்தைப் பயன்படுத்தி அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
பசுமைப் பூங்கா வரவு செலவு திட்ட தலைப்பின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட மானியத்தைப் பயன்படுத்தி அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் புத்தளம் மற்றும் பலாங்கொடை புதிய திட்டம் மற்றும் 19 திட்டங்களின் எஞ்சிய வேலைத்திட்ட விடயத்தை அதாவது சிறுவர் விளையாட்டுப் பூங்கா மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களை விநியோகித்தல் மற்றும் ஸ்தாபித்தல், காணிப்பகுதியை அலங்கரித்தல் ஆகிய பணிகளுக்காக மத்திய பொறியியலாளர் சேவை நிலையத்திற்கு தற்பொழுது உள்ள வரவு செலவு திட்ட எல்லைக்குள் வழங்குவதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. ஆசியா மற்றும் பசுபிக் வலயத்தில் ஒன்றிணைந்த கிராமிய அபிவிருத்தி தொடர்பான மத்திய நிலையத்தின் செயற்பாட்டு பேரவை மற்றும் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் - 2019
ஆசியா மற்றும் பசுபிக் வலயத்தின் ஒன்றிணைந்த கிராம அபிவிருத்தி தொடர்பான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுக் குழு கூட்டம் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளிலும் செயற்பாட்டுக் குழு கூட்டம் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் திகதியிலும் இலங்கையில் நடத்தப்படவுள்ளது. இதற்கமைவாக விவசாயம் கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீர் வள அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட இதன் கூட்டத்திற்கான மதிப்பீடு செலவு அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
12. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பயனாளிகளை தெரிவு செய்யும் நடைமுறையில் திருத்தத்தை மேற்கொண்டு குறைந்த வருமானத்தைக்கொண்ட குடுபங்களின் பிள்ளைகளின் பெரும்பாலானவர்களுக்கு 2ஆம் நிலை கல்வி வசதிகளைசெய்து கொடுத்தல்.
தற்பொழுது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தகுதி பெற்ற குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களின் 15,000 மாணவாகளுக்காக அரசாங்கத்தின் மூலம் வருடாந்தம் 625 மில்லியன் ரூபா அளவில் புலமை பரிசில் நிதியுதவி வழங்கப்படுகின்றது. 2019ஆம் ஆண்டு தொடக்கம் இதன் மாணவர் எண்ணிக்கையை 20,000 வரையில் அதிகரித்தல் இவர்களுக்கான மாதாந்த புலமைப்பரிசில் கொடுப்பனவை ரூபா 500 இலிருந்து ரூபா 750 வரை அதிகரித்தல் 2019ஆம் ஆண்டு தொடக்கம் புலமைபரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் குடும்பங்களின் புலமை பரிசில் நிதி உதவியை பெற்றுக்கொள்வதற்கு தகுதியைப் பெறும் மாதாந்த வருமான எல்லையை 15,000 ரூபாவாக திருத்துவதற்கும் அனைத்து புலமைப் பரிசில் நிதி உதவியும், அனைத்து புலமைப் பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் 20,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. பரீட்சை திணைக்களத்தினால் சிபாரிசு செய்யப்படும் விசேட தேவைகளைக்கொண்ட பிள்ளைகளுக்காக புலமை பரிசில் தொகையை ஒதுக்கீடு செய்தல் மற்றும் பரிந்துரையை நடைமுறைப்படுத்தவதற்கான பணியில் ஈடுபட்டிருப்பதான விடயத்தை தெரிவித்து கல்வி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட குறிப்பை அமைச்சரவைகவனத்தில் கொண்டுள்ளது.
13. கொழும்பு பங்கு சந்தையினால் விதிக்கப்பட்டுள்ள பொதுவான பங்கு பரிமாறல் ஆகக் குறைந்த வரையறை 10 சதவீதத்தை நிறைவேற்றுவதற்காக இலங்கை டெலிகொம் சொத்தில் அரசாங்கம் கொண்டுள்ள வர்த்தகம் மற்றும் பங்களிப்பு நிதியத்தின் மூலம் முதலீட்டை மேற்கொண்டு அதன் மூலம் இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் அரசாங்கம் கொண்டுள்ள பங்கு உரிமையை வலுவூட்டுவதற்கான பரிந்துரை.
இலங்கை டெலிகொம் பிஎல்சி நிறுவனம் அரசு கொண்டுள்ள ஏனைய வர்த்தகம் மற்றும் பங்களிப்பு முதலீட்டு நிதிய கணக்குகள் பலவற்றின் மூலம் 52.92 சதவீத பங்குகள் உரிமையை நிர்வகித்தல் மற்றும் 2.1 வீத பங்கை கொண்டுள்ள பொதுமக்களிடம் உள்ள முக்கிய சொத்து இந்த நாட்டின் தொலைத்தொடர்பு சேவை வழங்குணர் ஆவர். இலங்கை சேமிப்பு பத்திரங்கள் மற்றும் வெளிநாட்டு நாணய ஆணைக்குழுவினால் 2013ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதிகளுக்கு அமைவாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பொது பங்கு சுதந்திர பரிமாறல் என்ற ரீதியில் 'பொது பங்கை விடுவித்தல் பரிமாறல்' ஆகக்கூடிய வகையில்; 10 சதவீத வரையை முன்னெடுக்கும் தேவையை இலங்கை டெலிகொமினால் ழுமைப்படுத்தும் பொருட்டு ஊழியர்சேமலாப நிதி வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் தேசிய கட்டிட நிர்மாண வங்கி இலங்கை வங்கி ஊழியர்களுக்கான நம்பிக்கை நிதி மற்றும் மக்கள் வங்கி ஆகிய அரசாங்கம் கொண்டுள்ள வர்த்தகம் மற்றும் பங்களிப்பு நிதிகளுக்கு தனது பணிப்பாளர் சபையினால் அனுமதிக்கு உட்பட்ட குறிப்பிடப்பட்ட இலங்கை தொலைதொடர்பு பங்கு முதலீட்டிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி அமைச்சர் அவர்களும் தொலைதொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் கூட்டாக மேற்கொண்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்காரம் வழங்கப்பட்டுள்ளது.
14. Peoples of Sri Lanka நூலின் தெரிவுசெய்யப்பட்ட 10 சமூகங்கள் தொடர்பாக தற்போதைய 10 வேலைத்திட்டங்களை உருவாக்குதல்
Peoples of Sri Lanka என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு சினிமா துறையைச் சேர்ந்த முக்கியஸ்தகரான பர்ட்ரம் நிஹால் அவர்களினால் தயாரிக்கப்படவுள்ள இன சமூகங்கள் தொடர்பான வேலைத்திட்டத்தின் பிரதியை பரிசோதிக்கும் பணிக்காக முறையான குழுவொன்றின் மூலம் முழுமையான அனுமதியை பெற்றுக்கொள்ளப்பட்டமைக்கு அமைவாக சம்பந்தப்பட்ட பணியை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக 5 வல்லுனர்களைக்கொண்ட குழவொன்றை வள பங்களிப்பு ரீதியில் இணைத்துக் கொள்வதற்காக தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழி, சமூக மேம்பாடு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. காணாமல் போனமை குறித்து உறுதிசெய்யப்பட்ட காணாமற் போனவர்களுக்காக இடைக்கால நிவாரணத்தை வழங்குதல்
காணாமல் போனவர்கள் தொடர்பான சான்றிதழை கொண்டுள்ள பயனாளிகளுக்காக 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு மாதமும் 10ஆவது தினத்தன்று நேரடியாக பணத்தை வைப்பீடு செய்வதன் மூலம் மாதாந்தம் 6,000 ரூபா இடைக்கால நிவாரணத்தை வழங்குவதற்காகவும் காணாமல் போன நபர் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையை கவனத்தில் கொண்டு அழுத்தத்திற்கு உள்ளான குடும்பங்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்காக காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழை வழங்குமாறு பதிவாளரின் திணைக்களத்திற்கு உத்தரவை பிறப்பிப்பதற்காகவும் நிதி அமைச்சர் அவர்களும் தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழி சமூக மேம்பாடு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் அவர்களும் கூட்டாக சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீhரம் வழங்கியுள்ளது.
16. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவையினால் 1540 இல பரிந்துரையை இலங்கையில் நடைமுறைப்படுத்துதல்
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவையின் 1540 இல பரிந்துரைக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் அனைத்து அங்கத்துவ நாடுகளில் ஆயுதங்களை கைப்பற்றுதல் தம்மிடம் வைத்துக்கொள்ளல் மற்றும் பெற்றுக்கொள்ளல் எடுத்துச் செல்லல் மற்றும் பயன்படத்துவதற்கு முயற்சிக்கும்; அரச சார்பற்ற செயற்பாடுகளுக்கு அது தொடர்பில் எந்த வகையிலும் ஒத்துழைப்பை வழங்குவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கமைவாக படுகொலை ஆயுதம் அதற்கமைவான பொருட்களை விநியோகிப்போர் மீள் ஏற்றுமதி, இடம்பெயர்தல், கப்பலை மாற்றுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுதல், போக்குவரத்து மற்றும் பணிகள் இந்த நாட்டில் இருந்து அல்லது இந்த நாட்டின் ஊடாக மேற்கொள்ளுதல் மற்றும் இது தொடர்பான சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகளை தயாரித்தல் காலத்தின் தேவை என்பதினால் இந்த தேவைக்கு உட்பட்ட வகையில் ஐரோப்பிய ஒன்றியம் யுத்த உபகரணப் பட்டியல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயன்பாட்டு கட்டுப்பாட்டுப் பட்டியலைப் பயன்படுத்தி இலங்கைக்கு பொருத்தமான வகையில் தேசிய கட்டுப்பாட்டு பட்டியலொன்றை ஒவ்வொரு வருடத்திலும் தயாரிப்பதற்கும் 1540 இலக்க பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்காக 2039/31 மற்றும் 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ஈம் திகதி அன்று வெளியான அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட கட்டளைகளை மாற்றுவதற்காக திருத்த சட்ட மூலத்தை மேற்கொள்வதற்காகவும் அபிவிருத்தி மூலோபாயம சர்வதேச வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. பங்களாதேஷில் திடீரென ஏற்பட்ட வெள்ள நிவாரணத்திற்காக நன்கொடை வழங்கல்

இந்த வருடத்தில் ஜுலை மாதம் தொடக்கம் பங்களாதேஷில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய வெள்ள நிலைமையை கவனத்தில் கொண்டு பங்களாதேஷ் மக்கள் அரசாங்கத்திற்கு அவசர வெள்ள நிவாரண நிதியாக 50ஆயிரம் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. தங்கொட்டுவ நீர் விநியோகத் திட்டம்
புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் உப நகரமாக கருதப்படு;ம் வென்னப்புவ தங்கொடுவ நாத்தாண்டி பிரதேசங்களில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவதற்காக நீர்விநியோகம் மற்றும் வடிகான் அமைப்புச் சபையினால் தங்கொட்டுவ நீர் விநியோக திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் M/s BESIX S.A என்ற நிறவனத்திடம் 28 மில்லியன் யூரோக்கள் மற்றும் 5,400 மில்லியன் ரூபாவிற்கு வழங்குவதற்காக நகரத்திட்டமிடல் நீர்விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. தேசிய கோபுரம் மற்றும் விநியோக வலைப்பின்னல் அபிவிருத்தி மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் திட்டம் - பொதி 1:400 kv, 220 kv மற்றும் 132kv கோபுர வழியை நிர்மாணித்தல் ஒப்பந்தத்தை வழங்குதல்
தேசிய கோபுரம் மற்றும் விநியோக வலைப்பின்னல் அபிவிருத்தி செயல்திறன் தன்மையை மேம்படுத்தும் திட்டம் பொதி 1:400 kv, 220 kv மற்றும் 132kv கோபுர வழியை நிர்மாணிக்கும் ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய Joint Venture of Mitsubishi Corporation, Sumitomo Electic Industric Ltd. And Ceylex Engineering (Pvt.) Ltd, 3-1, Marrumouchi, 2-chome, Chiyoda, Tokyo 100- 8086, japan என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக மின்சக்தி எரிசக்தி, வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. நிலத்துக்கடியிலான வெண்கல கேபலின் கீழ் காப்பு (Insulation) செய்த240 sqmm 3 Core 11kV XLPE – 35 km மற்றும் விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்.
இலங்கை மின்சார சபையின் விநியோக வலயம் ஒன்றிற்காக 240 sqmm 3 Core 11kV XLPE Insulation Under Ground Copper Cables கிலோ மீற்றர் 35 கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய M/s Phelps Dodgee International (Thailand) Limited, No.159, MOO 10, Thwpaarak Road, Bangpla, Bangplee District, Samutprakarn, 10540, Thailand வழங்குவதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த் ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. அவசியம் பயிர் உற்பத்தி காப்புறுதி பணிக்காக 2019/20 பெரும்போக மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்திற்கான மறுகாப்பீட்டை உள்வாங்கும் பணிகளை மேற்கொள்ளுதல்
இயற்கை அனர்த்தங்களின் போது முழுமையாக பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கு இழப்பீடுகள் வழங்கும் சுமையை அரசாங்கத்திற்கு விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி சபைக்கு மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் நிதியை கட்டுப்படுத்துவதற்காக மீள் காப்புறுதி வேலைத்திட்டத்திற்கு பிரவேசிப்பதற்கு 2018ஆம் ஆண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக அவசியம் பயிர் உற்பத்தி காப்புறுதி மிகவும் பயனுள்ள நடவடிக்கைக்காக 2019ஃ20 பெரும்போகத்திற்கு மற்றும் 2020 ஆம் ஆண்டு சிறுபோகத்திற்கும் அவசியம் உற்பத்திக்காக உரிய பெறுகைக்கு உட்பட்டதாக மறுகாப்பீட்டு பணியை மேற்கொள்வதற்காக பொருத்தமான காப்புறுதி தவணை பணத்தை செலுத்துவோரிடம் அறவிடுவதற்கு அமைவாக பயிர் காப்புறுதியை உள்ளடக்கிய மற்றும் இதற்கு உட்பட்ட மறுகாப்புறுதியை உள்வாங்குவதற்காக விவசாயம் கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் நீர் வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22. விவசாயப்பிரிவை நவீனமயப்படுத்துவதற்கான திட்டம் விவசாய தொழில்நுட்ப மாதிரிப்பூங்காவிற்கு திட்டமிட்டு அதனை அமைத்து நடைமுறைக்கு ஊடாக முகாமைத்துவத்தை மேற்கொண்டு திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் உற்பத்தி அமைப்பிடம் கையளிப்பதற்காக ஆலோசனை சேவையொன்றை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம்.
உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் விவசாயத்துறை பிரிவை பயன்படுத்தும் திட்டத்தின் கீழ் விவசாய தொழில்நுட்ப மாதிரிப்பூங்கா திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்டு ஸ்தாபித்து நடைமுறைப்படுத்தி முகாமைத்துவம் செய்து அவற்றின் விவசாய உற்பத்தி அமைப்புக்களிடம் கையளிப்பு பணியை நிறைவேற்றுவதற்கான ஆலோசனை சேவையை வழங்குவதற்கான ஒப்பந்தம் நியுசிலாந்தின் வரையறுக்கபட்பட FCG ANZDEC சிவிடனின் FCG Swedish Development நிறுவனங்பகளினால் தயாரிக்கப்பட்ட கூட்டு ஒன்றிணைக்கப்பட்ட வர்த்தகத்திடம் வழங்குவதற்காக விவசாயம் கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் நீர் வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
23. ஹியுமன் அல்பியுமின் சொலியுஷன் 50 பிபி – பி எ எச் யு அர் 20சதவீ த 190,000 போத்தல்கள் விநியோகிப்பதற்கான பெறுகை.
nஹியுமன் அல்பியுமன் சொலியுஷன் பிபி – பி எ எச் யு அர் 20 சதவீத 50 மில்லிமீற்றர் போத்தல்கள் 190,000 விநியோகிப்பதற்கான பெறுகை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கமைவாக சுவிஸ்லாந்து M/s Baxalta GmbH என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக சுகாதார போசாக்கும் மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.