2019.07.07 அன்று நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.


01. இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் மயத்துக்கான பெண்கள் சபையை வலுவூட்டுவதற்கு பங்களிப்பு செய்தல் - (நிகழ்ச்சி நிரலில் 06 ஆவது விடயம்)
தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொடர்பாடல் துறையின் மூலம் வலுப்படுத்தப்பட்ட பெண்களினால் இலங்கையில் டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டுக்கு ஒன்றிணைந்து செயற்படும் நோக்கில் டிஜிட்டல் மயத்துக்கான பெண்கள் சபை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் மயத்துக்கான பெண்கள் சபை வெற்றி பெறுவதற்கும் பெண்கள் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு வேலைத்திட்டத்தைப் போன்று டியிற்றல் மயத்தின் மூலமான பயன்களை எதிர்பார்த்து மேம்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்தின் கொள்கை மற்றும் மூலோபாயத்துடன் தயாரிக்கப்பட்டு அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக அரச நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் தகவல் மற்றும் தொடர்பாடர் தொழில்நுட்பத்துடனான பெண் தொழில் முயற்சியாளர் வேலைத்திட்டங்களில் நேரடி தரப்பினராக தொடர்பு படுத்துவதற்கும் இந்த சபைக்கு தேவையான வசதிகைளைச் செய்யும் பொருட்டு அமைச்சரவை அந்தஸ்தற்ற டிஜிட்டல் அடிப்படை வசதி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரின் கோரிக்கைக்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
02. 2007 ஆம் ஆண்டு இலக்கம் 54 இன் கீழான ஒளடதங்களுக்கு அடிமையானவர்கள் (சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு ) தொடர்பான சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல். - (நிகழ்ச்சி நிரலில் 11 ஆவது விடயம்)
ஓளடதங்களுக்கு அடிமையான நபர்களுக்கு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையங்களில் பணிகளை ஒழுங்குறுத்துவதற்கான 2007 ஆம் ஆண்டு இலக்கம் 54 இன் கீழான ஒளடதங்களுக்கு அடிமைப்பட்ட நபர்கள் (சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு) தொடர்பான சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்களுக்கு அடிமைப்பட்டவர்களுக்கு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு தொடர்பான செயற்பாடுகளை மிகவும் முறையாக முன்னெடுப்பதற்காக தற்போதைய நிலைமைக்கு பொருத்தமான வகையில் இந்த சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை அடையாளங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக சிகிச்சை மத்திய நிலையத்தினூடாக பணிப்பாளரின் பணிகள் மற்றும் நியமனங்களை முறையாக முன்னெடுத்தல் தனிப்பட்ட சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுத்தல் புதுப்பித்தல் மற்றும் இரத்து செய்தல் முறையாக மேற்கொள்ளுதல் சுகாதார சேவை திணைக்களத்தின் அதிகாரிகளின் சேவையைப் பெற்றுக்கொள்ளுதல் அவசியம். புனர்வாழ்வு கால எல்லைப்பகுதிக்குள் உள்வாங்குதல் போன்ற விடயங்களை உள்ளடக்கிய வகையில் 2007 ஆம் ஆண்டு இலக்கம் 54 இன் கீழான ஒளடதங்களினால் அடிமைப்பட்ட நபர்களுக்கு ( சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு) சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவனத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
03. கல்வி முதன்மை நிலைக்கான புலமைப்பரிசில் நிதியத்தை ஸ்தாபித்தல் (நிகழ்ச்சி நிரலில் 19 ஆவது விடயம்)
தற்பொழுது கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்காக வருடாந்தம் சுமார் 250 000 மாணவர்கள் தோற்றுகின்றனர். இவர்களுள் 160 000 மாணவர்கள் பல்கலைக்கழக கல்விக்கு தகுதி பெறுகின்றனர். கல்வி முதன்மை நிலமை அடிப்படையிலான தனிப்பட்ட மேம்பாட்டுக்கு ஒத்துளைப்பு வழங்குதல் மற்றும் தொழில் அபிவிருத்தியை நோக்கமாக கொண்டும் இந்த மாணவர்கள் மத்தியில் பௌதீக விஞ்ஞானம், தொழில்நுட்பம், வணிகம், கலை ஆகிய கற்கை நெறிகள் தொடர்பில் ஆகக் கூடுதலான தகுதிரயைக் கொண்டுள்ள மாணவர்களுக்கு அவாட் எம் ஐடி, ஒக்ஸ்போர்ட், கேம்பிறீச் போன்ற உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் பட்ட கற்கைநெறியை கற்பாதற்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்கபார்த்துள்ளது. இதற்கு அமைவாக 2019 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் உத்தேச கல்வி முதன்மை நிலைக்காக புலமைப்பரிசில் நிதியம்SEE Fundஸ்தாபிப்பதற்காக பாராளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான சட்ட திருத்தத்தை தயாரிக்குமாறு சட்ட திருத்த வரைவுப்பிரிவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த அவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை வெளியேற்றுவதற்கு தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளுதல் -(நிகழ்ச்சி நிரலில் 22 ஆவது விடயம்)
1948 ஆம் ஆண்டு இலக்கம் 20 இன் கீழான குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறிய வெளிநாட்டவர்களுக்கான நீதிமன்றம் அல்லது நிறுவன செயற்பாடு முடியும் வரையிலும் மற்றும் இந்த செயற்பாடுகளின் இறுதியில் மீண்டும் தமது தாய் நாட்டுக்கு செல்வதில் தாமதப்படுத்தியிருக்கும் வெளிநாட்டவர்களை மிரிஹான பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்படுவர். இந்த தடுப்பு முகாமில் 36 பேருக்கே போதுமான வசதிகள் இருந்த போதிலும் தற்பொழுது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 166 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இந்கு தடுத்து வைக்கப்ட்டோர் மத்தியிலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மீண்டும் அவர்களது தாய் நாட்டுக்கு இந் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு தேவையாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. மீதொட்ட முல்ல மேம்பாட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - (நிகழ்ச்சி நிரலில் 27 ஆவது விடயம்)
மீதொட்ட முல்ல மேம்பாட்டு திட்;டத்தை நடைமுறைப்படுத்தும் பரிந்துரை குறித்து ஆராய்ந்து சிபார்களை சமர்பிப்பதற்காக அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை நியமிப்பதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த அதிகாரிகள் குழுவினால் இது தொடர்பாக சிபாரிசுகள் அடங்கிய அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்த சிபாரிசுகளுக்கு அமைய மீதொட்டமுல்ல மேம்பாட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பெருநாகர மற்றும் மேல்மாகாண அபிவித்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. வன ஜீவராசிகளினால் ஏற்படும் உற்பத்தி பாதிப்பை கட்டுப்படுத்தல் - (நிகழ்ச்சி நிரலில் 31 ஆவது விடயம்)
வன ஜீவராசிகளினால் விவசாய உற்பத்திக்கு ஏற்படும் பாதிப்பினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை கட்டுப்படுத்தல் தெடர்பாக பேண்தகு வேலைத்திட்டம் ஒன்றை வகுப்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிதிகளைக் கொண்ட குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினால் வனஜீவராசிகளினால் ஏற்படக்கூடிய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைத்திட்டம் தொடர்பான திருத்தச் சட்ட மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துதைற்காக தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக விவசாய கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. ஆசிய பசுபிக் விவசாய ஆய்வு சங்கத்தின் (APAARI ) புரிந்துணர்வுடன் குறைவாக பயன்படுத்தப்படும் மீன் மற்றும் சமுத்திரத்துடன் தொடர்பு பட்ட வளங்களை மற்றும் அவற்றின் அபிவிருத்தி தொடர்பிலான பிராந்திய செயலமர்வொன்றை நடாத்துதல். (நிகழ்ச்சி நிரலில் 33 ஆவது விடயம்)
பெரும்பாலான ஆசிய நாடுகள் தமது மீன் மற்றும் நீரியல் வளங்களை உரிய வகையில் பயன்படுத்தாமை தொடர்பில் பெரும் அவதானத்தை மேற்கொள்ளும் பொருட்டு பாரிய அறிவு மற்றும் செயல்திறனை கொண்டிருந்த போதிலும் இலங்கை அது தொடர்பில் அறிவு மற்றும் தகவல்களை போதுமான வகையில் திரட்டவில்லை. இதனால் குறைவாக பயன்படுத்தப்படும் மீன் மற்றும் நீரியல்வளம் தொடர்பாக பிராந்திய மாநாடு ஒன்றை நடாத்தி ஏனைய நாடுகளுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு இலங்கை விவசாய ஆய்வு கொள்கை சபையினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக ஆசிய பசுபிக் விவசாய ஆய்வு நிறுவனத்தின் அமைப்பின் ஒத்துழைப்புடன் குறைவாக பயன்படுத்தப்படும் மீன் மற்றும் சமுத்திர வள மற்றும் அவற்றின் அபிவிருத்தி தொடர்பாக பிராந்திய செயலமர்வொன்றை 2019 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரையில் இலங்கையில் நடாத்துவதற்காக கால்நடை அபிவிருத்தி மற்றும் நீர்பாசனம் கடற்தொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. கந்தர கடல் தொழில் துறைமுகத்தை நிர்மாணித்தல் மற்றும் இதற்காக நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளல் (நிகழ்ச்சி நிரலில் 34 ஆவது விடயம்)
கந்தர மற்றும் குருநகர் கடல் தொழில் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை திட்ட ஆலோசனை Bouygues Travaux Publics நிறுவனத்தினால் சுயாதீன தள ஆய்வு அறிக்கை மதிப்பீடு மற்றும் தேசிய பொறியியலாளர் மதிப்பீடொன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்றிருந்த போதிலும் குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் தள ஆய்வு அறிக்கை திட்ட ஆலோசனை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு தவறியுள்ளது என்பதினால் இந்த நிறுவனம் தொடர்பில் நடைமுறைப்புடுத்தப்பட்ட பெறுகை செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் கந்தர கடற் தொழில் துறைமுக தேசிய நிதியைப் பயன்படுத்தி நிர்மாணிப்பதற்காக நிதி அமைச்சர் அவர்களும் விவசாய கால்நடை அபிவிருத்தி மற்றும் நீர்பாசனம் கடற்தொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் அவர்களும் கூட்டாக சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. சட்ட விரோத செயற்பாடுகளை ஒழுங்குறுத்துவதற்கான 1996 ஆம் ஆண்டு இலக்கம் 2 இன் கீழான கடற்தொழில் நீரியல் வள சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளல். (நிகழ்ச்சி நிரலில் 37 ஆவது விடயம்)
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட கடற்தொழில் வள்ளங்களை தேவையற்ற ரீதியில் வெளிநாடுகளில் தனித்துவ பொருளாதார வலயத்திற்குள் மீன்களை பிடிக்கும் நடவடிக்கையில் ஈபடுத்துவது தொடர்பாக அந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதே போன்று கடற்தொழில் துறைக்கு அப்பாலான போதைப் பொருளை எடுத்துச் செல்லல் வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமா ஆட்களை ஏற்றிச்செல்தல் மற்றும் சட்ட விரோத பொருட்களை எடுத்துச் செல்லுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு கடல் தொழில் வள்ளங்களை பயன்படுத்துவது வேகமாக அதிகரித்துள்ளது. அத்தோடு இந்த தவறுகள் தெடர்பில் தொடுக்கப்படும் வழக்குகளில் பெரும்பாலும் தண்டணைக்கான தண்டப்பணத்தை செலுத்துவதற்கு அல்லது சில சந்தர்ப்பங்களில் சிறைச்சாலைகளில் அடைக்கப்படும் நிலை படகுகளின் உரிமையாளர்களுக்கு ஏற்படுகின்றது. இதற்கு அமைவாக இந்த தவறுகளை மேற்கொள்ளும் வள்ள உரிமையாளர்கள் அல்லது வள்ளங்களை செயற்படுத்துவோர் அல்லது வள்ளங்களில் செல்வோர் அல்லது அதற்கு துணை புரியும் நபர்களுக்கு தண்டண வழங்கும் வகையில் சம்பந்தப்பட்ட திருத்தத்தை உள்ளடக்கி கடல் தொழில் மற்றும் விவசாய கால்நடை அபிவிருத்தி மற்றும் நீர்பாசனம் கடற்தொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. 2014 ஆம் ஆண்டு இலக்கம் 33 இன் கீழான நிர்மாண கைத்தொழில்துறை அபிவிருத்தி சட்டத்துக்கான மேலதிக திருத்தத்துக்காக சிபாரிசுகளை மேற்கொள்ளுதல். (நிகழ்ச்சி நிரலில் 37 ஆவது விடயம்)
2014 ஆம் ஆண்டு இலக்கம் 33 இன் கீழான நிர்மாண கைத்தொழில்துறை அபிவிருத்தி சட்டம் தற்போதைய தேவைக்கு பொருந்தும் வகையில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்ப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக திருத்த சட்டத்தை வகுப்போர் அடிப்படை திருத்த சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் நிர்மாண கைத் தொழில்துறை அபிவிருத்தி அதிகார சபையைப் போன்று இலங்கை நிர்மாண கைத் தொழில் துறை சபை உள்ளிட்ட கைத்தொழில் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் பலவற்றினால் இந்த தொழில் துறையில் தற்போது காணக்கூடிய முறை கேடுகள் மற்றும் குறைபாட்டு செயற்பாட்டு விடயங்களை தவிர்ப்பதற்காக தொடர்ந்தும் தேவையன ஒழுங்குகளை இந்த திருத்த சட்ட மூலத்தில் உள்வாங்குவதன் தேவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த திருத்தங்களை உள்ளடக்கி அதன் திருத்த சட்ட மூலத்தில் மேலும் திருத்தங்களை மேற்கொள்வதற்காக வீடமைப்பு நிர்மாண மற்றும் கலாச்சார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்ட செயற்பாட்டு கட்டமைப்புடன் சிறைச்சாலை புலனாய்வு பிரிவொன்றை அமைத்தல். (நிகழ்ச்சி நிரலில் 47 ஆவது விடயம்)
சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் அமைவாக ஆணையாளர் நாயகத்தின் அதிகார மற்றும் நிர்வாகத்துக்கு உட்பட்டதாக சிறைச்சாலையில் பயனுள்ள நிர்வாகம் மற்றும் ஒழுக்கத்தை முன்னெடுப்பதற்காக வசதிகளை செய்வதற்கென சிறைச்சாலை புலனாய்வு பிரிவொன்றை அமைப்பதற்காக நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. இணக்கப்பாட்டு பெறுபேறான வன சர்வதேச பிரச்சினைகளை தீர்த்தலுக்கான உடன்பாடு தொடர்பான இணக்கப்பாடு. (நிகழ்ச்சி நிரலில் 49 ஆவது விடயம்)
இணக்கப்பாட்டு பெறுபேறான வன சர்வதேச பிரச்சினைகளை தீர்த்தலுக்கான உடன்பாடு தொடர்பான என்ற காலம் மற்றும் செலவை சேமித்து அன்னியோன்ய ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை நோக்கி செயற்படுதலைப் போன்று வணிக தொடர்புகளை பாதுகாத்துக் கொள்வதற்கு ஆற்றலைக் கொண்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடைமுறையாகும். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையின் இணக்கப்பாட்டின் பெறுபேறாக சர்வதேச பிரச்சினைகளை தீர்க்கும் உடன்பாடு தொடர்பான இணக்கப்பாடு 2018 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் இந்த இணக்கப்பாட்டில் இலங்கையின் சார்பில் கைச்சாத்திடுவதற்காக நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் பெல்ஜியத்தில் லியுவென் - லிம்பக்(UCLL)பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை எட்டுதல் (நிகழ்ச்சி நிரலில் 50 ஆவது விடயம்)
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு தேவையான தொழில் விசேட ஆய்வாளர்களை பெற்றுக்கொள்ளும் நோக்கடன் தேசிய சமூக அபிவருpத்தி நிறுவனம் மற்றும் பெல்ஜியத்தின் லியுவென் லிம்பக் (UCLL)பல்கலைக்கழகத்துக்கிடையில் புரிந்துணர்வு எட்டுவதற்காக ஆரம்ப தொழில் துறை சமூக ஊக்குவிப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குறித்தல் கண்காணிக்கப்படும் தெரிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் பலவற்றில் தடயவியல் கணக்காய்வு - மேற்கொள்வதற்கான பெறுகை செயற்பாடு. (நிகழ்ச்சி நிரலில் 53ஆவது விடயம்)
இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குறுத்தல் மற்றும் கண்காணிக்கப்படும் தெரிவு செய்யப்பட்ட சில நிறுவனங்கள் தடயவியல் கணக்காய்வுகளை மேற்கொள்வதற்காக உலகலாவிய பரீட்சார்த்தம் மற்றும் சர்வதேச அனுபவத்துடனான நிறுவனததின் சேவையை பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இந்த பணிகளுக்காக முன்னின்ற கேள்வி விலைகளுக்கிடையிலான இடைவெளி பாரியதானதால் மீண்டும் விலைகளை கோருவது சிறந்ததாகுமென அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஆலேசனைக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டது. இதற்கமைய இந்த தடயவியல் கணக்காய்வுக்கான செலவின் மதிப்பீட்டில் திருத்தத்தை மேற்கொண்டு உத்தேச பணிக்காக பொருத்தமான நிறுவனமொன்றை தெரிவு செய்வதற்காக மீண்டும் கேள்வி மனுவை கோருவதற்கும் இதற்கு முன்னர் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஆலோசனை பெறுகைக் குழுவின் சேவையை இதற்காக பெற்றுக்கொள்வதற்குமாக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. கொட்டுகொட கிரீட் துணைக் கோபுரத்துக்கான 3 ராண்ஸ்போம் களை வழங்குதல் வினியோகித்தல் மற்றும் பொருத்தும் செயற்பாடுகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 57ஆவது விடயம்)
கொட்டுக்கொட கிரீட் துணை கோபுரத்தின் செயல்திறனை அதிகரிப்பதற்காக 3 ராண்ஸ்போம்களை வழங்குதல் விநியோகித்தல் பொருத்தி செயற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையில் சீனாவின் MS TBEA- SHENYANG Transfomer Group co.Ltd என்ற நிறுவனத்திடம் அமெரிக்க டொலர்கள் 2.6 மில்லியன் மற்றும் 2.5 மில்லியன் ரூபாவுக்கு வழங்குவதற்காக மின் சக்தி எரி சக்தி மற்றும் வர்தக அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதி வழங்கப்படும் 2வது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு வேலைத்திட்டத்தில் மேல் மாகாணத்தில்(PIC 07) திட்டத்துக்கான ஒப்பந்தத்தை வழங்குதல். (நிகழ்ச்சி நிரலில் 66 ஆவது விடயம்)
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதி வழங்கப்படும் இரண்டாவது ஒன்றிணைந்த நிர்மாண மதிப்பீடு ஒப்பந்தங்கள் முகாமைத்துவம் மற்றும் ஏனைய நடைமுறை முன்னெடுத்தல் செயற்பாடுகள் உள்ளடங்கியதாக மேல் மாகாணத்தில்(PIC 07)திட்டத்தை நடைமுறைப்படுத்தவதற்கான ஒப்பந்தத்தை M s SMEC International (pvt) Ltd Sub – consultant with Resources Development consultants (Pvt) Ltd (Sri Lanka and master Hellie’s Engineering consultants (Pvt) Ltd Sri Lankaஎன்ற நிறுவனங்களிடம் வழங்குவதற்காக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி கனியவள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. வருட மத்திய கால நிதி நிலமை தொடர்பான அறிக்கை – 2019 (நிகழ்ச்சி நிரலில் 71 ஆவது விடயம்)
தேசியத்தைப் போன்று சர்வதேச ரீதியிலும் சிரமமான சூழலில் இலங்கை போன்ற முழுமையான பொருளாதார முகாமைத்துவம் தெடர்பாகவும் அரசாங்கத்தின் வருமானம் செலவு மற்றும் நிதி செயற்பாட்டு முகாமைத்துவம் தெடர்பாக தெளிவுபடுத்தல் மற்றும் இலங்கையில் 2019 ஆம் ஆண்டில் முதல் 4 மாத காலப்பகுதியில் அரசாங்கத்தின் நிதி தொடர்பான தகவல்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள வருடத்தன் மத்திய கால நிதி நிலமை தொடர்பான அறிக்கை 2003 ஆம் ஆண்டு இலக்கம் 3 இன்கீழான அரச நிதி முகாமைத்துவம் ( பொறுப்புக்கூறல் ) சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் 2019 ஆம் ஆண்டு (நிகழ்ச்சி நிரலில் 72 ஆவது விடயம்)
சுற்றுலாத்துறை சமீப சில ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் தேசிய உற்பத்தியில் 4.5 சதவீதத்திற்கு மேற்பட்ட தொகையை பங்களிப்பு செய்துள்ளது. இருப்பினும் சுற்றுலா தொழில் துறை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக சுற்றுலா தொழில்துறை பெரும் தாக்கத்துக்குள்ளானது. இந்த தொழில் துறையை மீண்டும் மேம்படுத்துவதற்காக இலங்கைக்கு விமான பயணங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்தல் விமான நிறுவனங்களுக்கு அவர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கக்கூடிய வகையில் கூடுதலானோர் சுற்றுலாக்களில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்காக மேம்பாட்டு செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் மிக முக்கியமாதாகும். இதற்கமைவாக இந்த நாட்டுக்கு விமானங்களை கவரக்கூடிய வகையில் இலங்கையில் விமான நிறுவனங்களுக்காக வழங்கப்படும் எரிபொருள் உள்ளிட்ட தரையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் ஏனையசேவைகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை குறைக்குமாறு சிறிலங்கன் விமான நிறுவனத்துக்கு ஆலோசனை வழங்குதல் சென்னை விமானநிலையத்தில் விமான எரிபொருள் விலைக்கு சமமான வகையில் விமான எரிபொருளின் விலையை குறைக்குமாறு இலங்கை கனியவள பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு ஆலேசனை வழங்குதல் வெளிநாடு செல்லும் சந்தர்ப்பத்தில் செலுத்தப்பட வேண்டியுள்ள வரியை (Embarkation Levy) 10 அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதற்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதை இடை நிறுத்துவதற்காக தேசிய கொள்கை மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வட மாகாண அபிவிரித்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரையை 6 மாத காலத்துக்கு நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.