இலங்கையை பௌத்த இராச்சியமாக நாம் பிரகடனம் செய்யப் போவதில்லை என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பதில் அமைச்சர் கருணாரத்ன பரணவிதான (No, we are not going to declare the Buddhism as the State religion) தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பதிலமைச்சர் கருணாரத்ன பரணவிதான செய்தியாளர் ஒருவர் புதிய அரசியல் யாப்பில் இலங்கையை பௌத்த இராச்சியமாக பிரகடனம் செய்யும் திட்டம் உண்டா? (Is there any attempt to declare the Buddhism as the State religion? ) என்று கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தியாவில் செயற்பட்டுவரும் இந்துமத அமைப்பான சிவசேனா அமைப்பு தனது கிளையை வவுனியாவில்அமைத்திருப்பதாக கேட்ட கேள்விக்கு பதிலளித்த பதிலமைச்சர் கருணாரத்ன பரணவிதான இவ்வாறான சேனாக்கள் ( இத்தகைய அமைப்புக்கள்) பல்வேறு இடங்களில் உண்டு. ஆனால் அவற்றில் ஆட்கள் தான் இல்லை என்று தெரிவித்தார் .

கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட மதத்தலைவர்கள் பௌத்தத்திற்கு அரசியல் யாப்பில் முக்கிய இடம் வழங்கப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் யாப்பு தொடர்பாக தெரிவித்திருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அரசியல் யாப்பில் பௌத்த மதம் தொடர்பில் முரண்பட்ட கருத்தை தெரிவித்திருப்பதாக செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் ;

அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிலர் முரண்பட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அப்படியொன்றுமில்லை. அரசியல் யாப்பு வரைவு இன்னும் இடம்பெறவில்லை. தற்பொழுது அது ஆரம்ப கட்டத்திலேயே இருந்து வருகின்றது. அரசியல் யாப்பு குறித்து அரசியல் பேரவையே தீர்மானிக்கும்.

புதிய அரசியல் யாப்பு குறித்து பொதுமக்கள் மத்தியல் கருத்து பரிமாறல் இடம்பெறவேண்டும். மக்கள் மத்தியில் இதுதொடர்பில் தெளிவிருக்க வேண்டும். இதற்காகதான் நாம் முயற்சித்து வருகின்றோம்.

அரசியல் யாப்பு முன்வைக்கப்பட்ட பின்னர் தான் பிரச்சினைகள் ஏற்படும் இதற்காக தான் நாம் மக்கள் மத்தியில் கருத்து பரிமாற்றம் வேண்டுமென்கின்றோம். அப்படி செய்யாவிட்டால் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது. இதற்கு ஏகாதிபத்தியம் இருக்க வேண்;டும் அப்போது தான் சாத்தியமாகும் அரசியல் யாப்பு தொடர்பில் ஒவ்வொரு மக்களுக்கும் தெளிவு இருக்க வேண்டும்.

அரசியல் யாப்பு தொடர்பில் தற்பொழுது சர்வஜன வாக்கு குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. சர்வஜென வாக்கெடுபபு தேவையா? இல்லையா? என்பது குறித்து அரசியல் யாப்பு முன்வைக்கப்பட்ட பின்னரே அது தொடர்பாக அறியமுடியும் என்று பதில் அமைச்சர் கருணாரத்ன பரணவிதான பதிலளித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 42வது தேசிய விளையாட்டுப்போட்டி நிறைவு நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன யாழ் பல்கலைக்கழகத்திற்கும் விஜயம் செய்தார்.
அங்கு பல்கலைக்கழக மாணவ மாணவிகளுடன் நட்புறவுடன் கலந்துரையாடினார்.
 
யாழ்  பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவர்களின் குடிநீர் வசதிக்காக அமைக்கப்ட்ட இரண்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களையும் சம்பிரதாயபூர்வமாக இயக்கி வைத்தார்.
 
இதே போன்ற மேலும் 2 இயந்திரங்கள் மாணவர்களின் குடிநீர் தேவையை நிறைவுசெய்யும் வகையில் இங்கு அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை சரியான முறையில் செய்ய முடியாதவர்களே இனத்துவேச கருத்துக்களை கூறிநல்லிணக்க்கத்தை சீர்குலைக்க முற்படுவதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர்  கருணாரத்னபரணவிதான தெரிவித்தார்.

இலங்கை பத்திரிகைப்பேரவை மற்றும் திருகோணமலை மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த திருமலை மாவட்டஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு 2016.10.01 திருகோணமலையில் நடைபெற்றது.

தேசிய நல்லிணக்கத்தை இந்நாட்டில் ஏற்படுத்துவதற்காக ஊடகவியலாளர்களின் வகிபாகம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தசெயலமர்வில் பிரதம அதிதியாக கலந்த கொணட பிரதியமைச்சர்  கருணாரத்ன பரணவிதான உரையாற்றுகையில் இந்தவிடயத்தை குறிப்பிட்டார்ஃ

நல்லிணக்க்கத்தை சீர்குலைக்க முற்படுபவர்கள் மூவினங்களிலும் காணப்படுவதாகவும் இவர்களை சரியான முறையில்இணங்கண்டு கொள்வதுடன் அவர்களுக்கு துணைபோகாதவர்களாக பொதுமக்கள் இருப்பது சிறப்பானதாக அமையும் என்றும்தெரிவித்தார்.

அத்துடன் இவர்கள் மேற்கொள்ளும் இனத்துவேச விடயங்களை பிரபல்யப்படுத்துவதாக ஊடகங்கள் இருத்தல் கூடாதுஊடகதர்மங்களை காத்து  ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் செயற்படுவதன் மூலம்  இன ஜக்கியத்தை கட்டியெழுப்பமுடியுமென்றும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இச்செயலமர்வில் கிழக்கு மாகாண ஆளுநர்  ஒஸ்டின் பெர்ணாண்டோ திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்அப்துல்லா மஹ்ரூப் இலங்கை பத்திரிகைப்பேரவையின் தலைவர் சிரேஸ்ட்ட சட்டத்தரணி கொக்கல வெல்லாலபந்துல வளவாளர்களான  பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ சிரேஸ்ட்ட ஊடகவியலாளர்எஸ்.தில்லைநாதன் திருகோணமலை மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஜன் பத்திரிகைப்பேரவைஆணையாளர் நிரோசன தம்பவிட உட்பட ஊடகவியலாளர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த தகவல்களை முழுமையாக பொதுமக்களுக்கு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் சட்டத்தை அரசாங்கம் தற்பொழுது நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனை வலுவான முறையில் முன்னெடுப்பதற்கு சிவில் அமைப்புக்கள் பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

தகவல் அறியும் சர்வதேச தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சுடன் இணைந்து அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மகாநாடு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இங்கு உரையாற்றினார்.

கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் இன்று ஆரம்பமான இந்த மாநாடு தகவல் அறிந்து கொள்வதும் ஊடக மறுசீரமைப்பும் என்ற தலைப்பில் நாளை வரை நடைபெற உள்ளது. சார்க் பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த விசேட பிpரதி நிதிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மேலும் இங்;;கு உரையாற்றுகையில் இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தும் செயற்பாடுகளை மிகவும் ஆக்கபூர்வமானதாகவும் கூடிய பயனுள்ளதாகவும் மேற்கொள்ள வழிவகை செய்வதறகு இந்த மாநாடு பெரிதும் உதவும். தகவல் அறியும் சட்டத்தை அமுல்படுத்தும் போது எதிர்நோக்கவேண்டிய சவால்களை வெற்றிகொள்வதற்கு இதில் கலந்துகொள்ளும் தெற்காசிய நாடுகளின் அனுபவங்கள் நாட்டுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

அரசாங்க துறையிலுள்ள பெரும்பாலான அதிகாரிகள் ஊழியர்கள் தமக்குள்ள பொறுப்பிலும் பார்க்க ஏனைய விடயங்களிலேயே கூடுதலான அக்கறை கொண்டுள்ளனர். இவ்வாறான நிலை சமீபகாலமாக காணக்கூடியதாக உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றினால் பொதுமக்களுக்கு உரியமுறையில் நன்மை அமையும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சுடன் இணைந்து அரசாங்க தகவல் திணைக்களம் இதனை ஏற்பாடு செய்துள்ளது. மாநாடு கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் செப்டெம்பர் 28ம், 29ம் திகதிகளில் தகவல் அறிந்து கொள்வதும் ஊடக மறுசீரமைப்பும் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று மாலை இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடக துறை பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான இந்த விடங்களைத் தெரிவித்தார்.,

அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்ககலன்சூரியமற்றும்நிர்வாகபணிப்பாளர்.ஹில்மிமுஹம்மத்ஆகியோரும்இதில்கலந்துகொண்டனர்.

நாட்டில் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி என்பவற்றை அடித்தளமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டுவரும் அரசியல் கலாசாரத்தை நிலைநாட்டுவதற்குத் தேவையான ஊடகத்துறை மறுசீரமைப்புக்கு ஆக்கபூர்வமான பயனுள்ள கலந்துரையாடல் இதில் இடம்பெறும். தெற்காசிய ஐரோப்பிய மற்றும் கனடா முதலான நாடுகளில் இருந்து வருகைதரும் ஊடகத்துறை வல்லுனர்களின் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுவதற்கு இந்த மகாநாடு பெரிதும் உதவும் என்றும் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான கூறினார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் உலகிற்கு ஒரு முன்மாதிரியாகும் எனக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கையின் எதிர்காலப் பயணத்திற்குத் தேவையான முழுமையான உதவிகளை வழங்க தாம் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 71வது கூட்டத்தொடரில் பங்குபற்றும் அரச தலைவர்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட பகல் போசன விருந்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களைச் சந்தித்தபோதே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இதனைத் தெரிவித்தார்.

இதேநேரம் ஐக்கிய நாடுகள் சபையின் 71வது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றும் அரச தலைவர்களுக்காக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இராப்போசன விருந்துக்கும் ஜனாதிபதி சிறிசேன அவர்களுக்கு விசேட அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் உரையாற்றும் இறுதி சந்தர்ப்பம் இதுவாகும் என்பதோடு, மாநாட்டில் உரையாற்றிய அவர், பயங்கரவாத செயற்பாடுகளை வன்மையாகக் கண்டித்துள்ள அதேநேரம் இந்த பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு ஒரு பூகோள ஒத்துழைப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் 71ஆவது அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை உரையாற்ற உள்ளார்.

இந்த மாநாட்டில் நிலைபேறான அபிவிருத்தி, பூகோள பாதுகாப்பு, பரிஸ் நகர இணைக்கப்பாடு உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்ற பின்னர் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் 2வது முறையாக உரையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி நாளை நிகழ்த்த இருக்கும் உரை தொடர்பாக தற்சமயம் நியூயோர்க் நகரில் இருக்கும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர கருத்து தெரிவித்தார்.
நாட்டில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த உரை இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி தெரிவிக்கவிருக்கும் கருத்துக்கள் தொடர்பில் சர்வதேச தலைவர்கள் முக்கிய கவனம் செலுத்த உள்ளார்கள். ஜனாதிபதியின் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கான விஜயம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கிளின்டன் பூகோள சம்மேளன கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அவுஸ்ரேலிய உயர்மட்ட தலைவர்கள் , ஏனைய நாடுகளின் பிரதமர்கள் , அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு நியூயோர்க் நகரில் செரீட்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.

இலங்கையை மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார ஸ்தாபனம் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தியுள்ளது

கொழும்பில் இடம்பெற்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசிய பிராந்திய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் வருடாந்த மாநாட்டில் இதற்கான சான்றிதழை உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் மார்க்ரெட் சென் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவிடம் நேற்று கையளித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் விசேட விருதை வழங்கி கௌரவித்துள்ளது

தென்கிழக்காசிய பிராந்திய பொதுச் சுகாதார மேம்பாட்டு சிறப்பு விருதை உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசிய பணிப்பாளர் கலாநிதி பூனம் சிங் நேற்று (5) ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியிடம் கையளித்தார். இலங்கையின் சுகாதார மேம்பாட்டிற்கான ஜனாதிபதி ஆற்றிய பங்களிப்பை பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மதுபானம், சிகரெட் போன்றவற்றை முறையாக கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை இதன் போது கலாநிதி சிங் பாராட்டி உரைநிகழ்த்தினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஐயத்தின் புகைப்படங்கள் அடங்கிய திரட்டு வைப்பேடு செயலாளர் நாயகத்திடம், ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் கையளிக்கட்டது.

இது தொடர்பான நிகழ்வு கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளா நாயகம் கலாநிதி.ரங்க கலங்சூரியும் நிகழ்வில் கலந்துகொண்டார்.